தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகிகளின் கவனத்துக்கு...!
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு பள்ளி நிருவாக சபை அல்லது நிருவாக சபைத் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இணைய தள மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே தாங்களது இந்த ஒரு தலைப்பட்ச்சமான முடிவானது அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். ஏனெனில் தினமும் பிரச்சினைப்பட்டுக் கொண்டு இருப்பதை விட விட்டுக் கொடுத்து நிம்மதி அடைவோம் என்று நீங்கள் நினைக்கலாம் என்றாலும் இது உங்களுக்கு தற்காலிகமானதொர நிம்மதியாகத்தான் இருக்குமே தவிர அது நிரந்தர நிம்திக்கானத் தீர்வாக ஒரு நாளும் இருக்கமுடியாது என்பது யதார்த்தம்.
ஏனெனில் பொளன்னறுவ அனுராதபுர பளய நகரம் மிஹிந்தலை தம்புள்ள உட்பட இது போன்ற இன்னும் பல வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த நகரங்கள் எங்கெல்லாம் பௌத்தர்களின் புனித நகரங்களாக அடையாளப்படுத்தப்;பட்டுள்ளதோ அவைகள் அனைத்தும் பௌத்த மயமாக்கப்பட்டு தனி பௌத்தரகளைக் கொண்ட நகரமாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு.
இந்த அவர்களின் இலக்கின் முதற்கட்ட கட்ட நடவடிக்கை பொளன்னறுவ தனி பொத்தமயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அனுராதபுர பளய நகரில் முஸ்லிம்களின் பூர்விகத்தைப் பறைசாட்டிக் கொண்டிருந்த பள்ளி வாயல் அண்மையில் டோசர் இயந்திரம் மூலம் தரை மட்டமாக்கப்பட்டது அத்துடன் அந்த இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் நீராவி என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதலால் அந்த நகரமும் இன்று பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது இந்த விடயத்திற்கு ஊடகங்கள் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுத்ததாகத் தெரியவில்லை காரணம் அது சிநுக சிநுக திட்மிட்ட அடிப்படையில் பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயற்திட்டமாகும்.
இந்த நிலை தம்புள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்றே விரும்புகின்றேன் எனவே தாங்களின் முடிவை மீண்டும் ஒரு முறை மீழ் பரிசீலனைக்கு உட்படுத்தி நம் சமூத்தின் ஆண்மீக மற்று அரசியல் தலைமைகளுடன் ஆளமானதொரு ஆலோசனை நடாத்தப்படுதல் மிகவும் சிறந்ததும் அவசியமானதும் எனக்கருதுகின்றேன்.
அத்துடன் தாங்களின் இந்த அவசர முடிவு தொடர்பாக பின்வரும் சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்;கு முன் வைக்கலாம் என்று விரும்புகின்றேன்.
1. நிருவாக சபையோ அல்லது தலைவரோ நீங்கள் நினைத்த மாத்திரத்தில் ஒருதலைப்பட்ச்சமாக இவ்வாறானதொரு முடிவை அவசர அவசரமாக எடுத்திருப்பது சரியானதுதானா?
ஏனெனில் இது ஒன்றும் தம்புள்ள வாழ் உங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு பிரச்சினை அல்ல மாறாக நாட்டில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களுடையவும் பொதுவான பிரச்சினையாகத்தான் அன்று முதல் இந்த நிமிடம் வரைக்கும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஒரு போதும் தனித்து விடப்படவில்லை.
2. குறைந்த பட்ச்சம் தகவல் கிடைத்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை களமிறங்கி உங்களோடு அவசர அவசரமாச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களான அமைச்சர்களான ரிஷாட் பதிய்யுத்தீன் பைசர் முஸ்தபா ஹரீஸ் தௌபீக் மற்றும் மாகான சபை உறுப்பினரான அஷாட் சாலி ஆகியோர்களது ஆலோசனைகளாவது இந்த உங்களது தீர்மானம் பற்றிய விடயத்தில் பெறப்பட்டதா?
3. அரசால் மாற்றீடாக வழங்கப்படவுள்ள இடத்திற்கும் எதிர்காலத்தில் இப்படியானதொரு நெருக்கடி வரமாட்டாது என்பதற்கு உத்தரவாதம்தான் என்ன? அவர்கள் ஆயிரம் ஆயிரம் உறுதி மொழிகளையும் உத்தரவாதங்களையும் கொடுத்த போதிலும் அவற்றை நம்ப முடியுமா?
4. இன்று புனித பூமி எனும் போர்வையில் அதி புன்னியம் வாய்ந்த பள்ளியையே அகற்றுபவர்கள் நாளை தம்புள்ள சிங்களவர்களின் பூர்வீகப் பூமி எனவே முஸ்லிம்கள் யாரும் இங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது வெளியேற வேண்டும் என்று விரட்டியடிக்கப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
5. தம்புள்ளையில் முஸ்லிம்கள் பல தசாப்த்தங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு உள்ள ஒரேயொரு அத்தாட்ச்சி இந்த பள்ளிவாயல் ஒன்று மட்டுமே. இதனையும் தாரவாத்துக் கொடுப்பதனால் அங்கு முஸ்லிம்களின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாக அமைந்து விடாதா?
6. இந்த விட்டுக் கொடுப்பானது பல தசாப்தமாக இதேவிதமான பிரச்சினையில் இருந்து கொண்டிருக்கும் மிஹிந்தலை பள்ளிவாயல் போன்று நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் இன்னும் ஏராளமான பள்ளிவாயிற்க்கள் மத்ரஸாக்கள் போன்றவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?
எனவே தாங்கள் தீர்மானம் எடுப்பதற்கு முன் மேற்படி கேள்விகளுக்கு விடையைக் கண்டு கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதுதான் ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் மற்றும் நமக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றத்தரக் கூடியதாகவும் இருக்கும்.
தற்காலிக விடிவுக்காக ஒவ்வொன்றாகப் பறி கொடுத்து இறுதியில் நமது இருப்பையே பறி கொடுப்பதை விட போராட்டத்துடனாவது நமது இருப்பைத் தக்க வைத்தக் கொள்தல் சிறந்ததல்லவா.
சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்ää பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன்: 3: 159)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈருலக வாழ்விற்க்கும் பாதிப்பேது ஏற்பட்டு விடாத வகையிலான முடிவுகளையும் தீர்மானங்களையும் எட்டச் செய்வானாக.
நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam
No comments:
Post a Comment