Tuesday, May 6, 2014

* முஸ்லிம்கள் அவதானம் செலுத்துவேண்டிய காலம்


முஸ்லிம்கள் அவதானம் செலுத்துவேண்டிய காலம்

காழ்ப்புணர்ச்சி கொண்ட பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இவர்கள் தொடர்ந்தும் மத நிந்தனை செய்து கொண்டு எல்லோரையும் ஆட்டிப்படைக்க நினைக்கின்றார்கள்.

இலங்கையில் பொதுபல சேனாவிற்கு என்ன உரிமைகளும் சலுகைகளும் இருக்கின்றதோ அதே உரிமைகளும், சலுகைகளும் ஏனையவர்களுக்கும் உள்ளது என்பது தெரியாது மதம் பிடித்துத்திரியும் இனவாதிகளுக்கு பாடம் புகட்ட சமாதான விரும்பிகளும் அமைதியை எதிர்பார்ப்பவர்களும் முன்வரவேண்டும் என புத்தி ஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

குட்டக்குட்ட குட்டுபவனும் மடயன் குட்டுப்படுபவனும் மடயன் என்ற போர்வையில் இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் அடாவடித்தனத்திற்கு ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகள் பதில் கொடுக்க முடியாதுள்ளனர் என்பதில் முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு ஜால்ராப் போடுவதில் மட்டுமல்ல சமுகத்தின் சமய விடயங்களிலும் சற்று அவதானம் செலுத்தா விட்டால் ஏன் இந்த அரசியல் ஆசைகள்? என மக்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது சீறிப்பாய்கின்றனர்.

ஒரு அமைச்சர் கூட அரசாங்கத்திற்கு பொதுபல சேனாவின் அடாவடித்தனம் தொடர்பாக அழுத்தம் கொடுக்காது இருக்கும் விடயமானது அவர்களை மேலும் முஸ்லிம்கள் மீது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வழி சமைப்பதாகவே முஸ்லிம்களால் நோக்கப்படுகின்றது. இவர்கள் முஸ்லிம்களின் நலன்களிலும் சமயத்திலும் அக்கறையின்றி என்ன நடந்தாலும் நமது பதவி இருந்தால்போதும் என்ற குறுகிய நோக்கத்தில் இருப்பதானது ஒரு சமுகத்தின் அழிவுக்கு வழிசமைப்பதற்கான ஆரம்பமாகவே அமைகின்றது.

மரணித்த பிறகு பதவி எங்கே? பட்டம் எங்கே? என்று யோசிக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் தலைமைகள் என்று கொக்கரிப்பதானது இஸ்லாத்திற்கு இழைக்கும் பாரிய துரோகமாகவே நோக்கப்படுவதாக பாதிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமுகம் கவலை கொண்டுள்ளனர்.

எந்தவொரு ஊடகத்தில் பார்த்தாலும் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கான சுயநலன்கள் கொண்ட பேச்சுக்களையும் நிஜத்தில் சமயத்திற்கும், சமுகத்திற்கும் விடப்பட்டு வரும் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தெரியாத திரண் உடையவர்களாகவே எமது முஸ்லிம் அரசியல்வாதிகளை காணக்கூயதாகவுள்ளதே தவிர எந்த அரசியல்வாதியும் பொதுபல சேனாவை கண்டிக்கவோ அல்லது அவர்களின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தவோ காரசாரமான எந்தப் பேச்சும் பேசாதாக மௌனிகளாக மாற்றுமதத்தவர்போல் இருப்பதானது முஸ்லிம் சமுகம் வெட்கித் தலை குணியவேண்டிய விடயம் என முஸ்லிம் சமய ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமயத்தை விற்றுத்தான் அரசியல் செய்யவேண்டுமானால் ஏன் சமுகம், சமயம் என்று கோசமிட வேண்டும் அதனை எதிர்ப்பவர்களின்பால் சென்று தமது தேவைகளையும், சுகபோகங்களையும் அனுபவிக்கவேண்டியதுதானே என முஸ்லிம் சமுகம் மீது அக்கறை செலுத்தாத அரசியல் வாதிகளுக்கு பாதிக்கப்படும் மக்கள் விடும் செய்தியாகும்.

எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும் தம்மிடம் முதலில் சமயப்பற்றும், அதன் மீது அபார அக்கறையும் இருக்கவேண்டும் அதனோடு எந்தவொரு இக்கட்டான நிலைமைகள் வந்தாலும் சமயத்தை பாதுகாக்கவும் அதற்காக குரல் கொடுக்கவும் கூடியதொரு அரசியல் தலைமைகளே முஸ்லிம்களுக்குத் தேவையென்பதே இனிவரும் காலங்களில் முஸ்லிம் சமுகம் சிந்திக்கவேண்டியுள்ளது.

தற்போது இஸ்லாத்திற்க எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சமுகமாக அவற்றிற்கு பதிலடி கொடுக்கக் கூடியதான உணர்வுள்ள திறமையான ஒரு புதிய சமுகம் கட்டியெழுப்பப்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம் சமுகம் விளித்தெழ வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையாகவுள்ளதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டிதொரு முக்கிய தருணமாகும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment