Saturday, July 20, 2013

* முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?


முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?

lமுஸ்லிம் சமுகத்துக்கு எதிராக கடும்போக்கு இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் தொடர் நிகழ்வாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை கடந்த பத்து நாட்களுக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்து வதாகவுள்ளன.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை, மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல், தெமட்டகொடையில் மாடு அறுக்கும் மடுவத்துக்குள் இறைச்சி ஏற்றும் லொறி எரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள், மானவல்லை தெவனகல பிரதேசத்தில் முஸ்லிம்களை வெளியேற்றக்கோரும் கூட்டம் என்பன கடந்த பத்து நாட்களுக்குள் நடந்த முக்கிய சம்பவங்களாகும்.

மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தின்போது பள்ளிவாசலில் கண்ணாடிகள் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தாக்கப்பட்டது மட்டுமன்றி இஸ்லாம் வெறுக்கின்ற பன்றி இறைச்சியும் பள்ளிவாசலுக்குள் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோர் மத்தியிலும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கீழ்த் தரமான ஒரு செயலாகும்.

மகியங்கனை சம்பவம் நடக்கும்போது பள்ளிவாசல் அமைந்துள்ள வீதியில் மட்டும் மின்சாரம் சிறிது நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்துமுடிந்து சிறிதுநேரத்தில் மின்சாரம் சீர்செய்யப்பட்டுள்ளது. இதன்படி இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறானபோதும் இச்சம்பவம் நடந்தவுடன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஊவா மாகாண காணி அமைச்சர் அனுர விதானகமகே பள்ளிவாசலுக்குள் போடப்பட்டிருந்த அழுக்குகளை அகற்றி நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு பள்ளிவாசலில் அடுத்த தினம் ஜும்ஆ நடத்தவும் ஆதரவு வழங்கியிருந்தார். இதற்காக முஸ்லிம் சமுகம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றது. முஸ்லிம் கவுன்சில் இந்த விடயத்தில் தலையிட்டு ஜும்ஆ தொழுகை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 20 வருட காலமாக ஐவேளைத் தொழுகைக்கு பயன்படுத் தப்பட்ட இப்பள்ளிவாசல் பிரதேச ஆளும்கட்சி அரசியல் தலைமைத் துவத்தின் ஆசிர்வாதத்துடன் கடந்த மாகாணசபைத் தேர்தல் காலம் முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் திடீரென நோன்பு வந்ததும் இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறு பள்ளிவாசல்கள்மீது தாக்கு தல் நடத்தவோ எவரும் இதுவரை கைது செய்யப்பட்டோ விசாரணை செய்யப்பட்டதோ இல்லை. இந்த நிலைமையை இனியும் தொடர அனுமதித்தால் நாடு சட்டமும் நீதியும் அமுல்படுத்தப்படாத ஒரு நாடாக மாறிவிடும். பலம்வாய்ந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையுள்ள நமது நாட்டில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வது கஷ்டமான காரியமல்ல. முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் அமுல் நடத்தப்படுவதில்லையா என முஸ்லிம்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தெமட்டகொட இறைச்சி மடுவத்தில் 25 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதிமிகு லொறியினை காவி உடையுடையவர்கள் எனக் கூறப்படுவோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாடு அறுப்பதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்வதற்கு இடமளிப்பது எவ்வகையில் நியாயமாகும்.

மாவனல்லை தெவனகலையில் கடும்போக்கு அமைப்பொன்று நடத்திய கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அமைச்சர் அதாவுட செனவிரத்னவையும் மிக மோசமான முறையில் திட்டித் தீர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பேச்சுவார்த்தை மேசைகளில் பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சீர்குலைக்கும் வகையில் கூட்டங்களை நடத்திவிட்டு, பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது.

தொடரும் நிகழ்வுகள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் கடிதங்களை அனுப்பி விட்டு சும்மா இருந்து விடுவதாக சமுகத் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருப்பது போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் குறிப்பாக ஆளும் கட்சியிலிருப்போர் இச்சம்பவங்கள் குறித்து ஆழமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

அனுராதபுரம் தர்கா தாக்கப்பட்டது முதல் மகியங்கனை பள்ளி வாசல் தாக்கப்பட்டது வரை சுமார் 25 பள்ளிவாசல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் அறிக்கை யில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை சட்டமும் நீதியும் அமுல்படுத்தப் படாத ஒருநிலை உருவாகி வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் இருப்பு, எதிர் காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது.

தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள வேளையில் தம் பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக நாட்டில் நிதி நியாயத்தை மதிக்கும் சிறு பான்மையினர் பற்றி நல்லபிப்பிராயம் கொண்டுள்ள சக்திகளது ஆதரவினையும் பெற்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே இன்றைய சூழலில் சிறந்த தாக இருக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* புதையல் காக்கும் பூதங்க்கல் !!



புதையல் காக்கும் பூதங்க்கல் !!

முஸ்லிம் தலைமைகள் எங்கள் காவலர்கள் என்று ஏமாந்து விடவேண்டாம் !!

அது கள்வர்களின் கூட்டம் வாக்குகளை பேரம் பேசி கோடிகளில் கொள்ளையடித்து 

விட்டார்கள் !!காவலர் வேஷம் போடும் கபோதிகள் அவர்கள் சேர்த்த சொத்துகள் 

இனக்கலவரம் ஒன்று ஏற்படுமாயின் தீயிலே கருகி போகும் அதை பாதுகாப்பதுடன் 

தங்கள் கதிரைகளையும் பாதுகாக்க உரிமைகளை பேரம் பேசுகிறார்கள் !!

புதையல்களை பாதுகாக்கும் பூதங்க்கல் முரண்பட்ட அறிக்கைகள் மூலம் 

முஸ்லிம்களை குழப்பும் முஸ்லிம் காங்கிரஸ் !!பாராளுமன்றில் பள்ளிவாசல்கள் 

தாக்கப்படவில்லை என்று அறிக்கைவிடும் முஸ்லிம் அமைச்சர்கள் !!

அனுமதியற்ற ஹலால் சான்றிதழ் கொடுத்து முஸ்லிம்களை வம்பில் மாட்டிவிட்ட 

உலமாசபை நீதிமன்றம் வேண்டாம் விசாரணைகள் வேண்டாம் ஏற்றுமதிக்கு இலவசமாக

சான்றிதழ் தருகிறோம் எம்மீது கருணை காட்டுங்கள் என்று மன்றாடி கோத்தாவின் 

கருணை பார்வையில் ஊமையாகி விட்டார்கள் !!!

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன எமது சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள் சொத்துகள் 

தீகிரையாக்கப்பட்டன எங்கள் அவலக்குரல் அவர்கள் காதுகளுக்கு கேட்கவில்லை 

அதட்டலுக்கு அடிபணியும் அவலம் அரங்கேறுகிறது இந்த கொள்ளைக்காரர்களின் 

உறவினர்களும் பக்தர்களும் இவர்கள் குற்றத்தை மறைக்க களம் இறக்கப்பட்டு 

இணையத்தளங்களில் இவர்களுக்கு பூமாரி பொழிகிறார்கள் கூட்டிக்கொடுப்பும் 

காட்டிக்கொடுப்பும் குழி பரிப்பும் தொட்ர்கதையாகிப்போக எங்கள் கதறல் 

செவிடன் காது சங்காகியது !!!!

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* மகியங்கனை தாக்குதலும் மாட்டுத்தோலின் மர்மமும் !!



மகியங்கனை தாக்குதலும் மாட்டுத்தோலின் மர்மமும் !!

மகியங்கனை பள்ளிவாசலை ஒரு குழு திட்டமிட்டு தாக்கியது பின் பண்டியின் இறைச்சியையும் இரத்தத்தையும் மஸ்ஜித் உள்ளே கொட்டி முஸ்லிம்களை 

சீண்டியது எமது சமூகம் அமைதியாக எதிர்த்து ஒருவார்த்தை பேசாமல் நீதி அமைச்சை 

நாடினார்கள் வழமைபோல் எங்கள் காவலர்கள் சீறினார்கள் அறிக்கைகள் விட்டார்கள் 

பின் அமைதி அடைந்தார்கள் !!!இந்த சம்பவம் அவர்கள் எதர்பார்த்த பலனை அடையவில்லை அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை !!

அவர்கள் மேல் பட்ட கரையை அழிப்பதற்கும் இனக்கலவரத்தை இன்னுமொருவிதத்தில் 

பற்றவைக்க மேற்கொண்ட நாடகமே 

நேற்று மாலை ஹெம்மாதகம- கம்பளை பிரதான வீதியில் பலத்கமுவ என்ற கிராமத்தின் வீதியில் மாடு ஒன்றின் தோல் போடப்பட்டதாக தெரிவித்து பெரும் திரளானவர்கள் அந்த மாட்டு தோலை நடு வீதியில் போட்டு அந்த வீதியால் செல்லும் முஸ்லிம்களை இடைமறித்து மிக மோசமான முறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக தூஷித்து கொண்டு இருந்துள்ளனர் . அவர்கள் மத்தியில் பெளத்த தேரர்களும் இருந்துள்ளனர் . இது சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது . அந்த வழியாக நானும் இரவு 8:30 மணியளவில் சென்றேன் என்னிடமும் அவர்கள் கூச்சல் போட்டார்கள். ஆனால் மாலை வேலையில் அந்த வழியாக வந்த முஸ்லிம்களை மிக மோசமாக தூஷித்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக முச்சக்கர வண்டியில் வந்த புர்கா அணிந்த பெண்ணும் அவரின் கணவரும் இடைமரிக்கப் பட்டு அவர்களை மிகவும் மோசமான தூஷித்துள்ளனர். இரவு பலத்கமுவ விகாரையில் இருந்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் ஊர்வலம் ஒன்றும் சென்றுள்ளது.

10M.ரிஸ்னி முஹம்மட்: ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி மற்றும் அவர்களின் ஹட்டன் பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். !!

இந்த அவலம் தொடர்கதையாவதை அனுமதிக்க முடியாது ?

முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டம் 

நடாத்த வேண்டும் !!இன்னும் என்னசெய்யவேண்டும் உங்கள் கருத்துகளை 

பதியுங்கள் !!


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?


அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?

மகியங்கனைப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள துன்பியல் நிகழ்வானது ஒரு இனத்தின் மத உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதானகேயின் வேண்டுகோளையடுத்து பயத்தின் காரணமாக இன்று 19-07-2013 மகியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு மாகாண சபை அமைச்சரால் ஒரு பள்ளிவாசல் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்பது இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இச்செயற்பாட்டை வெறுமென கைகட்டி முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேடிக்கை பார்க்கப்போகின்றார்களா? 

முஸ்லிம் அமைச்சர்களால் இப்பள்ளிவாசலைத் திறக்க முடியாதா? இப்பள்ளிவாசலில் அச்சமின்றி இப்புனித ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட பாதுகாப்பு வழங்க முடியாதா? யாருக்காக நீங்கள் பதவி வகிக்கிறீர்கள்? உங்களது சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காகவா அல்லது மக்களின் பறிபோகும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா??

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை வீணே வம்புக்கு இழுக்கும் சமகால நடவடிவக்கைகள் போன்று முன்னொருபோதும் இந்நாட்டில் ஏற்பட்டதில்லை. முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளும் எதிர்ப்பு நடவடிக்கைளும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே உள்ளன. 

இந்நடவடிக்கைளை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இராஜதந்திர ரீதியில் தடுக்க ஏன் முன்வரக் கூடாது? உங்களை பாராளுமன்றதுக்கு அனுப்பி பட்டம் பதவிகளைப் பெறவைத்த மக்கள் வேதனைகளை வயிற்றில் சுமந்து கொண்டு வாழும்போது நீங்கள் வெறும் அறிக்கை விடும் மன்னர்களாக இருப்பதேன்..?

ஆளும் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் . நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் என்ன செய்யப் போகிறீர்கள்..??

அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா? அல்லது இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு தீர்வு காணப் போகிறீர்ளா? அல்லாஹ்காகவும் இந்த முஸ்லிம் சமூகத்தின எதிர்கால சந்திக்காகவுவும் மேற்கூறிய நபர்பளில் ஒருவராவது உங்களது ஒன்றுக்கும் உதவாத பதவியைத் துறப்பீர்களா..? அல்லது நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டின் அரசியல் சாசனத்தை மீறக் கூடிய, ஒரு இனத்தின் மத உரிமையை பறிக்கக் கூடிய திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இச்சமூகத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்..? எதைச் செய்யப் போகிறீர்கள்..?

தேசத்துக்கும் சர்வதேசத்தும் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் மதக் கடமைகளை எவ்வித அச்சமுமின்றி, எவ்வித இடையுறுகளுமின்றி மேற்கொள்ள குறைந்த பட்சம் எல்லோரும் ஒன்றினைந்தாவது தங்களது எதிர்ப்பைப் காட்ட முன்வருவீர்களா? மறுமையை அஞ்சுகள். மரணம் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள், கப்ரின் வேதனையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மரணிக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை என்பதை சற்று உணருங்கள் உங்களிடம் ஒப்படைக்கபட்டுள்ள அமானிதப் பதவியைக் கொண்டு இச்சமூகதுக்காக எதைச் செய்திருக்கிறீர்கள்.?

சமூகம் உரிமையை இழந்து மதக் கடமைளை நிறைவேற்ற முடியாது தவிக்கும் ஒரு காலத்தில் நீங்கள் உங்களுக்குள் அரசியல் தலைமைத்துவப் போட்டிகளுக்காக சமூகத்தை கறிவேப்பிலைகளாக மாற்றிக்கொண்டிருக்கீறீர்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும் அதை மறந்து விடாதீர்கள். பறிபோகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பீர்களா? காலமும் இந்த சமூகமும் காத்துக்கிடக்கிறது உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக....!


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

Wednesday, July 17, 2013

* அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!

உங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் நீங்கள் முட்டாள் தனமான முடிவுகளை திடீர் திடீரென்று எடுத்து அதை நடைமுறைப்படுத்தும்படி எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?

பாதுகாப்புச்செயலாளர், பொதுபலசென செயலாளர் கூப்பிடுவதற்கெல்லாம் ஓடோடிப்போய் கையை கட்டிக்கொண்டு அவர்கள் சொல்வதை அல்லது கட்டளையிடுவதை அப்படியே எங்களுக்கு கூறி அதன்படி நடக்கும்படி கூறுகிறீர்களே?? உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக படவில்லையா? இந்த உலமா சபை உங்கள் அமைப்பு இஸ்லாமிய அடிப்படையில் எத்தகு பெறுமதி வாய்ந்தது, கண்ணியமிக்கது என்பதை நீங்கள் உணரவில்லையா? மார்க்கத்தீர்ப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையிலும், நமது உயிரினிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபிகளாரின் போதனை, வழிகாட்டல்களின் அடிப்படையிலும் வழங்ககூடிய சக்திவாய்ந்த அமைப்பை அந்நிய ……மத்தியில் ஏன் இவ்வளவு கேவலமாக்குகிறீர்கள்? இந்த கண்ணியமிக்க சபைக்கு நீங்கள் தகுதியில்லை என்பதை (உங்கள் கோழைத்தனத்தாலும், ……………, அரசியல்தனத்தாலும்) பலதடவைகள் நிருபித்துவிட்டதால் அம்மேன்மைமிக்க சபையிலிருந்து நீங்கள் உடனே வெளியேறுங்கள்!! உங்களைவிட பன்மடங்கு மார்க்க அறிவும், உலகஅறிவும், தைரியமும், விவேகமும், தலைமைத்துவ ஆளுமையுமுள்ள பல உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், வெளியில் உங்கள் செயற்பாடுகளால் சலிப்படைந்தவர்களாக, ஆனால் ……………. மக்களிடம் உங்களை காட்டிக்கொடுக்க முடியாதவர்களாக உள்ளனர். எனவே இனியும் முட்டாள் அரசியல் செய்யாமல் ஒதுங்குங்கள்!!

இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை, இனியும் இல்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அதனாலேயா குனூத் ஓதவேண்டாம் என்று கூறுகிறீர்கள்? அல்லது அவர்கள் அவ்வாறு உங்களுக்கு ஏதும் (வெளியில் எதுவும் சொல்லவேண்டாம் என கூறி) உத்தரவாதம் தந்தார்களா? அப்படியாயின், அவர்களது ஏற்கனவே தரப்பட்ட எத்தனை உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டன? இவை ஒன்றும் உங்களுக்கு இதுவரை தெரியாதா? அல்லது அவர்கள் உங்களை பயமுறுத்தினார்களா? நீங்கள் பயந்துவிட்டீர்களா? அப்படியாயின் நீங்கள் விரும்பியபடி முடிவெடுக்கவோ, அவர்கள் முடிவெடுக்கவோ தற்போதுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளா??

நான், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: சிங்கள பௌத்தர்களுக்கு அஸ்கிரிய, மகாசங்க தேரர்கள் இருப்பதுபோல்தானே முஸ்லிம்களாகிய எங்களுக்கு உலமாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் எப்போதாவது இந்த பாதுகாப்புச்செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ அவர்களை இவர்கள் காலடிக்கு அடிக்கடி அழைத்து அறிவுரை வழங்கியிருப்பார்களா?? மாறாக இந்த செயலாளரும், ஜனாதிபதியும்தானே அந்த தேரர்கள் காலடிக்கு சென்று அவர்களை (அடிமைகள்போல்) காலைத்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று, அவர்களின் அறிவுரைகளை தங்கள் சட்டங்களாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வாறு “மதத்தை” கொண்ட அவர்களுக்கு அவ்வளவு கௌரவம் என்றால் “மார்க்கத்தை” கொண்ட எங்களுக்கு எவ்வளவு கண்ணியம் கிடைக்கவேண்டும்??

நான் நினைக்கிறேன், நீங்கள் எப்போது அவர்களுக்காக தெருவுக்கும், ஜெனிவாவுக்கும் ( …………..) சென்றீர்களோ அன்றே அவர்கள் உங்கள் இல்லை இந்த கண்ணியமிக்க உலமா சபையை வெறும் காற்பந்தாக இனங்கண்டுவிட்டார்கள். இதற்கு நீங்கள் நிச்சயம், பதில் சொல்லியாகவேண்டும்.

இது எனது குரல் அல்லது ஏக்கம் மட்டுமோ இல்லை, மாறாக அனைத்து, அல்லது மிகமிக அதிகமான முஸ்லிம்களின் குரலாகவும் ஏக்கமாகவுமே நான் கருதுகிறேன். இதை படிக்கும் சகோதர சகோதரிகள் தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* "" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ...... இன்ஷா அல்லாஹ் ""


"" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ......
இன்ஷா அல்லாஹ் "" 


முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத 
யுத்தம் சம்பந்தமாக கண்ணியமிக்க உலமா பெருமக்கள் .... அரசியல் தலைமைகள்
முஸ்லிம் தூதுவராலயங்கள் உடன் கதைத்தாலும் ஒரு வழுவல் அல்லது சரணாகதி போக்கு ஒன்றையே காணக் கூடியதாய் இருந்தது
அவர்களோ பெரும்பான்மை நாங்களோ சிறுபான்மை என்ற தாழ்வுச்சிக்க லே அவர்களிடமும் காணப்படுகின்றது 
பதூர் களத்தில் இந்த சரணாகதியை அல்லது பொறுமையை கடைப்பிடித்திருந்தால் நமது கெதி என்னவாகி இருக்கும் ...யோசியுங்கள் 
இஸ்லாம் எப்பொழுதுமே "" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ......
இன்ஷா அல்லாஹ் "" என்றுதான் களத்தில் இறங்கியுள்ளார்கள் ..... அதனால் வெற்றியும் பெற்றார்கள் ....ஒரு சம்பவத்தை சொல்கிறேன் 1945 யில் ஒரு மைல் தூரம் ஓட நாலு நிமிடங்கள் செல்லும் அதற்க்கு குறைய எந்த ஜாம்பாவனாலும் முடியாது என்று ஒரு RECORD இருந்தது .... அதை நினைத்து முடியாது என்று நினைத்து யாரும் அந்த குறி ஈட்டை யாரும் தாண்டவில்லை ......
1957 யில் ஒருவர் என்னால் முடியும் என்று மூன்று நிமிடம் 59 செகோனில் ஓடி முடித்தார் ... அதே மாதத்தில் 16 பேர் மூறு நிமிடமும் மூன்று செக்கனில் ஓடி முடித்தார்கள் .....ஒருவர் இறங்கினால் எல்லோரும் இறங்குவார்கள் ......
முழு பள்ளிவாசல் ஜும்மாவிலும் ஒரே நாளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று எந்த சமூகத்தையும் பாதிக்காமல் எங்களுடைய உரிமையை கேட்க ....நிச்சயம் நாங்கள் உதவுவதாக ....மேற் சொன்ன நபர்கள் தெரிவித்தார்கள் .....நமது தலை எழுத்தை நாமே மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்


★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத யுத்தம்


முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத 
யுத்தம் சம்பந்தமாக கண்ணியமிக்க உலமா பெருமக்கள் .... அரசியல் தலைமைகள்
முஸ்லிம் தூதுவராலயங்கள் உடன் கதைத்தாலும் ஒரு வழுவல் அல்லது சரணாகதி போக்கு ஒன்றையே காணக் கூடியதாய் இருந்தது
அவர்களோ பெரும்பான்மை நாங்களோ சிறுபான்மை என்ற தாழ்வுச்சிக்க லே அவர்களிடமும் காணப்படுகின்றது 
பதூர் களத்தில் இந்த சரணாகதியை அல்லது பொறுமையை கடைப்பிடித்திருந்தால் நமது கெதி என்னவாகி இருக்கும் ...யோசியுங்கள் !!!!!
நமது தலைஎழுத்தை நாம் மாற்றாதவரை அல்லாஹ் மாற்றப்போவதில்லை 
அபாபில் பறவைகள் வரப்போவதில்லை !!கறாமத்துகள் நடக்கப்போவதும் இல்லை 
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு இரண்டு பட்டால் யாருக்கு வாழ்வு யாருக்கு சாவு ?!!
ஏன் எதுக்கு எப்படி என்ற கேள்வி உங்களில் எழவேண்டும் !!!
இல்லை கண் மூடித்தனமாக பகுத்தறிவை அடகு வைத்து விட்டு உலமாக்களின் 
பக்தர்களாக வேண்டாம் உலமாக்கள் பிளவு பட்டுள்ளார்கள் தப்லீக் தவ்ஹீத் 
ஜமாஅத் இஸ்லாம் தரீக்கா இன்னும் ஏராளம் !!!
எங்கள் உரிமைகளை உலமாக்கள் வென்று தரவில்லை மறந்து விடவேண்டாம் ?!!!
உலமாக்களின் பக்தர்களே கூருங்கல் ஒரு உரிமை உலமாக்கள் எமக்கு அரசாங்கத்தின் 
மூலம் கதைத்து பெற்று தந்ததை !!!!!!!!!!!!!!!!!!!!!!
எழுதப்படாத எங்கள் ஹலால் உரிமையையும் எழுதிக்கொடுத்தது யாரு ?!!
பள்ளிவாசல்கள் அனைத்தும் உலமாக்களின் கையில் உள்ள ஒரு அமானிதம் 
அவற்றை விட்டுக்கொடுக்க மெளன சம்மதம் கொடுக்கப்பட்டுள்ளது !!!
புத்த காயா வுக்கு அறிக்கை விட்ட மதிப்புக்கு உரியவர்கள் பள்ளிவாசல்களுக்கு 
மெளனம் காப்பது ஏன் !!!!!!!!!
ஒறாபி பாசா +tp ஜாயா +அறஞ்ஞர் சித்தி லெப்பை +சேர் ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் 
போராடி பெற்ற உரிமைகள் எங்கே இவற்றை விட்டுக்கொடுக்க இவர்களுக்கு யார் 
உரிமை கொடுத்தது !!!
இவர்களின் வாய்களுக்கு அரசாங்கம் பூட்டு போட்டு விட்டது இவர்கள் பேசவே மாட்டார்கள் !!!
முஸ்லிம் அரசியல் தலைமைகள் எங்கள் வாக்குகளை விலைபேசி விற்று விட்டார்கள் !!
அவர்களின் பேரம் பேசும் சக்தி தாரை வார்க்கப்பட்டாகி வெகுகாலம் !!
சீருவார்கல் சிணுங்கி அடங்குவார்கள் !!
இந்த நாட்டின் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு 
நிழலாக உள்ளார் தீர்மானியுங்கள் என்ன செய்யலாம் என்று இவர்களுக்கு கிரீடம் சூட்டுவதா ? இல்லை எமக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தலைமையை 
இனம்கான்பதா ?!!!

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

Tuesday, July 16, 2013

* சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?



சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?



இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மதவேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள்.

யுத்தம் முடிவுற்று அதன் வடுக்கள் ஆறுவதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மத்தியில் குரோதத்தை வளர்த்து இன்னொரு இனவாத யுத்தத்திற்குள் நாட்டு மக்களை இழுத்து வீசுவதற்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டு வரும் பௌத்த இனவாத கும்பல் தயாராகி வருவது தெரிகின்றது.

இனவாதத்தையும் மதவாதத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வரும் இந்த விஷமிகளுக்கு ஆதரவாக, தங்களை நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில ஊடகங்கள் கூட இன்று மதவாதக் குட்டையில் குளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நச்சுப் பாம்புகள் ஊதும் மகுடிக்கு ஏற்றபடி ஆடும் சிங்கள பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சுவரொட்டிகள் மூலமாகவும் வாய்ச்சொல் மூலமாகவும் அருவறுக்கத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் மதவெறியை தூண்டி இந்திய மக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்த தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்த ராஷ்ட்ரிய சிவசேனா (ஆர்.எஸ்.எஸ்.) போன்ற அமைப்புகள் ஆரம்பத்தில் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து, அதன் உச்சக் கட்டமாக குஜராத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இன்று பொது பல சேனா என்ற மதவாத பயங்கரவாதிகளின் செயல்களைப் பார்க்கும் போது இலங்கையிலும் அவ்வாறானதொரு கொடுமை எதிர்காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்றது.

1915ல் காலனித்துவ குள்ளநரிகளால் தூண்டப்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்துக்குப் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு சிங்கள முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரச்சினைகள் நடந்தாலும் காதல் மற்றும் வியாபாரம் சம்பந்தமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டே அவை நடந்துள்ளன.

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முதலாளித்துவ அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்துக்கு தூபமிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 70 - 76களில் அப்போதைய கல்வியமைச்சராக இருந்த பதியுத்தீன் மஹ்மூத், அவரது அமைச்சுக்குள் வைத்து, ஊவாவின் பொடி புதா என்றழைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் விக்ரமரத்தின என்பவரால் தாக்கப்பட்டார். அப்போது இனவாத வார்த்தைகளும் பிரயோகிப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை அன்றைய சிங்களப் பத்திரிகையான 'தினமின" தலைப்புச் செய்தியாக படங்களுடன் வெளியிட்டிருந்தது. மறுநாள் தனது தேர்தல் தொகுதிக்கு வந்த எட்வின் விக்கிரமரத்தினவை தொகுதி மக்கள் மாவீரனை வரவேற்பதைப் போன்று வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அவர் தாக்கியது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கல்வியமைச்சரை. அவர் ஒரு முஸ்லிம். அதுதான் காரணம். அதன் பின்னர் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மகியங்கனை பௌத்த விகாரையை அண்டியிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அப்போது ஆட்சியிலிருந்தது சிறிமாவோ பண்டாரநாயக தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம். தங்களை சோஷலிஸவாதிகள் என்று காட்டிக்கொண்ட இலங்கை சமசமாஜக்கட்சியும், இலங்கை கம்யூனிஸக் கட்சியும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தமையும், பிரபல முஸ்லிம் முதலாளித்துவ தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம்வகித்தமையையும் குறிப்பிட வேண்டும்.

1977ல் ஜுனியஸ் ரிசட் ஜயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும் அமோக ஆதரவோடு முடிசூடா மன்னனாக ஆட்சிபீடமேறிய ஜயவர்தன புதிய அரசியலமைப்புத் திட்டத்தின் மூலம் தன்னை முடிசூடிய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்த ஜே.ஆர். மேற்கத்திய வல்லாதிக்கவாதிகளின் செல்லப்பிள்ளையாகவும், சிங்கள பௌத்த மதவாதிகளுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொண்டார். நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்ற அதரிகாரத்தையும் தனது சட்டைப்பைகளில் வைத்திருந்த அவர் 1982ல் மேலும் 6 வருடங்களுக்கு தனது சர்வாதிகார ஆட்சியை சட்ட விரோதமாக நீடித்துக் கொண்டார்.

1983ல் அவருடைய ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு வேலைசெய்த ஊழியர்களையும் சேர்த்து நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான கடைகளும் கொளுத்தப்பட்டு முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டமையையும் குறிப்பிட வேண்டும். தமிழ் மக்களுக்கெதிராக நடந்த இன வன்முறை வரலாற்றின் கறுப்பு ஜுலையாக பதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிறிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்கள் சிங்கள பௌத்த மதவாதிகளால் தாக்கப்பட்டன. அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவ தேவாலயம் பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த மதவாதிகளால் சேதப்படுத்தப்பட்டதோடு, வணக்கத்தில் ஈடுபட்டவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். முன்னேஸ்வரம் கோவிலுக்குள் அமைச்சரொவரின் தலைமையில் சென்ற குண்டர்கள் ஹிந்து மக்களின் வணக்க வழிபாடுகளுக் இடையூறு விளைவித்தனர்.

இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் ஒரு கையில் நவ தாராளமய முதலாளித்துவத்தையும், மறுகையில் சிங்கள பௌத்த இனவாதத்தையும் வைத்துக்கொண்டு தான் ஆட்சிக் கட்டில் ஏறின. சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் முதலாளித்துவவாதிகளால் தூவப்பட்ட மதவாதம் இன்று உச்சத்துக்கு வந்திருப்பதற்கான உதாரணம் தான் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை. அநுராதபுரம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, தெஹிவலை பிரதேதசத்தில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது என்று அச்சுறுத்தியமை, பதுளையில் அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காய முயற்சிக்கின்றமை ஜனவரி 19ம் திகதி மஹரகம நகரில் NOLIMIT என்ற முஸ்லிமுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் தலைமையில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

நாட்டில் சிங்கள மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் முஸ்லிம்தான் என்று பொது பல சேனா என்ற பௌத்த மதவாத அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனக்குரோதத்தையும், மதக் குரோதத்தையும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தமிழர்களோ சிங்களவர்ளோ காரணமல்ல. அதேபோன்று தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு சிங்களவர்களோ முஸ்லிம்களோ காரணமல்ல. இவை அனைத்துக்கும் காரணமாக இருப்பது இந்த ஆட்சி முறை. இந்த சமூக அமைப்பு முறை. இந்த முறையை மாற்றியமைக்காத வரை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, வன்முறை போன்றவற்றிற்கு முகம்கொடுப்பதைத் தவிர வழியில்லை.

ஆகவே, இவற்றுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இலங்கை மக்களும் இணைந்து இந்த வன்செயல்களுக்கு எதிராக போராட முன்வரவேணடும். இல்லாவிட்டால், இனவாத, மதவாத அரசியல் வாதிகளின் ஆசீர்வாதத்தோடு அரங்கேறி வரும் இப்படியான துவேஷ நடவடிக்கைகளினால் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றப் போகிறார்களோ இல்லையோ. ஆனால் எண்ணெயில் தீ மூட்டப்போது என்னவோ உண்மை.

* முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.



முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணையுமாறு காலத்துக்கு காலம் அரசியல் தலைமைகளும்இ உலமாக்களும்இ பொதுமக்களும் அழைப்பு விடுத்த போதெல்லாம் அவற்றினை உதாசீனப்படுத்தி தங்களின் இருப்புக்களையும் பதவிகளையும் தக்கவைத்து கொள்வதற்காக மாத்திரம் சிந்தித்து செயல்பட்டு வருகின்றனர் முஸ்லிம் அரசில் தலைமைகள். இவர்களை நம்பி பயனில்லை முஸ்லிம்களுக்கு.

இதனால் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவது மாத்திரம் தான் முஸ்லிம்களின் உரிமைக்குமஇ; முஸ்லிம்களின் இருப்புக்கும்இ கலாசார விழுமியங்களுக்கும்இ உரிமைகளைப் பெறுவதற்கும் ஒரே வழியாகும்.
அண்மைக்கால முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற பள்ளிவாசல் மீதான தாக்குதல்களும் முஸ்லிம் சமூகத்தின் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரான இடையூறுகளும் முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான இடையூறுகளும் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன. ஆனால் முஸ்லிம் தலைமைகள் இவற்றுக்கெல்லாம் தீர்வு காணாமல் ஊடகங்களுக்கு மாத்திரம் அறிக்கை விடுவது முஸ்லிம்களை ஏமாற்றுகின்ற ஒருகபட நாடகமாகும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது எமது ஜனாதிபதி அவர்கள் அனுராத புரம் தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு தொடர்பான பிரச்சனைகள் எனக்கு முன்வைக்கப்படவில்லை என கூறிய வார்த்தை முஸ்லிம்களின் மனங்களை புண்படச்செய்திருக்குpன்றது .காரணம் ஜனாதிபதி என்பது நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களுக்கும் தலைவர். அவருடய வாயினால் இவ்வாறான ஒரு வார்த்தை பிரயோகிக்ப்பட்டதே ஆகும். அதேபோன்று அண்மையில் நடைபெற்ற மகியங்கனை அரபா ஜூம்மா பள்ளிவாசல் சம்பவம் இடம்பெற்ற போதும் அவற்றை செய்தவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் புத்தகாயாவில் நடைபெற்ற சிலை உடைப்பு தொடர்பாக அரசாங்கம் முண்டியடித்துக்கொண்டு அச்சம்பவத்துக்கு எதிராக அறிக்கை விடுவதும் நீதி தேடுவதையும்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்குpன்றபோது அவற்றை கட்டுப்படுத்தாமலும் சட்டத்தின் முன் கொண்டுவராமலும் இருப்பது முஸ்லிம்களை அச்சம் கொள்ளச்செய்திருக்கின்றது. காரணம் இவ்வரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கொடூரசெயல்களை இழிவான செயல்களை பார்த்து ரசித்துகொண்டிருக்கிறது என்பது ம்டடுமல்லாமல் அவர்களுக்கு தூண்டுகோலாகவும் அரசாங்கம் செயற்படுகின்றது என்று கூறுவதில் தப்பில்லை என்று கூறலாம்.

இவ்வாறான செயற்பாடுகளின் போது எமது முஸ்லிம் தலைமைகளில் எந்த தலைமைகள் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் இருப்புக்காகவும் பாடுபட்டு உழைக்கிறார்களோ அவற்றை மையப்படுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் நீரோட்டத்தை கொண்டு செல்வதற்கு புத்தி ஜீவிகளும் உலமாக்களும் அறிஞர்களும் கைகோர்ப்பதும் இன்றய காலகட்டத்தின் அவசியமாகும்.

வெறுமனே அபிவிருத்தி என்ற மாயையை காட்டி தங்களை அபிவிருத்தி செய்கின்ற தலைமைகள் பேரினவாத சக்திகளுக்கு முஸ்லிம்களை அடகுவைக்கின்ற தலைமைகளை இல்லாது ஒழித்து செயல்படுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.ஒன்றுபடவேண்டும் அப்போதுதான் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.


Tuesday, July 9, 2013

* கிழக்கு மாகான பொதுபல சேனா பிரதிநிதி !!!!!!


கிழக்கு மாகான பொதுபல சேனா பிரதிநிதி !!!!!!

தமிழர்களுடன் கைகோர்க்கும் பொது பல சேனா ?!!!தமிழ் இனவாதத்தின் மிகக் கேவலமான மற்றோர் முகம்!!!!!
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிங்களவர்களுடன் சேர்ந்த கிழக்கு தமிழ் சமூகம் சதி அதற்கு துணைபோன ஹிஸ்புல்லா ?!!!நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயத்திலிருந்து பர்தா அணிந்த முஸ்லிம் மாணவிகள் வெளியேற்றம்!!!
மெளனம் காக்கும் முஸ்லிம் தலைமை !!

* ஜனாதிபதியை புதிய பள்ளிக்கு அழைத்தவர்கள் ஏன் பழைய பள்ளிகளை பாதுகாக்க அழைக்கவில்லை.


ஜனாதிபதியை புதிய பள்ளிக்கு அழைத்தவர்கள் ஏன் பழைய பள்ளிகளை பாதுகாக்க அழைக்கவில்லை.

இன்று (05/07/2013) வெள்ளிக்கிழமை புனரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட தர்கா நகர் சீன துறை பள்ளிவாயல் திறப்புவிழாவுக்கு நாட்டின் கெளரவ ஜனாதிபதி அவர்களை இந்த பிரதேச மக்களால் அழைக்கப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்த, நடந்து முடிந்த நிகழ்வுதான்.

ஏனைய மத வழிபாடுகள் போன்று இந்த பள்ளிவாயலும் கோளா கலமாக, வெளிச்ச அலங்காரங்களுக்கு மத்தியில் பாரிய ஏற்பாட்டில் இந்த பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த பள்ளியின் திறப்பு விழாவுக்கு அழைத்த ஜனாதிபதியை ஏன் ஆங்காங்கே உடைக்கப்பட்ட, எதிர்ப்புக்குள்ளான பள்ளிகளை பாதுகாக்க இதே ஜனாதிபதியை அழைக்க முடியவில்லை.

இந்த கேள்வியை இந்நிகழ்வை ஏற்பாடு செய்த, பங்கேற்ற அரசியல் மற்று மார்க்க அறிஞர்களிடத்தில் தொடுக்க ஆசைப்படுகிறேன்.

மற்றும்….
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி “ஒரு இனத்துக்காக நாட்டை பிரிக்க முடியாது” என்று கூறினார்.

இதே ஜனாதிபதியிடத்தில் நமது மாற்றங்கள் தேவை சார்பாக “அப்படியென்றால் பெளத்த மதத்தை பாதுகாக்க ஏன் முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் இந்து மக்களை பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் எதிர்க்க வேண்டும்?

ஏன் பொதுபல சேனா என்ற அமைப்பை வழக்கின்றீர்கள்?
அவர்களை உங்களால் கைதுசெய்ய முடியுமா?

பேச்சுக்கள் வேறு நடத்தைகள் வேறு என்பது நாட்டின் ஜனநாயம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

நேர்மையான ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் அனுமதிப்பார்கள்,
எதிர்வரும் தேர்தல் இதற்கு பதில் சொல்லும் இன்க்ஷா அல்லாஹ்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.


* ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் இரத்த தானம் !!!அன்னதானம் தன்சல் !!!இன்னும் சிலநாட்களில்


ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் இரத்த தானம் !!!அன்னதானம் தன்சல் !!!இன்னும் சிலநாட்களில் 

கண்தானம் !! கிட்னி தானம் !!பாட்ஸ் பாட்சா கொடுங்கள் ஹுதைபியா உடன்படிக்கைய
ஞாபகப்படுத்துகிரார்கல் !!
ஆனால் எடுப்பதற்கோ பொது பலசேன தயாராயில்லை !!!இன்னும் என்னத்தைய கொடுக்குறது? !!!
மத்தமாதிரியும் கேட்பாங்கள் அப்பவும் கொடுக்க சொல்லுங்கள் !!!!
இந்த அடாவடிக்கு எதிராக இரத்தம் சிந்தி உயிர்கொடுக்க எங்கள் மார்க்கத்தில் சொல்லப்படவில்லையா ?!!!

* அண்ட கிறவுன்ட் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் உலமாசபை


கொழும்பு, கிராண்ட்பாஸ், ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு இணக்கம்!!!!!

அண்ட கிறவுன்ட் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் உலமாசபை 


விட்டுகொடுப்புகளுடன் விடைபெற்று செல்லும் மஸ்ஜித்கள் ?!!ஜம்மியத்துல் உலமா வினால் அரங்கேற்றப்படும் ஹுதைபியா உடன்படிக்கை !!!
உலமாசபைக்கு தெறியாமல் அறிவிக்காமல் மஸ்ஜித்கள் விடைபெருவதில்லை 
இன்றும் தம்புள்ளை மஸ்ஜிதை விட்டுக்கொடுக்கும்படி நிர்வாகசபையை நிர்பந்திக்கும் 
உலமாசபை ?!! ஜானக தென்னக்கோன் என்ற சிங்கள அரசியல் வாதியின் அரவணைப்பில் 
உறுதியாக இருக்கும் நிருவாகசபை !!
சரணாகதி அரசியல் நடாத்தும் முஸ்லிம் தலைமை !!
அண்ட கிறவுன்ட் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் உலமாசபை ஆர்பாட்டத்துடன்
அடங்கி போகும் முஸ்லிம் சமூகம் நுற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்
குறிவைக்கப்பட்டுள்ளன அடுத்தது எந்த ஊர் எந்த மஸ்ஜித் நாடகம் அரங்கேறும் முன்
ஜனாதிபதியை அழைத்து திறப்புவிழா ?!!!நம்பிக்கை தரும் உரை பின் நம்பிக்கை
துரோகம் செய்து சாணாக்கியம் என்றனர் !!
பேரம் பேசும் சக்திகள் நாம்தான் என்று அரைக்கூவல் விடும் அரசியல் தலைமை
அமைதியாக அதைகேட்கவேண்டிய இஸ்லாமியாத்தலைமை அடங்கிப்போக
முஸ்லிம் சமூகம் ஒடுங்கிப்போனது !!ஒடுங்கிப்போகிறது இன்னும் ஒடுங்கி அடங்கி
போகுமா போக வேண்டுமா ?!!
செத்துமடியும் பாலஸ்தீனர்கள் ஏன் ஜம்மியத்துல் உலமாக்களின் விட்டுக்கொடுப்பை
பின்பற்றக் கூடாது பைத்துல் முகத்திஸ் விடயத்தில் இந்த உலமாக்கள் ஏன் ஜிஹாதிய
பயான் பண்ணவேண்டும் !!என்னத்தான் நடக்கின்றது என்னத்தான் நடக்கப்போகிறது ?!!
எங்கள் பார்வையில் ரிஸ்வி முப்தி சட்டவிரோத ஹலால் வியாபாரத்தை நடாத்தியதால்
குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார் ?!!
அவரை காப்பாற்று வதற்காக இந்த விட்டுக்கொடுப்புகளுக்கு அடிபணிந்து செல்கிறது
ஜம்மியத்துல் உலமா ?
உலமாக்களாக தீர்மானித்து சம்பந்தப்பட்டவர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து
நீக்கிவிட வேண்டும் புதிய தலைமை பொறுப்பெடுக்கும் பட்சத்தில் அடக்குமுறையில்
இருந்து விடுதலை பெறலாம் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கலாம்
உங்கள் பார்வை கருத்துக்களை பதியுங்கள்

Thursday, July 4, 2013

* இனவாதிகளின் பிரச்சாரம் அறுவடை செய்யப்படுகிறது. இலங்கை: மற்றொரு மியன்மாரா?


இனவாதிகளின் பிரச்சாரம் அறுவடை செய்யப்படுகிறது. இலங்கை: மற்றொரு மியன்மாரா? 

மாடறுப்பைத் தடைசெய்யுமாறு கோரி, பௌத்த மதத்தின் காவலர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற இனவாதிகள் சிலரால், கதிர்காமத்தில் இருந்து அலரி மாளிகை வரையான எதிர்ப்புப் பேரணியொன்று அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

பிரச்சினையைத் தூண்டுவதற்கு எதுவித காரணமும் இருக்காத ஹலால் பிரச்சினையை பூதாகரமானதாக ஊதிப் பெருப்பித்த இவர்கள், தற்போது மாடறுப்புக் கோஷத்தைத் தூக்கியிருக்கிறார்கள். சிங்கள சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் வெறுப்புணர்வை விதைத்து, முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்படத் தூண்டுவதையே இவர்கள் தமது பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக, வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில்,  மியன்மார் பாணியிலான வன்முறைகளை இலங்கையிலும் கட்டவிழ்த்து விட்டு, ஏனைய முஸ்லிம்களையும் அகதி முகாம்களுக்குள் முடக்குகின்ற திட்டத்துடன் இவர்கள் இயங்குகிறார்களா என்ற சந்தேகம் கூட பலரிடம் உண்டு. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோர வடுக்கள் இன்னும் மங்கி மறையாத நிலையில், இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டி வருகின்றமை வரலாற்றில் இருந்து எதுவித பாடத்தையும் இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகின்றது.    

உண்மையில் இவர்கள் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்கள் மிக அபாயகரமானதாகும். பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களில் விஷத்தைப் பாய்ச்சி, இனங்கள் மத்தியிலான நல்லுறவை சீர்குழைக்கின்ற வகையிலான பிரசாரமாகும்.

இவர்களது பிரச்சாரத்தின் அறுவடைகள் என்று சொல்லக் கூடிய விதத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பல அசம்பாவிதங்கள் பதிவாகி இருக்கின்றன. 

• பாடசாலை மாணவரொருவரின் தாயிடம் ஹிஜாப் ஆடை அணிய வேண்டாம் என்று அதிபர் கேட்டுக் கொண்ட நிகழ்வு

• பாடசாலை ஆரம்பமாகும் போதும், நிறைவடைகின்ற போதும், ஆசிரியர்கள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டமை

• ஹிஜாப் அணிந்தமைக்காக முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள்

• முஸ்லிம் வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல்கள் 

போன்ற பல்வேறு சம்பவங்கள் இப்பிரசாரம் தனது அகோரமான, அசிங்கமான முகத்தைக் காட்டுவதற்கு ஆரம்பித்து விட்டது என்பதனையே உணர்த்துகின்றது. 

சில நேரங்களில் அப்பட்டமான அண்டப்புழுகுகளையும் இவ்வினவாதிகள் கட்டமைக்கின்றார்கள். உதாரணமாக, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்கும் போது, மூன்று முறை துப்பி விட்டே முஸ்லிம்கள் வழங்குவதாக பௌத்த பிக்குவொருவர் பொது நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், இப்பிரசாரத்தை முன்கொண்டு செல்கின்றவர்கள் ஒரு சிறு குழுவினரே. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு செல்கின்றமை, சிங்கள சமூகத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்களை ஆதரிக்கவில்லை என்பதனையே தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு இப்பிரச்சாரங்கள் எந்த வகையிலும் உறுதுணையானவை அல்ல என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். 

இந்தியாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த பத்யாத்ராவாவை இவ்விடத்தில் நினைகூர்வது இங்கு பொருத்தமானதாகும். இதனைத் தொடர்ந்து ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் முப்பதாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

எனவே, இத்தகைய பின்னணியில், இவ்வினவாதிகளின் ஊர்வலத்தை அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாக இவர்களது ஊர்வலத்திற்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டமை முஸ்லிம் மக்களை மாத்திரமின்றி, அமைதியை விரும்புகின்ற சிங்கள மக்களையும் கேலி செய்கின்ற செயலாகும். பேரணி செல்கின்ற வழியில், தங்கல்லையில் வைத்து, பொலிசார் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே, இறைச்சிக் கடையொன்றை இவர்கள் தீ வைத்துக் கொழுத்தி இருக்கிறார்கள். ஒலிப் பெருக்கியின் மூலம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, அவர்களைப் பயங்கரவாதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். 

இவ்விதம் சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு, பம்பலபிடிய சந்தையில் குறிப்பிட்ட தினத்தில், இறைச்சிக் கடைகளை மூடுமாறு பொலிசார் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் அநுராதபுர தர்கா உடைப்பு, தம்புள்ளை பள்ளிவாயல் மீதான தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் போதும் பொலிசார் இதே மனோபாவத்துடனேயே நடந்து கொண்டார்கள். 

ஜூன் 26, 2013 புதன் கிழமை பேரணி அலரி மாளிகையை அடைந்தது. இவர்களை ஜனாதிபதி சந்தித்தார். மாடறுப்பைத் தடை செய்யும் வகையில் இருமாத காலத்திற்குள் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்ததாக பிக்குகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வுறுதி மொழி வழங்கப்பட்டது உண்மையாயின், இனவாதத்தைத் துடைத்தெறிவதற்குப் புறம்பாக, அவர்களுக்கு அரசாங்கம் அங்கீகார முத்திரை வழங்குகின்றது என்றே கருதப்பட வேண்டும். 

இன்று நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், இத்தகைய பிரச்சினைகளை நாட்டின் பிரதான பிரச்சினைகள் போன்று இக்குழுக்களால் சித்தறிக்கப்பட்டு வருகின்றமை, முன்னைய அரசாங்கங்களின் இனவாதக்கொள்கைகளின் விளைவாக உருவான முப்பதாண்டு கால யுத்தம், மற்றும் அதன் இழப்புகளில் இருந்து நாடு எதுவித பாடத்தையும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை என்பதனையே உணர்த்துகின்றது. 

யுத்த காலத்தில் ‘தமிழர்களை இப்போது கவனிப்போம். முஸ்லிம்களை பிறகு பார்த்துக் கொள்வோம்’ என்ற விதத்திலேயே இனவாதிகள் கருத்து வெளியிட்டு வந்தனர். தற்போது எல்.டீ.டீயினரை முழுமையாக வெற்றி கொண்ட பெருமிதத்தில், முஸ்லிம்கள் மீது தமது முழுக் கவனத்தையும் இவர்கள் செலுத்த ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது. 

இவர்களது அழுத்தங்கள் காரணமாக பல உள்ளூர் அதிகார சபைகள் மாடறுப்பைத் தமது எல்லைக்குள் தடை செய்துள்ளன. 

அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் யூத சியோனிஸ சக்திகள் இந்நாட்டிலும் தற்போது சுருசுருப்பாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் தமது முஸ்லிம் எதிர்ப்புப் நடவடிக்கைகளுக்கான, உள்ளூர் முகவர்களாக இவ்வினவாத சக்திகளைச் சுலபமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. 

ஜனநாயகம், சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை என்பவற்றை வெற்றி கொண்டதற்காக ஐரோபிப்பிய யூனியனால் மியன்மார் அதிபர் விசேட விருதொன்று வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம், அவரது கூலிப் பட்டாளம் மியன்மார் முஸ்லிம்களைப் படுகொலை செய்தது. வியாபார அமைப்புக்களை தீயிட்டுக் கொழுத்தியது.  இன்று இலங்கையில் நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், மியன்மாராக இலங்கையும் மாற்றம் பெறுவதற்கு அதிக நாட்கள் எடுக்காது. 

நான்காண்டுகளுக்கு முன்புதான் யுத்தமொன்றில் இருந்து மீண்டு வந்திருக்கின்ற இலங்கையால், முஸ்லிம்களுக்கெதிராக மற்றொரு பிரச்சினையையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்பதே தற்போதிருக்கின்ற கேள்வி. எனவே, எல்லா சமூகங்களிலும் இருக்கின்ற பொறுப்பு வாய்ந்தவர்கள் இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இன்று உருவாகி இருக்கின்றது. ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்காக நாட்டை மற்றொரு கொலைக்களமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.