Tuesday, May 7, 2013

* குளியாப்பிட்டிய ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் - 21/01/2013






 


21/01/2013குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் சித்தீக் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தாருக்கு நேரடியாக முறைப்பாடு செய்ததை அடுத்து அப்துல் சத்தார் உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கும் அமைச்சர்களான எம். எச். எம் பௌசி, அநுரயாப்பா போன்றவர்களுக்கும் இது சம்மந்தமாக தெரியப்படுத்தியதுடன் உடனடியாக குளியாப்பிட்டிக்கு விரைந்தார்.


குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய நகர முதல்வர் லக்ஷமன் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து இவைகளைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகலை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்திருந்தார்.

இது சம்மந்தமாக குளியாப்பிட்டிய நகரில் முக்கியமான பௌத்த சமயத் தலைவர்களைச் சந்தித்ததில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளியாப்பிட்டிய நகரில் உள்ளவர்கள் எவரும் சம்மந்தப்பட வில்லை எனவும் இதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சிங்கள உறவில் விரிசல் ஏற்படுவதற்கு தாங்கள் விரும்ப வில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் குளியாப்பிட்டிய நகர பிதா லக்ஷமன் அதிகாரி எக்காரணம் கொண்டும் குளியாப்பிட்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெற தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றதுடன் பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்கவும் இனப்பிரச்சினைகளுக்கு பொலிஸார் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் மத்தியில் பிரச்சினையை உண்டு பண்ணுவதற்கு முன்நின்றவர்கள் சம்மந்தமான அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்துல் சத்தார் இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment