Sunday, May 25, 2014

* எங்கு நீதி பெறுவது..? ஏக்கத்தில் முஸ்லிம் சமுகம்..!


எங்கு நீதி பெறுவது..? ஏக்கத்தில் முஸ்லிம் சமுகம்..!

முடிவேயில்லாத தொடர் கதையாகின்றது இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தற்போது புதியதொரு வடிவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை அழித்து அதன் மூலம் பொருளாதார ரீதியாக முற்றாக முடக்க முற்படும் செயற்பாடுகளாகும். இதன் முதற்கட்டம் பெஷன்பக் கடைத் தொகுதி மீதான தாக்குதல் அடுத்ததாக, குறுநாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம், அளுத்கமையைத் தொடர்ந்து இன்று மாவனெல்லையில் இடம்பெற்றிருக்கின்றது. அத்தோடு பானந்துறையில் இரு முஸ்லிம் சகோதரர்கள் இனவாதிகளால் நீ முஸ்லிமா? எனக் கேட்டவாறு கடுமையான முறையில் தாக்கப்பட்டு வைத்தியா சாலையில் அனுமதிக்கப்பட்ட புதிய சம்பவமும் இக்கட்டுரை எழுதப்படும்போது கிடைத்ததையும் கவலையுடன் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கள் இன்று நாளுக்கு நாள் கேள்விக் குறியான விடயம் மட்டுமல்லாது ஒரு பயங்கரமான எதிர் காலத்தை நோக்கிச் செல்வதையே தொடராக இடம்பெறும் விடயங்கள் காட்டி நிற்கின்றன. காரணம் ஹலாலுக்கு தடை விதிப்பதில் தொடங்கி இன்று கடைகளையே எரித்து நாசமாக்கி முஸ்லிம்களையும் நேரடியாகத் தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைக்கு பணத்திற்குமேல் பணமாகவும், பொருளுக்குமேல் பொருளாகவும் மட்டுமல்லாது தேவையான அனைத்து உதவிகளையும் முஸ்லிம் நாடுகள் இதுவரைக்கும் எதுவித குறைகளுமின்றி பாரபட்சமற்ற வகையில் செய்து வருகின்றபோது இங்கு முஸ்லிம்களுக்கு நடப்பதெல்லாம் முற்றிலும் தலைகீழான விரும்பத்தகாத சம்பவங்களே. ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை என்று சர்வதேசத்தக்கு காட்டும் கைங்கரியங்களில் ஆர்வமாக இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் தந்திரோபாங்கள் அதிகமாக இடம்பெறுகின்றதை அனைத்துச் சம்பவங்களும் படம் போட்டுக் காட்டுகின்றன.

புதுப்புது விடிவில் திட்டமிடப்பட்டு வரும் செயற்பாடுகள் ஒரு இனத்தை குறி வைத்து அவ்வினத்தை ஏதாவது ஒரு வழியில் செயழிழக்கச் செய்து தமது சுய இலாபங்களை அடையும் முறைமையின் வெளிப்பாடுகள் இன்று அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றமையானது முழுச் சமுகங்களையும் நிம்மதியற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் மீது இன்று இனவாதிகள் மதத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற அடிப்படையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாது அவர்களின் பண பலத்தைப் பெற்று தமது தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் அமைதியற்ற நிலையை தோற்று விப்பதில் அதீத அக்கறையுடன் செயற்படுகின்றனர். இவ்வாறு செயற்படுபவர்களை இந்த அரசு கட்டுப்படுத்தாது பாலூட்டி வளர்ப்பதாகவே நோக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொருத்த மட்டில் பர்மிய முஸ்லிம்களுக்கு இழைத்த முறைமையிலான பாணியில் பொதுபல சேனா செயற்பட முற்பட்டால் இந்த நாட்டின் வரலாறு வேறு விதமாக அமையலாம் என முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர். அன்மையில் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் பர்மாவுக்குச் சென்று சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என்று வர்ணிக்கப்படும் பர்மாவின் விராது தேரரைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்களை அழிக்கும் நுட்பத்தை கற்றுவிட்டு வந்த பிறகுதான் அதிகமான அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். சமாதானத்தையும,; ஒற்றுமையையும் விரும்பும் சகல மக்களினதும் எதிரியாக வர்ணிக்கப்படும் தீவிரவாத பொதுபல சேனா முஸ்லிம்களை முற்றாக அழிக்கும் குறிக்கோல்களுடனேயே தமது தீவிரவாத நகர்வுகளை முனைப்புடன் மேற்கொண்டிருப்பதை தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்தகாலச் செயற்பாடுகளால் இன்று முஸ்லிம் சமுகம் தமது சுதந்திரத்தை தொலைத்த காலமாகவே கடந்த இரண்டரை வருகாலம் அமைந்துவிட்டது. தமக்கும் தமது சமயத்திற்கும் நேர்ந்து கொண்டிருக்கும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு சத வீதமேனும் முஸ்லிம் சமுகம் சார்பாக அரசாங்கம் திரும்பிப் பார்க்காமல் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை சுருட்டிக் கொள்வதைக் கண்டு வெறுப்படைந்த ஒரு சமுகமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர்.

இந்த நாட்டில் அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு இனத்திற்கு எதிராக விடாப்பிடியாக மேற் கொள்ளப்பட்டு வரும் மேற்படிச் செயற்பாடுகளுக்கு எங்கு நீதி பெறுவது? என்பதே இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏக்கமாகும். பொறுமைக்கும் எல்லையுண்டு ஆனால் அந்தப் பொறுமையையே இழக்க வைக்கும் மிக மோசமான செயற்பாடுகளை கொண்ட விரும்பத்தகாத இனவாத மனிதர்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றமையினால் இவை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுப்பதுடன் மனித உரிமை மீறல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு அபாயத்திற்கான முன்னோக்கிய நகர்வாகவுமே நோக்கப்படுகின்றது.

இலங்கையில் இனவாதம் தலைதூக்கி தாண்டவமாடும் இத்தருவாயில் முஸ்லிம்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது முஸ்லிம்களின் சமய ரீதியான மன உணர்வுகளைத் தாக்கும் விடயமாகவே அமைந்துவிடுகின்றது. இதுவரையும் நிதானமாகவும், அமைதியாகவும், பொறுமையாகவுமே முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர் காரணம் புனித இஸ்லாம் போதித்துள்ள நற்போதனைகளாகும் அதன் காரணமாகவே இன்று பாரியதொரு இரத்தக்கலரி ஏற்படாதிருக்கின்றது. இந்தவகையில் மக்களின் பாதுகாப்புக்கு பொருத்தமானவர்கள் அக்கறை செலுத்தாது மாற்றாந்தாய் மனப்பான்மையில் கண்டும் காணாததுபோல் இருப்பதானது மனித உரிமை மீறலான விடயமாகவே நோக்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இன்று மாவனெல்லைச் சம்பவம் முஸ்லிம்களுக்கு பீதிக்குமேல் பீதியை ஏற்படுத்தும் சம்பவமாகவேயுள்ளது. காரணம் கடந்த வாரம் அளுத்கமையில் சண்டித்தனமான முறையில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டமையின் அடுத்த கட்டமாக மறைமுகமான முறையில் மாவனெல்லைக் கடை எரியூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனை வர்த்தக நிலையங்கள் இனவாதிகளின் கண்களில் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெரியாமல் முஸ்லிம் சமுகம் இன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அப்பாவிகளாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய அடாவடித் தனச் செயற்பாடுகளை அவதாணிக்கும் போது முஸ்லிம் சமுகம் சர்வதேசத்திடம் இறுக்கமாக நியாயமும் நீதியும் வேண்டிச் செல்ல வேண்டியதொரு காலத்தின் பக்கம் சென்று கொண்டிருப்பதையே இனவாதிகளின் அடாவடித்தனங்களில் இருந்து அவதாணிக்க முடிகின்றது.

இனவாதிகள் யார் எதையும் கதைக்கட்டும் நாம் முஸ்லிம்களை அழித்தே தீருவோம் என்ற கர்வத்ததுடன் தமது அடாவடித் தனமான காட்டுத்தர்பார் நடவடிக்கைகளை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். மாவனெல்லையில் முஸ்லிம் அறிஞரின் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயரை சண்டித்தனமாக மாற்றியமை, தெவனகல கிராம மக்களை அகற்ற ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டமையின் பின்னணியில் இன்று மாவனெல்ல முஸ்லிம் சகோதரரின் பலகோடி ரூபா பெறுமதியான ஹார்ட்வெயார் கடைத் தொகுதி எரியூட்டலாக இருக்கலாமென முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இவ்வாறு பகிரங்கமாக நடக்கும் சம்பவங்களுக்கு அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமான கதைகளை கூறாது நாட்டு நலனையாவது அடிப்படையாக வைத்து சட்டத்தை உயிரூட்டமுள்ளதாக ஆக்கவேண்டும். ஆனால் சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டியவர்கள் அதனை கட்டுப்படுத்த அல்லது தடுக்காவிட்டால் அவர்கள் வன்முறைக்கு ஆதரவளிப்பவர்களாகவும் அவர்களின் தொழிலுக்கு துரோகமிழைக்கும் குழுவினராகவுமே சமுகத்தால் கணிக்கப்படுவர்.

எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம் சமுகம் இனி இல்லையென்ற பொறுமையின் அடித்தளத்திற்குச் சென்றுள்ளனர் இவ்வாறு பொறுமைக்கு கணிந்துள்ள ஒரு சமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் ஒரு நாள் சர்வதேசத்திற்கு தலைகுணிய வைக்கும் என்பதே இஸ்லாமியர்களின் ஆணித்தரமான நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாத பிடியில் சிக்கித் தவித்து தமிழ் மக்களைப்போல் ஊரை இழந்தனர், உடமையை இழந்தனர், இல்லறங்களை இழந்தனர், அங்கவீனர்களானர், பல பெண்கள் விதவைகளானர் ஏன் பலரின் உயிர்கள் கூட காவு கொள்ளப்பட்டன இவை எல்லாவற்றிற்கும் விடை கிடைக்குமென்று காத்திருந்த வேலையில் பௌத்த இனவாதம் மீண்டும் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரிகளாக முஸ்லிம் சமுகத்தை அழிப்பதற்கான அடாவடித் தனங்களை ஆரம்பித்துவிட்டனர்.

சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மாறாக மக்களின் மன நலன்களையும், சமய விழுமியங்களையும் மதிக்காது புனிதமான மார்க்க சம்பிரதாயங்களை எதிர்க்கும் முரட்டுத்தனமான சமயப் போதகர்களாக வன்முறைக் கலாச்சாரத்தை மார்க்கக் கடமைகளாக கொண்டவர்களாகவே இனவாதிகள் துடிக்கின்றனர்.

இன்று நாட்டில் கொலை, களவு, மதுபாவனை, போதைவஸ்துப் பாவனை, கடத்தல்கள், சூதாட்டம் போன்ற வெறுக்கத்தக்க செயல்கள் மலிந்து காணப்படும் இக்காலத்தில் அவற்றை ஒழிக்க அல்லது அவற்றைத் தடை செய்ய முனையாது சமய விழுமியங்களில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் மானிடத்தை தீய செயல்கள் என்று அவர்கள் மீது முட்டி மோதும் மூடர்களை அடக்க ஒன்று திரல வேண்டிய தருணமே சமாதான விரும்பிகளுக்கு தற்போது வந்தள்ளது.

கடந்த கால வரலாற்றுத் தவறுகளை விடாது இனவாத அடக்கு முறைகளை தோற்றுவிக்க முட்படுபவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டி ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் அமைதியாகவும், சமாதானமாகவும் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல வழி சமைக்கவேண்டிய தலையாய கடமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கே உள்ளது.

எனவே மேற்படி விடயத்தில் அதீத அக்கறை செலுத்தி இந்த நாட்டை ஒரு இறைமையுள்ள ஜனநாயக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இனவாதத்தை இந்த நாட்டில் இல்லாதொழித்து சுதந்திர இலங்கையை ஏற்படுத்துமாறு இனவாதத்தால் நசுக்கப்பட்ட அனைவுரும் வேண்டி நிற்கின்றனர்.


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

Saturday, May 24, 2014

* 30 வருட யுத்தத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும்.


30 வருட யுத்தத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும். 



இந்த நாட்டில் இருந்த 30வருட கொடிய யுத்தத்தை வெற்றி கொள்வதில் முஸ்லிம்களது பங்களிப்பு என்ன? வெருமனே 8 % வாழும் முஸ்லிம்கள் 3,500 முஸ்லிம் இரானுவ வீரர்களை இந்த யுத்தத்தில் இழந்து ஏமது தாய் நாட்டிற்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பபை செய்திருக்கிறார்கள். என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்து விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். 

உலகில் எந்த ஒரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள். சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 23 வருடகாலமாக தனது சொந்த பூமியை இலந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிளேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன. 

இந்த நாடு சந்தித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாக்கிஸ்தான, ஈரான்; போன்ற நாடுகள் நேரடியாகவும் மறை முகமாகவும் உதவி செய்து யுத்தத்திற்கு பாரிய பங்களிப்பை இலங்கை அரசிற்கு செய்த உதவியை யாரும் மறந்திருக்க முடியாது. 

1994ம் ஆண்டு இலங்கை ஓரு பாதுகாப்பற்ற நாடு என்று கூறி கிரிகட் உலககோப்பபையை இலங்கையில் விளையாட நாடுகள் மறுக்கும் சமையத்தில் பாக்கிஸ்தான் இந்த நாட்டுக்கு தனது கிரிக்கட் அணியை இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச உலகிற்கு இலங்கை ஓரு பாதுகாப்பான நாடு என்பதை உணர்த்தச் செய்த உதவியை இந்த நாட்டு மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். 

சவுதி அரேபியா, குவைட், கட்டார், பேன்ற நாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. சவுதி அரேபியா வழங்கிய பாரிய வீடமைப்புத் திட்டம், அத்தோடு ஈரான் கோடிக்கணக்காண அமெரிக்க டலர் பெருமதியான உமா ஓய நீர் திட்டம், சபுகஸ்கந்தை என்னை சுத்திகரிப்புத்திட்ம், மற்றும் நீண்டகால கடன்திட்டத்தில் எமது நாட்டிற்கு மசகு எண்ணை வழங்கி உதவுவதையும் யாரும் மறந்திருக்க முடியாது இந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளை. 

ஜெனிவாவில் எமது நாட்டுக்கு முஸ்லிம் நாடுகள் செய்த உதவிகளை ஒரு போதும் யாரும் மறக்கவும் மாட்டார்கள். 

ஆனால் இப்படி ஏல்லாம் இந்த நாட்டுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக இருக்கும் போதும் ஏன் இந்த நாட்டு மக்களுக்கு எம்மைப்பற்றிய அச்சம்.? ஏன் எம்மை ஓரு பயங்கரவாதியக நோக்குகிறார்கள்? என் எம்மை ஒரு அடிப்படை வாதிகளாக பார்க்கின்றார்கள்?.

கசப்பான மற்றும் சில உண்மைகளையும் நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும். 

இன்று இந்த நாட்டு முஸ்லீம்கள் அரசியல் தொடக்கம் -
பாதால உலகம் வரை வியாபித்து இருகிர்கள். 

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நாட்டில் வியாபாரிகளாக அறிமுகமாகிய முஸ்லீம்கள் வர்தக வானிப துறைகளில் பெயர் பதித்து சிறந்து விளங்கினார்கள் முஸ்லிம் வியாபாரிகள் என்றால் நன் மதிப்பும் மரியாதையும் இருந்தது.

காலப்போக்கில் முஸ்லிம்களது நடத்தையில் பாரிய மாற்றங்கள் அதாவது, விரைவாக பணத்தைக் குவிக்கும் ஆசையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினர், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி செயல்களில் எமது முஸ்லிம்கள் சமபந்தப்பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய கொலைச்சம்பவத்தில்; முஸ்லிமகளுக்கும் தொடர்பு இருக்கின்றது, மற்றும் கள்ளக் கடத்தல், பாதாள உலகத் தொடர்பு, பாதாள உலகின் முக்கிய நபர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள். போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் கூடிய ஈடுபாடு…. 

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் அன்னிய சமூகங்கள் மத்தியில் இருந்தன.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுசேர அவர்களது நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியலைக் கொண்டு நடத்த குண்டர் படைகள், தனது அரசியல் நலன்களுக்காக தனது சமூகத்தையே ஏலம் போடும் அரசியல் கோமாளிகள், இவர்களை எமது சமூகத்தின் தலைமைகலாக ஏண்ணும் காலமெல்லாம் நாம் இந்த நாட்டில் அரசியல் அநாதைகலாக்கப்படுவோம், இது மட்டுமல்லாது ஏனைய சமூகங்கள் எம்மை எதிரியாகவே பார்க்க முற்படும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!

உங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் நீங்கள் முட்டாள் தனமான முடிவுகளை திடீர் திடீரென்று எடுத்து அதை நடைமுறைப்படுத்தும்படி எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?

பாதுகாப்புச்செயலாளர், பொதுபலசென செயலாளர் கூப்பிடுவதற்கெல்லாம் ஓடோடிப்போய் கையை கட்டிக்கொண்டு அவர்கள் சொல்வதை அல்லது கட்டளையிடுவதை அப்படியே எங்களுக்கு கூறி அதன்படி நடக்கும்படி கூறுகிறீர்களே?? உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக படவில்லையா? 

இந்த உலமா சபை உங்கள் அமைப்பு இஸ்லாமிய அடிப்படையில் எத்தகு பெறுமதி வாய்ந்தது, கண்ணியமிக்கது என்பதை நீங்கள் உணரவில்லையா? மார்க்கத்தீர்ப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையிலும், நமது உயிரினிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபிகளாரின் போதனை, வழிகாட்டல்களின் அடிப்படையிலும் வழங்ககூடிய சக்திவாய்ந்த அமைப்பை அந்நிய ……மத்தியில் ஏன் இவ்வளவு கேவலமாக்குகிறீர்கள்?

இந்த கண்ணியமிக்க சபைக்கு நீங்கள் தகுதியில்லை என்பதை (உங்கள் கோழைத்தனத்தாலும், ……………, அரசியல்தனத்தாலும்) பலதடவைகள் நிருபித்துவிட்டதால் அம்மேன்மைமிக்க சபையிலிருந்து நீங்கள் உடனே வெளியேறுங்கள்!!

உங்களைவிட பன்மடங்கு மார்க்க அறிவும், உலகஅறிவும், தைரியமும், விவேகமும், தலைமைத்துவ ஆளுமையுமுள்ள பல உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், வெளியில் உங்கள் செயற்பாடுகளால் சலிப்படைந்தவர்களாக, ஆனால் ……………. மக்களிடம் உங்களை காட்டிக்கொடுக்க முடியாதவர்களாக உள்ளனர். எனவே இனியும் முட்டாள் அரசியல் செய்யாமல் ஒதுங்குங்கள்!!

இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை, இனியும் இல்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அதனாலேயா குனூத் ஓதவேண்டாம் என்று கூறுகிறீர்கள்? அல்லது அவர்கள் அவ்வாறு உங்களுக்கு ஏதும் (வெளியில் எதுவும் சொல்லவேண்டாம் என கூறி) உத்தரவாதம் தந்தார்களா?

அப்படியாயின், அவர்களது ஏற்கனவே தரப்பட்ட எத்தனை உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டன? இவை ஒன்றும் உங்களுக்கு இதுவரை தெரியாதா? அல்லது அவர்கள் உங்களை பயமுறுத்தினார்களா? நீங்கள் பயந்துவிட்டீர்களா? அப்படியாயின் நீங்கள் விரும்பியபடி முடிவெடுக்கவோ, அவர்கள் முடிவெடுக்கவோ தற்போதுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளா??

நான், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: சிங்கள பௌத்தர்களுக்கு அஸ்கிரிய, மகாசங்க தேரர்கள் இருப்பதுபோல்தானே முஸ்லிம்களாகிய எங்களுக்கு உலமாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் எப்போதாவது இந்த பாதுகாப்புச்செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ அவர்களை இவர்கள் காலடிக்கு அடிக்கடி அழைத்து அறிவுரை வழங்கியிருப்பார்களா?? மாறாக இந்த செயலாளரும், ஜனாதிபதியும்தானே அந்த தேரர்கள் காலடிக்கு சென்று அவர்களை (அடிமைகள்போல்) காலைத்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று, அவர்களின் அறிவுரைகளை தங்கள் சட்டங்களாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வாறு “மதத்தை” கொண்ட அவர்களுக்கு அவ்வளவு கௌரவம் என்றால் “மார்க்கத்தை” கொண்ட எங்களுக்கு எவ்வளவு கண்ணியம் கிடைக்கவேண்டும்??

நான் நினைக்கிறேன், நீங்கள் எப்போது அவர்களுக்காக தெருவுக்கும், ஜெனிவாவுக்கும் ( …………..) சென்றீர்களோ அன்றே அவர்கள் உங்கள் இல்லை இந்த கண்ணியமிக்க உலமா சபையை வெறும் காற்பந்தாக இனங்கண்டுவிட்டார்கள். இதற்கு நீங்கள் நிச்சயம், பதில் சொல்லியாகவேண்டும்.

இது எனது குரல் அல்லது ஏக்கம் மட்டுமோ இல்லை, மாறாக அனைத்து, அல்லது மிகமிக அதிகமான முஸ்லிம்களின் குரலாகவும் ஏக்கமாகவுமே நான் கருதுகிறேன். இதை படிக்கும் சகோதர சகோதரிகள் தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
                                                            நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

*ஜமியத்துல் உலமா + பொது பல சேனா = புதிய கூட்டணி, நம்பமுடியாத உண்மை!



ஜமியத்துல் உலமா + பொது பல சேனா = புதிய கூட்டணி, நம்பமுடியாத உண்மை!

பொதுபலசேனாவுக்கு ஆதரவாக “ஜமிய்யதுல் உலமா” வாதாடியமை முஸ்லிம்களின் மனசாட்சிக்கு எதிரானதாகும். நேற்று 20-05-2014 அன்று தௌஹீத் ஜாமத்தின் செயலாளர் புத்தமதத்தை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அந்த அமைப்பை சேர்ந்த ஐவருக்கு எதிராக கோட்டை நீதிமன்றம் இரண்டாம் கட்ட வழக்கை பரிசீலனை செய்தது.

இந்த வழக்கை தௌஹீத் ஜாமத்துக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செய்திருக்கும் வேளையில் எதற்காக இதில் ஜமிய்யதுள் உலமா சபை சம்மந்தப்பட வேண்டும்? சம்மந்தப்படுவதோடு நிறுத்தாமல் பொதுபல சேனா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை களத்தில் இறக்கியமை முஸ்லிம்களின் மனசாட்சிக்கு எதிரான செயல் ஆகும்.

குறித்த விசாரனையில் பொது பல சேனாவின் தரப்புக்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை சார்பாக சட்டத்தரணி அலி சப்ரி கலந்து கொண்டு வாதிட்ட்டுள்ளார்.

இதில் ஜம்மிய்யதுல் உலமா சார்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக கடந்த 16.05.2014 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையை (http://www.acju.lk/ta/press-release-ta/statement/) படித்துக் காட்டி தவ்ஹீத் ஜமாத் மத நிந்தனை செய்ததாக கூறி தனது வாதத்தை முன்வைத்துள்ளார் சட்டத்தரணி அலி சப்ரி.

தவறுகளை தலைவன் செய்தாலும் தொண்டன் செய்தாலும் ஏழை செய்தாலும் பணக்காரன் செய்தாலும் தவறு தவறுதான்.ஜமிய்யதுள் உலமா பொதுபல சேனாவுக்கு ஆதரவாக வழக்காட சட்டத்தரணியை நியமித்து ஒரு சமூகத்தின் மீது கொண்ட கருத்துவேற்றுமைக்காக இனவாதிகளுடன் கைகோர்த்து பழி தீர்க்க எண்ணுவது முஸ்லிம் சமூகமே முஸ்லிம்களை கண்டு அஞ்சும் நிலையை நாட்டில் ஏற்படுத்தி நிற்கிறது.

சமூக விவகாரங்களில் இரு கூட்டத்தாருக்கு மத்தியில் நல்லிணக்கம் செய்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கும் ஜமிய்யதுள் உலமா இந்த பொறுப்புணர்வை மறந்து இனவாதிகள் என்று உலகம் முழுதும் அறியப்பட்ட பொதுபலசேனா வின் வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக இருந்தமை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும்.

“ஈமான்கொண்டவர்களில் இரு கூட்டத்தினர் சண்டை இட்டுக்கொண்டாள் அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்”
இந்த வசனத்தில் அல்லாஹ் இரண்டு ஈமானிய சமூகம் சண்டை இட்டாலே சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்க ஈமான் கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்த இஸ்லாமிய எதிரிக்கு ஆதரவாக வழக்காடுவது அல்குர்ஆனின் நேரடியான போதனைக்கு எதிரான செயல் அல்லவா.

“ஒரு கூட்டத்தார் மீது இருக்கும் உங்கள் கோபம் உங்களை அநீதமாக நடக்க தூண்ட வேண்டாம்”

இந்த வசனத்தின்படி நாம் எவ்வளவு பகைவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அநீதியான குற்றசாட்டை முன்வைக்க கூடாது என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது அல்லவா.அநீதிக்கு துணைபோகும் கூட்டத்துக்கு உதவுவதையும் இஸ்லாம் தடுக்கிறது என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்லி காட்டியுள்ளான்.

எனவே பொதுபல சேனாவின் சூழ்ச்சி கரமான இந்த வழக்கில் ஜமிய்யதுள் உலமா ஒரு பங்காளியாக ஆகியமை இஸ்லாமிய சமூகத்தை இஸ்லாமியர்களின் தலைமையே காட்டிக்கொடுத்து இனவாதத்துக்கு துணை போன வரலாறாக பதியப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் சமூக மார்க்க தலைமையை கொண்டவர்கள் என்று சொல்லும் ஜமைய்யதுள் உலமா இனவாதிகளின் சூழ்சிக்கு வெளிப்படை ஆதரவாக களம் இறங்கியமை இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் எந்த தளத்தில் இருந்து நோக்கினாலும் நியாயம் காண முடியாத ஒரு நிலைப்பாடாகும்.

இலங்கையில் முஸ்லிம்களே முஸ்லிம்களை காட்டிக்கொடுக்க போராடும் நிலையையும் முஸ்லிம்களின் பொது எதிரிகளுடன் கைகோர்த்து சக அமைப்பை வஞ்சம் தீர்க்கும் வாதட்டங்களை நீதிமன்றம் கொண்டு சென்றதை எண்ணி ஒரு முஸ்லிமாக இலங்கை பிரஜையாக வெட்கப்படுகிறேன்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

Tuesday, May 13, 2014

* புதுசு புதுசாக...!



புதுசு புதுசாக...!

சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் மீண்டுமொரு நீண்டகால போருக்கு வழிவகுத்துவிடக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகிக் கொண்டு வருகின்றதை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம் இனங்களை அழித்து, நாட்டில் இரத்தம் சிந்தி கொலைக்களங்களாக மாற்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்திற்கு எதிராக தொடர்ந்தும் அநீதி, அடக்குமுறை இடம்பெற்றுவருமாயின், அதுவே தீவிரவாதம் அல்லது பயங்கரவாத அமைப்புக்களின் தோற்றத்திற்கு காரணமெனலாம்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் 2009ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பயங்கவாதத்தினை ஒழித்து விடடதாக அறிவித்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், அதற்குப் பின்னரான காலத்தில் மதத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள பயங்கர வாத அமைப்புகளை அடக்கவோ, அழிக்கவோ முன்வரவில்லை.

போதாக்குறைக்கு, அவற்றின் நடவடிக்கையினை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அதனைத் தோற்றுவித்துவரும் அடிப்படை வாத பௌத்த அமைப்புக்களால், இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகள் தோன்றிவிடுமென்ற அச்சம், பலருக்கு எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள் கூட இது தொடர்பாக அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தினால், பௌத்த பொதுபல சேனா, இராவண பலய, சிங்கள இராவய, போன்ற தீவிர வாத அமைப்புக்கள் தட்டிக் கொடுத்து வளர்க்கபட்டு வருகின்றன.

இவற்றில் குறிப்பாக பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரின் கடும்போக்கு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதுடன், மீண்டுமொரு இனப்பிரச்சினைக்கு வழிகோலுகின்றன.

இலங்கையில் பௌத்த மதத்தையும் அதன் மரபுகளையும் பலப்படுத்துவதுடன், இதனைப் பாதுகாப்பதற்காக உருவெடுத்துள்ளதாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இவர், இஸ்லாம், உட்பட அனைத்து சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பம் முதலே செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பொதுபலசேனா அமைப்பினர், புனித பூமி என்ற பெயரில் இருக்கு பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்து செயற்பட்டுள்ளார்.

அத்தோடு கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

1915ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிங்கள- முஸ்லிம் இனக்கலவரம் இங்கு சுட்டிக்காட்டவேண்டியது முக்கியம். ஏனெனில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட இனக்கலவரமாக இதுவே கருதப்படுகிறது.

1915ம் ஆண்டு மே 29ம் திகதி கண்டி மாவட்டம் கம்பளையில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியதுடன், பல முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர்.

இக்கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தது. இவ்வாறானதொரு கலவரம் மீண்டும் இலங்கையில் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமாகவே உருவாகி வருகின்றன.

பொதுபல செனா அமைப்பின் தோற்றம் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராகவே தோன்றியுள்ளன.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை விமர்சித்தல், ஹலால் பிரச்சினை என புதுசு புதுசாக ஏதாவதொன்றை கிளப்பிய வண்ணமே குறித்த அமைப்பும் அதன் பொதுச் செயலாளரும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், ஞனசார தேரரிடம் பெருமளவில் பணம் இருப்பதாகவும், இதனால் அரசாங்கம் அவர் மீது கை வைக்க அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர் மீதும், அவ்வமைப்பின் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரசாங்கத்தின் மீது நேரடியாக சுமத்தப்படும் என்பதால், காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனா அமைப்பினர் பௌத்த பயங்கரவதியென மேற்குலக நாடுகளினால் குற்றம் சாட்டப்படும் மியன்மார் நாட்டின் தேசப்பற்றுள்ள தேசியத் தலைவர் அசின் விராது தேரரைச் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் தமது வாழ்நாட்களில் பௌத்த எழுச்சியை ஏற்படுத்துவதாக் கூறி, இனங்களுக்கிடையில் பகையை உருவாக்கி வருகின்றனர். இவர்களால், பௌத்த மதத்தினருக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றே பௌத்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தரின் போதனைக்கு மாறாக செயற்பட்டுவரும் இவ்வமைப்பினர், கௌதம புத்தரையே அவமதிப்புக்குட்படுத்தி வருகின்றனர்.

பௌத்த தேரர் என்ற குணாதிசயங்களை மீறி, ஒரு ரவுடியைப் போல ஞானசார தேரர் செயற்பட்டு வருகிறார். சிறுபான்மையின அமைச்சர்களை, பறையன், அவன், இவன், என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றார்.

இவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் சிங்கள அமைச்சர்களைக் கூடி அலி, சிங்களப் புலிகள் என முத்திரை குத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் பொதுபல சேனாவை அரசாங்கத்தினால் தடை செய்ய முடியாது. அது மாத்திரமல்ல அந்த அமைப்பின் செயற்பாடுகளைக் கூட அரசினால் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.

ஏனெனில், மகிந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, குண்டர்கள், பௌத்த தீவிர வாதிகள் என்ற கும்பல்கள் சுற்றிவர இருந்தால் மட்டுமே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் அதன் விகாரையில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து, வீதியில் இறங்கி இவ்வாறு கீழ்த்தரமாக செயற்படுவதால், பௌத்த பாதுகாக்கப்படுமா?

புத்தரின் போதனைகளை காற்றில் பறக்கவிட்டு, காவியுடையை தொடைக்கு மேல் தூக்கி ஏனைய அடக்க முயன்றால் அழிவுதான் மிஞ்சும்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றதால், பௌத்த பேரின வாத்தின் உண்மையான தோற்றம் வெளியில் தெரியாமல் இருந்தன. தற்போது ஞானசார தேரர் என்ற அடையாளத்துடன் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது.

“வசல சுத்தங்” என்பது புத்தரின் போதனைகளில் ஒன்று.

கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான் என்பது அதன் அர்த்தம்.

ஆனால், பௌத்த தர்மத்திற்கு தலைகீழாகவே தனது செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுத்துவரும் இவ்வமைப்பு, பாராளுமன்றிற்குள் நுழையவும் வெகுநாட்கள் இல்லை.

உத்தியோக பூர்வமற்ற பொலிஸார் என தம்மை அறிவித்துக் கொண்டு இ்வவாறான அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும், இவ்வமைப்பிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் விரைந்து முற்றுப் புள்ளி வைக்கவில்லையென்றால், ஜெனிவா அல்ல, உலகம் முழுவதிலிருந்தும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பலைகள் கிளம்பலாம்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

Sunday, May 11, 2014

* அரசாங்கம் வெகு விரைவில் விதைத்த வினைகளை அறுவடை செய்யும்...!!



அரசாங்கம் வெகு விரைவில் விதைத்த வினைகளை அறுவடை செய்யும்...!!

பொது பல சேனா....
பொது பல சேனா....
என்ற நாமம்,இன்று இலங்கை அரசியல் அரங்கில் ஒலிக்கப்படும் ஓர் முக்கிய நாமமாக மாறியுள்ளது.

இந்த பொது பல சேனா அமைப்பானது பல்வேறு குற்றங்கள்
புரிந்து வருவதை மக்கள் யாவரும் தெளிவாக அறிவர்.

ஏன்..?
அரசாங்கத்திற்கு கூட நன்கே தெரியும்.

அமைச்சர் ரிஷாத் பதியூர்தீன் காரியாலயத்தில் அத்து மீறி நுழைந்த பொது பல சேனா "தாங்கள் விஜித தேரரைத் தான் தேடி வந்தோம்"எனக் கூறி தாங்கள் தான் இச் செயலை மேற்கொண்டோம் என தெட்டத் தெளிவாக ஒப்புக் கொண்டது.

அப்படி இருந்தும் என்ன நடவடிக்கை இவர்கள் மீது எடுக்கப்பட்டது..?

மேலும்,
விஜித தேரரை தாக்கியது,ஜாதிக பல சேனா மாநாட்டை குழப்பியது,அவர்களை தகாத வார்த்தைகளால் ஏசியது,அவர்கள் ஆவங்களை எடுத்துச் சென்றது,குர்ஆன் மீது பொய்களை புணர்ந்தது இவற்றில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நேரடியாக சம்பந்தப்பட்ட தெளிவான ஆதாரங்கள் இருந்தும்,
அரசாங்கம் அவர் மீது என்ன நடவடிக்கை மேற்கொண்டது..??

அரசாங்கம் பொது பல சேனாவை வளர்க்கவில்லை என்றாலும் கூட பொது பல சேனாவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதும் உண்மை.

அரசாங்கம் இதன் விளைவுகளை வெகு விரைவில் சந்திக்கும் என்பதில் ஜயமில்லை.

சற்று தென்,மேல் மாகாண சபை தேர்தல் இதன் விளைவுகளை அறுவடை செய்திருந்தது.தென்,மேல் மாகண சபை தேர்தலில் 16 ஆசனங்களை இழந்திருந்தது.
தங்கள் கோட்டையாக திகழ வேண்டிய ஹம்பாந் தோட்டை மாவட்த்தில் 8 ஆசனங்களையும் முந்தய தனது ஆசனங்களிலிருந்து இழந்திருக்கிறது.

"முஸ்லிம்களின் மீதான வன்முறையே இவ் வீழ்ச்சிக்கான காரணம்"என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்க பள்ளி உடைப்புக்கள் போன்ற காரணிகள் தான் வித்திட்டது என்பதை மறுத்துரைக்க முடியாது.

தற்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது பல சேனா அமைப்பினருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஏன்..?
அமைச்சர் பெஷில் ராஜ பக்ஸ,பிரதமர் தயரத்ன ஆகியோர் மேலும் சில முக்கிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது பல சேனா அமைப்புடன் முரண்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலைமை வளர்ந்தால் அரசாங்கத்தின் நிலை..?

முளையிலே கிள்ளி எறிய அரசாங்கம் தவறியது.
இப்போதும் ஒன்றுமில்லை சற்றே பொது பல சேனா துளிர்விட்டுள்ளது.கிள்ளி எறிய முடியாவிட்டாலும் வெட்டி எறிந்து விடலாம்.
பொது பல சேனா அமைப்பானது தங்களுக்கு ஆட்சியை தீர்மானிக்கும் வல்லமை தங்களுக்கு உள்ளதாக கூறி வருகிறது.

அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட எதிர் காலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக வர வாய்ப்புள்ளது.

அவ்வாறு வரும் பட்சத்தில்,பொது பல சேனா யாருக்கும் அச்சுற முற வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி வெறும் டம்மியாக்கப்படுவார்.
பொது பல சேனா அமைப்பே நாட்டை ஆளும் அமைப்பாக மாறும்.

இது நாட்டிற்கும்,அரசாங்கத்திற்கும்,முஸ்லிம்களுக்கு,எதிர்க்கட்சிகளுக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல.

அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துமாக இருந்தால்,முஸ்லிம்கள் எதிர் விளைவுகளை அடைவார்களோ இல்லையோ அரசாங்கம் நிச்சயம் எதிர்விளைவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஜயமில்லை.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகிகளின் கவனத்துக்கு...!



தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகிகளின் கவனத்துக்கு...!

அன்புடையீர் 

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு பள்ளி நிருவாக சபை அல்லது நிருவாக சபைத் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இணைய தள மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே தாங்களது இந்த ஒரு தலைப்பட்ச்சமான முடிவானது அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். ஏனெனில் தினமும் பிரச்சினைப்பட்டுக் கொண்டு இருப்பதை விட விட்டுக் கொடுத்து நிம்மதி அடைவோம் என்று நீங்கள் நினைக்கலாம் என்றாலும் இது உங்களுக்கு தற்காலிகமானதொர நிம்மதியாகத்தான் இருக்குமே தவிர அது நிரந்தர நிம்திக்கானத் தீர்வாக ஒரு நாளும் இருக்கமுடியாது என்பது யதார்த்தம். 

ஏனெனில் பொளன்னறுவ அனுராதபுர பளய நகரம் மிஹிந்தலை தம்புள்ள உட்பட இது போன்ற இன்னும் பல வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த நகரங்கள் எங்கெல்லாம் பௌத்தர்களின் புனித நகரங்களாக அடையாளப்படுத்தப்;பட்டுள்ளதோ அவைகள் அனைத்தும் பௌத்த மயமாக்கப்பட்டு தனி பௌத்தரகளைக் கொண்ட நகரமாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. 

இந்த அவர்களின் இலக்கின் முதற்கட்ட கட்ட நடவடிக்கை பொளன்னறுவ தனி பொத்தமயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அனுராதபுர பளய நகரில் முஸ்லிம்களின் பூர்விகத்தைப் பறைசாட்டிக் கொண்டிருந்த பள்ளி வாயல் அண்மையில் டோசர் இயந்திரம் மூலம் தரை மட்டமாக்கப்பட்டது அத்துடன் அந்த இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் நீராவி என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதலால் அந்த நகரமும் இன்று பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது இந்த விடயத்திற்கு ஊடகங்கள் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுத்ததாகத் தெரியவில்லை காரணம் அது சிநுக சிநுக திட்மிட்ட அடிப்படையில் பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயற்திட்டமாகும்.

இந்த நிலை தம்புள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்றே விரும்புகின்றேன் எனவே தாங்களின் முடிவை மீண்டும் ஒரு முறை மீழ் பரிசீலனைக்கு உட்படுத்தி நம் சமூத்தின் ஆண்மீக மற்று அரசியல் தலைமைகளுடன் ஆளமானதொரு ஆலோசனை நடாத்தப்படுதல் மிகவும் சிறந்ததும் அவசியமானதும் எனக்கருதுகின்றேன்.

அத்துடன் தாங்களின் இந்த அவசர முடிவு தொடர்பாக பின்வரும் சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்;கு முன் வைக்கலாம் என்று விரும்புகின்றேன்.

1. நிருவாக சபையோ அல்லது தலைவரோ நீங்கள் நினைத்த மாத்திரத்தில் ஒருதலைப்பட்ச்சமாக இவ்வாறானதொரு முடிவை அவசர அவசரமாக எடுத்திருப்பது சரியானதுதானா? 

ஏனெனில் இது ஒன்றும் தம்புள்ள வாழ் உங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு பிரச்சினை அல்ல மாறாக நாட்டில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களுடையவும் பொதுவான பிரச்சினையாகத்தான் அன்று முதல் இந்த நிமிடம் வரைக்கும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஒரு போதும் தனித்து விடப்படவில்லை.

2. குறைந்த பட்ச்சம் தகவல் கிடைத்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை களமிறங்கி உங்களோடு அவசர அவசரமாச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களான அமைச்சர்களான ரிஷாட் பதிய்யுத்தீன் பைசர் முஸ்தபா ஹரீஸ் தௌபீக் மற்றும் மாகான சபை உறுப்பினரான அஷாட் சாலி ஆகியோர்களது ஆலோசனைகளாவது இந்த உங்களது தீர்மானம் பற்றிய விடயத்தில் பெறப்பட்டதா?

3. அரசால் மாற்றீடாக வழங்கப்படவுள்ள இடத்திற்கும் எதிர்காலத்தில் இப்படியானதொரு நெருக்கடி வரமாட்டாது என்பதற்கு உத்தரவாதம்தான் என்ன? அவர்கள் ஆயிரம் ஆயிரம் உறுதி மொழிகளையும் உத்தரவாதங்களையும் கொடுத்த போதிலும் அவற்றை நம்ப முடியுமா?

4. இன்று புனித பூமி எனும் போர்வையில் அதி புன்னியம் வாய்ந்த பள்ளியையே அகற்றுபவர்கள் நாளை தம்புள்ள சிங்களவர்களின் பூர்வீகப் பூமி எனவே முஸ்லிம்கள் யாரும் இங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது வெளியேற வேண்டும் என்று விரட்டியடிக்கப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

5. தம்புள்ளையில் முஸ்லிம்கள் பல தசாப்த்தங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு உள்ள ஒரேயொரு அத்தாட்ச்சி இந்த பள்ளிவாயல் ஒன்று மட்டுமே. இதனையும் தாரவாத்துக் கொடுப்பதனால் அங்கு முஸ்லிம்களின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாக அமைந்து விடாதா?

6. இந்த விட்டுக் கொடுப்பானது பல தசாப்தமாக இதேவிதமான பிரச்சினையில் இருந்து கொண்டிருக்கும் மிஹிந்தலை பள்ளிவாயல் போன்று நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் இன்னும் ஏராளமான பள்ளிவாயிற்க்கள் மத்ரஸாக்கள் போன்றவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?

எனவே தாங்கள் தீர்மானம் எடுப்பதற்கு முன் மேற்படி கேள்விகளுக்கு விடையைக் கண்டு கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதுதான் ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் மற்றும் நமக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றத்தரக் கூடியதாகவும் இருக்கும்.

தற்காலிக விடிவுக்காக ஒவ்வொன்றாகப் பறி கொடுத்து இறுதியில் நமது இருப்பையே பறி கொடுப்பதை விட போராட்டத்துடனாவது நமது இருப்பைத் தக்க வைத்தக் கொள்தல் சிறந்ததல்லவா.

சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்ää பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன்: 3: 159)

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈருலக வாழ்விற்க்கும் பாதிப்பேது ஏற்பட்டு விடாத வகையிலான முடிவுகளையும் தீர்மானங்களையும் எட்டச் செய்வானாக.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்



இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.

பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக் களமாக இலங்கையை மாற்ற இனவாதிகள் துடிக்கின்றனர். முஸ்லிம்களின் பொருளா தாரத்தை முடக்கவும் அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். சட்டத்தின் கைகளை இலங்கை அரசு கட்டிப் போட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிக்கும் நடவடிக்கையாக 450 வருடம் பழமை வாய்ந்த தர்கா ஒன்று சிங்களத் துறவிகளாலும் இனவெறி கொண்ட இளைஞர்களாலும் தகர்த்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. அப்போது காவல்துறை கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.

இனவெறி வானொலி எப்.எம். அலைவரிசை யினூடாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கப் பட்டு தம்புள்ளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜித் சேதமாக்கப்பட்டது. மஸ்ஜிதை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் அணிதிரண்டு சென்று இதைச் செய்தபோதிலும், பௌத்த துறவிகள் அதிகாரத் தோரணையில் செயற்பட்ட போதும் இலங்கை பாதுகாப்புப் படைகள் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். எவர் மீதும் சட்டத்தின் எந்த அதிகாரமும் பாய வில்லை.

குருநாகலை எனும் பகுதியில் இருக்கும் இரு சின்ன பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த துறவிகள் கிளர்ச்சி செய்தனர். பள்ளியைச் சூழ இருந்து பௌத்த மதக் கிரிகையைச் செய் தனர்.

தெஹிவளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜிதில் தொழுகை நடத்தக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குர்நாகலில் குளியாப்பிடி எனும் பிரதேசத்தில் பௌத்தத் துறவிகளும் இனவாதிகளும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் பன்றியின் படம் வரையப்பட்டு அதில் ‘அல்லாஹ்’ என எழுதப்பட்ட படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பொம்மை செய்து அதில் அல்லாஹ் என எழுதி கொடும் பாவி எரித்தனர். இருந்த போதும் இதில் ஈடுபட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அநுராதபுரத்தில் ஒரு பகுதியில் குடியிருக் கும் முஸ்லிம்கள் அந்தப் பகுதியை விட்டு வேறு இடம் செல்ல வேண்டும் என்றும் அங்கு அமைந்துள்ள பள்ளியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் எச்சரிக்கை விட்டனர். அப்பகுதி மக்கள் போலிசில் முறையிட்டனர். அதற்கு பின்னரும் சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் இரவு நேரத்தில் அந்தப் பள்ளிவாசல் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தினத்தில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சிக்குப் பின்னர் கூட சட்டத்தின் கண்கள் இறுக மூடிக்கொண்டே இருந்தது.

காலி, கேகாலை உள்ளிட்ட நான்கு பிரதேசங் களில் உள்ள மஸ்ஜிதுகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டு ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டன. எனினும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

மாலை வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மூன்று முஸ்லிம் மாணவிகளை ஒருவர் ‘ஹிஜாப் அணியக் கூடாது’ எனக் கூறி தடியால் அடித்து எச்சரித்துள்ளார். அதுகுறித்து போலீசில் புகார் செய்து சம்பவ இடத்திற்குச் சென்ற போது; அங்கு ஒருவர் நின்றுள்ளார். அவர் ஒரு மன நோயாளி எனக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் எம்மை அடித்தவர் இவர் இல்லையென்று கூறியபோதிலும் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கும் இந்த நடவடிக்கை மனநோயாளியின் செயல்பாடு எனக்கூறி மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கொழும்பு, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் மாடு அறுக்கும் இடங்களுக்குச் சென்ற பௌத்த துறவிகளும் இனவாதிகளும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டே இருக்கின்றது. ‘முஸ்லிம் கடை களில் பொருள்கள் வாங்க வேண்டாம்’ எனப் பிரச்சாரம் செய்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடராக நடைபெற்று வருகின்றது. சிங்கள மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்று முஸ்லிம் விரோத மனப்பான்மையை ஊட்டும் விதமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

‘முஸ்லிம் ஹோட்டல்களில் உண்ண வேண்டாம். அவர்கள் உணவில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தக் கூடிய மருந்துப் பொருள் போட்டுத் தருகின்றனர்’ என்ற பிரச்சாரத்தால் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



முஸ்லிம்களது ‘வட்டிலப்பத்தை’ சிங்கள சகோதரர்கள் விரும்பி உண்பார்கள். பெருநாள் என்றாலே வட்டிலப்பம் வேண்டும் என்று கேட்பார்கள். இந்த நட்புறவை சிதைக்கும் விதத்தில் உங்களுக்குத் தரும் வட்டிலப்பத்தில் முஸ்லிம்கள் எச்சில் துப்பித் தருகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து வெறுப்பை ஏற்றி வருகின்றனர்.

இலங்கை ஜம்இய்யத்ததுல் உலமா வழங்கும் ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கை உற்பத்திகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறைந்த தொகையையே பெறுகிறது. இருப்பினும் இதனால் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோடிக்கணக்கில் நிதி சேர்த்து அல்காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு வளர்க்கப் பட்டு வருகின்றது.

மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் 100 வருடங்களாக இருந்து வருகின்றது. அந்தப் பள்ளியை அகற்றக் கோருகின்ற அதே வேளை அந்தப் பள்ளி யின் சுவரில் பன்றி உருவத்தை வரைந்து முஸ்லிம் களின் மனதைப் புண்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளியே இருக்கும் துண்டுப் பிரசுரங் களில் ‘அல்லாஹ் - பல்லா’ (சிங்களத்தில் நாய் என்பது இதன் அர்த்தமாகும்)

‘பொது பல சேனா’ என்ற ஒரு அமைப்பே இந்த தீவிரப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது. அவ்வப்போது வேறு வேறு பெயர்களில் சில இனவாத செயல்களையும் செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரங்க மாக இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டும் கூட இலங்கை அரசு இதனைக் கட்டுப் படுத்த எந்த உருப்படியான நடவடிக் கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்த பாயாவையும் சந்தித்துப் பேசிய பின்னரும் கூட எந்த தங்கு தடையுமின்றி ஜனாதிபதியின் சொந்த ஊரில்கூட முஸ்லிம் எதிர்ப்பு ஊர் வலத்தை அவர்கள் நடத்தி விட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் ஆசியுடனும் அனுசரணையுடனுமே முன்னெடுக்கப்படுகின்றன என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதை மறுக்கும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம் களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.

இந்த பௌத்த மயமாக்கல்கள்; சிங்கள மேலாதிக்கத்திற்கு இன்று முஸ்லிம்கள் இரையானபோதும் அது அத்துடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து ஏனைய சமுதாயங் களையும் காவு கொள்ளவே முயற்சிக்கும். எனவே, இந்த இனவாதம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர்களின் வாழ்வுரிமையை நசுக்கிவிட்டு தற்போது முஸ்லிம்களைக் குறிவைத்து சிங்கள மேலாதிக்கம் காய் நகர்த்தி வருவதை சர்வதேச உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

Tuesday, May 6, 2014

* சிங்கள கமிஷன் - மறந்து போன உண்மைகளின் இன்றைய விஸ்வரூபம்



சிங்கள கமிஷன் - மறந்து போன உண்மைகளின் இன்றைய விஸ்வரூபம்

சோனவன். ருசியாக சாப்பிடுவான். தகுதிக்கு மீறிய ஆடைகளை உடுத்துவான். கணக்கு பார்க்காமல் செலவழிப்பான். கொலஸ்ட்ரோல், டயபிடிக் வந்து அவஸ்தை படுவான். ஹார்ட் அட்டாக் வந்தால் அப்பலோவில் பைபாஸ் செய்வான். மய்யத்து வீட்டு 3ம் கத்தத்திற்கும் சிறப்பாக சஹனில் புரியாணி ஓடர் பண்ணி விருந்து வைப்பான். அவ்வளவு தான். இது தான் இலங்கை சோனவனின் வாழ்க்கை. 

ஆனால் இந்த சோனவனை பற்றி சிங்கள இனவாத சக்திகளும், பொளத்த மதவாத சக்திகளும் புரிந்து வைத்திருப்தோ வேறு விதமாக. அவர்கள் புரிதல் எப்படி என்று சற்று பார்ப்போம்.
1. சோனவன் (தம்பிலா) இந்த நாட்டிற்கு விசுவாசமில்லாதவன்.

2. பாகிஸ்தானையும், சவுதி அரேபியாவையும் நேசிக்கும் துரோகி.

3. வியாபாரத்தில் மோசடி, கலப்படம் செய்பவன்.
தாடி வைத்துக்கொண்டு பொய் சொல்பவன், வாக்கு மாறுபவன்.

4, இலங்கையின் நகரங்களில் வாழ்ந்து கொண்டு மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்களை கிராமப்புரங்களில் முடக்கியவன்.

5. பொளத்த சிங்கள நாட்டில் அராபிய கலாச்சாரங்களை திணிப்பவன்.

6. புலி பயங்கரவாதிகளுடனான யுத்தத்தில் ஒதுங்கியிருந்தவன். தனது சமூகத்திற்கு சேதமில்லாமல் தப்பிக்கொண்டவன்.

7, சிங்கள சமூகம் செய்ய வேண்டிய வர்த்தகத்தை தன்வசம் வைத்துக்கொண்டு தனியாதிக்கம் செய்பவன்.
இவனின் முன்னோர்களான அராபியர்கள் அப்பாவி சிங்கள பெண்களை பலவந்தமாகவும், பணத்தாசை காட்டியும் கற்பை சூறையாடியவர்கள்.

8. சிங்கள ரத்தத்தில் வந்து இஸ்லாமிய தனித்துவம் பேசும் துரோகிகள்

9. இப்போது கல்வியிலும் சிங்கள சமூகத்தின் உரிமைகளை தட்டிப் பறிப்பவர்கள்.

10. சோனவனின் மதத்தை சேர்ந்த இஸ்லாமியர்களான அரேபியர்களே அப்பாவி சிங்கள யுவதிகளை வீட்டு பணிப்பெண்களாக வாடகைக்கு அமர்த்தி அவர்களின் கற்பை தினமும் ருசிப்பவர்கள், கொடிய அநியாயங்களை செய்பவர்கள்.

11. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் அமைக்க திட்டமிடுபவர்கள்.

12. புத்தளம் போன்ற பிரதேசங்களில் இஸ்லாமிய சட்டங்களை திணிப்வர்கள்

13. குருநாகல் மாவட்டத்தினதும், கொழும்பு மாவட்டத்தினதும் சிங்கள மக்களின் நிலங்களை ஏமாற்றி விலைக்கு வாங்குபவர்கள். இது பிரபாகரனின் பிரிவிணையை விட மிகப் பயங்கரமானது

14. பொளத்த சாத்வீக கொள்கைக்கு முரணாக மாடுகளை வதை செய்பவர்கள் மற்றும் அவற்றை தினமும் விழுங்குபவர்கள்

15. சிங்கள பிரதேசங்களில் பள்ளிவாயல்களை அமைத்து, பிரதேசங்களை இஸ்லாமிய மயப்படுத்துபவர்கள்.

16. அல்கைதா, ஹமாஸ் போன்றவற்றில் பயிற்சி எடுத்து சிங்களவர்களை அழிக்க முயல்பவர்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் வெறுமனே பேரினவாதத்தின் புரிதல்கள் மட்டுமல்ல. 1997 செப்டம்பர் மாதம் தொடராக நிகழ்ந்த விசாரணைகளின் பின் சிங்கள பொளத்த மக்களிற்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி சிங்கள கமிஷனில் முஸ்லிம்கள் தொடர்பாக முழங்கப்பட்ட வார்த்தைகள். இவற்றை சொன்னவர்கள் சாதாரண சிங்களவர்கள் அல்ல. மாறாக படித்த உயர் நிலை சிங்களவர்கள். புத்திஜீவிகள் வட்டத்திலும், தொழில்சார் வல்லுனர்கள் மட்டத்திலும் உள்ள சிங்களவர்கள். பொளத்த மத உயர் நிலை பீடாதிபதிகள். பல்கலைகழக பேராசியர்கள். மருத்துவதுறை நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள். புரிகிறதா இப்போது. இந்த பிரச்சனைகளிற்கு சிங்கள கமிஷன் உத்தேச தீர்வுகளை முன்மொழியுமாறு, இலங்கை கொழும்பு பல்கலை கழக பொளதீக, கணிதவியல் பேராசிரியர் நளின் டீ சில்வாவிடம் கூறியது. அதற்கான தீர்வுகளாக அவர் சில பிரேரனைகளை சமர்ப்பித்தார். அவை வருமாறு..

........................................................................................................

1. முஸ்லிம்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள். ஆகவே இவர்களிற்கு இந்த நாட்டில் வாழ மட்டுமே உரிமை உண்டு. ஆட்சியிலோ அல்லது நிர்வாக விடயங்களிலோ பங்கெடுக்க எந்த ஒரு உரிமையையும் வழங்க கூடாது.

2. வர்த்தகம் முழுமையாக பொளத்த சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படல் வேண்டும். முஸ்லிம்கள் வியாபாரம் செய்யலாம். ஆனால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக உரிமை கி்டயாது.

3. நிலங்களை முஸ்லிம்கள் விட்டேத்தியாக வாங்க முடியாது. முஸ்லிம் முஸ்லிமின் நிலத்தையே வாங்கலாம். ஆனால் அவர்கள் நிலங்களை சிங்களவர்களிற்கு விற்க முடியும்.

4. பள்ளிவாயல்கள் (மஸ்ஜித்க்ள்) கட்டலாம் தடையில்லை. ஆனால் அவற்றின் கட்டடக்கலை அமைப்பு “டகோபா” வடிவிலேயே இருத்தல் வேண்டும். அராபிய கட்டடக்கலை (மினாரா - குதுப்) வடிவில் அல்ல.

5. முஸ்லிம்களின் பிற்பத்தாட்சி பத்திரங்களில் அவர்கள் பெயர் பதியப்படும் போது இறுதியில் சிங்கள பரம்பரை பெயர் காணப்படல் வேண்டும். (உதாரணமாக - சுல்தான் அப்துல் காதர் முஹம்மத் நியாஸ் முதியன்சலாகே ஹீண் பண்டா)

6. இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்றவை இரண்டு குழந்தைகளை பெறும் முஸ்லிம் குடும்பங்களிற்கு மட்டுமே உரித்தாகும்.

7.முஸ்லிம்களின் நிலப் பரம்பல் மாற்றியமைக்கப்படல் வேண்டும்

8. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணி மற்றும் நிர்வாக கட்டமைப்பு மாற்றப்படல் வேண்டும்.

9. ஹஜ் செய்வதற்கு பொலிஸ் நற்சாட்சி பத்திரம் பெறல் அவசியம்.

10. மாடுகள் மற்றும் ஆடுகள் அறுப்பதை முற்றாக தடை செய்தல் வேண்டும்.

11. மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியின் இறக்குமதியும் தடை செய்யப்படல் வேண்டும்

12. இஸ்லாமிய மதரஸாக்கள் அரசின் அனுமதியுடன் மட்டுமே ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

13. சிங்கள பிரதேசங்களில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் தடை செய்யப்படல் வேண்டும்.

14. கட்டாய மதமாற்றம் செய்யும் இஸ்லாமிய நிறுவனங்கள் சீல் வைக்கப்படல் வேண்டும்.
போதகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.

15. முஸ்லிம் பெண்கள் முகம் மூடி வீதியிலோ அல்லது பொது இடங்களிலோ நடமாட முடியாது.

16. முக்கிய நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படல் வேண்டும். அவர்கள் பரவலாக கிராமப்பகுதிகளிற்கு பின்தள்ளப்படல் வேண்டும். இதன் மூலம் அரச வைத்திய மற்றும் இன்னோரன்ன சேவைகள் சிங்கள சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாதல் வேண்டும்.

17. ஆங்கிலேயர்களால் முஸ்லிம்களிற்கு வழங்கப்பட்ட பலதார மணம் தொடர்பான உரிமை, மண விலக்கு சம்மந்தமான உரிமை மற்றும் சொத்துரிமை போன்றன தடை செய்ய்ப்படல் வேண்டும். 

17. இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிச குடியரசின் சிவில் சட்டங்களிற்கு முற்றாக கட்டுப்படல் வேண்டும்.

இவையே அவரது ஆலோசணைகள். இவை அனைத்தையும் சிங்கள கமிஷனும் அதன் நிர்வாக குழுவும் விசாரணை செய்த நீதிபதிகளும் ஏகமனதாக அங்கீகரித்தனர். (தமிழர்கள் சம்மந்தமாகவும், நாட்டின் பிரிவினை சம்மந்தமாகவும் கூட பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. “இவை அனைத்தும் அவர்களது “கனவு பொளத்த தேசத்தில்” (Dream Buddhist Nation) சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஏகோபித்து முடிவானது.

இதன் பின்னரான கமிஷனின் இறுதி தீர்ப்பில் நாளைய சிங்கள பொளத்த அரசில் சிறுபான்மையினர் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் தொடர்பாக ஒரு நீண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவை ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டது. ஆனால் அவற்றை அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரரணதுங்க பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கதிர்காமர், ஜெயதேவ உயன்கொட போன்ற கல்விமான்கள் இவற்றின் விபரீதங்கள் பற்றி தக்கவாறு எடுத்துரைத்தனர். 

ஆனால் இன்றைய நிலைமைகள் வேறு. பொளத்த இனவாத சக்திகள் ஆட்சியில் பங்காளியாக இருக்கின்றன. இராணுவ கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொளத்த சிங்கள இனவாத ஊடகங்கள் அவர்களின் மறை கரங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பர்மா (மின்மார்) இவர்களிற்கு நல்ல முன் உதாரணமாக உள்ளது. புலிப் பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாகி விட்ட நிலையில் அவர்களது அரசியல் இருப்பை தக்க வைக்க இது ஒரு நல்ல கிராக்கி மிக்க அரசியல் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இது சில வேளைகளில் அரசியலில் உள்ள நல்ல மனிதர்களையும் தாண்டி தனது கரங்களை நீட்டும். தங்கள் அரசியல் இருப்பிற்காகவும், மீட்சிக்காகவும் அந்த நல்ல மனிதர்களும் மௌனித்து போகின்றனர். 

இனவாத ஆதிக்க சக்திகள் கிறிஸ் மனிதனின் உளவியல் போரின் மூலம் ஒரு விடயத்தில் குறியாக இருக்கின்றன. அது என்ன தெரியுமா? முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாதத்தை, ஆத்திரத்தை கிளறி விடல் என்பதே அது. அதன் வழியாய் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத செயற்பாட்டை தமது தெரிவாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர்களது அவா. அவ்வாறு நடந்தால் அவர்கள் ஆசைப்படும் எல்லாவற்றையும் படிப்படியாக நிறைவேற்றி விடலாம். முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் பட்டம் சூட்டி அல்கைதாவுடனும், லஷ்கர் ஈ தைபாவுடனும், ஹமாஸுடனும் இணைத்து பேசி, பயங்கரவாதத்தி்ற்கு எதிரான போரின் ஒரு முகமாகவே தாங்கள் இலங்கை முஸ்லிம் விவகாரத்தை கையாள்வதாக கருத்து வெளியிடுவர்.

குப்ர் அரசியலில் பங்கேற்றுள்ள முஸ்லிம் முதுகெலும்பற்ற பச்சோந்தி அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. குப்ர் அரசியலை ஏற்றுக்கொண்டவன் குப்பாரின் அடிமை. குப்பாரின் அடிமையால் அல்லாஹ்வின் அடிமையை ஒரு போதும் பாதுகாக்கவும் முடியாது பலப்படுத்தவும் முடியாது. 

அமெரிக்க இராஜாங்க மற்றும் ஆசிய பசுபிக் கட்டளை மையங்களின் இடைக்கி்டையான கிழக்கு மாகாண ஜிஹாத் பற்றிய கருத்துக்கள், லஷ்கரின் இலங்கை தொடர்புகள் பற்றிய கருத்துக்கள், நோர்வேயின் கிறிஸ்தவ பயங்கரவாதியின் இலங்கை முஸ்லிம்களி்ன் வெளியேற்றம் தொடர்பான கொள்கை பிரகடனம் போன்ற விடயங்கள் சற்று நெருடலாக உள்ளன. இவற்றிற்கான தொடர்புகள் பற்றியும், கிறிஸ் மனிதன் மஸ்ஜித்கள் மீதான தாக்குதல்கள் போன்ற இனவாத மறைவான சக்திகளின் தொடர்புகள் பற்றியும் தொகுத்து பார்க்கையில் இமாம் மஹதியின் வருகையின் அவசியம் அவசரமாக புரிகிறது. இல்லையெனின்.......

SINHALA COMMISSION
(ESTABLISHED BY THE NATIONAL JOINT COMMITTEE)
Hon. R.S. Wanasundara,President,National Joint Committee,70, D.S. Senanayake Mawatha,Colombo 08.
Dear Sir,
Sinhala Commission - Interim Report 1997.09.17
We submit herewith an Interim Report of our Commission.
This deals in particular with the injustices that may be caused to the Sinhala people if the proposed Draft Constitution is made the Supreme Law of the land. Members of the Maha Sangha and the public urged us to issue an Interim Report early as the Government is likely to present the Draft Constitution to Parliament soon.
We have acceded to the request and accordingly send this Report on the Draft Proposals issued by the Government.
Yours faithfully,
Sgd. S.W. Walpita Chairman
Sgd. A.D.T.M.P Tennekone Member
Sgd. Professor A.D.V. de S. Indraratna Member
Sgd. Professor P.A. de Silva Member
Sgd. P.D. Uduwela Member
Sgd. Professor Mrs. Lily de Silva Member
Sgd. G.P.S.H. de Silva Member
Padmashantha Wickramasooriya - Secretary

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை



வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை

தேர்தல் முடிந்ததிலிருந்து வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை. ஆனாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவல்லை. அனேகமாக இன்னொரு தேர்தல்
வந்தால்த்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் உற்சாகம் வரும் போல் தெரிகிறது. எனினும் நாம் இழந்தவற்றை இங்கு ஞாபகப்படுத்துகிறேன். ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக ஞாபமூட்டுதால் முஃமின்களுக்கு நன்மை தரும்.-அல்குர்ஆன்.

-ஒழிக்கப்பட்ட ஹலால் நடைமுiறைக்கு மீண்டும் அரசு அனுமதி தரவேண்டும்.

-உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் விசாரணைக்ட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

-தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்படவேண்டும்.

பள்ளிவாயல் கட்ட புத்த சாசன அனுமதி கோர வேண்டும் என்பது அநியாயமானது. முஸ்லிம் கலாசார திணைக்கள அனுமதி போதுமானது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.

ஒலுவில் காணிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

புல்மோட்டை காணிப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
கண்ணியா, கருமலையூற்று பள்ளிவாயல்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

சட்டக்கல்லூரி பரீட்சை ஊழல்கள் மூலம் முஸ்லிம்களுக்கு வஞ்சம்.

இன்னும்பல. அடுத்த தேர்தலில் நமது கட்சிகளை சந்திக்கலாம், இவற்றுடன்

நான் பார்க்கும் உலகம்

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...!



நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...!

இந்த நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனங்களுக்க்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன முறுகலை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காது கண்மூடித்தனமான முறையில் நடந்து கொள்வதானது முஸ்லிம் சமூகத்தை கணக்கில் எடுக்காதிருப்பதை நன்கு உணர்த்துகிறது. 

பொதுபலசேனா என்ற அமைப்பை இந்த ஆட்சியாளர் எந்தக் காரணம் கொண்டும் கட்டுப்படுத்தவோ அமைதிப்படுத்தவோமாட்டார்கள். இது முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து செயல்படுத்தப்படும் அமைப்பாகும். இவ்வமைப்புக்கு இந்த அரசாங்கமே சகல உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. பொதுபலசேனா ஞானசார தேரருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு மேலாக இன்னும் தற்பாதுகாப்புக்கென ஆயுதங்கள், தோட்டாக்கள் வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதை உற்று அவதானிக்கையில் நிச்சயமாக தற்பாதுகாப்புக்கென ஆயுதங்கள், தோட்டாக்களை இந்த அரசு வழங்கவே போகிறது. இவற்றில் எமது அரசியல்வாதிகளில் யாருடைய உயிரை எடுக்கப்போகின்றனரோ தெரியவில்லை. ஞானசார தேரருக்கு துப்பாக்கி, தோட்டா மட்டும் கிடைத்துவிட்டால் எமது அரசியல் தலைவர்களின் நிலை மிகக் கவலைக்குரியதே. ஆகவே, நாம் மிகவும் நிதானமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும். இதற்கான பாதுகாப்புக்களையும் நாம் அரசிடம் கோரவேண்டும். மேலும், உலக நாடுகள் அறியும்படி எமது பிரசாரங்களை மேற்கொள்ளல் அவசியமாகின்றது.

ஞானசார தேரரின் செயல்பாடுகளையும் மனநிலையையும் அவதானிக்கையில் அவருக்கு தற்பாதுகாப்புக்கு வழங்கப்போகும் துப்பாக்கி, தோட்டாக்களினால் எவரது உயிருக்கும் ஆபத்துக் கிடையாது என்ற உறுதியை ஞானசார தேரரிடம் பெற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அவ்வாறானதொரு உறுதிமொழியை எடுத்தாலும்கூட, திரைக்குப் பின்னால் ஏற்படப்போகும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டினால் ஞானசார தேரர் தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, எமது அரசியல் தலைவர்கள் மிகவும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மறைந்த அஷ்ரஃபின் மரணம் இன்றுவரை மர்மமாகவே காட்டப்படுகிறது. அதுபோல் நடக்கப்போகும் உயிரிழப்பை ஏதோ காரணம்காட்டி, சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் இன்றைய அரசியல் நிலவரமாகும்.

இன்று பொதுபலசேனா என்ற அமைப்பு தன்கையில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடக்கியொடுக்கி ஆழ மேற்கொள்ளும் செயல்கள் மிகவும் அநீதமானவையாகும். நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி சகல இனங்களுக்குமான ஒரு ஜனாதிபதியாவார். எனினும், இன்றைய அரசியல் நிலைப்பாட்டில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள வைப்பதற்கான ஜனாதிபதியின் தந்திரோபாயங்களில் ஒன்றாக இது இருக்குமோ என எண்ணுமளவுக்கு முஸ்லிம் சமூகத்தில் கதைபடுகின்ற ஒரு பிரதான விடயமாக இருப்பதை காண முடிகின்றது. இன்றைய ஆட்சியாளரின் கண்மூடித்தனமான சில நிலைப்பாடுகள் சிறுபான்மைச் சமூகங்கள் இந்நாட்டில் அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலைமையே இருப்பதாக இல்லை என்று கூறுமளவுக்கு அரசியல் விளையாட்டுக்கள் தென்படுகின்றன. பொதுமக்கள் எப்படிப்பட்டாலும் சரியே ஆட்சியதிகாரம் மட்டுமே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டிலே செயல்படுகின்றது என்பதை எமக்கு உணர்த்துகின்றது. இன்றேல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நடந்து கொள்ளும் அடாவடித்தனமான முறையைக் கட்டுப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சிறுபான்மைச் சமூகமான தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்கள் அதுபோன்றதொரு அடாவடித்தனம் செய்திருந்தால் அதைப் பெரிதுபடுத்தி முழு உலகுக்கும் அறியப்படுத்துவதுடன் நில்லாது அனைத்து ஊடகங்களையும் அழைத்து முன்னுரிமைப்படுத்தியிருக்கும். அனைத்துக்குமப்பால் முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுமிருக்கும்.

நான் பார்க்கும் உலகம்

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

* பொதுபல சேனாவை பயங்கரவாத பட்டியலில் இணைத்தமை சரியானதே - TRAC



பொதுபல சேனாவை பயங்கரவாத பட்டியலில் இணைத்தமை சரியானதே - TRAC

Excerpt from TRAC report;

http://www.trackingterrorism.org/group/bodu-bala-sena


பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை சரியானதே பயங்கரவாத ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடும்போக்குடைய மதவாதக் கொள்கைகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது,

இது தொடர்பிலான வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், சிறுபான்மையினத்தவரின் கடைகள் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளதாகவும், இதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது

* ஜனாதிபதி மஹிந்த, இனியும் மௌனமாக இருக்க முடியாது...!



ஜனாதிபதி மஹிந்த, இனியும் மௌனமாக இருக்க முடியாது...!

சர்வதேச ரீதியாக பயங்கரவாத செயற்பாடுகளை ஆய்வு செய்து பயங்கரவாத அமைப்புக்களை பட்டியலிட்டும் அறிக்கையிட்டும் வெளிப்படுத்தும் அமைப்பான 'பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு' (TRAC) பொதுபல சோன என்ற பௌத்த அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு இல்லை. ஏனென்றால் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அமைப்புக் களைத்தான் எமது நாட்டு அரசு பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காணும் அதன்படி அதன் செயற்பாடுகளை தடைசெய்யும். 

இதனடிப்படையில் பொதுபல சேனா என்பது நாட்டுக்கு அச்சுறுத்தலான அமைப்பு அல்ல. அது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாகவே இருக்கிறது. எனவே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலங்கை அரசு அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்ய முன்வராது. 

ஆனாலும் பொதுபல சேனா வேண்டுமென்றே வீணான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கின்ற அடக்குமுறைகளும் அச்சுறுத்தல் செயற்பாடுகளும் காலப்போக்கில் பெருத்த இன மோதல்களை உருவாக்கி இனக்கலவரம் ஏற்படுமாயின் அதனால் ஏற்படும் பேராபத்துக்களும் அழிவுகளும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். 

இதன்படி நாட்டைப் பாதுகாக்கும் வகையில் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை அரசு ஒரு முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் சிறந்த ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை நிறவேற்றுவதும் அரசின் பொறுப்பும் கடமையுமாகும். 

பொதுபல சேனாவின் செயற்பாடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளாக சர்வதேச அமைப்பு ஒன்று அறிவித்துள்ள இத் தருணத்திலும் இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது அரசின் மீது முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது.

எனவே பொதுபல சேனா அமைப்பு பற்றி ஜனாதிபதி தனது அபிப்பிராயத்தையும் அரசின் நிலைப்பாட்டையும் பகிரங்க அறிப்புச் செய்ய வேண்டும். இது சட்ட ரீதியான அமைப்பா? இதன் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? இதனைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் முடியாதா? இவ்வாறான அமைப்பு இந்த நாட்டுக்கு அவசியமா? இந்த அமைப்பு எது செய்தாலும் முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்களுக்கு எதிராக போராட வேண்டுமா? இப்படி இது தொடர்பாக ஏதாவது ஒரு உத்தரவை அல்லது அறிவிப்பை ஜனாதிபதி பகிரங்கமாக பொதுமக்களுக்கு விடுக்க வேண்டும். 

ஜனாதிபதி இதுவிடயத்தில் இனியும் மௌனமாக இருப்பது அர்த்தமில்லை. முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பொதுபல சேனா பற்றி ஒரு முடிவை அல்லது அது தொடர்பான ஒரு தீhமானத்தை அரசு நிறைவேற்றி, அதன் அர்த்தமற்ற செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

இதற்கான ஒரு முடிவினை ஜனாதிபதி எடுக்கும் வகையில் அவருடன் ஒரு வட்ட மேசை உரையாடலை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதாரபூர்வமாக ஏற்படுத்த வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய சிங்கள சிரேஷ்ட்ட அமைச்சர்களையும், எதிர்கட்சியிலிருக்கும் ஓரிரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரையும் உள்ளடக்கி முறையாகப் பேசி இதனை நீடிக்க விடாது ஜனாதிபதியிடம் ஒரு தீர்வைப் பெற வேண்டும்.

பொதுபல சேனா விடயத்தில் பொலிசாரால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கின்றது. மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது என்று பௌத்த சாசன அமைச்சு பகிரங்கமாக அறிவித்திக்கிறது. ஏனைய தேரர்களோ, சிங்கள அமைச்சர்களோ மாற்றுக் கருத்துச் கூறமுடியாதபடி அராஜகம் மேல் எழுந்து நிற்கிறது. யார் கருத்துக் கூறினாலும் உடனே அவர்களுக்கு மோசமான வார்த்தைகளால் பொதுபல சேனா எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் மீது ஞானசாரத் தேரர் குறிப்பிட்டிருக்கும் எதிர்க் குரல்கள் இதற்கு உதாரணமாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் மனிதனையே கடிக்கும் கதைபோல இன்று ஞானசாரத் தேரர் அரசாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, றிசாட் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய ஐந்து அமைச்சர்களுக்கும் பகிரங்க விவாத அழைப்பினை விடுத்திருக்கிறது. 

ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் முக்கியமாக இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். 

1. விவாதத்தில் பேசப்படும் விடயம் அல்லது விவாதத்தின் கருப்பொருள்
2. விவாதம் செய்கின்ற நபர் 

மேற்படி இரண்டுவிடயங்களிலும் ஞானசாரத் தேரர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகவே இருக்கிறார். 

முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரத் தேரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் அர்த்தமற்றவை அது நியாயமற்றவை ஆதாரமற்ற ஆபாண்டமான வீண் வாதங்கள் எனவே அர்த்தமற்ற ஒரு கருத்துடன் இருப்பவருடன் வாதம் புரியவேண்டிய எந்த தேவையும் முஸ்லிம் மக்களுக்கும் இல்லை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமில்லை. 

அடுத்து தான்தான் பேச வேண்டும் தான் பேசுவதுதான் சரியானது தனக்கு பதில் சொல்கின்றவர்கள் தலையில்லாதவர்கள் என்ற கருத்துப்பட பல ஊடக சந்திப்புக்களில் ஞானசாரத் தேரர் பதில் கூறியிருப்பதை அறிகிறோம். எனவே யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை பேச்சு நாகரீகமும் இல்லாத ஒருவருடன் சமமாக இருந்து வாதம் புரிவது ஒழுக்கமுள்ள எமது நாகரீகத்திற்கு நல்லதல்ல. 

இவைகளுக்கு அப்பால் ஞானசாரத் தேரர் யார்? இவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? இவருக்கு விளக்கமளித்து வாதிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. அதில் எமக்கான ஜனநாயகம் இருக்கிறது. நீதியை நிலைநாட்ட சட்டம் இருக்கிறது. எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பு இருக்கிறது. இவற்றுக்கும் மேலாக எங்களுக்கு பதில் கூறும் ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார். இதற்கிடையில் ஞானசாரத் தேரர் எங்கிருந்து வந்தவர்.

எனவேதான் தொடரும் பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத செயல்களுக்கு அரசாங்கத் தரப்பில் உள்ள பல அமைச்சர்களும் பகிரங்க கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற இந்நிலையில் ஜனாதிபதி இனியும் மௌனமாக இருக்காது ஏதாவது ஒரு முடிவை வெளிப்படையாக அறிவித்தே ஆகவேண்டும். அவ்வாறில்லையாயின் நாட்டில் ஏற்படும் இனவாத மோதல்கள்களுக்கு அரசாங்கம் வழிவிட்டிருப்ப தாகவே நாட்டு மக்கள் முடிவு கொள்ள வேண்டும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam