Thursday, August 15, 2013

* அடுத்த கட்டம் என்பது எது..? ஆயுதம் ஏந்துவதா...??


அன்பின் இலங்கை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே !!!

எங்களை 24 முறையாக குட்டி இருக்கிறார்கள், அத்தனை முறையும் குனிந்து தான் போயிருக்கிறோம். கலந்துரையாடல் என்ற பெயரில் இம்முறையும் அல்லாஹ்வின் இல்லத்தை தாரை வார்த்திருக்கிறோம். கலந்துரையாடலின் போது தீர்கமாக பேசியிருக்க வேண்டும், மாறாக தாரை வார்த்துவிட்டு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று அவர்களை பேசி தீர்க்க கூடாது. அவ்வாறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டால் காயை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்க வேண்டும், ஆட்டத்தை இடை நிறுத்தி இருக்க கூடாது.

முஸ்லிம் அமைச்சர்களை வைத்துக்கொண்டு இனிமேலும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்று எமது சமூகம் மனப்பால் குடித்தால்..... எம்மை போன்ற அடிமட்ட முட்டாள்கள் வேறு எங்கும் இருக்க முடியாது.

முஸ்லிம்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவை அனைத்தும் நடந்தேறுகின்றன. முஸ்லிம்களை ஒருபதட்ட நிலைக்குள் கொண்டுவந்து, முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருந்தால் தான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி அவ்வப்போது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, அரசாங்கம் எவ்வளவு தான் துரோகம் செய்தாலும் அவர்களை வெளியேற விடாமல் சதி வலை பின்னப்பட்டுள்ளது.
இதை எமது சமூகம் புரிந்து கொள்ளாத வரை எவ்வளவு தான் துள்ளி குதித்தாலும், கூக்குரல் போட்டாலும் நடக்கப்போவது எதுவுமில்லை.

இதற்கிடையில் BBC க்கு பேட்டி வழங்கிய ஒரு முஸ்லிம் அமைச்சர், எமது ஜனாதிபதி இன பேதம் இல்லாதவர் என்று வாய் கூசாமல் கூறியது மட்டுமில்லாமல் இதற்காக ஒன்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று இழித்துக்கொண்டே கூறிவிட்டு, முடிக்கும் போது EID MUBARAK என்று பெருநாள் வாழ்த்து கூறுகிறார். இவ்வாறான உத்தம புத்திரர்களையும் எமது சமூகம் சுமந்துள்ளது என்பது வேதனைக்குரிய விடயம் தான்.

முஸ்லிம் சமூகம் விழிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது... தருணம் வந்து விட்டது.... என்று எல்லா கட்டுரைகளிலும் எழுதுகிறோம்,,,பேசுகிறோம் ,, கேட்டு கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை. கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை.

24 வது பள்ளி உடைக்கப்படமுன்பே, பெருநாள் தினத்தில் இருந்து பள்ளிவாசல் உடைப்புக்கெதிராக கையெழுத்து வேட்டை நடத்தினோம். இன்னும் நடத்திக்கொண்டே இருக்கிறோம். அதை வைத்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று புரியவில்லை. அனால் கையெழுத்து வேட்டை முடியும் முன்னமே அவர்கள் கை வரிசையை காட்டிவிட்டார்கள். அடுத்த பள்ளியும் வேட்டையாடப்பட்டுவிட்டது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் அடுத்த கட்டத்துக்கு எம்மை நாமே நகர்த்தாத வரை எமது இருப்பை எம்மால் உறுதி படுத்திக்கொள்ள முடியாது. இப்போது இருக்கின்ற கேள்வி அடுத்த கட்டம் என்பது எது?? ஆயுதம் ஏந்துவதா ??? இல்லை அகிம்சா வழியில் வீதிக்கிறங்குவதா?? இந்த இரண்டில் எந்த ஒன்றை தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் நாங்கள் அடிமட்ட முட்டாள்களே,, ஏனெனில் நாம் கடந்த கால வரலாறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்ள வில்லை என்பதுக்கு இதுவே சான்று.

அவ்வாறாயின் எம்மத்தியில் இருக்கும் தீர்வு தான் என்ன
சகோதரர்களே!!

இலங்கையில் நாம் சிறுபான்மையினர் தான் ஒத்துக்கொள்கிறோம்.அனால் உலகிலேயே நாம் தான் பெரும்பான்மையினர். மற்றுமல்லாது பாரிய பொருளாதார வல்லரசுகளை வைத்திருக்கிறோம். அமரிக்காவில் சிறுபான்மையினராக வாழ்ந்தால் இவைகளை வைத்து சாதிக்க முடியாது தான், அதையும் ஒத்துக்கொள்கிறோம். அனால் இலங்கை போன்ற...சிறிய, பொருளாதார இஸ்திர தன்மை அற்ற, கடனுக்கு மேல் கடனாக முஸ்லிம் நாடுகளிடமே கையேந்துகின்ற, பெற்றோலை மானியமாக பெருகின்ற, சர்வதேச போர் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்ற ஒரு நாட்டை சர்வதேச அழுத்தத்துக்கு உள்ளாக்குவது என்பது முயன்றால் மிக இலகுவான காரியம். அனால் இதை தொடந்து தவற விட்டபடி கண்மூடித்தனமாகவே இருந்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள், வெறுமனே 6 சதவீதம் தமிழர்களை கொண்ட இந்தியாவையும் புலம் பெயர் தமிழர்களையும் வைத்துக்கொண்டு ஐ. நா வரை சென்று அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். 57 க்கும் அதிகமான பாரிய இஸ்லாமிய நாடுகளை வைத்துக்கொண்டு நாம் என்னதான் சாத்தித்து விட்டோம்?? அரசாங்கத்தை அங்கிருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டுதான் வந்தோம்.

தமிழர்களை போல் நிலைமைகளை சர்வதேச மயப்படுத்தி அழுத்தங்களை பிரயோகிப்பது மட்டுமே காலத்துக்கு பொருத்தமான, நியாயமான ,புத்திசாலித்தனமான தீர்வாக அமையுமே தவிர எமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு சாதிக்க நினைத்தால் எம்மை என்னவென்று சொல்வது.... குண்டூசியை வைத்துக்கொண்டு முல்லை மட்டுமே அகற்ற முடியும். அனால் நாம் அதை வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பர்கிறோம். ஆயுள் முழுக்க முயன்றாலும் அது நடக்கவே நடக்காது

அனால் இதற்கு நாமே முட்டுக்கட்டையாக இருக்கிறோம். தாங்கள் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் பாரிய நாட்டுப்பற்றுள்ள ஒரு கூட்டமாக தன்னை அரசாங்கத்துக்கு மத்தியில் காட்ட எத்தனிக்கின்றது. நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம், எக்காரணத்தை கொண்டும் வெளியாலை உள்ளே விடமாட்டோம்.........என்கிறார்கள்

அது மட்டுமில்லாமல், ஒல்லாந்தர் காலத்திலும் எமது முன்னோர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். போர்துகேயர் காலத்திலும் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெரும் போதும் அப்பிடித்தான் இருந்தார்கள் என்று வரலாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்

ஆனால் அன்று ஏக்கர் கணக்கில் முஸ்லிம்களுக்கு பட்டயம் எழுதி கொடுத்தவர்களோ அல்லது செனரத் மன்னனோ அல்லது 2 ஆம் இராஜ சிங்கனோ இன்று இல்லை என்பதை மறந்து விட்டார்கள்..... இருக்கும் 2 பேச் நிலத்தில் இருந்தும் அடித்து துரத்துவதற்கு தயாரான அரசாங்கமே இருக்கிறது என்பதையும் மறந்து விட்டார்கள்.

அது போக முஸ்லிம்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க என்றே உருவாக்கப்பட்ட எமது சூரா சபையின் வகிபாகம் இந்த பிரச்சினையில் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் அரசாங்கத்துக்கு மகஜர் கொடுப்பதை விட்டு விட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தலில் ஈடுபட்டால் பெறுபேறு நன்றாக அமையும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அதற்கு பொருத்தமானவர்கள் உள்ளே இருப்பதாக தான் அறிகிறோம். இந்த செய்தியை அவர்களுக்கு எத்தி வையுங்கள்.

சமூகத்தின் இன்றைய தலைவர்களே!! எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு வழிகாட்டலையும், காத்திரமான கள நிலவரத்தையும் உருவாக்கித்தாருங்கள். அடித்தளத்தை இட்டுத்தாருங்கள். கோபுரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..... இன்ஷா அல்லாஹ் .

No comments:

Post a Comment