Tuesday, May 6, 2014

* சிறுபான்மை மதங்களை அடக்கும் மற்றுமொரு தந்திரம்..



சிறுபான்மை மதங்களை அடக்கும் மற்றுமொரு தந்திரம்..

மத மோதல்களை விசாரணை செய்ய பொலிஸ் பிரிவு, சிறுபான்மை மதங்களை அடக்கும் மற்றுமொரு தந்திரம்

மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு தந்திரம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் காவற்துறை திணைக்களம் ஒன்றும், சட்டத்திட்டங்களும் இருக்கும் போத, இவ்வாறு விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்படுவதற்கான அவசியம் என்ன? 
என்றும் அந்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வாறான குழு ஒன்று அமைக்கப்பட்டாலும், அந்த குழு சிறுபான்மை மதங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகின்ற பொதுபல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களை எதுவும் செய்யப் போவதில்லை.

எதிர்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை அந்த குழு கைகட்டி பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.

ஆனால் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான மத சமூகம் இந்தக் குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துவிட்டு, அது விசாரணை செய்யும் என்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்று அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment