Wednesday, August 7, 2013

* கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


ராஜபக்ஸ சகோதரர்களின் இப்தார் அரசியல் !!!தலைவர்கள் நீடூடி வாழ பிரார்த்தனை செய்ய முண்டியடிக்கும் நபிவாரிசுகள் !!!!!!
கோத்தாவின் இப்தாரில் உலங்கு வானுர்தியில் உலமாக்கள் தரையிரக்கம் செய்யப்பட்டார்கள் !!
பாதுகாப்பு செயலாளருக்காக நல்லாசிவேண்டி சிங்களத்தில் துஆ கேட்டு நிகழ்ச்சியை அமர்கலப்படுத்தினார்கள் உலமாக்கள் !!
இரண்டாவது இப்தார் கண்டி ஜனாதிபதிமாளிகையை அதிரவைத்தது !!ஜனாதிபதிக்கு ரைகான் சுவர்க்க வாசலை திறந்து விட மன்றாடினார்கள் !!
3 ஆவது இப்தார் - பஷில் நோன்பு கஞ்சி குடித்தார் !!கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்தது என்னவோ முஸ்லிம் சமூகத்தின் கண்ணீர்!!அந்த கண்ணீருடன் தலைவர்கள் நீடூடி வாழ பிரார்த்தனை செய்ய முண்டியடிக்கும் நபிவாரிசுகள் !!!!!!
புற்­று­நோய்க்கு ஆரம்­பத்தில் மருந்து கட்­டு­வ­துதான் நல்­லது. நாட்­பட்ட புற்­று­நோயை தீர்த்து வைக்க முடி­யாது. இன­வா­தமும் புற்­று­நோய்தான். ஒரு புள்­ளியில் ஆரம்­பித்து மெல்ல மெல்ல முழு நிலப்­ப­ரப்­பையும் சம்­ஹாரம் செய்­கின்­றது. நாம் கண்ட யுத்­தமே இதற்கு அத்­தாட்­சிதான்.

அப்­படிப் பார்த்தால், தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட போது முஸ்லிம் தலை­மை­களும், அறி­ஞர்­களும், சட்­டத்­த­ர­ணி­களும், படித்­த­வர்­களும் தங்கள் தங்கள் பணியை சட்­டத்­திற்கு உட்­பட்டு நேர்­மை­யாக செய்­தி­ருந்தால், நிலைமை இவ்­வ­ளவு மோச­மாகி இருக்­காது. மஹி­யங்­க­னை­யி­லுள்ள முஸ்­லிம்­களின் கண்ணீர் இந்த நோன்பு காலத்தில் கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்­தி­ருக்­காது.

அதேபோல், இச்­ச­மூ­கத்­தி­லுள்ள அறி­ஞர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் வைத்­தி­யர்­களும் படித்­த­வர்­களும், பொன்­னா­டைக்­காக அலையும் கூட்­டமும் என்ன செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்?

பத்­தி­ரி­கையில் வரும் செய்­தியைப் படிப்­பது, ஒரு தேநீர் கடையில் குந்தி கதைப்­பது, வீட்­டுக்குச் சென்றால் ‘மானாட மயி­லாட’, ‘அசத்­தப்­போ­வது யாரு’ என செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களின் தாலாட்டில் தூங்­கிப்­போ­வது. யார் ஏற்றுக் கொண்­டாலும் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் இதுதான் முஸ்லிம் சமூ­கத்தின் உட்­புற யதார்த்தம்.

இனியென்ன, அடுத்த பிரச்சினை வரும் வரைக்கும்…

அரசியல்வாதிகள் தேர்தலில் லயித்திருப்பார்கள்,

முஸ்­லிம்கள் நோன்புப் பெருநாள் ஆடைக் கொள்வனவில் திளைத்திருப்பார்கள்.

இது விளம்பர இடைவேளை!


No comments:

Post a Comment