Tuesday, July 16, 2013

* முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.



முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணையுமாறு காலத்துக்கு காலம் அரசியல் தலைமைகளும்இ உலமாக்களும்இ பொதுமக்களும் அழைப்பு விடுத்த போதெல்லாம் அவற்றினை உதாசீனப்படுத்தி தங்களின் இருப்புக்களையும் பதவிகளையும் தக்கவைத்து கொள்வதற்காக மாத்திரம் சிந்தித்து செயல்பட்டு வருகின்றனர் முஸ்லிம் அரசில் தலைமைகள். இவர்களை நம்பி பயனில்லை முஸ்லிம்களுக்கு.

இதனால் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவது மாத்திரம் தான் முஸ்லிம்களின் உரிமைக்குமஇ; முஸ்லிம்களின் இருப்புக்கும்இ கலாசார விழுமியங்களுக்கும்இ உரிமைகளைப் பெறுவதற்கும் ஒரே வழியாகும்.
அண்மைக்கால முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற பள்ளிவாசல் மீதான தாக்குதல்களும் முஸ்லிம் சமூகத்தின் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரான இடையூறுகளும் முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான இடையூறுகளும் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன. ஆனால் முஸ்லிம் தலைமைகள் இவற்றுக்கெல்லாம் தீர்வு காணாமல் ஊடகங்களுக்கு மாத்திரம் அறிக்கை விடுவது முஸ்லிம்களை ஏமாற்றுகின்ற ஒருகபட நாடகமாகும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது எமது ஜனாதிபதி அவர்கள் அனுராத புரம் தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு தொடர்பான பிரச்சனைகள் எனக்கு முன்வைக்கப்படவில்லை என கூறிய வார்த்தை முஸ்லிம்களின் மனங்களை புண்படச்செய்திருக்குpன்றது .காரணம் ஜனாதிபதி என்பது நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களுக்கும் தலைவர். அவருடய வாயினால் இவ்வாறான ஒரு வார்த்தை பிரயோகிக்ப்பட்டதே ஆகும். அதேபோன்று அண்மையில் நடைபெற்ற மகியங்கனை அரபா ஜூம்மா பள்ளிவாசல் சம்பவம் இடம்பெற்ற போதும் அவற்றை செய்தவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் புத்தகாயாவில் நடைபெற்ற சிலை உடைப்பு தொடர்பாக அரசாங்கம் முண்டியடித்துக்கொண்டு அச்சம்பவத்துக்கு எதிராக அறிக்கை விடுவதும் நீதி தேடுவதையும்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்குpன்றபோது அவற்றை கட்டுப்படுத்தாமலும் சட்டத்தின் முன் கொண்டுவராமலும் இருப்பது முஸ்லிம்களை அச்சம் கொள்ளச்செய்திருக்கின்றது. காரணம் இவ்வரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கொடூரசெயல்களை இழிவான செயல்களை பார்த்து ரசித்துகொண்டிருக்கிறது என்பது ம்டடுமல்லாமல் அவர்களுக்கு தூண்டுகோலாகவும் அரசாங்கம் செயற்படுகின்றது என்று கூறுவதில் தப்பில்லை என்று கூறலாம்.

இவ்வாறான செயற்பாடுகளின் போது எமது முஸ்லிம் தலைமைகளில் எந்த தலைமைகள் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் இருப்புக்காகவும் பாடுபட்டு உழைக்கிறார்களோ அவற்றை மையப்படுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் நீரோட்டத்தை கொண்டு செல்வதற்கு புத்தி ஜீவிகளும் உலமாக்களும் அறிஞர்களும் கைகோர்ப்பதும் இன்றய காலகட்டத்தின் அவசியமாகும்.

வெறுமனே அபிவிருத்தி என்ற மாயையை காட்டி தங்களை அபிவிருத்தி செய்கின்ற தலைமைகள் பேரினவாத சக்திகளுக்கு முஸ்லிம்களை அடகுவைக்கின்ற தலைமைகளை இல்லாது ஒழித்து செயல்படுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.ஒன்றுபடவேண்டும் அப்போதுதான் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.


No comments:

Post a Comment