Saturday, February 8, 2014

* முஸ்லிம்களை அழிப்பதற்காகவே தீவிரவாதிகள் என்ற நாமம்...!





மாவனெல்ல பௌத்த தேரர்கள் சம்மேளனம் போன்றவர்கள் முஸ்லிம் மக்களுக்கு காட்டிய அரவனைப்பு இருக்கும் வரை இந்த நாட்டில் இனவாதம் விரவில் தூக்கி எறியப்படும் என்பதில் ஐயமில்லை.

இனவாதமும், மதவாதமும் எந்வொரு நாட்டில் தோற்றம் பெறுகின்றதோ அந்த நாடு எப்போதும் மீட்சி பெற்ற வரலாறுகள் இல்லை. ஆனால் இலங்கையில் தற்போது ஒரு சில சதிகாரர்களின் தீவிரவாத சூழ்ச்சிகளும், காழ்ப்புணர்ச்சிகளும் அமைதியை விரும்பும் மக்களிடத்தில் குழப்பத்தை தோற்றுவிப்பதற்கான முனைப்புகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.

மேற்படி சதி முயற்சிகள் பல கோணங்களிலும் மக்கள் அறியாத வகையில் மிகவும் சூட்சுமமான முறையில் ஒரு சில அரசியல் வாதிகளின் செல்வாக்கு மற்றும் ஆசீர் வாதங்களுடன் மேற் கொள்ளப்படுவதையிட்டு மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்ற காரணத்தினை அடிப்படையாக வைத்து அவர்களை அழித்து ஒழிப்பதற்காகவே தீவிரவாதம் என்ற நாமஞ் அவர்கள் மீது ச10ட்டப்பட்டு பழிவாங்கள்கள் தற்போது இலங்கையில் பகிரங்கமாகவே இடம்பெற்று வருகின்றது.

இதற்காக ஒரு சமயத்தின் சமய விழுமியங்களான ஹலால், ஹிஜாப் ஆகியவற்றிலும் வியாபாரஞ் செய்ய முடியாத நிலை. சமயக் கல்வியைத் தொடர முடியாது நிலை, பள்ளிவாசல்களில் இறைவனை வணங்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தல் போன்றவற்றில் அடாவடித் தனம் செய்வதுடன் இவற்றையெல்லாம் மீறி முழு முஸ்லிம்களின் மீதும் தீவிரவாதப்பட்டம் சுமத்தி அப்பாவி பெரும்பான்மை மக்களை முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை தோற்றுவிக்கும் ஒரு கபடத்தனமான திட்டங்களையே இனவாதிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு இனத்தின் விடிவிற்காய் இன்னொரு இனத்தினை நசுக்கி வெற்றி கொள்ள முடியாது என்பதும் அதற்காக கிடைத்த பலன்களை வடக்கிழக்கில் இடம்பெற்ற கடந்தகால யுத்தம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த படத்தினை கற்றுக் கொடுத்துள்ளதை நாம் கண்டு கொண்டோம்.

வடகிழக்கில் விடுதலைப் புலிகள் தமது தமிழ் சமுகத்தின் விடிவிற்காய் ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த முஸ்லிம் சமகத்தினை அவர்களின் பூர்வீகங்களில் இருந்து ஈவிரக்கமற்ற வகையில் வெளியேற்றி விட்டு தமது தாயகம் என்ற பிரகடத்தின் மூலம் மூன்று தஸாப்த காலமாக வெற்றி வாகை சூடலாம் என்று போராடிய புலிகளின் கனவுகள் இன்று ஒரு நொடிப் பொழுதில் தவிடுபொடியாகி அவர்கள் தோல்வி அடைந்த வரலாறு இன்று தமிழ் மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத ஏக்கத்தில் இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு உலக நாடுகளையே திகைக்க வைத்தாக இருந்தது மட்டுமல்லாது முழுத் தமிழ் சமுகமுமே அப்போராட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கையுடன் இருந்தனர் என்றாலும் அவர்களின் துர்அதிஸ்ட்டவசம் இன்று அந்த நம்பிக்கைகள் தலை கீழாக மாறிவிட்டது.

மேற்படி நிலைமைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் விடுதலைப் புலிகள் விட்ட மாபெரும் பிழை தமது போராட்டத்திற்காக அங்கு வாழ்ந்த அப்பாவி முஸ்லிம்களை காலவரையறை இன்றி வெளியேற்றியமை அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அரசன் அன்றறுப்பான தெய்வம் நின்றக்கும் என்பார்கள் இதற்கமைவாக வெளியேற்றப்பட்ட மக்கள் விட்ட கண்ணீரும், கவலையும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாக விடுதலைப்புலிகள் செய்த தவறுக்கு அவர்கள் அழிக்கப்பட்டமையை காணலாம்.

தமிழ் மக்களுக்கு அவர்கள் பிறந்த வடகிழக்கு பகுதி எப்படியொரு தாயகமோ அதேமாதிரி வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கும் வடகிழக்கு தாயகம்தான் வடக்கில் பிறந்தவனானாலும் சரி கிழக்கில் பிறந்தவனானாலும் சரி அவரவர் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அப்பகுதியையே குறிப்பிடுவர் மாறாக அவர்களை துரத்திவிட்டால் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் எழுதப்பட்ட வசனம் மாறுவதில்லை.

இவ்வாறிருக்க தமது வெற்றிக்காக ஒரு இனத்தை இல்லாதொழிக்கச் செய்து தமது வெற்றியை அடைந்து கொள்ளலாம் என்பதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல் இன்று இலங்கையில் பெரும்பான்மை இனத்தின் ஒரு சில இனவாதக் கும்பல்கள் முஸ்லிம்களை அடியோடு அழித்தொழிக்க தற்போது முளை விட்டுள்ள விடயம் விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்களை விரட்டியதற்காக கிடைத்த சன்மானத்தை விட அதிகமானதொரு சன்மானத்தை அடையப் போரார்கள் என்ற நல்ல சமிக்கையே இன்று தோற்றம் பெற்றுள்ளது.

இனவாதிகள் தற்போது மேற் கொண்டு வரும் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் சாபக் கேட்டையே தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

இனவாதிகளின் எதிர்ப்பும், அடாவடித்தனமும் இன்று முஸ்லிம்கள் மீது மிக கோரமான முறையில் குறிப்பாக ஒரு சமயத்தின் மீது மேற் கொள்ளப்படுவது இலங்கையின் அமைதிக்கு எதிரானதொரு அபாய நிலைமையாகும்.

வெள்ளம் வருமுன் அனையைக் கட்டவேண்டும் என்பதுபோல் இலங்கை ஆபத்தில் விழ முன் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் அடாவடித் தனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டும் மாறாக மேற்படிச் செயற்பாடுகள் தொடருமானால் மார்ச் மாதம் ஜெனீவா மாநாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விடயங்கள் பிரதிபளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.

ஏற்கெனவே இலங்கை மீது உலக நாடுகள் குறிப்பாக வல்லரசுகள் யுத்தக் குற்ற விடயங்களில் இலங்கையை சிக்க வைப்பதற்கான அபார முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் யானை தன் கையால் தனக்கு மண்ணை வாருவதுபோல் தமது பெரும்பான்மை சமுகத்தினாலேயே மேலும் பல மனித உரிமை மீறல்களை செய்வதாக வழுச் சேர்க்கும் விடயங்களாகவே சமாதானத்தை விரும்பும் சகல மக்களாலும் தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையில் இன்று இனவாதக் கும்பல்களின் தீவிரவாதம் வெகுவாக பரவி வருகின்றமைக்கு பின்வரும் விடயங்களில் சிலவற்றைக் கூறலாம் அதாவது சிறுபான்மை இனத்தை அழிப்பதற்காக அவர்களின் சமயங்களை கொச்சைப்படுத்துவதும் அரச அதிகாரிகளை காவி உடைகளை அணிந்து கொண்டு மிரட்டுவது, நாட்டின் பிரதமரை இம்சிப்பது அவரை பதவி விலகச் சொல்வது நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிருவாகத்துறை விடயங்களில் தான்றோன்றித் தனமாக மூக்கை நீட்டுவது மட்டுமல்லாது உண்மையான பௌத்த தர்மத்தையே கொச்சைப் படுத்துவதெல்லாம் சமயப் போதகர்களுக்குரிய நற்பண்புகள் அல்ல.

இலங்கையின் கடந்த கால வரலாற்றில் இனங்களுக்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றுள்ளது போன்ற நிலைமைகள் காணப்படவில்லை எனினும் 1983 மற்றும் அதன் பின்பான காலங்களில் அவ்வப்போது தோன்றிய சிறு சிறு இனவாதிகளின் செயற்பாடுகளால் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அப்போதிருந்த அரச தலைவர்களும், ஆட்சியாளர்களும் நேரடியாக தலையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமுகங்களை ஒற்றமைப்படுத்திய காலங்களும் இருந்தன.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் இனவாதிகளால் உடல் மற்றும் உள ரீதியாக சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

இன்று இலங்கையில் ஏற்பட்டுள் மேற்படி நிலைமைகள் பூதாகாரமாக ஆகுவதற்கு பாரியதொரு அரசியல் பின்புலம் இல்லாமல் செயற்பட முடியாது என்பது சகல மக்கள் மத்தியிலும் தோன்றியுள்ள சந்தேகங்கள் மட்டுமல்லாது அதன் பின்புலங்களைக் கூட மக்கள் அறியக் கூடியவா'களாக உள்ளனர்.

