Wednesday, May 29, 2013

* அனுராதபுரத்தில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது பற்றி: சோனகர்.காம்

 அனுராதபுரத்தில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது பற்றி: சோனகர்.காம்

“அநுராதபுரத்தில் முஸ்லிம் பள்ளிவாயல் உடைத்து நொறுக்கப்பட்டது” – பாபர் மசூதி இடிக்கப்பட்ட அளவுக்கு பிரச்சாரத்தை முடுக்கி விட நன்மையடைய நினைக்கும் ஒரு கூட்டம் இணையங்களில் அலை மோதுகிறது.
இடிக்கப்பட்டது பள்ளிவாசலா? அப்படி அங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கவில்லையே என முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் அங்கலாய்த்துக்கொள்கின்றார்கள், இன்னொரு தரப்பினரோ இது இஸ்லாத்திற்குத் தேவையற்றது எனக் கருதுகிறார்கள், எனவே இது தொடர்பில் மேலதிக அங்கலாய்ப்புகள் இன்றி அமைதி காக்கின்றார்கள்.
இது எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் தரும் தீங்கினை அலசிப்பார்ப்பின், மீண்டும் ஒரு தடவை இனவாத அடக்கு முறைக்கான வித்திடல் அரங்கேறுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. அதைச் செய்தவர்கள் புத்த பிக்குகள் என்கிறது பி.பி.சி :http://www.bbc.co.uk/news/world-south-asia-14926002 , இது இனவாத அடக்குமுறையின் இன்னொரு வடிவம் என்கிறது சந்தர்ப்பவாத தமிழர் அமைப்புகள்.
இவ்விரண்டிற்கும் இடையில் இங்கு முக்கியம் பெறும் மேலதிக விடயங்கள் என்னவென்று பார்ப்பின் : முதலாவதாக, அநுராதபுரம் எனும் நகரத்தின் தொன்மையும், அது தொடர்பிலான உலக நோக்கும் முக்கியம் பெறுகிறது. இரண்டாவது, அம்மண்ணின் பாரம்பரியம் இங்கு தொலைக்கப்படுவது மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பாரிய சந்தேகங்களை உருவாக்கும் வகையான நடைமுறையாகவும் இது இருக்கப்போகிறது.
இதை எதிர்கொள்ள வேண்டியதும், இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் யார்? எனின், அது அரசாங்கம் என்பதும், இவ்வாறொரு அனர்த்தம் நடக்காமல் பாதுகாத்திருக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்கிறது? எனும் கேள்விக்குக் காவல்துறை (பொலிஸ்) என்பதும் மிக இலகுவான விடைகளாகும்.
எனினும், சமத்துவம் பேசப்புறப்பட்டிருக்கும் இலங்கை மண்ணில் இவ்வகையான அனர்த்தத்தை முன்நின்று நடத்தியது ஒரு பெளத்த பிக்கு என்றால், அதற்குப் பாதுகாப்பளித்துக் கை கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது காவற்துறை என்று கூறுகிறது பி.பி.சியின் செய்திக்குறிப்பு.
இங்கே இரண்டு உண்மைகள் எடுத்து நோக்கத் தகுதியாகின்றன:
அநுராதபுர முஸ்லிம்கள் இதனை காவற்துறைக்கோ அல்லது அதற்கு மேலோ கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடாத்தப்பட்டிருக்கிறது.
இவையிரண்டினையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது கிறீ்ஸ் பூதம் எவ்வாறு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கொன்று குவிக்கிறதோ அதே போன்று சமூக உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுவதற்கான ஆயத்தமாக இந்த சம்பவத்தினையும் எடுத்துக்கொள்ள முடிகிறது.
இவ்வாறு சமூகவியல் பயங்கரவாதத்திற்குள் உந்தப்படுவது மிகக்குறிப்பாக இலங்கையின் சிறுபான்மையினத்தவராக இருக்கும் அதே வேளை, தமிழர் – முஸ்லிம்களிடையே இருக்கும் விரோத உணர்வும், வெற்றிடமும் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பது ஐயந்திரிபட ஏற்றுக்கொள்ளக் கூடியது.
எனவே, இன ஒற்றுமை என்று வாய் கிழியப் பேசினாலும், அதை அடிப்படையாகக் கொண்டு இன வேற்றுமையை வளர்க்க ஆயத்தமாகும் நரிகளைக் கொண்டும் அநுராதபுரம் மற்றும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆயினும், ஜனநாயக ரீதியில் எம் உரிமைகளுக்காக நாம் போராடவும் தயாராக இருக்கிறோம் என்பதையும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமுதாயம் தெளிவாக்கத் தவறும் பட்சத்தில் இனி வருங் காலங்களிலும் இலங்கை இஸ்லாமியர்கள் இன அடக்குமுறைக்குள்ளாவதைத் தடுக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.
சிங்கள – முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பல கிராமங்களில் அதிகாலை (பஜ்ர்) தொழுகைக்கான அழைப்பு தொடர்பில் பல காலங்களாக வேரூன்றியிருந்த சலசலப்புகளை இந்த அரசாங்கத்தின் தீவிர பெரும்பான்மை சார் நிலையைப் பயன்படுத்தி சில சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்பியமை காலம் நமக்குக் கற்றுத்தந்த வரலாறாகும். அப்போதும், முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட சில கருத்துவேறுபாடுகளின் இடைவெளி, அதாவது ஒருமித்த கருத்துகள் காணப்படா நிலையை நன்கு உபயோகித்துக் கொண்ட பெரும்பான்மை இனவாத பூதங்கள் ஒரு சில இடங்களில் இதனை ஒரு சமூக சிக்கலாக உருவாக்கிப் பலன் கண்டனர்.
அதே வகையில், இனி வரும் காலங்களில் மெது மெதுவாக முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்களில் கை வைக்கத் துணிவதற்கான ஆரம்பமாக அநுராதபுரத்தை ஆக்கிக்கொள்ளாமலிருப்பதும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மாபெரும் கடமையாகும்.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தை 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதாரமற்ற வரலாற்றைக் கொண்டு இன்று ஒரு தம்ம தேரரால் இடிக்க முடிகிறது, அதற்கு பொலிஸ் அனுசரணையும் கிடைக்கிறதென்றால், சிங்களவர் வருகைக்கும் முற்பட்ட இலங்கைச் சோனகர்களின் பாரம்பரியங்கள் சிதைக்கப்படுவதற்கு பல தேரர்கள் உருவாவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்காது.
அதற்காக முஸ்லிம்கள், கடந்த கால தமிழர் வரலாற்றைப் போல ஆயுதமேந்தித்தான் தம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனும் எந்த நிர்ப்பந்தமும் இலங்கை முஸ்லிம்களுக்கு இல்லை. அவ்வாறான ஒரு வரலாறு இதற்கு முன்னரும் தேவைப்பட்டதும் இல்லை. 1915 கலவரங்களிலும் ஒரு சில முரண்வாதிகளின் தவறு இருக்கிறது, இருந்தது, அதனை அப்போதைய தலைவர்கள் மிக அவதானமாகக் கையாண்டார்கள். அதே போன்று, நாளைய வரலாறு எழுப்பப்போகும் கேள்விகளுக்கு இன்றைய தலைவர்களே விடை தரும் கடமையுள்ளவர்களாக இருக்கப்போகிறார்கள்.
சந்தர்ப்பவாதிகளால் தூண்டப்படாத, அதே நேரம் தம் உரிமையைப் பாதுகாக்கும் தைரியமும், புத்திசாதுர்யமும் கொண்ட ஒரு இஸ்லாமிய சமூகம் இலங்கையில் இருக்க வேண்டும் எனில், அதனை வழி நடத்தும் அரசியல் தலைமைகள், மார்க்கத் தலைமைகள் முதல் அனைவரிடமும் நமது ‘இருப்பு’ தொடர்பான தெளிவான மன நிலை முதலில் இருக்க வேண்டும்.
அதற்கடுத்ததாக, எதையும் ஜனநாயக ரீதியில் போராடிப் பெறும் வல்லமையை அனைத்து வகை வழிமுறைகளிலும் எமது சமுதாயம் கொண்டிருக்க வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் தம் சமூகத்திற்காக முன் வரவேண்டும். சட்ட திட்டங்களைக் கொண்டு சவால் விடும் அளவிற்கு நம் வரலாற்று ஆவணங்கள் நம் மத்தியில் காணப்பட வேண்டும், அது தொடர்பில் நமமு சமூகம் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும், கற்பிக்கப் பட வேண்டும்.
ஆனால், இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்று நன்கு அலசி ஆராய்வின் இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்குள் பிராந்திய, பிரதேச, பழக்க வழக்க என்று ஆரம்பித்து பல்வேறு வகையான தவிர்க்கக்கூடிய இடைவெளிகள் நிரம்பிக் காணப்படுவதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
அதிலிருந்து நம் சமூகம் விடுபட வேண்டுமெனின், அதற்கான வழி காட்டல் அவர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டும்.
இந்தச் செய்தியில் உண்மையும், பொய்யும் கலந்திருக்கும் எனும் சந்தேகத்தில் இருப்போர் இந்த இணைப்பில் சில தகவல்களைப் படங்களுடன் பெற்றுக்கொள்ளலாம் : http://www.srilankamirror.com/english/the-news/7123-mosque-near-king-dutugemunus-remains-torn-down
அங்கே காணப்படுவது பள்ளிவாயல் அல்ல வெறும் , நினைவுக் கூடந்தான் என்றிருந்தாலுங்கூட அதனை முஸ்லிம்களுக்கெதிராகத்தான் செய்கிறோம் எனும் தெளிவைத் தர பச்சைக் கொடி எரிக்கப்படுவதும், பெளத்த கொடி ஏற்றப்படுவதும் எனும் திரிபாக்கம் ஒரு பக்கம் இருக்க, அங்கு காணப்படும் ஆலமரம் , எம் சமூகத்தில் காணப்படும் மேலுமொரு புராண பூதத்தைத் தட்டியெழுப்புகிறது.
அதாவது, அரசமரம் எங்கிருந்தாலும் அங்கே ஒரு பெளத்த விகாரையை சிங்களவர் உருவாக்கியே தீருவர் எனும் அடிப்படையை இந்த இனவாத அடிப்படை இயக்கங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த முயலலாம் என்பதே அதுவாகும்.
தமிழரின் பாரம்பரிய நிலங்கள் விகாரைக்காக அபகரிக்கப்படுகின்றது என்ற கோஷம் எழுந்ததும் பின் அடங்கியதும் நாம் ஏற்கனவே கண்டறிந்த வரலாறாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் அபகரிப்பாக இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானம் எனும் பெயரில் நிறுவப்படலாம், அதற்கான அடிப்படையாகவே அநுராதபுர முயற்சி பார்க்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கே அப்படி எந்த கட்டுமானமும் இடம்பெறவே இல்லையென்று அநுராதபுர வாசிகள் கூறும் பொழுது, இல்லை அப்படிக் கட்டப் பார்த்தார்கள் அதனால் நாம் இடித்தோம் என்று பெளத்த பிக்குகளால் கூற முடிகிறது.
அப்படித்தான் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானமாக இருந்தால் அதைத் தட்டிக் கேட்பதற்கு நீதி மன்றம் ஒன்றின் தேவையை இல்லாமற் செய்யும் பெளத்த பிக்குகள் தம் பாடத்தினை பாபர் மசூதி இடிப்பிலிருந்து கற்றுக்கொண்டார்களா? எனும் கேள்வியும் வருகிறது. ஆக மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் மெளனிகளாக இருக்கும் வரை அதிகார சலுகைகள் இருப்போர் ஆடிக்கொண்டயிருப்பர் என்பது இங்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
அதில் ஒரு இனம் பாதிக்கப்படுவதும், இன்னொரு இனம் பலன் அடைவதும் அதிகார வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்பாக இருப்பின், சாதாரண மக்கள் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிடும். எனினும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டும், சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்ளக்கூடிய பல வாய்ப்புகளை எதிர்க்கட்சியனரும், தமிழ்த் தரப்பினரும் ஏற்கனவே கை நழுவ விட்டு விட்டார்கள்.
குறித்த, அநுராதபுர சம்பவத்தின் உண்மை நிலையறிந்து, அதற்கான சட்ட நடவடிக்கைகள் மூலம் நியாயத்தை நிறுவ இலங்கைச் சோனகர்களால் முடியுமாயின் அது வரலாறாக மாறுவதும், அதிலிருந்து வரலாறு மீண்டும் மாற்றி எழுதப்படும் நிலை உருவாவதையும் தடுத்து நிறுத்த முடியாது.
எனினும், பொதுவாகவே நாமுண்டு நம் தொழிலுண்டு, நம் குடும்பமுண்டு என்று வாழப்பழகியிருக்கும் எம் சமூகம் அந்த வரையறை தாண்டிய சமுதாய விடியல் நோக்கியும் பயணிக்கும் தேவையுள்ளதையும் உணர்ந்து கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி உருவாகப்போவதில்லை என்பதையும் கருத்திற் கொள்வது நல்லது.
- மானா-

* அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா முஸ்லிம் குடும்பங்களைஅகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள்ஆர்ப்பாட்டம்


அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா முஸ்லிம் குடும்பங்களைஅகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள்ஆர்ப்பாட்டம்
அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்திருக்கிறது.
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
என்.எம். அமீன் செவ்வி
அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்.
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
என்.எம். அமீன் செவ்வி
மாற்று மீடியா வடிவில் இயக்க
அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்.
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
என்.எம். அமீன் செவ்வி
மாற்று மீடியா வடிவில் இயக்க
அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்.

* கெட் ஒன் யுவர் மார்க் கெட் செட் GO ?!!!!!


கெட் ஒன் யுவர் மார்க் கெட் செட் GO ?!!!!!

அனுராதபுரத்தை விட்டு வெளியேறு அது புனிதபூமி? !!!!!!!!
தம்புல்லையைவிட்டு வெளியேறு அதுவும் புனிதபூமி ?!!!!
கண்டி புனிதத்திலும் புனிதபூமி அதை யும் விட்டு வெளியேறு ?!!!
மகியங்கணையை விட்டு வெளியேறு புத்தர் வந்த இடம் ?!!!
களனியில் கால்பதிக்காதே புத்தர் கால் பதித்த இடம் ?!!!
ஜெய்லாணியை விட்டு ஓடு !!!! அது எங்கள் புனிதபூமி ?!!!!
தீக வாபி புனித பிர தேசம் பெளத்த வர லாற்றுப் பிர தே ச மாகும். அங்கிருந்து ஒடுஓடு?!!!
கதிர்காமம் எங்கள் புனிதபூமி ?!!!!!!!
மாளிகாவத்தை எங்கள் வரலாற்று பூமி அங்கிருந்தும் ஓடு !!!!!!!!
புத்தளம் எங்கள் விஜயன் எங்கள் பூட்டன் வந்து இறங்கிய இடம் அங்கிருந்தும் ஓடு ?!!
பேருவளை புத்தர் ஓய்வு எடுத்த இடம் அங்கிருந்தும் ஓடு ?!!!!
கம்பளை எங்கள் இராசதானி அங்கிருந்தும் ஓடு ?!!!
ஓடுகிறோம் ஓடுகிறோம் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிவிட்டோம் !!!
இப்போ என்ன செய்வது ?!!!!!உங்கள் கருத்துக்களை பதியுங்கள் !!!

நான் பார்க்கும் உலகம்

* பிரபலத்துக்காகத் துள்ளும் சில பௌத்த துறவிகள் போன்ற கலகக்காரர்கள் வேறு யாருமில்லை.! - மகிந்த யாப்பா


பிரபலத்துக்காகத் துள்ளும் சில பௌத்த துறவிகள் போன்ற கலகக்காரர்கள் வேறு யாருமில்லை.! - மகிந்த யாப்பா

‘இன்று வீதிக்கு இறங்கி பெரிதாகப் பேசுகின்ற, எதிர்ப்பு ஊர்வலம் நடாத்துகின்ற, மத வழிபாட்டுத் தலங்களுக்குள் தன்னிச்சையாக நுழைந்து தொலைக்காட்சிகளில் காட்சியளிப்பதற்காக ஓலமிடும் எங்களுடைய பௌத்த துறவிகள் போர் நிகழ்வுற்ற காலத்தில் எங்கே இருந்தார்கள்? அரந்தலாவில் பௌத்த பிக்குகள் 69 பேர் கொலைசெய்யப்பட்ட போது எங்கிருந்தார்கள்? என்றாலும், இன்று முடிவில்லாமல் எதிர்ப்புப் பேரணிநடாத்துகிறார்கள், உரக்கக் கத்துகிறார்கள், ஏன்? அச்சமில்லை, அவற்றைச் செய்தால் விகாரைக்கு வரமுடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவ்வாறின்றி இவர்களைப்போல் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பெயரைப் போட்டுக்கொள்ளத் துடிக்கின்ற கலகக்காரர்கள் வேறில்லை’ என்று விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

‘நாட்டை உயர்த்தும் நீல அலை’ எனும் பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மாத்தறை, வெலிகம, மிதிகம பிரதேசங்களில் நடைபெற்றபோது, அவற்றில் கலந்துகொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,
இன்று எங்கள் நாட்டுக்கு எதிராக எத்தனை எத்தனயோ உபாயங்கள் நடைபெறுகின்றன. இவற்றைச் செய்பவர்கள் நம்நாட்டவர்கள் அல்லர். பிறநாட்டவர்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள். என்றாலும், அவற்றுக்கு எமது நாட்டவர்கள்தான் ஒத்தாசை புரிகிறார்கள்.

இன்று பலம்பொருந்திய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் எங்கள் ஜனாதிபதியைப் பார்த்து, ‘நீங்கள் இதுவரை செய்ததுபோதும், உங்கள் ஒரு சகோதர்ரையேனும் பிறருக்குக் கொடுத்து ஒதுங்கியிருங்கள், அவ்வாறில்லாவிட்டால் அங்கிருந்து விலகி வேறு ஏதாவது பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!!


முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!!

மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் 
குறைநிறைகள் தேவைகள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் கல்வி 
போன்ற அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒரு யுத்தக்காலத்தில் 
நிழல்தரும் மரத்தை சின்னமாக்கி ஆரம்பிக்கப்பட்டது முஸ்லிம் காங்கிரஸ் 
என்ற கட்சி !!ஆம் அது கிளைவிட்டு நிழல் தரும் வேலை மாமனிதர் அஸ்ரப் 
மரணித்து விட்டார் !!!!
அதன் பிறகு என்ன நடந்தது ?!!
மரம் நிழல் தரவில்லை கிளை விட்ட மரம் குட்டிப்போட்டது !!ஊருக்கு ஒரு
முஸ்லிம் காங்கிரஸ் என்று மரம் நாட்டப்பட்டது !!ஒருவருக்குல் ஒருவர்
அடித்துகொண்டார்கள் எங்களை எல்லோரும் தலைமைதாங்கினார்கள் !!!!!!
ஆக இவர்கள் சாதித்தது என்ன ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எங்களை பிரதிநிதி த்துவப்படுத்தியவர்கள் தொழில் இன்றி வருமானம் இன்றி
ஏழையாகவும் அன்றாட உணவுக்கே அல்லாடிக்கொண்டிருந்தவர்கல்தான் !!!
பொடிநடையாகப்போனவர்கள் துவிச்சக்கரவண்டியில் போனவர்கள் வெளிநாடுகளில்
பிளேட் கலுவியவர்கள் இப்படிப்பட்ட வரலாறுகளை கொண்டவர்கள் !!!
தங்களை வளர்த்துக்கொண்டார்கள் !மாடமாளிகைகளில் உறங்கி பஜ்ஜூரோக்களில்
பவனி நெருங்க முடியாது S T F பாதுகாப்பு !!மெய்பாதுகாவலர்கள் புடைசூல
உல்லாசவாழ்க்கை !!
தேர்தல் நேரம் உரிமை பேசியவர் வீட்டுக்கு வந்து பெயரை சொல்லி அழைத்தவர்
இன்று நீங்கள் யார் ? உங்களை எங்கேயோ கண்ட ஞாபகம் ஆனதேரியாது ?!!!
இப்ப பேச நேரமில்லை ஜனாதிபதி என்னைசந்திக்க வருகிறார் !!இடத்தை காலி பன்னுங்கள் !!! இதை விட இவர்கள் எதை சாதித்தார்கள் ?!!!!!!!!!!!!!!:!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்று நாம் முகம் கொடுக்கும் பிரச்சினை ? அச்சுறுத்தல் எங்கள் வயோதிக பெற்றோர்
எங்கள் வீட்டுப்பெண்கள் குழந்தை குட்டிகள்அச்சுறுத்தப்படுகிறார்கள் எங்கள் வியாபார ஸ்த்தலங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்படுவது தொடர்கதையாகிறது !!!
எங்கள் பள்ளிவாயல்கள் தாக்கபடுவது ம் எரிக்கப்படுவதும் தொடர்கிறது ?????????????
எங்களுக்கு எதராக விடப்படும் அறிக்கைகள் எங்களை அச்சமூட்டுபவயாக உள்ளது ?!!!
முஸ்லீம்களை 24 மணித்தியாலத்துக்குள் தம்புள்ளையை விட்டு வெளியேறு!!!!!!!!
விடுதலை புலிகளும் இப்படித்தான் கூரினார்கல் அதன் பின் அதை அடியொட்டி உருவான முஸ்லிம் காங்கிரஸ்!!நீதி அமைச்சை அலங்கரிக்கும் தலைமை !!!பேரம்பேசும் சக்தி என்று சொன்னதலைமை !!
தம்புள்ளை பிரச்சினையை முன்வைத்து வாக்குகளை திருடியவர்கள் !!!!
மீண்டும் ஒரு தேர்தலை நோக்கியவர்களாக ?!!!!!!!!!!!!!!!!!!!
சகோதரர்களே நீங்கள் முஸ்லிம் அபிமானிகள் தான் மன்னிக்கவும் கேட்பதற்கு அவர்கள் சாதித்தவை !!
அவர்களால் எமக்கு ஏற்பட்ட நன்மைகள் உங்கள் பார்வை உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் !!
சமூகனலத்தை கருத்தில் கொண்டு உங்கள் ஆலோசனை களையும் பதியுங்கள் சிறந்தவை உடன்
மீள் பதிவுசெய்யப்படும் !!!

நான் பார்க்கும் உலகம்

Wednesday, May 8, 2013

* முஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்?




வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.

மேற்கண்ட தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸ் நூல்களிலும் விரவியே கிடக்கிறது. எனினும் மக்கள் இதன்படி செயல்படாமல் வேறு எந்த அடிப்படைகளில் “”நாங்கள் முஸ்லிம்கள்” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றால்

1. பிறப்பால், 2. முன்னோர்களின் கலாச்சார வழிமுறைகளால், 3. பெரும்பாலான வழிகேடர்களைப் பின்பற்றுவதால், 4. பெரியோர்கள், குருமார்களை முன்னிருத்திக் கொள்வதால் மேற் கண்ட நான்கு வழிகளில் அவர்கள் சீர்கெட்டு வழிதவறி பித்அத், குஃப்ர், ஷிர்க் என்ற பெரும் பாவங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டு ஷைத்தானிய பாதையில் சென்று இழிநிலையை அடைகிறார்கள்.

1. பிறப்பால் உயர்வா?
குறைஷ் கோத்திரத்தில் பிறந்துவிட்டதால் அபூஜஹீல் உயர்ந்தவனா? ஹபசி குலத்தில் பிறந்த பிலால்(ரழி) உயர்ந்தவர்களா? என்ற சாதாரண அறிவுகூட இல்லாத இந்த மடையர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று எவ்வாறுதான் கூறுகிறார்கள்? அரபி அஜமியைவிடவோ, அஜமி அரபியை விடவோ மேலானவன் இல்லை. யார் பயபக்தியாளர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு முன் மேலானவர்கள் என்ற நபிமொழியை இவர்கள் அறியவில்லையா?

2. முன்னோர்களின் கலாச்சாரம்: நபியின் வழி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு “”ஆ எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வந்த நடை முறை” என்று தூக்கிப் பிடிப்பவர்களுக்கு (குர்ஆனில்) “”அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்ளுக்கும் போதும் என்கின்றனர். என்ன? அவர்கள் முன்னோர்கள் மூடர்களாயும் எதையும் விளங்காதவர்களாயும் இருந்தாலுமா?” (பார்க்க. 2:170,171)
என இறைவன் கேட்பது இவர்கள் காதுகளில் விழவில்லை.

3. பெரும்பாலானோரைப் பின்பற்றுதல்:
ஷைத்தான் மிகவும் சாமர்த்தியசாலி, அவன் இப்பூமியில் பெரும்பாலானோரை அவரவர் களின் வழியிலேயே சென்று அவர்களை தன் வலையில் வீழ்த்தும் மாயக்காரன். உமர்(ரழி) போன்ற விரல் விட்டு என்னும் ஒரு சிலரே அவனது வலையில் தப்பிப் பிழைப்பர். அப்படியிருக்க இப்பூமியில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆகவே அதை சரி காண்கிறேன் என்போருக்கு

“இப்பூமியில் நீங்கள் பெரும்பாலானவர்களைப் பின்பற்றி னால் அவர்கள் உங்களை வழிகெடுத்து விடு வார்கள்”(6:116) என்ற குர்ஆனின் வசனங்கள் எங்கே கண்ணில் படப்போகிறது?

4. பெரியோர்கள் குருமார்கள்:
வலிமார்கள் ஒளிமார்கள் என்று அவ்லியாக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலரும், ஞானமார்க்கம் தரீக்காவின் பாதை எனச் சொல்லிக் கொண்டு சிலரும், மத்ஹப் தப்லீக் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இந்த சிலரெல்லாம் யாரென்றால் “”நாங்கள் அரபி கற்ற ஆலிம்கள் நீங்களெல்லாம் அவாம்கள்” என்று ஆணவம், அகம்பாவம் பேசும் பட்டம் பெற்ற மெளலவிப் புரோகிதர்களே பெரும்பாலானோரை வழி கெடுத்ததனால் இவர்கள் மறுமையில் 33:66-68ன்படி புலம்பி நாங்கள் பலஹீனர்களாய் இருந்தோம். இவர்கள் எங்களை வழிகெடுத்ததினால் இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடு என கதறும் இழிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலகில் இழிவைத் தவிர வேறு கூலி கிடையாது என்றும், மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள் என்றும் 2:85ல் இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதன்மீது நிலைக்கச் செய்வானாக!

* முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகள்!




(முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு செய்யும் உதவிகளை சிங்கள மொழியில் விளக்கும் தரவுகளே இவை. சிங்கள சகோதரர்களுடன் இதை பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது என்பது எமது நம்பிக்கை).



ශ්‍රී ලංකාවේ ප්‍රගතිය වෙනුවෙන් මුස්ලිම් රටවල දායකත්වය:



වැහිලිහිණියා ගිම්හානය ගෙන නොදෙන බව අප සැම දන්නා කරුණකි. නමුත් සුපරික්ෂාකාරී නොවීම, බාධා රහිතව කාදැමීම, දේශයේ සාමය හා සමගිය ගිල දැමීමට හේතු විය හැකිය. ජනවාර්ගික අර්බුදයක් උදෙසා ක්‍රෝධය බෝකරන කිසිඳු දේශයක් ප්‍රගතිය හෝ අභිවෘද්ධිය කරා යා නොහැක. එහෙයින් ශ්‍රී ලංකා ජනරජය මුස්ලිම් විරෝධී ව්‍යාපාරය පිළිබඳව බෙහෙවින් සැලකිලිමත් විය යුතුය. ශ්‍රී ලංකාවේ ප්‍රගතිය වෙනුවෙන් මුස්ලිම් රටවල දායකත්වය හා අනුග්‍රහයන් පිළිබඳ කෙටි හාඳින්වීමක් ඉදිරිපත් කිරීමට කැමෙත්තෙමු.



කුවයිත් රාජ්‍යය.



ප්‍රජාතන්ත්‍රවාදී සමාජවාදී ශ්‍රී ලංකා ජනරජය හා අරාබි ආර්ථික සංවර්ධන කුවයිත් අරමුදල අතර කොලඹදී අද දින ණයදාන සම්මුතියක් අත්සන් කරන ලදී. මෙම අරමුදල මගින් ප්‍රජාතන්ත්‍රවාදී සමාජවාදී ශ්‍රී ලංකා ජනරජය වෙත කුවයිත් දීනාර් මිලියන තුනක (ඇමරිකානු ඩොලර් 10.2 ට සමාන) ණයක් ගිනිකොන විශ්ව විද්‍යාලයේ සංවර්ධන ව්‍යාපෘතිය වෙනුවෙන් පිරිනමන ලදී. (පියවර – 1 “B”)



ප්‍රජාතන්ත්‍රවාදී සමාජවාදී ශ්‍රී ලංකා ජනරජයේ ආර්ථික හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය වෙනුවෙන් මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය පී.බී. ජයසුන්දර මහතාත්, කුවයිත් අරමුදල වෙනුවෙන් නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල් ගරු හිෂාම් අල්-වකායාන් මහතාත් මෙම ණයදාන සම්මතියට අත්සන් කලහ.

මෙම ව්‍යාපෘතියේ මුලු පිරිවැය කුවයිත් දීනාර් මිලියන 3,965 ක් (ශ්‍රී ලංකා මුදලින් බිලියන 1,483 ක්) ලෙස ඇස්තමේන්තු කර ඇත.



සවුදි අරාබියාව.



කලූගඟ ව්‍යාපෘතිය වෙනුවෙන් සවුදි රාජ්‍යය රුපියල් මිලියන 5.332 පිරිනමයි.



ශ්‍රී ලංකාවේ කලුගඟ ජල යෝජනා ක්‍රමයට සවුදි අරාබියාව සවුදි රියාල් මිලියන 172 ක (රුපියන් මිලියන 5.332) අරමුදලක් ලබාදෙයි. මෙය 1981 න් පසු දිවයිනට පිරිනමන ලද උච්චතම ආධාර මුදල ලෙස සැලකේ.

කෘෂිකර්ම සංවර්ධන හා ගොවිජන සේවා අමාත්‍යාංශයේ ලේකම් ගරු ඒ. අමරසේකර මහතාගේ ප්‍රධානත්වයෙන් යුත් සාමාජිකයින් හතර දෙනෙකුගෙන් සමන්විත නියෝජිත පිරිසක් කලුගඟ ජල යෝජනා ක්‍රම ව්‍යාපෘතියේ තාක්ෂණික විස්තර ඇතුලත් ගිවිසුම් කෙටුම්පත සකස් කිරීමට ඉරුදින රියාද් නගරයට පැමිණියහ. මෙම ව්‍යාපෘතියේ ගිවිසුම කොලඹදී අත්සන් කිරීමට නියමිතය. “මෙය ශ්‍රී ලංකාවේ යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීමට සවුදි සංවර්ධන අරමුදල (SFD) විසින් සපයන හත්වැනි මූල්‍ය ආධාරය.” බව SFD ව්‍යාපෘති අධ්‍යක්ෂ ජනරාල් අබ්දුල්ලා අල්-ෂෙදූකී මහතා ඩෙයිලි නියුස් පුවත් පතට පැවසීය.

මාර්ග ජාල පද්ධතිය සංවර්ධන කිරීම:



සවුදි අරාබි රාජ්‍යය සවුදි රියාල් මිලියන 225 (රුපියන් මිලියන 7,875) ක් වැනි විශාල මූල්‍ය අරමුදලක් ශ්‍රී ලංකාවේ ඇති මාර්ග ජාල පද්ධතිය සංවර්ධන කිරීම සඳහා පිරිනමයි. සඳුදින සවුදි සංවර්ධන අරමුදල් (SFD) ආයතනයේ උප සභාපති ගරු යූසුෆ් අල්-බස්සාම් මහතා හා මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය පී.බී. ජයසුන්දර මහතාත් අතර රියාද් අගනුවර සවුදි සංවර්ධන අරමුදල (SFD) මූලස්ථානයේදී පැවති රැස්වීමකදී මූල්‍ය ආධාරය වෙනුවෙන් වූ මෙම ගිවිසුම් කෙටුම්පත සම්මත කෙරින.



මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය පී.බී. ජයසුන්දර මහතාගේ මෙම සංචාරයේදී, සවුදි අරාබි රාජ්‍යයේ නියෝජ්‍ය මුදල් ඇමති ආචාර්ය හමද් අල්-බාසී මහතා සමගද එතුමාගේ කාර්යාලයේදී සාකඡ්චාවක් පැවැත්වින. මෙම සාකඡ්චාවට ශ්‍රී ලංකා ජනරජයේ තානාපති ගරු අහ්මද් ඒ ජවාද් මහතාද සහභාගි විය.



ශ්‍රී ලංකාවේ ප්‍රථම වරට මීමැස්මොරය හා චිකිත්සා රෝහලක් කොළඹ පිහිටුවයි.

ප්‍රථම වරට සවුදි අරාබි රාජ්‍යයේ ආධාරයෙන් ශ්‍රී ලංකා ජනරජය විසින් රුපියල් බිලියන 2.25 කින් යුත් මීමැස්මොරය හා චිකිත්සා රෝහලක් කොළඹ ප්‍රධාන ජාතික රෝහල් භූමියේ පිහිටුවන ලදී. ඊට අමතරව කොළඹ ස්නායුවේදය පිළිබඳ රෝහලක්ද නිම කර අවසන්ය. දිවයිනේ සුනාමි ව්‍යසනයට පත් ජනතාවට නිවාස 1,000 ක්ද ඉදි කර දුන් අතර, ඊට අමතරව ස්නායුවේදය පිළිබඳ රෝහලේ සෞඛ්‍ය පහසුකම් සඳහා සවුදි සංවර්ධන අරමුදල (SFD) විසින් රුපියල් මිලියන 330 ක් ප්‍රදානය කරන ලදී.



ශ්‍රී ලංකාවේ දිගම පාලම.



අවුරුදු තුනකට පෙර මහා මාර්ග පුළුල් කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ දිවයිනේ දිගම පාලම ඉදි කිරීමට සවුදි අරාබි රාජ්‍යය රුපියල් මිලියන 440 ක් ලබා දුන්නේය. ශ්‍රී ලංකා අගනුවර සිට කිලෝ මීටර 300ක් ඈතින් පිහිටි නැගෙනහිර නගරය වන ත්‍රිකුණාමලයේ සිට කින්නියා ගම්මානය සම්බන්ධ කිරීම සඳහා මෙම පාලම ඉදි කරන ලදී.



ත්‍රිකුණාමල-මඩකලපු මහා මාර්ගය.

ගිවිසුමට අනුව මහා මාර්ග පුළුල් කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ ත්‍රිකුණාමල-මඩකලපු මහා මාර්ගය පළල් කිරීමටද අරමුදල් වෙන් කරන ලදී. මේ දක්වා සවුදි සංවර්ධන අරමුදල (SFD) විසින් විවිධ ව්‍යාපෘතීන් සඳහා සවුදි රියාල් බිලියන 1.2 කට (රුපියල් බිලියන 357) කට අධික මුදලක් ලබාදී ඇත.



මහවැලි ගඟ සංවර්ධන ව්‍යාපෘති පද්ධතිය. ඊ කලාපය. 1981.



මීට පෙර සවුදි සංවර්ධන අරමුදල (SFD) විසින් ශ්‍රී ලංකාවට අවස්ථා තුනකදී මූල්‍ය ආධාර ලබා දුන්නේය. ජල සැපයුම හා කැළිකසළ ව්‍යාපෘතියේ දෙවන අදියරය වෙනුවෙන් සවුදි රියාල් මිලියන 99.9 (රුපියල් මිලියන 3,496) කට අධික මුදලක් පිරිනැමු අතර 1981 දී සවුදි රියාල් මිලියන 48.1 (රුපියල් මිලියන 1,683) කට වැඩි මුදලක් මහවැලි ගඟ සංවර්ධන ව්‍යාපෘති පද්ධතිය ඊ කලාපය වෙනුවෙන් ලබා දී ඇත.



ඉරානය



තාක්ෂණික හා ඉන්ජිනේරු සේවාව.

ශ්‍රී ලංකාවේ තාක්ෂණික හා ඉන්ජිනේරු සේවා වැඩි දියුණ කිරීම සඳහා ඇමෙරිකානු ඩොලර් මිලියන US$ 520 (රුපියල් මිලියන 65,000) කින් ඉරානය අනුග්‍රහය දක්වා ඇති බව වානිජ කටයුතු අමාත්‍යය ගරු මහ්දි ගසන්ෆරි තුමා සඳුදින පැවසුවේය.



ඉරාන ප්‍රවෘති ඒජන්සී IRNA- වාර්තවක් ආනුව, ආසියාතික සහයෝගිතා සංවාද විදේශ අමාත්‍යවරුන්ගේ නවවැනි සැසිවාරයේදී වානිජ කටයුතු අමාත්‍යය ගරු මහ්දි ගසන්ෆරි මහතා, විදේශ අමාත්‍ය ගරු ජී. ඇල්. පීරිස් මහතා හමුවූ අවස්ථාවෙහි ශ්‍රී ලංකාවේ ආර්ථිකය වැඩිදුර නගාසිටුවීමට තෙහ්රානය සූදානම් බව කියා සිටියේය.



ඛනිජ තෙල් ආනයනය:



ඉරානය, ශ්‍රී ලංකාවේ විශාලතම මූල්‍ය අනුග්‍රහකයා හා ප්‍රධානතම ඛනිජ තෙල් සම්පාදකයාද වන්නේය. 2008 අප්‍රේල් මාසයේදී ඇමෙරිකානු ඩොලර් බිලියන US$ 1.5 (රුපියල් බිලියන 187.5) ක ණය පහසුකම් යටතේ, ශ්‍රී ලංකාවේ නොයෙක් යටිතල පහසුකම් සංවර්ධන ව්‍යාපෘතීන්වල වැඩ ඉරානය විසින් ආරම්භ කරන ලදී.

උමාඔය විදුලි බලාගාරය:



සැප්තැම්බර් මාසයේ ඉරාන් ජනාධිපති තුමාගේ ශ්‍රී ලංකා සංචාරයේදී, මෙගා වෝට් 450ක උමාඔය විදුලි බලාගාරය ඇතුලුව සංවර්ධන ව්‍යාපෘතීන් බොහෝමයක් සඳහා ඇමරිකානු ඩොලර් මිලියන US$ 450-500 (රුපියල් මිලියන 62,500) ක මූල්‍යය පහසුකම් ලබාදෙන බවට පොරොන්දු විය.

මිරිස්ස LNG පර්යන්තය:



ඉරානය, දකුණු පළාතේ මිරිස්ස වෙරලබඩ නගරයෙහි ධීවර වරායක් සමඟ LNG පර්යන්තයක් පිහිටුවීමටත්, සපුගස්කන්ද ඛනිජ තෙල් පිරිපහදු පහසුකම් සංවර්ධනය කිරීමට, තාක්ෂණික හා මූල්‍යය පහසුකම් ලබා දීමටද එකඟ විය.



ග්‍රාමීය විද්‍යූතනය:



ගම්මාන 1000 කට පමණ විදුලි බලය සැපයීමට ඩොලර් මිලියන US$ 106 (රුපියල් මිලියන 13,250) ක ගිවිසුමකට ශ්‍රී ලංකාව, ඉරාන සමාගමක් සමඟ අත්සන් කළේය.

ශ්‍රී ලංකාවට ණයදෙන ප්‍රමුඛයා ඉරානයයි.



යුදමය දිවයිනේ ප්‍රධාන දායක ජපානය අභිබවා, මෙම වසරේ ශ්‍රී ලංකාවේ ප්‍රධානතම මූල්‍ය අනුග්‍රහකයා බවට ඉරානය පත් වූ බව සඳුදින මුදල් අමාත්‍යාංශය ප්‍රකාශයට පත් කළේය. මෙම වසරේ මැයි මාසය දක්වා වූ මාස පහ තුල යුදමය තත්වයක පැවති දිවයිනට ඩොලර් බිලියන US$ 1.5 (රුපියල් බිලියන 187.5) විදේශ ආධාර ලැබුනු බවත්, ව්‍යාපෘති ණය වශයෙන් ඩොලර් මිලියන US$ 959 (රුපියල් බිලියන 119
.
 ක්ද, ආධාර මුදල් වශයෙන් ඩොලර් මිලියන US$ 90 (රුපියල් මිලියන11,250) ක්ද ලැබුණු බව මහ බැංකුව වසර මැද මූල්‍ය වාර්තාවෙහි සඳහන්ය.



පාකිස්තානය:



2000 අවුරුද්දේ මැයි මාසයේ බෙදුම්වාදී කොටි ත්‍රස්ථවාදීන් ඔවුන්ගේ අගනුවර ලෙස සැලකූ යාපනය අත්පත් කර ගැනීමට ආසන්නව තිබියදී, පාකිස්තාන ජනාධිපති ගරු මුෂර්රෆ් මැතිතුමා ඩොලර් මිලියන දශ දහස් ගනන් වටිනා අත්‍යාවශ්‍යව තිබූ යුදෝපකරණ ශ්‍රී ලංකා රජයට ලබා දුන්නේය. 2006 අගෝස්තු මාසයේ කොටි ත්‍රස්ථවාදීන් විසින් කොළඹදී ක්ලේමෝර් බිම් බෝම්බයකින් ශ්‍රී ලංකාවේ පාකිස්තාන තානාපති බෂීර් වලී මුහම්මද් තුමා ඝාතනය කිරීමට තැත් කළහ. තානාපති තුමා තුවාල නොවුනද, සෙසු හත් දෙනෙකු මරණයට පත්වූහ. 2008 මැයි මාසයේ ශ්‍රී ලංකා යුද හමුදාවේ ජනරාල් සරත් ෆොන්සේකා මහතා යුද්ධෝපකරණ, අවිආයුධ හා වෙඩි උණ්ඩ අලෙවිය පිළිබඳව පාකිස්තානු හමුදාපති සමඟ සාකඡ්චාවක් පැවැත්වීය. මෙම සාකඡ්චාවේදී ඩොලර් මිලියන US$ 100 (රුපියල් මිලියන 12,500)කටත් වැඩි වටිනාකමින් යුත් අල්කාලිද් MBT 22ක් ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාවට සැපයීමට තීරණය විය.



ලිබියාව:



2009 යේ 8-10 අප්‍රේල් මාසයේ ශ්‍රී ලංකාවේ අති ගරු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතාගේ ජයග්‍රාහී ලිබියානු නිල සංචාරයෙන් අනතුරුව, මූල්‍ය සහයෝගීතා පැකේජය යටතේ ඩොලර් මිලියන US$ 500 (රුපියල් මිලියන 62,500) ක් ලිබියානු රජය විසින් සංවර්ධන ව්‍යාපෘතින් සඳහා ශ්‍රී ලංකාවට දෙන ලදී. හම්බන්තොට ගුවන් තොටුපොල සංවර්ධනය වෙනුවෙන් අධාර සැපයීමටත්, උතුරු හා නැගෙනහිර මහා මාර්ග, සන්නිවේදන හා සංචාරික ව්‍යාපාරය දියුණු කිරීමටත් සහාය දක්වන බව ලිබියානු රජය පැවසීය.



අහමද් තේ:



අහමද් තේ සමාගම විසින් (රුපියල් මිලියන 2,100) ක වටිනිකමින් යුත් අති නවීන පිළිකා රෝහලක් ඉදිකිරීමේ යෝජනාවක් ඉදිරිපත් කර ඇත. “සීමාන්තික ජාතිවාදය අපගේ ආර්ථිකයට විශාල තර්ජනයක්.”

* அணிந்து கழற்றும் ஆடையல்ல நாட்டுப்பற்று !

கிரிக்கட் விளையாட்டு ஒன்று வந்து விட்டால் திடீரென நாம் இலங்கையர் நமது அணி இலங்கை அணி என்று சமூகத்தில் ஒரு சாரார் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர், இப்போது சுதந்திர தினம் வருகின்றது எனவே நாட்டுப்பற்றை எவ்வாறு காட்ட வேண்டும் என்று பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களுக்கு இணையமெங்கும் இது தான் நடக்கப் போகிறது. அவரவர் தன் பங்கிற்கு நாட்டுப்பற்றை விளம்பரம் செய்யவும், நாட்டுப்பற்று எனும் சிந்தனையை விதைக்கவும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்யப் போகிறார்கள்.

ஒரு நாட்டின் குடி மக்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றால் அதன் அரசாங்கம் தான் முதலில் வெட்கப்பட வேண்டும் !

சிறு வயதில் முடிந்த அளவு புகட்டப்பட்டாலும் வயதுக்கு வந்து தன் அறிவைக் கொண்டு ஒப்பிடும் ஒரு குடிமகனுக்கு சுதந்திர தினம், கிரிக்கட் ஆட்டங்களின் போது நாட்டுப்பற்று இல்லாமல் போகிறது என்றால் அதில் பெரும் பங்கினை அவன் உணர்வுகள் வகிக்கின்றன. அந்த உணர்வுகளால் அவனோடு கலந்தாலோசிக்கும் மூளை எதைச் சொல்கிறதோ அதைச் செய்யத் துணிகிறான் (அது அமைதியாக இருப்பதாக இருந்தாலும் சரி).

இப்போது முஸ்லிம் சமூகத்துக்குள் நாட்டுப்பற்றைக் காட்டக்கோரும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இரு வகையாகப் பார்க்கப்படும். முதலாவது, ஏன் நாட்டுப்பற்றை விளம்பரம் செய்ய வேண்டும் அது மனதில் இருந்தால் போதாதா எனும் மிகச் சாதாரண கேள்வி, அடுத்தது, ஏன் எங்களிடம் நாட்டுப்பற்று இல்லாததனாலா நாட்டுப்பற்று வரவேண்டும் என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது? அல்லது இப்படி நாட்டுப்பற்றைக் காட்டித் தான் எமது இருப்பை நாம் நியாயப்படுத்த வேண்டும் எனும் அளவுக்கு பேரினவாதம் நம்மை அழுத்துகிறதா எனும் கேள்வி.

ஒரு புறத்தில் பெரும்பாண்மையானோர் இதைப் பேரினவாத அழுத்தமாகவே பார்ப்பதனால் இது உண்மையான நாட்டுப்பற்றையும் எவ்வளவு தூரம் சேதப்படுத்துகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

தேசப்பற்று இல்லாத ஒரு இலங்கை முஸ்லிமைக் கூட காண்பது அரிது, ஆனால் பேரினவாதத்தால் சூழப்பட்ட தேசியத்தை ஆதரிப்பதில் அவருக்கு கருத்து முரண்பாடுகளோ அல்லது விருப்பமில்லாமை கூட இருக்கலாம்.

தமிழ் சமூகம் புலியின் அடாவடித்தனத்தை விரும்பவில்லை என்பது உண்மை, அவர்களுக்கு எதிராக கொதித்தெழவும் இல்லை என்பதும் உண்மை, அதற்காக எந்த அரசு எது செய்தாலும் தேசப்பற்றைக் காட்டும் நிலையில் அவர்களில்லை என்பதும் உண்மை. ஏனெனில் அவன் விரும்பும் தேசம் அவன் விரும்பும் வடிவில் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது, அவர்களிடம் தேசப்பற்று தாராளமாக இருக்கிறது, இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்பதால் அது பரம்பரையாகவே அவர்களது ரத்தத்தில் ஊறியிருக்கிறது, ஆனால் அதை எந்த அளவு தூரம் வெளிப்படுத்துவது என்பது தொடர்பாக சில தனிப்பட்ட வரையறைகளை அவனாகவே வகுத்துக் கொண்டிருக்கிறானே தவிர தேசப்பற்று இல்லாத இலங்கை முஸ்லிம்களை இலங்கையிலோ வெளி நாட்டிலோ கூட காண முடியாது.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையோடு கலந்ததாகவே அவன் எண்ணங்கள் இருக்க, அது நாட்டின் மீதான பற்றை அதிகரிக்கச் செய்யும் வண்ணம் நடந்து கொள்வது நாட்டினை ஆளும் தேசிய அரசு மீதான பொறுப்பாகிறது.

அதற்காக தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டாம், பிரதியமைச்சர்கள் வேண்டாம், இப்தார் நிகழ்வுகள் வேண்டாம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை உடனுக்குடன் அடக்கினாலே போதுமே!

ஆயினும், அரசியல் வியாபாரிகள் இதில் திறந்த மனதுடன் இல்லை, இலங்கைப் பிரஜைகளான முஸ்லிம்கள் இலங்கை மண் மீது பற்றுடன் இல்லை எனவே அவர்கள் பற்றைக் காட்டச் சொல்லுங்கள் என ஏவி விட்டு இவர்களை பற்றை விளம்பரப்படுத்தக் கேட்கும் படி பேரினவாதம் சொல்கிறதானால் ஏற்கனவே அது ஒரு முடிவோடு இருக்கிறது எனவே அதைத் திருப்திப் படுத்துவது எனும் பெயரிலே அடிமைப்படுத்தப்படுகிறோம்.

இல்லை நாம் தான் கொதித்தெழுந்து சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நல்லிணக்கத்திற்காக இதையெல்லாம் எம் சமூகத்திடமே செய்யக் கேட்கிறோம் என்றால் அது எம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதாகிறதாகிறது.

வீட்டை மறந்தவனுக்குத்தான் வீட்டை ஞாபகப்படுத்த வேண்டும், மறக்காதவனை மறந்ததாக நினைத்துப் பிரச்சாரம் செய்வது அவன் மீது புரியப்படும் அத்து மீறலாகப் போய் விடுகிறது.

கடந்த காலங்களிலும் இது நடைபெற்றது, இப்போது சுதந்திர தினம் வருகிறது, இனியும் நடக்கும் ஆனால் தன்னோடு முப்பது வருடங்களாகப் பழகிய ஒரு நண்பன் திடீரென கொடியைப் பிடித்து பற்றைக் காட்டுவதைப் பார்த்துப் பேரினவாதி சிரிப்பானே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எனவே, அவன் மனதை மாற்றுவதற்கு முயற்சிப்பதை விட நமது மனங்களைத் திருத்திக் கொள்வதும் நம்மை நாமே தரம் தாழ்த்த எம்மைப் பணிக்கும் பேரினவாதத்தின் மனதை திருத்தச் செய்வதற்குமான வழிமுறைகளைக் கையாளலாம்.

அடிப்படையில், சிறு வயது முதலே நாம் ஏதோ வெளி நாட்டிலிருந்து வந்து நேற்றுத்தான் குதித்த சமூகம் எனும் தொனியில் கற்பனைப் பாடங்களை நடாத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும், அந்த மண்ணில் நமது பாரம்பரியம், வரலாறு அத்தனையுமே எப்போதுமே அந்த மண் சார்ந்தது என்பதைச் சரிவர புகட்ட வேண்டும்.

மகாத்மா காந்தியின், நேதாஜியின், சந்திரபோஸின் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அளவுக்கு இலங்கையில் சுதந்திரப் போராட்டம் உக்கிரமானதாக இருக்கவில்லை, ஆனாலும் போராட்டம் நடக்கத்தான் செய்தது, அந்தப் போராட்டங்களில் பங்களித்த முஸ்லிம்களின் வரலாறு ஏன் திட்டமிட்டு அழிக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது என்று கேள்வி கேட்டு அவற்றை மீள நிறுவ வேண்டும்.

இனவாதத்தை பிரித்தானியர் தூண்டிவிட்ட போதும் கூட அதற்கும் மேலாக நின்று தேசப்பற்றைக் காட்டிய, ஒன்றாக இருந்து போராடிய முஸ்லிம் தலைவர்களின் வரலாறுகள் புகட்டப்பட வேண்டும். இந்த மண் முஸ்லிம்களின் சொந்த மண் என்பது அவன் அடிப்படையில் அறிந்த உண்மையாக இருக்க வேண்டும்.

தமிழர்களெல்லாம் இந்தியாவுக் ஓடு ; முஸ்லிம்களெல்லாம் அரேபியாவுக்கு ஓடு எனும் தொனியில் பேரினவாதம் பேசுகின்ற போதும், கலாச்சார ரீதியில் வேறுபட்டு நிற்கின்ற போதும் நாம் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லையோ எனும் சிறு சந்தேகம் அவன் மனதுக்குள் எழுவதில் நியாயமிருக்கிறது, அதை அடக்குவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் அந்த வேற்றுமையுரைப்புகளைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து அவர்களை அணுக வேண்டும், மாறாக நாம் அணுகுவதெல்லாம் அப்பாவியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டவனைத்தான் எனவே அவன் இறுதியில் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து அடிமை நிலையாக உணர்ந்து முடிவில் இருக்கும் தேசப்பற்றையும் சேர்த்தே இழக்கிறான்.

இலங்கை முஸ்லிம்கள் எனும் பொது அமைப்புக்குள் சோனகர்கள், மலேயர்கள், போரா மற்றும் வேறு சில மரபுப் பின்னணியைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பேரினவாதம் கட்டுமீறிப் போய் நின்று படையெடுத்தாலும் இவர்களில் ஒரு பிரிவினர் கூட தம் ஆதி மூலங்கள் வாழ்ந்த நாடுகளால் ஒரேயடியாக அணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் ஏனெனில் காலா காலமாக இவர்கள் இலங்கை மண்ணிலே வாழ்ந்தவர்கள்.

அதயும் மீறி ஏதோ ஒரு சிறு குழு தானே என்று மலேயர்கள் ஜாவா சென்றாலும், மற்றவர்கள் தம் இனத் தொடர்புகளைக் கொண்டு குஜராத், பஞ்சாப் சென்றாலும், சோனகர்கள் எங்குமே செல்ல முடியாது ! ஏனெனில் நீங்கள் எங்கிருந்தும் இந்த நாட்டிற்குள் வரவில்லை !! இந்த நாட்டில் இருந்து தான் முஸ்லிம்களாக உருவாகினீர்களே தவிர நீங்கள் முஸ்லிம்களாக இன்னொரு நாட்டிலிருந்து இங்கு வரவில்லை ! அதுதான் உண்மை.

அரபுப் பெயர் வைத்ததனால் உங்களை அரேபியாவோ ஆங்கிலப் பெயர் வைத்துக்கொண்டதனால் உங்களை பிரித்தானியாவோ வாங்கோ வாங்கோ என்று அரவணைத்து அழைக்கப் போவதில்லை, நீங்கள் அடிப்படையில் இலங்கையர், இந்த தேசத்தின் மைந்தர்கள், சொந்தக்காரர்கள், பூர்வீகக் குடிகள் ! உங்களால் எங்குமே செல்லவும் முடியாது, செல்லவும் கூடாது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை பசி கொண்ட பாசிசப் புலிகள் அடித்து விரட்டியபோது அம்மக்களால் புத்தளம், கண்டி, மாத்தளை என்று நாட்டிற்குள்தான் ஓட முடிந்தது, இன்றும் வாழ முடிகிறது, இன்று 25 வருடங்களாகி விட்டது எந்த நாடும் வந்து தனி விமானம் வைத்து உங்களை அழைத்துச் செல்லவில்லை, அழைத்துச் செல்லப் போவதும் இல்லை.

இதுதான் யதார்த்தம் ! சமூகம் கண்டிருக்கும் பின்னடைவுகளில் பிரதானமானது அரசியல் பின்னடைவு, ஏனெனில் அரசியல் ஒற்றுமை இல்லாது பிரிந்திருப்பதால் உங்களிடம் ஒருமித்த குரல் இல்லை. அடுத்ததாக மார்க்கப் பின்னடைவு, இன்று ஒரே இஸ்லாத்தைப் பின்பற்றினாலும் அதைப் பயிற்சி செய்யும் முறையில் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கிறீர்கள், நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து நல்லதைக் கண்டுகொள்வது வேறு நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது வேறு.

பகிரங்க விவாதங்கள் என்கிறீர்கள், பள்ளி நிர்வாகங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்கள், ஒருவரை ஒருவர் இயக்க ரீதியாக நிந்தனை செய்து கொள்கிறீர்கள், எடுத்த எடுப்பில் எல்லோரும் மார்க்க விளக்கங்கள் அடிப்படையில் பிளவு பட்டுக் கொள்கிறீர்கள், சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் கொள்கை முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கிறீர்கள், இப்படி எல்லாவற்றையும் மீறி உங்களால் நாடு குறித்தும் உங்கள் இருப்பு குறித்தும் சிந்திக்க நேரமும் இருப்பதில்லை, அரசியலில் உங்கள் பிரதிநிதித்துவத்தின் பலம் குறித்த தூர நோக்கும் இல்லை.

இந்தியாவில் தலித் என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் கூட இஸ்லாம் எனும் ஆடையை அணிந்த மறு கணமே சாதிப் பிரிவினை இல்லாமல் போனது என்று பெருமிதம் கொள்கிறார்கள், அந்த அளவுக்குப் பிரிவினையை வெறுத்து சமவுரிமையைப் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் ! ஆனால் இன்றைய சமூக நிலையோ இஸ்லாத்தில் யார் சரி பிழை என்று பார்த்துக்கொண்டு சமூக ரீதியாகத் தம்மைத் தாமே பலவீனப்படுத்திக் கொள்கிறது.

முஸ்லிம்களின் சமூக பலவீனமே பொது பல சேனா போன்ற பேரினவாதிகளின் பலம் ! உங்களின் அரசியல் பலவீனமே பேரினவாதத்தை ஆதரிக்கும் அரசின் சதுரங்க ஆட்டம் ! இறுதியில் பதவிகளுக்காகக் காத்துக் கிடக்கும் நிலையில், அப்பதவிகள் மீள நிர்ணயிக்கப்படும் வரை சமூகப்பிரச்சினைகளில் கூட வாய் திறக்க முடியாத நிலையில் தான் நம் அரசியல் நிலை இருக்கிறது ! இந்த வங்குரோத்தின் வடிவம் தான் சந்தர்ப்பங்கள் வரும் போது நாம் நாட்டுப்பற்றை வாங்கும் – விற்கும் பேரவலம்.

நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டமே !

- மானா

http://www.sonakar.com/

* ” தமிழ்த் தேசியத்தை” ? காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!


தமிழ்த் தேசியத்தின் கோர முகம் இஃது!

புலிகளால் துரத்தியடித்தல்,வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக.

வட புலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான பரிகாரம் எதுவாகவே இருக்க வேண்டும்?

புலிவழியாகச் செழித்து வளர்ந்த தமிழ்த் தேசியமானது மிகக்கொடிய பாசிசமாகவுச்சம் பெற்றது 1990 களில்.இதன் தார்ப்பார் சொந்த மண்ணிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை அவர்களது வேரோடும்,விழுதோடும் பெயர்த்து தெற்கே வீசியெறித்து எதிர்காலத்தை அழித்தது தமிழ்த் தேசியம்.

[ The announcement Liberation Tigers of Tamil Eelam (LTTE - separatist rebels fighting for an independent ethnic Tamil state in the north) made on 29 October 1990: All Muslims in Jaffna Peninsula, which included the capital of the war-hit Northern Province (Jaffna), had 24 hours to leave or face forced expulsion and death.]

இது, நவ மனித நாகரீகத்துக்கே எதிரான மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனம்.நாசிகளுக்கு நிகராகத் தன்னை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் மனிதவதை இது.தமிழ்த் தேசியத்துக்கும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குமான உறவுப் புள்ளியானது சாரம்சத்துள் இனவழிப்பே!ஆனால்,தமிழ்த் தேசியமோ சிங்களத் தேசியவாதத்தைவிட மிகவும் கொடியதென்பதற்கு ஒரு இனத்தை அதனது சொந்த மண்ணிலிருந்து 24 மணி நேரத்துக்குள் குடியெழுப்ப முடியுமென்பதற்கும்,சிங்கள இனவாதமே செய்ய முடியாததை இந்தப் பாசிசப் புலிகள் வழி வளர்ந்து பாசிசமாகவுச்சம் பெற்ற தமிழ்த் தேசியத்தின் கோரமுகமாக இந்த முஸ்லீம் மக்களது அவலம் என்றும் வரலாற்றில் பதியப்படவேண்டும்.இத்தகைய கொடிய நிகழ்வுக்கான(தமிழ்த் தேசியத்தின்வழி புலிகளால் முல்லீம்களது குடி குலைத்தல்,அழித்தல்,கொலை செய்து அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றித் துரத்தியடித்தல்) சமூகவுளவியலை தமிழ்த் தேசியம் பல் நூறு ஆண்டுகால அநுபவப்பட்ட அதன் சாதியவொடுக்குமுறை பண்பாட்டிலிருந்து பெற்றதென்பதே உண்மையாகும்.

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்மீது கணிசமான தமிழ்த் தேசியவாத அநுதாபிகள் அன்று வைத்த பழி சுமத்தல்:” தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!”என்ற உரையாடல்-உணர்வு வழியாகப் புலிப்பாசித்தையும்,தமிழ்த் தேசியத்தின் கோர முகத்தையும் அங்கீகரித்து அதை, வளர விட்டுத்து தம்மைத் தாமே அழித்திருப்பினும் இந்தத் தமிழினமானது முஸ்லீம் மக்களிடம் பாரிய மன்னிப்பும் நஷ்ட ஈடும் கட்டியாகவேண்டும்.இது அரசியல்ரீதியான சட்டவாதத்துக்குட்பட்ட பகிரங்கமாக இருக்கவேண்டும்.வரலாற்றில் இது பதியப்பட்ட ஆவணமாக என்றும் நிலைக்க வேண்டும்.

அன்று நாசிகள் செய்த இனவழிப்புக்கு நிகரானது இந்த மக்களைத் துரத்தியடித்து அழித்த புலிகளது பாசிசமாகும்.இது,இன்றைய கங்கேரி விக்டர் ஓர்பானுக்கு நிகரானதுங்கூட.அங்கே, சிந்தி – ரோமா மக்களை அவர்களது குடியிருப்புக்குள் வைத்துக் கொலை செய்து அழித்தெரிக்கும் அவலத்துக்கும்,அந்த வலியை நாம் உணர்வதற்குமான நேரடிச் சாட்சியாக யாழ் முஸ்லீம் இனத்தின் அவலம் வரலாறு பூராகத் தொடரவேண்டுமா?

தமிழ்த் தேசியத்தைப் பேசுபவர்கள்,அதை வைத்து ஆட்சி,அதிகாரத்தைப் பெறும் கட்சிகள்-குழுக்கள்,இவர்களின் பின்னே யாழ்ப்பாணத்தில் பெரு வர்த்தகம் புரிந்து கோடிகோடியாயச் சம்பாதிக்கும் வர்த்தகர்களுட்பட இந்த அவலத்துக்குப் பதிலளிக்கவேண்டும்-நஷ்ட ஈடு கட்டி அவர்களது வாழ்விடங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு அவர்களை வாழ வைக்க வேண்டும்.வடபுலத்தில் மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களுக்குக் குறிப்பாக இளையவருக்கு அது அவர்களது தாயகமெனும் உணர்வு வரும்வரை வாழ்சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக இலங்கை அரசானது தமிழ்த் தேசிய வாதிகள்,கட்சிகள்,தலைவர்கள்,ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் புலித் தலைமைகளுட்பட வடமாகாண வர்த்தகர்கள் மற்றும் தமிழினத்திடமிருந்து நஷ்ட ஈடு பல கோடி அறவிட்டு இந்த மக்களுக்கு வழங்கியாக வேண்டும்.

கூடவே,இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையும் அதுசார்ந்த அரசுகளுமென்பதால் இலங்கையை ஆளும் கட்சிகள் தமக்குள் இணைவுகொண்டு ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும்.அது,சிங்கள,தமிழ்த் தேசியத்தின் கொடியவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இனத்துக்கு அடுத்துவரும் நூற்றாண்டுவரை எந்த இறைவரியும் அறவிடக்கூடாது.

குறிப்பாக அவர்கள் வரிவிலக்களிக்கப்பட்ட இனமாகவே சட்ட ரீதியாக அங்கீகரக்க வேண்டும்.

இதுவே,அவர்களது அழிவுகளுக்கான நீதீயும், அரச நியாயமுமாகும்.

இத்தகைய நிலையை ஏலவே நாசியத்தால் பாதிகப்பட்ட இனங்கள் உலகில் பெற்று வாழ்கின்றனர்.

இலங்கை அரசை இது நோக்கிச் செயற்பட வைக்கும் பாரிய தார்மீகப் போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் தொடர்வதற்குத் தமிழினம் உறுதுணையாக நின்று, தனது வரலாற்றுத் தப்புக்கான தண்டனையை அவர்களுக்கு நஷ்ட ஈடுகட்டி, உலகில் நாமும் நியாயமானவர்கள்தாமென நிரூபித்தாகவேண்டும்.

இதற்கான அரசியல் ஊக்கத்தை கருத்தியற்றளத்தில் அனைவரும் ஏற்று முன்மொழிவதே முஸ்லீம்களுக்கான உடனடித் தீர்வாகும்!!!

இதைவிட்ட அனைத்தும் ஏமாற்று.அது முற்போக்குச் சக்திகளாற்கூட முன்வைக்கும் நிலையிலும்கூட!

- ப.வி.ஸ்ரீரங்கன்

Tuesday, May 7, 2013

* முஸ்லிம்களை எதிர்த்து செயல்படும் இந்த காடையர் கூட்டத்தின் நோக்கம் என்ன? இவர்களை ஏவி விட்டது யார்? -

முஸ்லிம்களை எதிர்த்து செயல்படும் இந்த காடையர் கூட்டத்தின் நோக்கம் என்ன? இவர்களை ஏவி விட்டது யார்? - முனாஸ் 


இன்று நாட்டில் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், விசப்பேச்சுக்களும், இஸ்லாத்தை நையாண்டி பன்ணும் வார்த்தை பிரயோகங்களும், புனித இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதனை எந்த இஸ்லாமியனாலும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.?

இவ்வாறு கூறினார் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அவர் தொடர்ந்து தனதறிக்கையில் கூறியிருப்பதாவது.
முஸ்லிம்கள் இன்று அவர்களின் வேலையும் அவர்களுமாக அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்று திடீரென நாட்டில் ஏற்பட்டிருக்கும் விசமப்பிரச்சாரமும் நடவடிக்கைகளும் அனைத்து முஸ்லிம்களையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது,

குளியாப்பிட்டி என்னும் இடத்தில் நடந்த அந்த கோரக்காட்சி எந்த முஸ்லிமையும் பொறுமையுடன் இருக்க முடியாத ஒரு காடைத்தனமும், மோடைத்தனமுமான ஒரு செயல் “அல்லாஹ்” படைத்தவனுக்கு முஸ்லிம்கள் கூறும், அழைக்கும் பெயர்தான் “அல்லாஹ்” இந்த பெயரை அறபியில் எழுதி ஒரு பொம்மை செய்து அதனை ஊர்வலமாகக்கொண்டு வந்து அதனை எரித்த விடையம் உண்மையாக மெய்சிலிர்க்கவும் ஆத்திரத்தையும் வரவைக்கின்ற சம்பவம் மட்டுமல்ல கொடூரமாகும்.

எனவே இவைகள் தொடர்ந்து நடக்குமானால் யாராலும் பொறுத்துக்கொண்டு பார்த்தும் பார்க்காதவாறு பயந்து நடுங்கியவர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பதற்க்கு முஸ்லிம்கள் ஒன்றும் கோளைகள் அல்ல அன்புக்கு அடிமையாக இருக்கும் அவர்கள் அராஜகத்துக்கு எதிரடி கொடுக்க என்றும்தயாராக உள்ளனர், எனவே இந்த நாட்டில் பொதுபல சேனா என்னுமமைப்புக்கு வந்திருக்கும் கொதிக்கு முஸ்லிம்கள் பலியாக முடியாது அவர்களின் கொதியையும், வெறியையும் எங்காவது யாரிடமாவது காட்டவேண்டுமே தவிர அதனைக்கொண்டு முஸ்லிம்களைக் கஷ்டப்படுத்துவதும் , அவர்களின் ஆத்திரத்தை தூண்டும் வேலைகளைச் செய்வதிலும், வியாபார நிலையங்களுக்குள் புகுந்து காடைத்தனம் புரிவதும், நாட்டில் எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன, கணக்கெடுக்க வேண்டும் என்பதும், பணம் அதிகம் உள்ள முஸ்லிம் யார் என்று தேடுவதும், இதெல்லாம் எதற்க்காக இதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்.?

அந்த அமைப்பினர் எங்கிருந்து வந்தார்கள் திடீரென முழைத்த விசச்செடியாக இயங்கிக்கொண்டிருக்கும் அவர்களின் செயலை முஸ்லிம்கள் மத்தியில் காட்டாது தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதனை கண்டிப்பாகவும், கடைசியாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்று தெரிவித்தார் பிரதேச சபை உறுப்பினர் 

* காலாவதியாகிப்போன ‘முஸ்லிம்’ தலைவர்கள் !





எங்கே எங்கள் தலைவர்கள்? இதுதான் இன்று ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

சொகுசு வாகனங்கள், ஸ்ராவஸ்தியில் புகலிடம், மாதம் முடிந்தால் சம்பளம், இதர சலுகைகள், கோட் சூட் என்று சமூகத்தில் என்னதான் நடந்தாலும் சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கெல்லாம் தவறாமல் போகும், அறிக்கை விடும், மஹிந்த குடும்பத்தை அதீத சக்தி படைத்தவர்கள் என்று புகழும், பாதாள உலகத்தின் உதவியில் சண்டித்தனம் செய்யும், அதில் முஸ்லிம்களையும் தள்ளி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் உயிர்களைக் காவு கொடுத்த வரலாறு படைத்த வல்லவர்கள், தாதாக்களின் கையைப் பிடித்து கொஞ்சுவோர்கள், பாராளுமன்றத்தில் மேசை மேல் ஏறி நாட்டியம் போட்டுக் கூச்சல் போடுவோர், எல்லா மொழியிலும் எமது சமூகத்தை மாத்திரமே சமாளித்து விட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவோர் என்று ஒவ்வொரு வகைக்குள்ளும் அடங்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எங்கே? அவர்கள் குரல்கள் எங்கேதான் போய்த் தொலைந்தது என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஏங்கும் காலமிது.

அப்படியொன்றுமே நாட்டில் நடைபெறுவதில்லை போன்று காலாவதியான ‘பண்டங்களாக’ இவர்கள் இன்று இருக்கிறார்கள். சமூக சேவைக்கு வருவோர் அதிலும் அரசியல் ஊடாக சமூக சேவைக்கு வருவோர் ஒரு சமூகத்தின் கனவை, எதிர்பார்ப்பையும் சுமந்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள், நாடாளுமன்றத்துக்கும் அனுப்புகிறார்கள்.

சமூகப்பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் அறிந்து அதற்கான தீர்வுகளைத் தேடுவார்கள் எனும் நம்பிக்கையை வளர்த்ததனால் தான் இவர்களை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இவர்களோ சமூகத்துக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை அது தம் காலடிக்கு வந்து யாராவது சொன்னால் தான் தமக்குத் தெரியும் எனும் பாணியில் ஈரமற்றவர்களாக இருக்கிறார்கள்.

அநுராதபுரத்தில் இனவாதம் ஆரம்பித்த போது நாம் பேட்டி கண்ட அமைச்சர் இதைத்தான் எம்மிடம் சொன்னார். அநுராதபுர மக்கள் என்னிடம் இன்னும் அதைப்பற்றி முறையிடவில்லை, முறையிட்டால் தான் நான் தலையிட முடியும் என்றார். நீங்களும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தானே சொல்லாமலே சென்று ஏன் உங்களால் தலையிட முடியாது என்று கேட்டதற்கு, நீங்கள் அவசியமற்ற விதத்தில் கேள்வி கேட்கிறீர்கள் என்றார். நல்லது, ஒவ்வொரு தலைவருக்கும் இப்படியான ஒரு வரையறை தேவைப்படுகிறது. அவரவர் சொகுசு வட்டத்திற்குள் வாழத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

சரியோ – பிழையோ, அரசியலோ – மனிதாபிமானமோ, ரிஸானாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து கருணாநிதி கூட பேசியிருந்தார். இதுதான் அவரது அரசியல் அனுபவம். சமூகத்தில் காலத்துக்குக் காலம், நாளுக்கு நாள், விநாடிக்கு விநாடி நடைபெறும் அனைத்து விடயங்கள் குறித்தும் தகவலறியத்தான் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட கையிற்கும் காலுக்குமாக சுற்றி ஒரு பட்டாளத்தை வைத்துக்கொள்கிறார்கள், அதில் சிலருக்கு அரச சம்பளம் வேறு.

இப்படி எத்தனை பேர் இருந்த போதும் அவ்வப்போது இடம்பெறும் விடயங்கள் குறித்து உடனுக்குடன் பேசும், குரல் கொடுக்கும், காரியமாற்றும் திறனற்ற சுயநலவாதத் தலைவர்களை உருவாக்கி அவர்களிடம் தஞ்சமிருப்பதை நினைத்து முஸ்லிம் சமூகம் வெட்கப்படவேண்டும்.

அரசில் இல்லாத ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆகக்குறைந்தது அறிக்கையாவது விடுகிறார்கள், ஆனால் அனைத்தும் பெற்றுச் சுகவாழ்வு வாழும் தலைவர்கள் மறைந்த சுவருக்குள் தான் ‘நடவடிக்கை’ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நடவடிக்கை எடுத்து எடுத்து சாதாரண சியாரத்தை உடைக்க ஆரம்பித்தவர்கள் இன்று தலை மேல் ஏறி நின்று “முஸ்லிம்கள்” எனும் அடையாளத்தையே கை விடு என்று கேட்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள், ஆனால் இவர்களோ இன்னும் “ஆராய்ச்சி” செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சினைக்கு வீட்டின் தலைனின் வார்த்தை எவ்வளவு ஆறுதலானதும் அவசியமானதுமோ அதை விட அவசியமானது ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளின் காலத்துக்கு அவசியமான நடவடிக்கையும் குரலும். ஆனால், பதவி மோகத்தில் இருக்கும் முஸ்லிம் தலைவர்களோ சமூகம் எக்கேடு கெட்டாலும் அவர்கள் விரும்பும் நேரத்துக்குத் தான் வெளியே வந்து பேசுவோம் என்று காலாவதியாகிக் கிடக்கிறார்கள்.

விஸ்வரூபம் என்றொரு திரைப்படம் உருவாக்கியிருக்கும் சமூகப் பிரச்சினையை ஆராய தென்னிந்தியாவில் அத்தனை முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்தன, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து தோளோடு தோள் நிற்கிறார்கள், குரல் கொடுக்கிறார்கள், அவர்களது ஆணித்தரமான குரல் மூலம் அனைவரும் சிந்திக்க வைக்கப்படுகிறார்கள், தவறுகள் மீள ஆராயப்படுகின்றன. இதிலிருந்து ‘ஒற்றுமைக்கும்’ தகுந்த காலத்தில் நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ‘குரலுக்கும்’ எத்தனை அவசியம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தினரைப் பாராட்ட வேண்டும், சமூகத்தின் தேவைக்காக அரசியல் வாதிகளில் தங்கியிராது நேரடியாகக் களமிறங்கியிருந்தமை பாராட்டத்தக்கது, ஆனால் அதை சினிமாவோடு, எங்கோ இருக்கும் எதிரியோடு நிறுத்தி விடாமல் உள் நாட்டில், கையளவு தூரத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்காக அனைத்து அமைப்புகளையும், தலைவர்களையும் ஒன்று சேர்த்து போராடும் நாட்டமும் அவர்களிடம் வரவேண்டும்.

தாம் சார்ந்த சமூகத்துக்காகத் தம்மால் குரல் கொடுக்க முடியவில்லை, நீதியை நிலை நாட்ட முடியவில்லை என்றால் அல்லாஹ்வுக்குப் பயந்தாவது (சமூகத்துக்கு) எந்தப்பிரயோசனமும் இல்லாத பதவிகளை விட்டெறிந்து விலகி நிற்கக்கூட தைரியமில்லாத கோழைகளாகவும் பதவி மோகம் பிடித்தவர்களாகவும் இவர்கள் இருப்பதை நினைக்க மனம் வேதனைப்படுகிறது.

எதிர்ப்பை வேண்டாம், ஒற்றுமையைக் காட்டுவதற்காகவாவது இத்தனை தூரம் சமூகம் அல்லல்பட்டு, பயத்திலும் பதற்றத்திலும் வாழும் போதாவது இந்த காலாவதியான அரசியல் பிரதிநிதிகள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம், அவர்கள் தவறியதன் பின் ஜம் இயத்துல் உலமா பக்கம் பார்வையை பல வந்தமாகத் திரப்பி மார்க்க அறிஞர்களை அரசியல் வாதிகளாக மாற்றுகிறார்கள்.

இறுதியில் ரிஸ்வி முப்தியின் தலை உருளுகிறது, உலமாக்களின் தலை உருளுகிறது, அவர்களும் நாங்கள் மார்க்க அறிஞர்களேயன்றி அரசியல் வாதிகள் இல்லை எனும் வரையறையை உணர்ந்து நாட்டின் அரசியல் விவகாரத்திலிருந்தும் விலகி நின்று அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து சமூகத்துக்கு நல்லது செய்யலாம் என்றில்லாமல் ‘தெரிவு செய்யப்படாத’ மக்கள் பிரதிநிதிகளாக அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதன் விளைவு? பொது பல சேனா எனும் மத சார்ந்த அமைப்பு அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் சமூகத்தோடும் மார்க்கத்தோடும் கலந்து அவர்கள் ‘பொளத்தவாத’ தீவிரத்தை முன்னெடுக்கிறார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்ணவில்லையா? ஜம் இயத்துல் உலமா முடிவெடுத்துச் சொன்ன நாளில்தான் பெருநாள் கொண்டாடவில்லையா? இல்லை, ஜம் இயத்துல் உலமா வரையறையிட்ட மார்க்க விடயங்கள் படி நடக்கத்தான் இல்லையா? எல்லாம் நடந்தது, காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருந்தது ஆனால் இப்போது அவர்களை வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து விட்டு சோமபேறிகளாகச் சம்பளம் வாங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தக் காலாவதியான தலைவர்களால் நாட்டின் இஸ்லாமிய சமூகம் பெரும் தொல்லைக்குள்ளாகிறது.

குளியாப்பிட்டியில், மஹரகமவில், தெஹிவளையில், அநுராதபுரத்தில், நாட்டில் எங்கெல்லாம் எது நடந்தாலும் அது நடக்கப் போகும் விடயம் முன் கூட்டியே தெரிந்த வலுவான அரசாங்கம் தான் இது. அப்படிப்பட்ட அரசாங்கம் கூட நடந்த பிறகு இந்த முஸ்லிம் தலைவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள் என்றுதான் பார்க்கிறது. ஆகக்குறைந்தது குளியாப்பிட்டி சம்பவத்திற்கு அங்கிருக்கும் பிரதிநிதி சத்தார் ஓடித்திரிந்தார் என்பது ஆறுதலான விடயம்.

பொது பல சேனா மிகத்தெளிவாக சலபிகள்,வஹாபிகள் என்று முஸ்லிம்களைத் தரம் பிரிக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது, தப்லீக், ஜமாஅத் இஸ்லாமி என்ன செய்கிறது என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது, உங்களுக்குள் முரண்பாடுகளைக் களையுங்கள், முஸ்லிம்கள் தான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று ஜனாதிபதி சொல்கிறார். மல்வத்து ஓயா பீடாதிபதி பொதுபல சேனா காலத்தின் தேவை என்று ஆசீர்வாதம் வழங்குகிறார்.

இதையெல்லாம் அறிந்த குடிமக்கள் எதிர்காலப் பயத்தில் வாழ, இவையனைத்தையும் அறிந்திருக்க வேண்டிய அரசியல் வாதிகள் ஏறத்தாழ Out of date அயிட்டங்களாகப் போய் விட்டார்கள். காலத்தின் தேவையறிந்து ஒலிக்காத உங்கள் குரல் யாருக்கு வேண்டும்? சமூகத்தின் தேவை புரிந்து, பிரதேசப் பாகுபாடுகள், எல்லைகள் கடந்து உங்களால் ஏன் ஒற்றுமையாக நிற்க முடியவில்லை? அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் சேர்ந்த ஒரு ஒற்றுமையான குரலை ஏன் உங்களால் வெளியில் கொண்டு வர முடியவில்லை? இதில் நான் பெரியவன் நீ பெரியவன் , உன் கட்சி பெரிது, என் கட்சி பெரிது என்று போட்டி போடுவதற்கு என்ன இருக்கிறது?

உங்கள் ஒற்றுமையான குரல் ஒலிக்காத வரை, அல்லது ஒற்றுமையான குரலை சமூகத்துக்காக ஒலிக்கச் செய்யாத வரை பெருகி வரும் இனவாதத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் இன்னல்களுக்கு அளவிருக்கப்போவதில்லை.

இதில் ஒரு பங்கு முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கிறது, ஏனெனில் நீங்கள் கேள்வி கேட்பதில்லை மாறாக அடிபணிந்து வாழவும் அவர்கள் மூலம் ‘ஆகக்கூடியவை’ என நம்பும் சிறு சிறு விடயங்களுக்காக அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள், உங்களுக்குள்ளும் பல பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், இயக்க வேறுபாடுகள் ஆனால் இறுதியில் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகமும் ஏனெனில் நீங்கள் அனைவரும் ‘முஸ்லிம்கள்’ !

- மானா

* இஸ்லாத்திற்கு எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுக்க முஸ்லிம் தலைமைகளுக்கு ஏன் தயக்கம் ?


இஸ்லாத்திற்கு எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுக்க முஸ்லிம் தலைமைகளுக்கு ஏன் தயக்கம் ? 

பௌத்த கடும்போக்கு வாதிகளினால் இஸ்லாத்திற்கு எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைமைகள் ஏன் தயங்குகின்றன என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, 

அன்மைக்காலமாக நாட்டில் நளாபுரங்களிலும் புனித இஸ்லாத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான பௌத்த தீவிரவாதம் மிக மோசமாக தலைதூக்கியுள்ளது. அனுராதபுரம் சியாரம் உடைப்புடன் சில பௌத்த காவியுடை காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட புனித இஸ்லாத்திற்கு எதிரான அடக்குமுறை இன்று பள்ளிவாயல்கள் உடைப்பு, பாங்கு சொல்வதற்கு தடை, தொழுகைக்கு தடை, முஸ்லிம் கிராமங்களிலிருந்து வெளியேற்றுதல், வியாபார நிலையங்களுக்கு சீல்வைத்தல், ஹலால் சான்றுதல்களை தடை செய்தல். என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்வதுடன் அதற்கு எதிரான போராட்டங்களும். ஆர்ப்பாட்டங்களும் தினம் தினம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எந்தவொரு அரசின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்து முஸ்லிம்களினதும் புனித இஸ்லாத்தினதும் கன்னியத்தையும் கௌரவத்தையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

இன்றைய அரசாங்கத்தில் அதிகளவிலான பாராளமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஏன் முதலமைச்சர், ஆளுநர், மாகாண சபை உறுப்பினர்கள் என முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பஞ்சமே இல்லை இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குகெதிராக குரல் கொடுக்கவோ எவருமில்லாத அரசியல் அனாதைகளாக இன்று முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் மூலை முடுக்குகளெல்லாம் மேடை போட்டு மேடைக்கு மேடை உரிமைகளை வென்றுதருவோம் என்று வீர முலக்கமிடும் கட்சிக்கரர்களாகவும், உரிமைகளோடு அபிவிருத்தியையும் பெற்றுத்தருவோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் வரலாறு கூறுவோர்களாகவும், ஆளும் கட்சியோடு சேர்ந்து இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என தனித்துவத்தை தாறுமாராக விமர்சனம் செய்பவர்களாகவும் தேர்தல் காலத்தில் முஸ்லிம்களை பரஸ்பரம் ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையை பெற்றுக் கொடுக்கும் நீங்கள் முஸ்லிம் சமூகம் பற்றியோ அல்லது படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் உரிமைகளைப்பற்றியோ சிந்திக்காமல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு கண்னை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி தங்களது அமைச்சுப் பதவிகளை காப்பாற்றிக் கொள்கின்றவர்களாக இன்று முஸ்லிம் அரசியலை மாற்றியமைத்து விட்டீர்கள்.

இன்று தங்களுக்காக வாக்களித்த முஸ்லிம் சமூகத்தினதும் புனித இஸ்லாத்தினதும் அடையாளங்களும் உரிமைகளும் பௌத்த மத வெறியர்களினால் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது என்பதை மனச்சாட்சியோடு நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைப் பொறுப்பை இறைவன் உங்களிடம் அமானிதமாக வழங்கியுள்ளான். தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் பதவியையும் கொண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து சமூகத்திற்கும் இழைக்கப்படும் அநிதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதில் அல்லாஹூக்கு மாத்திரம் பயந்தவர்களாக செயற்பட வேண்டும்.

பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநிதிகளை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கோ முதுகொலும்பு இல்லாத முஸ்லிம் தலைமைகளாக நீங்கள் இருப்பீர்களானால் நாளை இறைவனின் சன்னிதானத்தில் குற்றவாளிகளாக முழு சமூகத்திற்கும் அநீதி இழைத்தவர்களாக எழுப்பப்படுவீர்கள்.

இன்று வரைக்கும் நீங்கள் பௌத்த கடும் போக்காளர்களினால் இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மத அடக்குமுறைக்கு எதிராக நீங்கள் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைதான் என்ன? ஜனாதிபதியுடன் பேசினோம் குழு அமைத்தோம் என்று கூறலாம் அது வெறும் கண்துடைப்பு

இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தகவல் அறிந்து கொள்ளும் வல்லமையுள்ள பாதுகாப்பு திறமையை கொண்டவர்களால் பகிரங்கமாக இஸ்லாத்திற்கு எதிராக போராட்டம் நடாத்துகின்றவர்களுக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்று குழு அமைத்து கண்டு பிடிப்பதென்பது வேடிக்கையானது.

அது மாத்திரமன்றி 30 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த உலகத்திலோ மிகப் பலம் வாய்ந்ததாக வர்னிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதத்தினை வெற்றி கொண்ட நிறைவேற்று அதிகாரத்தினை தன்னகத்தே கொண்ட ஜனாதிபதியும் எந்த சட்ட மூலத்தையும் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றும் சகல அதிகாரத்தினையும் கொண்ட அரசாங்கமும் இந்த நிராயுதபானியான பௌத்த கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது நகைப்புக்குறியது

நீங்கள் நினைத்தால் ஏன் முடியாது அரசியல் கட்சி ரீதியாக ஒன்றுபடாவிட்டாலும் அநீதிகளுக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பலமான அழுத்தங்களை கொடுங்கள் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்திற்காக நீங்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளை விட இருந்தவைகளை இழந்ததே அதிகம் இன்னும் இழப்பதற்கு எதுவுமில்லை உங்களை அரியாசனம் ஏற்றிய இந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்காக நீங்கள் உங்களது அமைச்சுப் பதவியை ஏன் துறக்க முடியாது?

எனவே உங்களது மௌனம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நியாயமானது என ஏற்றுக் கொண்டதாகி விடும் உங்களது மௌனத்தை கலைந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று கட்டவிழ்து விடப்பட்டுள்ள அநிதிளுக்கு எதிராக குரல் கொடுத்து எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க அரசியல் கட்சி வேறுபாட்டிக்கு அப்பால் ஒன்றினைந்து செயற்படுமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். என தெரிவித்துள்ளார்.

* குளியாப்பிட்டிய ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் - 21/01/2013






 


21/01/2013குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் சித்தீக் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தாருக்கு நேரடியாக முறைப்பாடு செய்ததை அடுத்து அப்துல் சத்தார் உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கும் அமைச்சர்களான எம். எச். எம் பௌசி, அநுரயாப்பா போன்றவர்களுக்கும் இது சம்மந்தமாக தெரியப்படுத்தியதுடன் உடனடியாக குளியாப்பிட்டிக்கு விரைந்தார்.


குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய நகர முதல்வர் லக்ஷமன் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து இவைகளைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகலை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்திருந்தார்.

இது சம்மந்தமாக குளியாப்பிட்டிய நகரில் முக்கியமான பௌத்த சமயத் தலைவர்களைச் சந்தித்ததில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளியாப்பிட்டிய நகரில் உள்ளவர்கள் எவரும் சம்மந்தப்பட வில்லை எனவும் இதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சிங்கள உறவில் விரிசல் ஏற்படுவதற்கு தாங்கள் விரும்ப வில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் குளியாப்பிட்டிய நகர பிதா லக்ஷமன் அதிகாரி எக்காரணம் கொண்டும் குளியாப்பிட்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெற தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றதுடன் பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்கவும் இனப்பிரச்சினைகளுக்கு பொலிஸார் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் மத்தியில் பிரச்சினையை உண்டு பண்ணுவதற்கு முன்நின்றவர்கள் சம்மந்தமான அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்துல் சத்தார் இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

* கொதித்தெழுந்த அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனிகளாகிவிட்டார்கள்--சட்டத்தரணி அமானுல்லாஹ்



பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்தார்கள். ஓடி வந்து எமக்கு ஆறுதல் வழங்கினார்கள். ஆனால் எமக்கு ஆறுதல் வழங்கிய முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செயவில்லை. கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அவர்கள் தேர்தலின் பின்பு வா மூடி மௌனியாகி விட்டனர். அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக உள்ளது.

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது கொதித்தெழுந்து எமக்கு ஆறுதல் கூறிய முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு பள்ளிவாசலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செயவில்லை. அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக இருக்கிறது என ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் சட்டத்தரணி புஹாரிதீன் அமானுல்லாஹ் தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசலின் கள நிலைமை தொடர்பில் ‘விடிவெள்ளி’ மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டத்தரணி அமானுல்லாவுடனான நேர்காணலின் முழுமையான விபரம் வருமாறு:

விடிவெள்ளி: தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு 6 மாதங்களாகின்றன. தற்போது வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக பள்ளிவாசலின் ஒரு பகுதி அகற்றப்படவுள்ளதாக சொல்லப்பட்டுகிறது. இதன் தற்போதைய நிலைமை பற்றி தெளிவுபடுத்துவீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : பள்ளிவாசலில் அன்றாட சமய அனுஷ்டானங்கள் தொடராக நடைபெற்று வருகின்றன. ஆனால் மக்கள் மத்தியில் பீதியும், கவலையும் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளன. சந்தோஷமாக மனநிறைவுடன் சம்பவத்துக்கு முன்பு தொழுத மக்கள் இன்று கவலையில் உறைந்துவிட்டார்கள். பள்ளிவாசல் பாதை அபிவிருத்தி என்ற போர்வையில் காவு கொள்ளப்படப்போகிறது என்ற கவலை, பள்ளிவாசலின் நிச்சயமற்ற தன்மை என்பன இங்குள்ள முஸ்லிம்களை துயரத்தில் ஆழத்தியுள்ளது.

இப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் ஜும்ஆ தொழுகையில் ஈடுபடுகிறார்கள். வெளியிடங்களிலிருந்தும் பக்கத்து ஊர்களிலிருந்தும் ஜும்ஆவுக்காக மக்கள் வருகை தருவதாலேயே இத்தொகை அதிகரித்துள்ளது. பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாசலுக்கு வெளியே திறந்த வெளியிலும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். ஏனைய தொழுகைகளில் 30 பேர் வரை ஜமாஅத்தாக ஈடுபடுகிறார்கள். பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாக 70 குடும்பங்கள் பதிவு செயப்பட்டுள்ளன.

விடிவெள்ளி: பள்ளிவாசலின் இருப்பு தொடர்பில் பரிபாலன சபை என்ன நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது?

சட்டத்தரணி அமானுல்லாஹ்: பள்ளிவாசல் இதே இடத்தில் இருக்க வேண்டுமென்பதே பரிபாலன சபையின் நிலைப்பாடாகும். மக்கள் அமைதியாக, நிம்மதியாகவே தொழுகைகளில் ஈடுபட வேண்டும். பள்ளிவாசல் வேறு இடத்துக்கு இடமாற்றம் செயப்பட்டால் அப்பகுதியிலும் முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்கு சவால்கள் உருவாகலாம். பள்ளிவாசலில் தராவீஹ் மற்றும் பயான்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம். இந்தப் பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில் அரசாங்கத்துக்கு சோந்தமான பெரிய காணி இருக்கிறது. உண்மையில் இப்பகுதி ஒரு புனித பூமிக்குரியதல்ல. புனித பூமி என்று அவர்களாகவே பெயர் சூட்டிக் கொண்டுள்ளார்கள். பள்ளிவாசலுக்குப் பின்னாலுள்ள காணியை பள்ளிவாசலுக்காக வழங்கலாம்.

விடிவெள்ளி : பள்ளிவாசலைக் காப்பாற்றிக் கொள்ள நிர்வாக சபை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

சட்டத்தரணி அமானுல்லாஹ்: பள்ளிவாசல் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே தாக்குதலுக்குள்ளானது. பள்ளிவாசலைத் தாக்க வருவதாக இனாமலுவ தேரர் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே இதுபற்றி எமது நிர்வாக சபை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர்,பிரதிப் பொலிஸ் மா அதிபர், தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

பள்ளிவாசலை தாக்குவதற்கு வரவுள்ளார்கள் என்று தம்புள்ளை பொலிஸில் நிர்வாக சபையினாலும் தனிப்பட்ட ஒருவர் மூலமும் முறைப்பாடுகள் செயப்பட்டன. பள்ளிவாசல் தாக்கப்பட்ட பின்பும் பொலிஸில் முறைப்பாடு செயப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பின்பு இனாமலுவே தேரர் ஆறு மாதங்களின் பின்பு பள்ளிவாசலை அகற்றுவதாக சவால்விட்டிருந்தார். இது பற்றியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

வக்பு சபை, முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. பள்ளிவாசல் சேதம் தொடர்பான விபரங்கள் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபைக்கு வழங்கப்பட்டது. பயப்பட வேண்டாம் பள்ளிவாசலுக்கு ஆபத்து வராது என்று அமைச்சர்களும் உலமா சபையும் தெரிவித்தது.

தொடர்ந்து பரிபாலன சபை பள்ளிவாசல் தொடர்பில் ஆராந்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடாத்துகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கூட ஒன்று கூடி இதுபற்றி கலந்துரையாடினோம்.

விடிவெள்ளி : தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள், கடைகள் அப்புறப்படுத்தப்படவுள்ளன?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இப்பகுதியிலுள்ள 52 வீடுகளுக்கும், 12 கடைகளுக்கும் கண்டலம வீதியில் பொல்வத்த எனும் இடத்தில் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு காணிகளை ஒப்படைக்கும் படியும் நகர அபிவிருத்தி அதிகார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதியிட்ட 17/DM/937ஆம் இலக்க கடிதத்தில் இரு வாரங்களுக்குள் பொல்வத்தயில் காணி வழங்கப்படும் எனவும் அதற்குள் அங்கு இடம்பெயர தேவையான ஏற்பாடுகளைச் செது கொள்ளும்படியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும் இரு வாரங்கள் கடந்து விட்ட நிலையில் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொல்வத்த பகுதி காணி துப்பரவு செயப்பட்டுவருகிறது. இது யாரால் செயப்படுகிறது என்பது தெரியாது.

இங்கு மூவினங்களையும் சேர்ந்த மொத்தம் 72 குடும்பங்கள் இருக்கின்றன. நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து இடம்பெயர்வதற்கான கடிதம் அனுப்பப்படாத குடும்பங்களும் இருக்கின்றன. பள்ளிவாசலிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்துக்குள் இக்குடும்பங்கள் வாழ்கின்றன.

விடிவெள்ளி: பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி, அமைச்சர்கள் பைசர் முஸ்தபா ஏ.எச்.எம்.பௌஸி, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி ஆகியோர் உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் அகற்றப்படாமலே வீதி அபிவிருத்திக்குள் பள்ளிவாசல் உள்வாங்கப்படப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதே?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் படி இந்தப் பள்ளிவாசல் பாதை அபிவிருத்தி என்ற போர்வையில் உள்வாங்கப்படவுள்ளது. 65 அடி அகலமான பாதை பள்ளிவாசல் கட்டிடத்தை ஊடறுத்துச் செல்லும் வகையிலேயே குறித்த திட்ட வரைபு அமைந்துள்ளது. அவ்வாறே நில அளவை மேற்கொண்டு எல்லை மற்றும் குறியீடுகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடப்பட்டுள்ளன.

விடிவெள்ளி: பள்ளிவாசல் பாதை அபிவிருத்திக்குள் உள்வாங்கப்படவுள்ளதால் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கின்றீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. எமது சமூகத்துக்கு தன்மானம் என்று ஒன்றிருக்கிறது. அவ்வாறு புதியதோர் இடத்துக்குச் செல்வது முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. இச்செயல் ஏனைய இடங்களிலும் பள்ளிவாசல்கள் அகற்றப்படுவதற்கு இது உதாரணமாக அமைந்து விடும். அப்படி வேறு ஏற்பாடுகள் என்றால் ஜனாதிபதி இதில் தலையிட வேண்டும். எம்மிடம் சில கோரிக்கைகள் இருக்கின்றன. அவை கலந்துரையாடப்பட வேண்டும்.

தம்புள்ளையில் தற்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்திலிருந்து தூரவுள்ள இடத்துக்குப் போனால் அதில் பல சிரமங்கள் உள்ளன. தம்புள்ள சந்தையில் அதிக முஸ்லிம்கள் வர்த்தகம் செகிறார்கள். இவர்களது வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

விடிவெள்ளி: புதிய இடத்தில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டால் சமூகத்துக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் எனக் கருதுகிறீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம். புதிய இடத்தில் அதுவும் முஸ்லிம்களே வாழாத பகுதியில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டால் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதான் சோல்லல், நோன்பு கால இரவுத் தொழுகைகள் என்பன தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இன்றேல் தடைகளை உருவாக்கலாம்.

விடிவெள்ளி: முஸ்லிம் சமூகத்திடமிருந்து இந்தத் தருணத்தில் நீங்கள் என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : அல்லாஹ்விடம் துஆச்செயுங்கள். அது எங்களுக்குப் போதும். புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணிப்பதற்கு சமூகம் வாரி வழங்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்திலே நாம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென பிரார்த்தியுங்கள். காடையர் கூட்டம் வானொலி மூலம் பிரசாரங்களை மேற்கொண்ட பின்பே பள்ளிவாசலை உடைக்க பேரணியாக வந்தது.

இந்த இடத்திலேயே நாம் தொடர்ந்து இருக்க வேண்டுமென்பது எமது தன்மானப் பிரச்சினையாகும். சமூகம் ஒட்டுமொத்தமாக எமது இருப்புக்காக குரல் கொடுக்க வேண்டும்.

விடிவெள்ளி: முஸ்லிம் அரசியல் வாதிகளின் நிலைப்பாடு திருப்தியளிக்கிறதா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்தார்கள். ஓடி வந்து எமக்கு ஆறுதல் வழங்கினார்கள். ஆனால் எமக்கு ஆறுதல் வழங்கிய முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செயவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் பெரும் பங்காற்றியிருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அவர்கள் தேர்தலின் பின்பு வா மூடி மௌனியாகி விட்டனர். அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக உள்ளது.

விடிவெள்ளி: அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை உங்களுக்கு ஏதும் உத்தரவாதம் வழங்கியுள்ளதா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம், உலமா சபை தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது. பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது. இதே இடத்தில் இருக்கும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக சபை தொடர்ந்தும் அடிக்கடி கொழும்பு உலமா சபை காரியாலயத்துக்குச் சென்று கலந்துரையாடல்களை நடத்துவதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

விடிவெள்ளி: சர்வதேச உதவிகளையும் ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. எதிர்பார்க்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எமது பிரச்சினையை இங்கேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.சுமுகமான தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

விடிவெள்ளி: பள்ளிவாசல் தொடர்பான சம்பவம் பற்றி ஈரான் ஜனாதிபதி எமது நாட்டின் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு வினவியிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறதே?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம், இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் நீண்ட காலமாக சுமுகமான உறவு இருந்து வருகிறது. ஈரான் எமது நாட்டுக்கு பல உதவிகளைச் செதுள்ளது. இரு ஜனாதிபதிகளும் பள்ளிவாசல் தொடர்பில் உரையாடிக் கொண்டமை நிச்சயம் நன்மை பயக்கும்.

விடிவெள்ளி: இனாமலுவே தேரர் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் தொடர்புகளை வைத்திருக்கிறாரா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : தம்புள்ளை இனாமலுவே தேரருக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இத் தொடர்பு நெருக்கமானதாக ஆரோக்கியமானதாகவே இருந்தது. கண்டலமவில் உல்லாச பிரயாண ஹோட்டல் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் பள்ளிவாசல் சம்பவத்தினை அடுத்து அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. தேரருடன் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு தற்போது எதுவித தொடர்பும் இல்லை. கதைத்துக் கொள்வதுமில்லை. அவர் மாறி விட்டார்.

விடிவெள்ளி: உங்கள் பிரதேச சிங்கள சகோதரர்களின் நிலைப்பாடு எவ்வாறிருக்கிறது?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : எங்களைச் சுற்றி வர பெரும்பான்மைச் சமூகமே இருக்கிறது. அவர்களால் முஸ்லிம்களுக்கோ, பள்ளிவாசலுக்கோ எதுவித பிரச்சினையுமில்லை. உறவுகள் தொடர்ந்தும் சுமுகமாகவே உள்ளன. காணி காணி சீர்திருத்த அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோனும் பள்ளிவாசல் தொடர்பில் எமக்கு சார்பான கருத்தினையே கொண்டுள்ளார். பள்ளிவாசல் 60 வருடங்களுக்கும் மேலாக அவரது தந்தையின் காலத்திலிருந்தே அவ்விடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலை அப்புறப்படுத்துவதற்கு குறிப்பிட்ட தேரருடன் இணைந்துள்ள குழுவினரே அழுத்தங்களைக் கொடுத்து விடுகிறார்கள். சாதாரண மக்கள் இப்பகுதியில் சமய, இன வேறுபாடுகளை மறந்து வாழவே விரும்புகிறார்கள். சமூகத்தின் அரசியல் தலைவர்கள் பள்ளிவாசல் தொடர்பில் ஒருமித்து குரல் கொடுப்பதன் மூலமே பள்ளிவாசலையும் நம்மையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.