அரசாங்கம் வெகு விரைவில் விதைத்த வினைகளை அறுவடை செய்யும்...!!
பொது பல சேனா....
பொது பல சேனா....
என்ற நாமம்,இன்று இலங்கை அரசியல் அரங்கில் ஒலிக்கப்படும் ஓர் முக்கிய நாமமாக மாறியுள்ளது.
இந்த பொது பல சேனா அமைப்பானது பல்வேறு குற்றங்கள்
புரிந்து வருவதை மக்கள் யாவரும் தெளிவாக அறிவர்.
ஏன்..?
அரசாங்கத்திற்கு கூட நன்கே தெரியும்.
அமைச்சர் ரிஷாத் பதியூர்தீன் காரியாலயத்தில் அத்து மீறி நுழைந்த பொது பல சேனா "தாங்கள் விஜித தேரரைத் தான் தேடி வந்தோம்"எனக் கூறி தாங்கள் தான் இச் செயலை மேற்கொண்டோம் என தெட்டத் தெளிவாக ஒப்புக் கொண்டது.
அப்படி இருந்தும் என்ன நடவடிக்கை இவர்கள் மீது எடுக்கப்பட்டது..?
மேலும்,
விஜித தேரரை தாக்கியது,ஜாதிக பல சேனா மாநாட்டை குழப்பியது,அவர்களை தகாத வார்த்தைகளால் ஏசியது,அவர்கள் ஆவங்களை எடுத்துச் சென்றது,குர்ஆன் மீது பொய்களை புணர்ந்தது இவற்றில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நேரடியாக சம்பந்தப்பட்ட தெளிவான ஆதாரங்கள் இருந்தும்,
அரசாங்கம் அவர் மீது என்ன நடவடிக்கை மேற்கொண்டது..??
அரசாங்கம் பொது பல சேனாவை வளர்க்கவில்லை என்றாலும் கூட பொது பல சேனாவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதும் உண்மை.
அரசாங்கம் இதன் விளைவுகளை வெகு விரைவில் சந்திக்கும் என்பதில் ஜயமில்லை.
சற்று தென்,மேல் மாகாண சபை தேர்தல் இதன் விளைவுகளை அறுவடை செய்திருந்தது.தென்,மேல் மாகண சபை தேர்தலில் 16 ஆசனங்களை இழந்திருந்தது.
தங்கள் கோட்டையாக திகழ வேண்டிய ஹம்பாந் தோட்டை மாவட்த்தில் 8 ஆசனங்களையும் முந்தய தனது ஆசனங்களிலிருந்து இழந்திருக்கிறது.
"முஸ்லிம்களின் மீதான வன்முறையே இவ் வீழ்ச்சிக்கான காரணம்"என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்க பள்ளி உடைப்புக்கள் போன்ற காரணிகள் தான் வித்திட்டது என்பதை மறுத்துரைக்க முடியாது.
தற்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது பல சேனா அமைப்பினருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஏன்..?
அமைச்சர் பெஷில் ராஜ பக்ஸ,பிரதமர் தயரத்ன ஆகியோர் மேலும் சில முக்கிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது பல சேனா அமைப்புடன் முரண்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலைமை வளர்ந்தால் அரசாங்கத்தின் நிலை..?
முளையிலே கிள்ளி எறிய அரசாங்கம் தவறியது.
இப்போதும் ஒன்றுமில்லை சற்றே பொது பல சேனா துளிர்விட்டுள்ளது.கிள்ளி எறிய முடியாவிட்டாலும் வெட்டி எறிந்து விடலாம்.
பொது பல சேனா அமைப்பானது தங்களுக்கு ஆட்சியை தீர்மானிக்கும் வல்லமை தங்களுக்கு உள்ளதாக கூறி வருகிறது.
அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட எதிர் காலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக வர வாய்ப்புள்ளது.
அவ்வாறு வரும் பட்சத்தில்,பொது பல சேனா யாருக்கும் அச்சுற முற வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி வெறும் டம்மியாக்கப்படுவார்.
பொது பல சேனா அமைப்பே நாட்டை ஆளும் அமைப்பாக மாறும்.
இது நாட்டிற்கும்,அரசாங்கத்திற்கும்,முஸ்லிம்களுக்கு,எதிர்க்கட்சிகளுக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல.
அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துமாக இருந்தால்,முஸ்லிம்கள் எதிர் விளைவுகளை அடைவார்களோ இல்லையோ அரசாங்கம் நிச்சயம் எதிர்விளைவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஜயமில்லை.
நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam
No comments:
Post a Comment