ஒரு சில குழுக்களின் பகிரங்கமானதும் சட்ட ரீதியற்ற செயற்பாடுகளும் மற்றவர்களை பாதிக்கும் போது அவை மனித உரிமை மீறல்களாகவே அமைகின்றது. ஆனால் இன்று அவர்கள் செய்து விட்டு சுதந்திரமாக உலா வருவதானது இலங்கையின் ஜனநாயகம் எங்கே போகின்றது என்பதனைப் புரிந்து கொள்ளலாம் என கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு சில தேரர்கள் பௌத்த தர்மத்தை கற்றுவிட்டு அதற்கு மாற்றமாகச் செய்யும் பாவச் செயல்கள் முழு பௌத்தர்களையுமே பாதிக்கின்றது இருந்தும் புத்த பெருமானின் அடியொட்டிய பல்லாயிரக் கணக்கான பௌத்த தேரர்கள் மற்றய சிறுபான்மைச் சமகத்துடன் மிகவும் அந்யோன்யமாக விட்டுக் கொடுப்புக்களுடன் அவர்களின் மதங்களையும் அவற்றின் கண்ணியத்தையும் மதித்தவர்களாக செயற்படுவது சகலராலும் வரவேற்கத் தக்க மகிழ்ச்சியான விடயமாகும்.

இதற்கு நல்ல உதாரணம் தெவனகல சம்வங்கள் பௌத்த தர்மம் மற்றய சமயங்களை இம்சிக்கச் சொல்ல வில்லை மாறாக மதிக்கவும், அவர்களுக்குரிய சகல மரியாதையையும் வழங்கும்படியே போதிக்கிக்கின்றது.

இந்த அடிப்படையில் மாவனல்ல தெவனகலவில் முஸ்லிம்களை எழுப்பச் சொல்லி ஒரு சில இனவாத பௌத்த தேரர்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு செருப்படி கொடுத்ததுபோல் அப்பகுதி மரியாதைக்குரிய பௌத்த தேரர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்டுள்ளமை சகல முஸ்லிம்களையும் மெய் சிலிர்க்க வைத்தள்ளதுடன் பாராட்டுக்குரிய விடயமுமாகும்.

மாவனெல்லை, தெவனகலவில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என மானனெல்லை பௌத்த தேரர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளமை முஸ்லிம்களின் மீது பால் வார்த்ததுபோல் முழு முஸ்லிம் சமுகமும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக அவர்களை மதிக்கின்றவர்களாக ஆகிவிட்டனர்.

காலா காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள முஸ்லிம் சமுகங்களின் ஒற்றுமையை வெளிச்சக்திகளே வந்து பிளவுகளை ஏற்படுத்தி ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்த முனைவதாகவும் அதற்கு இனிமேல் இடமில்லை எனவும் தேரர்கள் தெரிவித்துள்ளமை சமூக ஒற்றுமைக்கு மேலும் வழுவூட்டும் நல்ல செயற்பாடுகளாகும்.

தெவனகல முஸ்லிம்கள் விடயம் சம்பந்தமான கலந்துரையாடலில் தெவனகல சிங்கள- முஸ்லிம் நட்புறவு மன்றத்தின் தலைவர் டாக்டர் கமகே தெவனகல பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் மேற் கொண்ட இனவாதப் பிரச்சாரங்களின் தொகுப்பை வெளியிட்டார்.

கடந்த 2001 இல் ஏற்பட்ட இனக் கலவரம் போன்றதொன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதுடன் இரண்டு இனத்தவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாகவும் பிரச்சினைகள் இருப்பின் பேசித் தீர்ப்பதற்கும் சட்ட ரீதியாக அணுகுவதுமே சிறந்தது என கமகே தெரிவித்துள்ளார்.

மாவனல்ல தொடந்தல விகாராதிபதி தெவனகலவில் இரண்டு இனங்கள் வாழும்போது முஸ்லிம்களை மாத்திரம் விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சிங்கள முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முற்படும் வெளிச் சக்திகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் எமது பிரச்சினையில் வெளிச் சக்திகள் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தேரர் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டு செல்ல வேண்டும் ஏனைய மதங்களை மதித்து வாழ்வதுதான் பௌத்த தர்மம் என்றார்.

மேற்படிக் கலந்துரையாடலில் மாவனெல்ல கெரமினிய சுதேச வைத்தியரான தேரர் முஸ்லிம்களை இங்கிருந்து விரட்டியடிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், வெளிச் சக்திகள் இப்படியாதொரு பிரச்சினையைக் கிளப்பி இன ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்றார்.

ஒரு ஆபத்தான நிலையை எதிர் கொண்ட தெவனகல முஸ்லிம்களுக்கு ஒரு இறுக்கமானதும் இனவாதிகளுக்கு காட்டமானதுமான செய்தியை தெவனகல தேரர்கள் சம்மேளனம் வழங்கியமை அவர்கள் சிறுபான்மை மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், உண்மையான பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதும் நிருபனமானது.

தேரர்கள் முஸ்லிம்களுக்கு தகுந்த சந்தர்ப்பத்தில் கைகொடுத்ததானது இவ்விரு சமுகங்களும் எந்தளவு ஒற்றமையாகவும், நம்பகத் தன்மையுடனும் வாழ்ந்தார்கள் என்பதனை இனியாவது இனவாதிகள் புரிந்து கொண்டு உண்மையான பௌத்த தர்ம முறைப்படி மற்றய சமுகத்தை மதித்து புத் பெருமான் காட்டிய நல்வழியில் வாழவேண்டும் என இனவாதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அன்பாய் வேண்டுகின்றனர்

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment