Saturday, May 24, 2014

*ஜமியத்துல் உலமா + பொது பல சேனா = புதிய கூட்டணி, நம்பமுடியாத உண்மை!



ஜமியத்துல் உலமா + பொது பல சேனா = புதிய கூட்டணி, நம்பமுடியாத உண்மை!

பொதுபலசேனாவுக்கு ஆதரவாக “ஜமிய்யதுல் உலமா” வாதாடியமை முஸ்லிம்களின் மனசாட்சிக்கு எதிரானதாகும். நேற்று 20-05-2014 அன்று தௌஹீத் ஜாமத்தின் செயலாளர் புத்தமதத்தை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அந்த அமைப்பை சேர்ந்த ஐவருக்கு எதிராக கோட்டை நீதிமன்றம் இரண்டாம் கட்ட வழக்கை பரிசீலனை செய்தது.

இந்த வழக்கை தௌஹீத் ஜாமத்துக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செய்திருக்கும் வேளையில் எதற்காக இதில் ஜமிய்யதுள் உலமா சபை சம்மந்தப்பட வேண்டும்? சம்மந்தப்படுவதோடு நிறுத்தாமல் பொதுபல சேனா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை களத்தில் இறக்கியமை முஸ்லிம்களின் மனசாட்சிக்கு எதிரான செயல் ஆகும்.

குறித்த விசாரனையில் பொது பல சேனாவின் தரப்புக்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை சார்பாக சட்டத்தரணி அலி சப்ரி கலந்து கொண்டு வாதிட்ட்டுள்ளார்.

இதில் ஜம்மிய்யதுல் உலமா சார்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக கடந்த 16.05.2014 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையை (http://www.acju.lk/ta/press-release-ta/statement/) படித்துக் காட்டி தவ்ஹீத் ஜமாத் மத நிந்தனை செய்ததாக கூறி தனது வாதத்தை முன்வைத்துள்ளார் சட்டத்தரணி அலி சப்ரி.

தவறுகளை தலைவன் செய்தாலும் தொண்டன் செய்தாலும் ஏழை செய்தாலும் பணக்காரன் செய்தாலும் தவறு தவறுதான்.ஜமிய்யதுள் உலமா பொதுபல சேனாவுக்கு ஆதரவாக வழக்காட சட்டத்தரணியை நியமித்து ஒரு சமூகத்தின் மீது கொண்ட கருத்துவேற்றுமைக்காக இனவாதிகளுடன் கைகோர்த்து பழி தீர்க்க எண்ணுவது முஸ்லிம் சமூகமே முஸ்லிம்களை கண்டு அஞ்சும் நிலையை நாட்டில் ஏற்படுத்தி நிற்கிறது.

சமூக விவகாரங்களில் இரு கூட்டத்தாருக்கு மத்தியில் நல்லிணக்கம் செய்து வைக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கும் ஜமிய்யதுள் உலமா இந்த பொறுப்புணர்வை மறந்து இனவாதிகள் என்று உலகம் முழுதும் அறியப்பட்ட பொதுபலசேனா வின் வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக இருந்தமை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும்.

“ஈமான்கொண்டவர்களில் இரு கூட்டத்தினர் சண்டை இட்டுக்கொண்டாள் அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்”
இந்த வசனத்தில் அல்லாஹ் இரண்டு ஈமானிய சமூகம் சண்டை இட்டாலே சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்க ஈமான் கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்த இஸ்லாமிய எதிரிக்கு ஆதரவாக வழக்காடுவது அல்குர்ஆனின் நேரடியான போதனைக்கு எதிரான செயல் அல்லவா.

“ஒரு கூட்டத்தார் மீது இருக்கும் உங்கள் கோபம் உங்களை அநீதமாக நடக்க தூண்ட வேண்டாம்”

இந்த வசனத்தின்படி நாம் எவ்வளவு பகைவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அநீதியான குற்றசாட்டை முன்வைக்க கூடாது என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது அல்லவா.அநீதிக்கு துணைபோகும் கூட்டத்துக்கு உதவுவதையும் இஸ்லாம் தடுக்கிறது என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்லி காட்டியுள்ளான்.

எனவே பொதுபல சேனாவின் சூழ்ச்சி கரமான இந்த வழக்கில் ஜமிய்யதுள் உலமா ஒரு பங்காளியாக ஆகியமை இஸ்லாமிய சமூகத்தை இஸ்லாமியர்களின் தலைமையே காட்டிக்கொடுத்து இனவாதத்துக்கு துணை போன வரலாறாக பதியப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் சமூக மார்க்க தலைமையை கொண்டவர்கள் என்று சொல்லும் ஜமைய்யதுள் உலமா இனவாதிகளின் சூழ்சிக்கு வெளிப்படை ஆதரவாக களம் இறங்கியமை இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் எந்த தளத்தில் இருந்து நோக்கினாலும் நியாயம் காண முடியாத ஒரு நிலைப்பாடாகும்.

இலங்கையில் முஸ்லிம்களே முஸ்லிம்களை காட்டிக்கொடுக்க போராடும் நிலையையும் முஸ்லிம்களின் பொது எதிரிகளுடன் கைகோர்த்து சக அமைப்பை வஞ்சம் தீர்க்கும் வாதட்டங்களை நீதிமன்றம் கொண்டு சென்றதை எண்ணி ஒரு முஸ்லிமாக இலங்கை பிரஜையாக வெட்கப்படுகிறேன்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment