Saturday, February 8, 2014

* பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால்...........


பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால்...........


இலங்கையில் பள்ளிவாயல்கள் தாக்கப்படும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுக்கின்றவர்களை கொள்கை பேதம் பார்த்து நீ உதவி செய்ய வரத்தேவை இல்லை என்று பள்ளி நிர்வாகமும் ஜமய்யதுள் உலமாவும் கூறி கூறுவபோடுவதில் இருந்து சில அவதானங்களை பெற முடிந்தது.

இலங்கையில் ஹலால் பிரச்சினை தனக்கெதிராக வரும்போது மக்கள் தேவை பட்டது.

பிறை பிரச்சினையில் பிறைகண்டு அதன் அடிப்படையில் நோன்பு நோற்றவர்களால் தனது மானம் போகும் என்று அவர்கள் குழப்பவாதிகள் எனப்பட்டது.

தம்புள்ள பள்ளிவாயலை சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கப்பட்டு தாரைவார்க்கபட்டது.

மோலவத்த பள்ளியிலும் அதே அரசியல் பேணப்பட்டு சத்தியம் நொறுக்கப்பட்டது.

இலங்கையில் இனிமேல் எந்த பள்ளிவாயல் தகர்க்கபட்டாலும் அதற்கு தீர்வு சொல்வது நிச்சயமாக அரசாங்கமாகவே இருக்கும்.அந்த தீர்வு ஜமிய்யதுள் உலமாவால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும்.

காரணம் தம்புள்ள பள்ளி முதல் ஹலால் புலாலில் இருந்து க்றேன்பாஸ் பள்ளிவரை ஒரேவிதமான அணுகுமுறையை ஜமிய்யதுள் உலமா பேணுகிறது.

முஸ்லிம்கள் மீது அத்துமீருகின்றவர்கள் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொண்டனர்.முஸ்லிம்களிடம் இருந்து பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால் ரெண்டில் ஒன்றை வாங்கிவிட்டு போய்கொண்டே இருப்பர்கள்.

இனிமேல் எந்த பள்ளியை இனவாதிகள் தாக்கினாலும் அரசாங்கம் எந்தவித பிரச்சினையும் இன்றி இலகுவான முடிவை எடுக்கும்.

தானே பிரச்சினையை தீர்ததுபோலும் தனது திட்டம் நிறைவேரியதுமன மகிழ்ச்சியில் அரசாங்கம் அடுத்த தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குகளில் அரசை அமைக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem



* முஸ்லிம்களை அழிப்பதற்காகவே தீவிரவாதிகள் என்ற நாமம்...!





மாவனெல்ல பௌத்த தேரர்கள் சம்மேளனம் போன்றவர்கள் முஸ்லிம் மக்களுக்கு காட்டிய அரவனைப்பு இருக்கும் வரை இந்த நாட்டில் இனவாதம் விரவில் தூக்கி எறியப்படும் என்பதில் ஐயமில்லை.

இனவாதமும், மதவாதமும் எந்வொரு நாட்டில் தோற்றம் பெறுகின்றதோ அந்த நாடு எப்போதும் மீட்சி பெற்ற வரலாறுகள் இல்லை. ஆனால் இலங்கையில் தற்போது ஒரு சில சதிகாரர்களின் தீவிரவாத சூழ்ச்சிகளும், காழ்ப்புணர்ச்சிகளும் அமைதியை விரும்பும் மக்களிடத்தில் குழப்பத்தை தோற்றுவிப்பதற்கான முனைப்புகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.

மேற்படி சதி முயற்சிகள் பல கோணங்களிலும் மக்கள் அறியாத வகையில் மிகவும் சூட்சுமமான முறையில் ஒரு சில அரசியல் வாதிகளின் செல்வாக்கு மற்றும் ஆசீர் வாதங்களுடன் மேற் கொள்ளப்படுவதையிட்டு மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்ற காரணத்தினை அடிப்படையாக வைத்து அவர்களை அழித்து ஒழிப்பதற்காகவே தீவிரவாதம் என்ற நாமஞ் அவர்கள் மீது ச10ட்டப்பட்டு பழிவாங்கள்கள் தற்போது இலங்கையில் பகிரங்கமாகவே இடம்பெற்று வருகின்றது.

இதற்காக ஒரு சமயத்தின் சமய விழுமியங்களான ஹலால், ஹிஜாப் ஆகியவற்றிலும் வியாபாரஞ் செய்ய முடியாத நிலை. சமயக் கல்வியைத் தொடர முடியாது நிலை, பள்ளிவாசல்களில் இறைவனை வணங்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தல் போன்றவற்றில் அடாவடித் தனம் செய்வதுடன் இவற்றையெல்லாம் மீறி முழு முஸ்லிம்களின் மீதும் தீவிரவாதப்பட்டம் சுமத்தி அப்பாவி பெரும்பான்மை மக்களை முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை தோற்றுவிக்கும் ஒரு கபடத்தனமான திட்டங்களையே இனவாதிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு இனத்தின் விடிவிற்காய் இன்னொரு இனத்தினை நசுக்கி வெற்றி கொள்ள முடியாது என்பதும் அதற்காக கிடைத்த பலன்களை வடக்கிழக்கில் இடம்பெற்ற கடந்தகால யுத்தம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த படத்தினை கற்றுக் கொடுத்துள்ளதை நாம் கண்டு கொண்டோம்.

வடகிழக்கில் விடுதலைப் புலிகள் தமது தமிழ் சமுகத்தின் விடிவிற்காய் ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த முஸ்லிம் சமகத்தினை அவர்களின் பூர்வீகங்களில் இருந்து ஈவிரக்கமற்ற வகையில் வெளியேற்றி விட்டு தமது தாயகம் என்ற பிரகடத்தின் மூலம் மூன்று தஸாப்த காலமாக வெற்றி வாகை சூடலாம் என்று போராடிய புலிகளின் கனவுகள் இன்று ஒரு நொடிப் பொழுதில் தவிடுபொடியாகி அவர்கள் தோல்வி அடைந்த வரலாறு இன்று தமிழ் மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத ஏக்கத்தில் இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு உலக நாடுகளையே திகைக்க வைத்தாக இருந்தது மட்டுமல்லாது முழுத் தமிழ் சமுகமுமே அப்போராட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கையுடன் இருந்தனர் என்றாலும் அவர்களின் துர்அதிஸ்ட்டவசம் இன்று அந்த நம்பிக்கைகள் தலை கீழாக மாறிவிட்டது.

மேற்படி நிலைமைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் விடுதலைப் புலிகள் விட்ட மாபெரும் பிழை தமது போராட்டத்திற்காக அங்கு வாழ்ந்த அப்பாவி முஸ்லிம்களை காலவரையறை இன்றி வெளியேற்றியமை அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அரசன் அன்றறுப்பான தெய்வம் நின்றக்கும் என்பார்கள் இதற்கமைவாக வெளியேற்றப்பட்ட மக்கள் விட்ட கண்ணீரும், கவலையும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாக விடுதலைப்புலிகள் செய்த தவறுக்கு அவர்கள் அழிக்கப்பட்டமையை காணலாம்.

தமிழ் மக்களுக்கு அவர்கள் பிறந்த வடகிழக்கு பகுதி எப்படியொரு தாயகமோ அதேமாதிரி வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கும் வடகிழக்கு தாயகம்தான் வடக்கில் பிறந்தவனானாலும் சரி கிழக்கில் பிறந்தவனானாலும் சரி அவரவர் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அப்பகுதியையே குறிப்பிடுவர் மாறாக அவர்களை துரத்திவிட்டால் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் எழுதப்பட்ட வசனம் மாறுவதில்லை.

இவ்வாறிருக்க தமது வெற்றிக்காக ஒரு இனத்தை இல்லாதொழிக்கச் செய்து தமது வெற்றியை அடைந்து கொள்ளலாம் என்பதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் இன்று இலங்கையில் பெரும்பான்மை இனத்தின் ஒரு சில இனவாதக் கும்பல்கள் முஸ்லிம்களை அடியோடு அழித்தொழிக்க தற்போது முளை விட்டுள்ள விடயம் விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்களை விரட்டியதற்காக கிடைத்த சன்மானத்தை விட அதிகமானதொரு சன்மானத்தை அடையப் போரார்கள் என்ற நல்ல சமிக்கையே இன்று தோற்றம் பெற்றுள்ளது.

இனவாதிகள் தற்போது மேற் கொண்டு வரும் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் சாபக் கேட்டையே தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

இனவாதிகளின் எதிர்ப்பும், அடாவடித்தனமும் இன்று முஸ்லிம்கள் மீது மிக கோரமான முறையில் குறிப்பாக ஒரு சமயத்தின் மீது மேற் கொள்ளப்படுவது இலங்கையின் அமைதிக்கு எதிரானதொரு அபாய நிலைமையாகும்.

வெள்ளம் வருமுன் அனையைக் கட்டவேண்டும் என்பதுபோல் இலங்கை ஆபத்தில் விழ முன் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் அடாவடித் தனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டும் மாறாக மேற்படிச் செயற்பாடுகள் தொடருமானால் மார்ச் மாதம் ஜெனீவா மாநாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விடயங்கள் பிரதிபளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.

ஏற்கெனவே இலங்கை மீது உலக நாடுகள் குறிப்பாக வல்லரசுகள் யுத்தக் குற்ற விடயங்களில் இலங்கையை சிக்க வைப்பதற்கான அபார முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் யானை தன் கையால் தனக்கு மண்ணை வாருவதுபோல் தமது பெரும்பான்மை சமுகத்தினாலேயே மேலும் பல மனித உரிமை மீறல்களை செய்வதாக வழுச் சேர்க்கும் விடயங்களாகவே சமாதானத்தை விரும்பும் சகல மக்களாலும் தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையில் இன்று இனவாதக் கும்பல்களின் தீவிரவாதம் வெகுவாக பரவி வருகின்றமைக்கு பின்வரும் விடயங்களில் சிலவற்றைக் கூறலாம் அதாவது சிறுபான்மை இனத்தை அழிப்பதற்காக அவர்களின் சமயங்களை கொச்சைப்படுத்துவதும் அரச அதிகாரிகளை காவி உடைகளை அணிந்து கொண்டு மிரட்டுவது, நாட்டின் பிரதமரை இம்சிப்பது அவரை பதவி விலகச் சொல்வது நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிருவாகத்துறை விடயங்களில் தான்றோன்றித் தனமாக மூக்கை நீட்டுவது மட்டுமல்லாது உண்மையான பௌத்த தர்மத்தையே கொச்சைப் படுத்துவதெல்லாம் சமயப் போதகர்களுக்குரிய நற்பண்புகள் அல்ல.

இலங்கையின் கடந்த கால வரலாற்றில் இனங்களுக்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றுள்ளது போன்ற நிலைமைகள் காணப்படவில்லை எனினும் 1983 மற்றும் அதன் பின்பான காலங்களில் அவ்வப்போது தோன்றிய சிறு சிறு இனவாதிகளின் செயற்பாடுகளால் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அப்போதிருந்த அரச தலைவர்களும், ஆட்சியாளர்களும் நேரடியாக தலையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமுகங்களை ஒற்றமைப்படுத்திய காலங்களும் இருந்தன.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் இனவாதிகளால் உடல் மற்றும் உள ரீதியாக சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

இன்று இலங்கையில் ஏற்பட்டுள் மேற்படி நிலைமைகள் பூதாகாரமாக ஆகுவதற்கு பாரியதொரு அரசியல் பின்புலம் இல்லாமல் செயற்பட முடியாது என்பது சகல மக்கள் மத்தியிலும் தோன்றியுள்ள சந்தேகங்கள் மட்டுமல்லாது அதன் பின்புலங்களைக் கூட மக்கள் அறியக் கூடியவா'களாக உள்ளனர்.

ஒரு சில குழுக்களின் பகிரங்கமானதும் சட்ட ரீதியற்ற செயற்பாடுகளும் மற்றவர்களை பாதிக்கும் போது அவை மனித உரிமை மீறல்களாகவே அமைகின்றது. ஆனால் இன்று அவர்கள் செய்து விட்டு சுதந்திரமாக உலா வருவதானது இலங்கையின் ஜனநாயகம் எங்கே போகின்றது என்பதனைப் புரிந்து கொள்ளலாம் என கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு சில தேரர்கள் பௌத்த தர்மத்தை கற்றுவிட்டு அதற்கு மாற்றமாகச் செய்யும் பாவச் செயல்கள் முழு பௌத்தர்களையுமே பாதிக்கின்றது இருந்தும் புத்த பெருமானின் அடியொட்டிய பல்லாயிரக் கணக்கான பௌத்த தேரர்கள் மற்றய சிறுபான்மைச் சமகத்துடன் மிகவும் அந்யோன்யமாக விட்டுக் கொடுப்புக்களுடன் அவர்களின் மதங்களையும் அவற்றின் கண்ணியத்தையும் மதித்தவர்களாக செயற்படுவது சகலராலும் வரவேற்கத் தக்க மகிழ்ச்சியான விடயமாகும்.

இதற்கு நல்ல உதாரணம் தெவனகல சம்வங்கள் பௌத்த தர்மம் மற்றய சமயங்களை இம்சிக்கச் சொல்ல வில்லை மாறாக மதிக்கவும், அவர்களுக்குரிய சகல மரியாதையையும் வழங்கும்படியே போதிக்கிக்கின்றது.

இந்த அடிப்படையில் மாவனல்ல தெவனகலவில் முஸ்லிம்களை எழுப்பச் சொல்லி ஒரு சில இனவாத பௌத்த தேரர்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு செருப்படி கொடுத்ததுபோல் அப்பகுதி மரியாதைக்குரிய பௌத்த தேரர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்டுள்ளமை சகல முஸ்லிம்களையும் மெய் சிலிர்க்க வைத்தள்ளதுடன் பாராட்டுக்குரிய விடயமுமாகும்.

மாவனெல்லை, தெவனகலவில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என மானனெல்லை பௌத்த தேரர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளமை முஸ்லிம்களின் மீது பால் வார்த்ததுபோல் முழு முஸ்லிம் சமுகமும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக அவர்களை மதிக்கின்றவர்களாக ஆகிவிட்டனர்.

காலா காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள முஸ்லிம் சமுகங்களின் ஒற்றுமையை வெளிச்சக்திகளே வந்து பிளவுகளை ஏற்படுத்தி ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்த முனைவதாகவும் அதற்கு இனிமேல் இடமில்லை எனவும் தேரர்கள் தெரிவித்துள்ளமை சமூக ஒற்றுமைக்கு மேலும் வழுவூட்டும் நல்ல செயற்பாடுகளாகும்.

தெவனகல முஸ்லிம்கள் விடயம் சம்பந்தமான கலந்துரையாடலில் தெவனகல சிங்கள- முஸ்லிம் நட்புறவு மன்றத்தின் தலைவர் டாக்டர் கமகே தெவனகல பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் மேற் கொண்ட இனவாதப் பிரச்சாரங்களின் தொகுப்பை வெளியிட்டார்.

கடந்த 2001 இல் ஏற்பட்ட இனக் கலவரம் போன்றதொன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதுடன் இரண்டு இனத்தவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாகவும் பிரச்சினைகள் இருப்பின் பேசித் தீர்ப்பதற்கும் சட்ட ரீதியாக அணுகுவதுமே சிறந்தது என கமகே தெரிவித்துள்ளார்.

மாவனல்ல தொடந்தல விகாராதிபதி தெவனகலவில் இரண்டு இனங்கள் வாழும்போது முஸ்லிம்களை மாத்திரம் விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சிங்கள முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முற்படும் வெளிச் சக்திகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் எமது பிரச்சினையில் வெளிச் சக்திகள் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தேரர் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டு செல்ல வேண்டும் ஏனைய மதங்களை மதித்து வாழ்வதுதான் பௌத்த தர்மம் என்றார்.

மேற்படிக் கலந்துரையாடலில் மாவனெல்ல கெரமினிய சுதேச வைத்தியரான தேரர் முஸ்லிம்களை இங்கிருந்து விரட்டியடிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், வெளிச் சக்திகள் இப்படியாதொரு பிரச்சினையைக் கிளப்பி இன ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்றார்.

ஒரு ஆபத்தான நிலையை எதிர் கொண்ட தெவனகல முஸ்லிம்களுக்கு ஒரு இறுக்கமானதும் இனவாதிகளுக்கு காட்டமானதுமான செய்தியை தெவனகல தேரர்கள் சம்மேளனம் வழங்கியமை அவர்கள் சிறுபான்மை மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், உண்மையான பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதும் நிருபனமானது.

தேரர்கள் முஸ்லிம்களுக்கு தகுந்த சந்தர்ப்பத்தில் கைகொடுத்ததானது இவ்விரு சமுகங்களும் எந்தளவு ஒற்றமையாகவும், நம்பகத் தன்மையுடனும் வாழ்ந்தார்கள் என்பதனை இனியாவது இனவாதிகள் புரிந்து கொண்டு உண்மையான பௌத்த தர்ம முறைப்படி மற்றய சமுகத்தை மதித்து புத் பெருமான் காட்டிய நல்வழியில் வாழவேண்டும் என இனவாதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அன்பாய் வேண்டுகின்றனர்

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

* நிர்பந்தங்களுக்கு அடிபணியும் ஜம்மியத்துல் உலமா ?சிக்கித்தவிக்கும் முஸ்லிம் சமூகம்


இஸ்லாத்துக்கு வருவதாக அரங்கேற்ற பட்டநாடகம் ?
தேரர்களின் காய் நகர்த்தல் ?
சிக்கிக்கொள்ளும் முஸ்லிம் சமூகம் !!!
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !

அதேவேளை நேற்று குருநாகல் மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இரு சிங்கள பெண்கள் எமது பள்ளிக்கு வந்தனர் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார் . இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தோம் அவர்கள் அவர்களை விசாரித்தார்கள் . அதன் பின்னர் அது பற்றிய அறிய முடியவில்லை . நேற்றைய இந்த சம்பவத்தையும் மற்றைய சம்பவ பின்னணியுடன் பார்த்தோம் அதன்காரணமாக பொலிசாருக்கு அறிவித்தோம் .

இது தொடர்பாக விமர்சங்கள் எழுத்துள்ளது , இஸ்லாத்தை ஏற்றுகொள்ள போவதாக வந்தவர்களின் உள்ளங்களை நாம் திறந்து பார்க்க முடியாது அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் நோக்கில் வந்திருக்கலாம் என்றும் இல்லை அவர்கள் எம்மை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளது .இது வரை மேற்படி சம்பவங்கள் நடந்து முடித்துள்ளது .
அவளை பின்தொடர்ந்து ஊர்வலம் வந்த தேரர்கள் 
லை ஹெம்மாதகம பிரதேசத்தின் பெரிய பள்ளி வாசலுக்கு சென்ற பெளத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் . குறித்த மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்து மஸ்ஜித் நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று தெரிவித்து அங்கு சென்றுள்ளனர் .
அங்கு ஜமாத்தில் வந்து மஸ்ஜித்தில் தங்கியருந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளனர் அங்கிருந்த மாணவர்களும் வந்த பெளத்த தேரர்களை கதிரைகளை போட்டு அமரச்செய்துள்ளனர் . இதற்கு இடையில் குறித்த குழுவினர் பள்ளிக்கு வந்திருக்கும் தகவல் பொலிசாருக்கும் , பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது , பள்ளி நிர்வாகமும் அங்கு செல்ல எஸ் .பி தலைமயிலான பொலிசாரும் அங்கு வந்து விட்டனர். பிரதேசத்தின் முஸ்லிம் வாலிபர்களும் கூடிவிட்டனர் .

வந்தவர்களுடன் நாம் பேசினோம் , அவர்களை மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருக்கும் மண்டபம் ஒன்றுக்கு அழைத்தோம் அவர்கள் வந்தன் நோக்கம் இந்த பகுதியில் தமது மேலாதிக்கத்தை காட்டும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் ஆனாலும் அவர்களை நாம் கண்ணியமாக நடாத்தினோம் , அதிகாமான முஸ்லிம் வாலிபர்களும் மஸ்ஜிதில் கூடிவிட்டனர் .

வந்தவர்கள் எமது மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பொலிசார் தலையிட்டு அவர்களை நாளை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கு இது தொடர்பாக் பேசலாம் என்றும் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் .
அடுத்த நாள் காலை அவர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேசியுள்ளனர் . அவர்களின் குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டது.என்பது தெரியவருகிறது . இந்த பள்ளியில் எவரையும் நாங்கள் ( பலவந்தமாக ,பொருட்கள் மீது ஆசை காட்டி ) இஸ்லாத்துக்கு எடுக்க வில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளோம் .

வந்த பெளத்த பிக்குவில் ஒருவர் தெவனகல சம்பவத்துடன் தொடர்பான பிக்கு , இருந்தும் நாம் கண்ணியமாக நடந்து கொண்டோம் . பொலிசார் உடனடியாக இடத்துக்கு வந்தனர் நியாயமாக நடந்து கொண்டனர்.
ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள் திட்டமிட்ட காய்நகர்த்தல் கண்டி- அம்பதென்னை மஸ்ஜித் தாக்குதல் விவகாரம் சமாதானமாக தீர்வு
சமாதானமாக பேசி போடப்பட்ட வழக்கை வாபாஸ் வாங்கியது இதுநடந்து மறுநாள் அட்டகாசத்தை ஆரம்பித்தார்கள் அங்கு அவர்களின் வாக்குறுதி இரு சாராரும் ஏற்றுக் கொண்டவாரு இச் சம்பவத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வறவும் இதண் பின் இவ்வாரான செயல்கள் இடம் பெறாதிருப்பதற்கு தேவையான நடவக்கைளை மேற்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த கட்ட பஞ்சாயத்தை முன்னின்று நடாத்திய ஜம்மியத்துல் உலமாக்கள் எல்லாவற்றையும் பொறுப்பெடுக்க வேண்டும் இவர்களுக்கு காவடி தூக்கும் அடிவருடிகள் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கவில்லை நீதியை நாடி நீதி மன்றம் சென்றார்கள் அதை முன்னின்று இல்லாமல் செய்த சக்தி எது விடைகான முடியாத வினா உங்களிடமே விட்டு விடுகிறோம்


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

* ஜம்மியத்துல் உலமாவின் கட்ட பஞ்சாயத்து ?!!



கண்டி- அம்பதென்னை மஸ்ஜித் தாக்குதல் விவகாரம் சமாதானமாக தீர்ப்பு!!!!

கண்டி- அம்பதென்னை மஸ்ஜிதுல் பலாஹ் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி நீதி மன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குதற்கும் இது சம்பந்தமான வளக்கை வாபஸ் வாங்குவதற்கும் முஸ்லிம் , பெளத்த தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தீர்க்கப்படாத வழக்கை தீர்த்துவைத்த
பெருமை வாழ்க உங்கள் சேவை
இன்னும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன அங்கே கொண்டுபோய் இறக்குங்கள் உங்கள் கமொண்டோக்களை உலமாக்களே மறந்துவிடாதீர்கள் இவை பொதுபல சேனாக்க லுக்கு எதிரான வழக்குகள்
ஆகவே மற்றைய பிரச்சினைகளை யும் முன்னின்று தீர்த்துவையுங்கள்
இதோ இவர்களின் பஞ்சாயத்து !!

இக் கூட்டத்தில் பௌத்த மக்கள் சார்பில் கொண்டதெனியே பியதஸ்ஸீ தேரர், படுகொட சங்கிச்சாயன தேரர்,: இராஜாங்கனை சோரத தேரர், முல்லேகம பியரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பில் கண்டி நகர ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான், அக்குறணை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர் மௌலவி முஸம்மில், அககுறணை அஸ்னா மத்திய பள்ளியின் நிர்வாக சபையின் தலைவர் சட்டத்தரனி அஸ்மி பாரூக், உற்பட பலர் கலந்து கொண்டனர்.

முல்லேகம் பிரியதர்ஷனாராம விஹாரையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் பள்ளி வாயலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதென முஸ்லிம் தரப்பினர் அறிவித்தனர்.

தெவனகல தெகிவல அக்குரணை மகியங்கனை எல்லா வழக்குகளையும் அச்சுருத்திவாபாஸ் வாங்க வைக்கும் கொடுமை இலங்கையில் அரங்கேறுகிறது ஜம்மியத்துல் உலமா துணைபோகிறது ?????
இல்லாவிட்டால் சட்ட விரோத ஹலால் முத்திரை வழக்கு அவர்கள் மீது போடப்படும் என்ற அச்சுறுத்தலா ?
முஸ்லிம்கள் மத்தியில் இந்த கேள்விகள் எழாமல் இல்லை இவற்றுக்கு பதில் சொல்லுங்கள் அதேநேரம் பலசெனாக்கலுக்கு எதிராக புத்தி ஜீவிகள் வழக்கு போடா உள்ளார்கள் அதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை குழப்பிவிடாதீர்கள்


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

* இலங்கை முஸ்லிம் சமூகத்தை கோமாளிகளாக ஆக்க முனையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முல்லா றிஸ்வியும்.


இலங்கை முஸ்லிம் சமூகத்தை கோமாளிகளாக ஆக்க முனையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முல்லா றிஸ்வியும்.



தம்புள்ளை பள்ளிவாயிலை முற்றுகையிற்று உடைக்க முற்பட்ட பொழுது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் முப்தி றிஸ்வி தனது வெற்று வீராப்பு வார்தைகளாள் முழங்கியதை இலங்கை முஸ்லிம்கள் மறந்திறுக்கமாட்டார்கள். 

தெஹிவளை பள்ளி வாசளில் இவர் ஆற்றிய உரை (ஹலாலை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுக்மாட்டோம் ஹலாலை விட்டுக்கொடுத்தால் நாளை தம்புள்ளை பள்ளியை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்) என்று கூறிய முப்தி பின்னர் முழு முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து நடு ரோட்டில் விட்டுவிட்டு சம்மான் கோட்டை பள்ளியின் மிம்பரில் இருந்து கண்ணீர்வடித்து முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏமாற்றி அரங்கேற்றிய நாடகத்தினையும் இந்த நாட்டின் மக்கள் மறந்திறுக்க முடியாது.

தனது ஹலாலை விற்பனை செய்யும் வியாபாரத்திற்காக முழங்கிய உலமாவின் தலைவர் றிஸ்வி அன்மையில் மீண்டும் ஒரு ஹலால் கம்பனியை தமது வருமானத்திற்காக உருவாக்கி இருக்கின்றார். இந்த நாட்;டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சாரோடு இனைந்து எமது நாட்டின் பொருட்களை சர்வதேச சந்தையில் ஹலாலாக விற்பனை செய்ய பல்தேசி கம்பனிகளுக்கு எமது முஸ்லிம்களை பகடைக்காய்கலாக பாவித்திருக்கிறார். .

மறுபுறம் இந்த நாட்டில் அடுக்கடுக்காய் பள்ளிகள்; உடைக்கப்பட்;டுக்;கொண்டுடிருக்கிறது. நாளுக்கு நாள் முஸ்லிம சமூகத்துக்கு எதிரான பௌத்த இனவாதம் வளர்ச்சி கண்டாலும் எமது முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் துற்போது செல்லாக்காசாகியிருக்கின்ற ஜம்மியதுல் உலமா ஒன்றும் செய்ய முன்வராது என்பதினை இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முல்லா றிஸ்வியும் உலமாக்கள் சபையும் ஒன்றும் செய்யாவிட்டாழும் பரவாயில்லை முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் ஈனச்செயலை செய்யாமல் இருந்தாலே போதும். இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக அக்குரனையில் இருக்கின்ற எமது சில சகோதரர்கள் ஆயுதம் தாங்கி போராட முன் வரவில்லை. அவர்கள் இந்த அதி உயர் அதிகார முடைய நீதி மன்றத்தில் நீதி கேட்கச் சென்றார்கள். இவர்களது இந்த முயற்சியை முடக்குவதற்கு சமரசம் என்கின்ற பெயரில் காட்டிக்கொடுக்கும் முழு முஸ்லிம் சமூகத்தையும் இழிவு படுத்தும் ஈனச்செயலை துரோகத்தை இந்த யுஊதுரு செய்திருக்கின்றது. இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம் பெறாது என்றும் இவர்களுடைய இந்த சமரச உடன் படிக்கையாகிய தூரோக உடன்படிக்கையில் இடம் பெற்று 24 மனினேரம் செல்லு முன்னர் மற்று மொறு பள்ளிவாசல் ஹெம்மாத்தகமையில் பௌத்தத இனவாத அடிப்படை வாதிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இந்த உலமா சபை என்ன சொல்லப்போகிறது. மீண்டும் நீதி கேட்கத் தயாராகாமல்; சமரச உடன் படிக்கையா ?

நாம் இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எமது சமூகத்தை தூண்ட முட்படவில்லை. சட்டத்தை நாம் கையில் எடுக்க முட்படவும் இல்லை. அடிப்படை வாதத்தை அடிப்படை வாதத்தால் அடக்கவும் சொல்வவில்லை. நாட்டின் இறைமைக்கு கட்டுப்பட்டு நீதி கேட்கச் சென்ற சகோதர்ளின் உணர்வுகளை அடக்கி பனியவைத்து பாதுப்பபுச்செயலாளர் கோட்டாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய முல்லா றிஸ்வியையும் அவரது கூலிப்படைகளையும் இந்த நாட்டின் அறிவுள்ள முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மன்னிகாது.

முஸ்லிம் சமூகம் சட்ட நடவடிக்கை எடுக்க நீதி மன்றத்தை நாடும் போதெல்லாம் எமது உணர்வுளையும் உரிமைகளையும் கூட மதிக்காது காசுக்காகவும் பதவிகளுக்காகவும் பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட சம்பவங்கள் எமது சமூகத்திற்கு புதிதல்ல.
2001 ஆண்டு பதுளை சரஸ்வதி வித்யாலயத்தில் முஸ்லிம் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பர்தா அனிவதை தடுத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை பாயிஸ் முஸ்தபா எனும் சட்டத்தரணி தனது மகனின் அரசியல் பிரவேசத்திற்காக ஆறுமுகம் தொண்டமானிடம் விளை போகி முழு முஸ்லிம் சமூகத்தின் உரிமையையும் இல்லாமல் ஆக்கச் செய்வதற்காக வழக்கினை வாபஸ் பெற்ற சம்பவத்தையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

அன்மையில் முஸ்லிம் கவுன்சில்;இ ஒரு சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் என்கின்ற சாராரும் சகோதரர் அஷ;ரப் அவர்களது இல்லத்தில்; ஒன்று கூடினார்கள். இதில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெறும் பௌத்த அடிப்படை வாதத்திற்கெதிராக சட்டநடிவடிக்கை எடுப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டம் தான் உலக வரலாற்றில சட்ட நடவடிக்ககை எடுப்பதற்கான கலந்தாலோசனை செய்யப்பட்ட கூட்டங்களில்;; முதன் முதல் இவ்வளவு விளம்பரப்படுத்தப்பட்ட கூட்டம். இக் கூட்டத்திற்கு பிறகும் அதன் முடிவுகளையும் அறிக்கைகளையும் அதில் கலந்து கொண்டவர்களையும் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட கூட்டம். இதில் இருந்தே இதன் நம்பகத்தன்மை எமக்கு தெளிவாகின்றது.

இலங்கையின் முன்னனி சட்டத்தரணிகள் முஸ்லிமகளாக இருக்கின்றார்கள். ஏராளமான ஜனாதிபதி சட்;டத்தரணிகள் காணப்படுகின்றார்கள.; ஏன் இந்த நாட்டில் நீதி அமைச்சர் கூட ஓரு முஸ்லிமாக இருக்கின்றார். சட்டமியற்றும் சட்டசபையில்; 20 அதிகாமான முஸ்லிம் சமூகத்தை விலை பேசி ஏலம் போடும் துரோகிகள் எனும் உறுப்பினர்களும் அமைச்சாகளும் இருக்கவே செய்கின்றார்கள.;

இருந்தும் என்ன பயன்...................?
கேட்பதற்கு நாதியில்லாத சமூகம் நாம்.
யாருமே எமக்கு உதவிக்கு வரத்தயாராகாத சமூம் நாம்.

தனது சமூத்தையே சுயநலன்களுக்காக காட்டிக்கொடுத்து வயிறு பிளைக்கும் தூரோகிகள் எம்மத்தியில் இருக்கும் வரை நாம் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

* கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்


முஸ்லிம்களுக்கு ஏதிராக புலிகளின் குற்றங்களுக்கு ஜெனிவாவில் பிரேரனை கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் அஸ்வர்.

கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்


விடுதலைப்புலிகளுக்கு நாம் பயங்கரவாதிகள் / Terrorist என்றெல்லாம் பல வார்தைதைப்பிரயோகங்களை பாவிக்கின்றோம். ஏன் என்றால் அவர்கள் செய்த அநியாயங்களுக்கும் அக்கிரமங்களும் சட்டரீதியான அங்கிகாரம் இல்லை.

அவர்களுடைய உரிமைப்போராட்டம் தவறான வழிமுறையும் கூட என்பதால் தான். அதே போல் ஒரு நாட்டின் இரானுவத்திற்கு நாம் பயங்கரவாதிகள் என்றோ Terrorist என்றோ சொல்வதில்லை.

ஆனால் ஒரு நாட்டின் இராணுவம் இவ்வாறான கீழ்தரமான அநியாயங்களையும் மணிதப்படுகொலைகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொண்றொழித்தால். அதற்கு அந்த நாடுதான் பொறுப்புக் கூற வேண்டும்.

அந்த நாட்டின் இராணுவம் நாட்டின் சட்டதிட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டது. இவர்கள் யுத்த விதி முறைகளை மீறி அப்பாவி பொதுமக்களை கொண்றொழித்ததை அந்த நாடு மூடி மறைக்க முற்பட்டால் அந்த நாட்டில் சட்டம் நடை முறையில் இல்லை அந்த நாட்டில் நீதி நிலை நாட்டப்படவில்லை எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாரை நாடுவது.?

நாளுக்கு நாள் மக்கள் காணாமல் போகிறார்கள் கடத்தப்படுகிறார்கள் கொலை செய்யப்படுகிறார்கள் வெள்ளை வேண் கலாச்சாரம் நிலவுகிறது. பய அச்ச சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதிலலை இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பிடம் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நியாயம் கேட்பது ஏந்த வகையில் அது பிழையாகும்.

1980 களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட அப்போது இந்த நாட்டில் இருந்த அரசாங்கத்திற்கு ஏதிராக ஜெனிவாவிற்குசென்றதையும் இந்த நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பயங்கரவாதிகளால் 1990ல் வடபகுதியில் இரவோடு இரவாக விரட்டப்பட்ட அப்பாவி முஸ்லிகளை 24 வருடங்கள் அவர்களை மீளக்குடியமர்த்தாமல் அஹதி முகாம்களில் வைத்திருந்த கொடுமைக்காக 1994ல் இருந்து ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்த்திற்கு எதிராக ஜெனிவாவில் ஆணைக்குழு அமைக்க இந்த அஸ்வர் குறல் கொடுப்பாறா?

கிழக்கில் முஸ்லிம்களை பள்ளிவாயில்களில் தொழுது கொண்டு இருக்கும் போது படுகொலை செய்த கருணா அம்மானுக்கும், பிள்ளையானுக்கும் இலங்கையில் நீதித்துறையால் நடவடிக்கை ஏடுக்க விசாரனை கமிசன் அமைக்குமாறு அஸ்வர் பரிந்துறை செய்வாரா?

அடுக்கடுக்காய் பள்ளிகள் உடைக்கப்படுவதற்கு எதிராக இந்த நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதையிட்டு சர்வேதச விசாரனை கமிசன் அமைக்க அஸ்வர் ஜெனிவா செல்வாறா?

கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்

                                                     

                                                        நான் பார்க்கும் உலகம்
                                                      ★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
                                                                            www.fb.com/NanaparkumUlagem

* நாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்





மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில்மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்களுக்கு விற்கப்படும் துணிமணிகளில், இனிப்புப் பண்டங்களில் மலட்டுத்தன்மையை உண்டாக்கக் கூடிய இரசாயணப் பொருள் கலந்திருப்பதாக பிரச்சாரம் செய்யும் இவர்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு முன்னால் உணர்வுகளைத் தூண்டும் கோஷங்களைக் கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரு சமூகம் பொறுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தான். சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும், விகாரைகளிலும் பரப்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் இன்று பௌத்த அறநெறிப் பாடசாலைகள் வரை வியாபிக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

அறநெறிப் பாடசாலைகளில் இன்று இனவெறி போதிக்கப்படுகிறது. நல்லறத்தையும், நன்நடத்தையையும் போதிக்க வேண்டிய மடலாயங்கள், சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் போதிக்க வேண்டிய அறநெறிப் பாடசாலைகள் இன்று இனத்துவேசத்தையும், இனக்குரோதத்தையும் போதிக்கும் இனவெறிப்பாடசாலைகளாகவும், மதவெறிப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அறத்திற்குப் பதிலாக அங்கே மறம் போதிக்கப்படுகிறது. ஒரு இனம் இன்னொரு இனத்தை எப்படியெல்லாம் வம்புக்கு இழுக்க வேண்டும், எந்த விதமான வார்த்தைப் பிரயோகங்களால், செயல்களால் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கப்படுகிறது. பிஞ்சு வயதிலேயே ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்களுக்கு விற்கப்படும் துணிமணிகளில், இனிப்புப் பண்டங்களில் மலட்டுத்தன்மையை உண்டாக்கக் கூடிய இரசாயனப் பொருள் கலந்திருப்பதாக பிரச்சாரம் செய்யும் இவர்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு முன்னால் உணர்வுகளைத் தூண்டும் கோஷங்களைக் கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஜெர்மனியில் யூதர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிப்பதற்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கைகளில்தான் நாஜிகள் ஈடுபட்டிருந்தார்கள். இப்படியான பிரச்சாரங்கள் தான் செய்யப்பட்டன. முதலாவதாக யூதர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின. பின்னர் யூதர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக துவங்கின. இதற்காக ஜெர்மன் பூராவும் இரகசியமான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. ஜெர்மனியில் குடியேறியிருந்த வெளிநாட்டினரின் வாசகால அனுமதிகள் திடீரென ரத்துச் செய்யப்பட்டு, போலந்து- ஜெர்மன் கலப்பின யூதர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

இவ்வாறு ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்ட் Hershel Grynp என்ற யூதரால் பாரிஸில் வைத்து Ernst vom Rath என்ற ஜெர்மனியர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாஜிகளுக்கு இது போதாதா? நீறு பூத்த நெருப்பாக இருந்த யூதர்களுக்கு எதிரான இனவாதத் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. 1938 நவம்பர் 9- 10 திகதி இரவுகளில் ஜெர்மன் பூராவுமுள்ள யூதர்களுக்குச் சொந்தமான தேவாலயங்கள், வியாபார நிலையங்கள், நிறுவனங்கள், பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள் ஆகிய அனைத்து கட்டடங்களினதும் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. இது Crystal Night என அழைக்கப்படுகிறது. இதன் போது யூதர்களுக்குச் சொந்தமான 7000 த்திற்கும் அதிகமான கடடிடங்கள் நாஜிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.

நாஜி போலிசார் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோடு, நாஜிகளின் பிரச்சார வலையமைப்பின் ஊடாக இவை நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வேடிக்கையாகவே இருந்தது. முதலாவது உலக யுத்தத்தின்போது ஜர்மனி அடைந்த படுதோல்விக்குக் காரணம் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்கள் தான் என்பது. கண்ணாடிகள் உடைக்கும் இரவில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, அவர்கள் ஜெர்மன் மக்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

அவர்கள் திட்டமிடப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். சிறிய பெட்டியொன்றில் எடுத்துச் செல்லக் கூடிய அளவிற்கே அவர்களது உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. நாஜி அரசாங்கமும், யூதர் அல்லாதவர்களும் அவர்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் ஹிட்லரின் ஊதுகுழலான கொபெல்ஸ், மேற்படி நடவடிக்கைகள் தமது கட்சியால் மேற்கொள்ளப்பட்டவையல்லவென்றும், எப்படியிருந்தாலும் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையை தடுக்க முடியாதெனவும் கூறினார்.

வெளிநாட்டுப்பிரஜைகள் மீதோ, யூதர்கள் அல்லாதவர்கள் மீதே, அவர்களது சொத்துக்களுக்கோ எவ்வித சேதமும் விளைவிக்கக் கூடாதென நாஜிப் படைகள் அறிவுறுத்தப்படுத்தப்பட்டிருந்தன. பெருந்தொகையான யூதர்கள் கைது செய்யப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான யூதர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மேற்படி சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உணர்வுகளைத் தூண்டக் கூடிய வாசகங்களால் கோபமுற்ற ஒரு யூதர் செய்த கொலை ஜெர்மனியில் வாழ்ந்த ஒட்டு மொத்த யூதர்களுக்குமே பேரழிவைக் கொண்டு தந்தது. புகைந்து கொண்டிருந்த இனவாதத் தீ ஒரு கொலையோடு கொழுந்து விட்டெரியத் துவங்கியது.

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இப்படியான ஒரு பேரழிவை ஏற்படுத்துவதற்காகத்தான் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகள் மும்முரமாக செயற்பட்டு வருவது தெரிகிறது. பல்வேறு இனவாதக் கோஷங்களை முன்வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி இன்னொரு இனவாத அழிவிற்குள் நாட்டை இழுத்துச் செல்ல இந்த அமைப்புகள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.

சமீபத்தில் மாத்தறை திக்குவலையில் மூன்று முஸ்லிம் யுவதிகள் தமது கலாச்சார உடையில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது இனவாதக் காடையர்கள் அவர்களது ஆடைகளை இழுத்து வம்புக்கிழுத்தனர். அதனை சுற்றி நின்றோர் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கும்போது என்ற பாரதியின் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.இந்த நிலையிலும் முஸ்லிம்கள் பொறுமை காத்தது நாட்டின் நலன் கருதியாகத்தான் இருக்க வேண்டும். அநீதிகளும் அக்கிரமங்களும் எங்கு நடந்தாலும் அதனைத் தட்டிக் கேட்கும் நாள் வரவேண்டும்.

அநீதிக்கெதிராக மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா அடக்குமுறைகளும், எல்லா ஒடுக்குமுறைகளும் முடிவு கட்டப்படும். நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. உழைக்கும் வர்க்கம் சாப்பாட்டிற்கே ததிக்கி நத்தோம் தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. பச்சிளம் பாலகிகள் கூட காமப் பேய்களினால் மட்டுமல்ல காவிகளினாலும் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் வக்கிரங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை அவர்களின் குற்றமா? அல்லது இந்த முறையின் குற்றமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கத்திய கலாச்சார சீரழிவிற்குள் சிக்கி இளைய சமுதாயம் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம். உழைப்பாளிக்கு ஒழுங்கான ஊதியம் கிடைப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடையாத ஆளும் வர்க்கம் தனது ஆசீர்வாதத்தோடு தூண்டிவிட்ட இனவாதம் இன்று தனது கட்டுப்பாட்டையும் மீறி சென்று கொண்டிருப்பதை தடுக்க முடியாத தனது கையாலாகாத்தனத்தை மேடையேற்றிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

நவதாராளமய முதலாளித்துவத்தின் எஜமானியத்தோடு ஆட்சிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஸ அரசாங்கம் தான் தூண்டிவிட்ட இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிதற்றிக் கொண்டிருப்பது ஆசியாவின் ஆச்சரியம் தான்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem