Sunday, June 30, 2013

* முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகள் .அரசியல் வாதிகளின் கவனத்திற்க்கு !!!!!!!


முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகள் .அரசியல் வாதிகளின் கவனத்திற்க்கு !!!!!!!

பயங்கரவாத யுத்தத்தின் போது முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததையும் ஜெனிவாவில் இலங்கை ஜனாதிபதி குற்றவாளியாக கைகட்டி நின்றபோது முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் மறந்து செயற்படும் இந்த ஜனாதிபதியை நாம் இப்போது தெரிந்துகொண்டோம்.

நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்துக்கொண்டு பயங்கரவாத்தை தூவும் இந்த கோத்தாவையும் நாம் தெரிந்துகொண்டோம்,

இப்போது நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது, இந்த சூழ்நிலையை வெகுவிரைவில் கட்டுப்படுத்தி மீண்டுமொறு ஆரோக்கிய நிலைமைக்கு இலங்கை நாட்டை மீட்டியெடுக்க முடியாது.

போகுகின்ற இந்த நிலை தொடருமானால்,
நாட்டில் குண்டுகள் வெடிக்கலாம், இரத்தங்கள் சிந்தலாம்,
இனமோதல்கள் தீவிரமடையலாம்,
வியாபார ஸ்தாபனங்கள் தீப்பற்றி எறியலாம்,
ஆனால் யார் யாருக்குச் செய்கின்றார் என்று தெரியாமல் மூன்று இனங்களும் மாறி மாறி மோதிக்கொள்ளும் சூழல் வெகுதூரத்தில் இல்லை.

ஒரு அரசியல் அவதானியாக(Political analysis) இருந்து இந்த எதிர்கூவலை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.

ஆனால் இந்த முஸ்லிம் எதிர்வாத, பெளத்த இனவாதப்போக்கை துரத்தி மீண்டுமொரு சமாதான போக்கை இலங்கையில் தோற்றுவிப்பதற்கு சில அவசர, அவசிய மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்,

1. நாம் அனைவரும் ஆளும் அரசாங்கத்தின் இரட்டைவேடத்தை சரிவர புரிந்துகொள்ள வேண்டும்,

2. ஆளும் கட்சியில் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்கள், மாகாண, மாநகர, நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும், அத்துடன் ஒரு மாத காலப்பகுதிக்குள் கட்சி மாற வேண்டும், (அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டிவிட்டு வெளியேறுங்கள்),

3. இலங்கையில் இயங்கிவரும் வெளிநாட்டு தூதுவரகங்களுக்கு இன்றைய நிலைமையை கடிதமூலம் தெறியப்படுத்த வேண்டும்,

4. மனித உரிமை அமைப்புக்கள், ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கு நிலைமையை நாளுக்கு நாள் அறியப்படுத்த வேண்டும், (இவர்கள் கொஞ்சம் பிசிதான், இருந்தாலும் தட்டி எழுப்பிவிடவேண்டும்),

5. இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அமைப்புக்கள் ஒத்த கருத்துக்கு வரவேண்டும்,

6. உலமா சபை தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும், (ஹலால் விவகாரத்தில் அரசின் கைக்கூலியாக மாறியது போது ஏனைய விடயங்களில் நாடகமாடக்கூடாது,)

7. முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகள் நாட்டுநடப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டும்,

8. எழுத்தாழர்கள், பத்திரிகையாளர்கள் தங்களது எழுத்துக்களை விமர்சனங்களை சிங்களம், அறபு மற்றும் ஆங்கிள மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும்,

9. முஸ்லிம் சமூகம் தங்களுக்கான தனியான ஊடகங்கள் இன்மையால் ஏற்பட்டிருக்கும் பாரிய நக்ஷ்டத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்,

10. பள்ளிகளை நிர்ணயிக்க பணஉதவி செய்யும் நிருவனங்கள் தற்காளிகமாக அவைகளை நிறுத்திவிட்டு, ஏற்கனவே இயங்கும் பள்ளிகளை பாதுகாப்பதிலும் அவைகளை உயிரூட்டுவதிலும் தங்களது முழுமையான பங்களிப்பைச் செலுத்த வேண்டும், (கொஞ்சம் கஸ்டமாக இருக்கும், சமூகத்தை, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் செய்துதான் ஆகவேண்டும்),

11. அரசாங்கத்தின் நடத்தைகளுக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவளிக்கும் இயக்கங்கள், தனிநபர்கள் இத்துடன் அவைகளை நிறுத்த வேண்டும்,

12. இந்த க்ஷாத்தான்களிடமிருந்து பாதுகாப்புவேண்டி நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

13. முழுக்க முழுக்க தோல்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் நன்றியை மறந்து இனத்துவேசத்தை பயிரிடும் அரசாங்கள் வெகுவிரைவில் வீடு திரும்பும், இன்க்ஷா அல்லாஹ்.

’மாற்றங்கள் செய்வோம், மாற்றங்கள் எப்போது சாத்தியமானதே’

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

நான் பார்க்கும் உலகம்

Thursday, June 27, 2013

Sri Lanka: Muslims under threat again (Part 1)



The ethnic cleansing of Rohingya Muslims in Myanmar has shocked the world and drawn attention to rising Islamophobia in Asia. Now Muslims in Sri Lanka are under dire threat as well.


The similarities with Myanmar are striking and foreboding. Buddhist monks are at the forefront of the rising hatred, the government is taking sides against Muslims and attacks have begun.

Full scale violence is threatening to break out to create another catastrophe for Muslims in the region.
There have already been a series of attacks on mosques and Muslim places of work.

Hard line, ultra nationalist groups led by Buddhist monks such as Buddhist Strength Force (BBS) and Sinhala Echo preach the same message as those of the Buddhist Rakhine in Myanmar: "Muslims are taking over, they are building too many mosques and are trying to destroy our culture."

On this week's INFocus we document the rising crisis in Sri Lanka and attempt to bring the world’s attention to the issue before it’s too late. 

Wednesday, June 26, 2013

* சஹ்பான் மாதம் தன்சல் அன்னதானத்தை !!!!! பிரமதச்சடங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் ஆக்கியதா ஜம்மியத்துல் உலமா ?!!!!


சஹ்பான் மாதம் தன்சல் அன்னதானத்தை !!!!!
பிரமதச்சடங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் ஆக்கியதா 
ஜம்மியத்துல் உலமா ?!!!!


நன்மைகள் உயர்த்தப்படும் மாதம் பட்டோலைகள் மாற்றப்படும் மாதம் 
ஹலாலான ஹராம் !!!!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தளம் மத்திய சந்தை முஸ்லிம் வியாபாரிகளால் பகல் அன்னதானம் (தண்சல்) வழங்கப்பட்டது.

ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனையின் நிமித்தம் இந்த நிகழ்வுகள் ?!!!!!!

ஒருஹராமான சம்பவம் இடம்பெறும்போது அந்த சம்பவத்தை தட்டிக்கேற்பதற்கும்
அது பிழை என்று அறிக்கை விடுவதற்கும் நபிவாரிசுகளுக்கு பணம் கொடுக்க
வேண்டுமா இவர்கள் செய்தது பிழை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை
என்று அறிக்கை விடுவார்களா ?!! ஜம்மியத்துல் உலமா வின் கடமை என்ன ?!!
சென்ற வருட உல்ஹியா நாட்களை மாற்றி அமைத்தார்கள் கொத்துபா மேடையை
அரசியல் மேடையாக்கினார்கள் !!இன்று காணாமல் போய்விட்டார்கள் !!!!அதுமட்டுமா
கோத்தாபய ராஜபக்ஸ ஜம்மியாவின் நிழல் தலைவர் போன்றுள்ளது ?!!!!
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 7049.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
Faiyaz Fahim அல்லாஹ்வின் ரசூலுக்கு கூட அதிகாரம் இல்லாத விடயங்களில் தலை இடாதீர்கள். அல்லாஹ்வின் பிடி கடுமையானது! அல்லாஹ் எல்லா ஆபாதுக்களில் இருந்தும் நம் ஊரை காப்பாற்றி இருக்கின்றான். வானத்தில் போகின்ற முசிபத்துக்களை ஏணி வைத்து இறக்கிவிடதீர்கள்!

17:74. (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

75. அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 14. '

என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:1,Book:2
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 7049.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume:7,Book:92
Mohamed Hashmath இஸ்லாத்திற்காக எதனையும் விட்டுக்கொடுக்கலாம், ஆனால் எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க முடியாது, இது தான் ரஸூலுல்லாவினதும் ஸஹாபாக்களினதும் நாம் கானக்கூடிய உன்மை.

ஜம் இய்யதுல் உலமா இதற்கு வழிகாட்டியது என்றால் அச்சரியமில்ல, ஏனென்றால் முஸ்லீம்களுக்காக என்று ஆரம்பித்த ஹலாலை பேரினவாதிகளுக்காக் விட்டுக்கொடுத்த போது இது ஒன்றும் பெரிதல்ல. என்றாலும் "ஹலாலை விட்டால் இன்னும் நிறைய விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டிவரும்" என ஜம் இய்யாவின் தலைவரே கூறியது ஞாபகப் படுத்தத் தக்கது. இதுவும் அவ்வாறான விட்டுக்கொடுப்புத் தான்.

அன்னியக் கலாச்சாரத்தை பின்பற்ற இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? இன்று இதைச் செய்தவர்கள் நாளை போதி பூஜாவுக்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்...?
முஸ்லிம் சமூகமே தட்டிக்கேற்க வேண்டியவர்கள் தட்டிக்கொடுப்பார்கள் அவர்களை பின்பற்றாது குரான் ஹதீசை
பின்பற்றவும்
நான்பார்க்கும் உலகம்

Monday, June 17, 2013

* கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்...



கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்...

மூதூர் முறாசிலிடமிருந்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்


கௌரவத்திற்கும் மதிப்பிற்குமுரிய ஞானசார தேரர் அவர்களே,

எந்த இறைவன் உங்களையும் என்னையும் எல்லோரையும் படைத்தானோ அந்த இறைவனிடம் பிரார்த்தித்து ஆரம்பிக்கின்றேன்.

நான் உங்களது பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் ஊடகங்கள் வாயிலாகவும் நேரிலும் அவதானித்தவன் என்பதனால் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இத்திறந்த மடலை வரைகின்றேன்.

பௌத்த சமயத்தை கற்றுணர்ந்த (பௌத்தர்களின்) வணக்கத்திற்குரிய உங்களோடு ( பதுளை ஒன்று கூடலின் பின்பு) அவசரமாக வரையும் இம்மடல் மூலம் நான் பேசும் விடயத்திலும் பேசும் முறையிலும் ஏதும் பிழைகள் இருந்தால் அதனை மன்னித்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்.

ஞானசார தேரர் அவர்களே,

பௌத்த மதம் ஏனைய மதங்களை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கூறுவதையும் செயற்படுவதையும் தடுத்துள்ளது என்பதை நான் படித்திருக்கின்றேன். அதனால் பௌத்த மதப் போதகரான ஒருவருக்கு ஏனைய மதங்கள் புண்படும் வகையில் கருத்துக் கூறுவதற்கும் செயற்படுவதற்கும் முடியாது என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே பொது பல சேனாவினது முக்கிய நோக்கமென அடிக்கடி கூறிவரும் உங்களால் பௌத்த மதத்திற்கு எதிராக இயங்குதல் ஆகுமா என்று முஸ்லிம்களைவிடவும் சிங்கள மக்கள்தான் கேட்கின்றனர்.

ஏனைய சமயங்களை புண்படுத்துவதை தடுக்கும் பௌத்த மதத்தில் இருந்து கொண்டு அதனை பாதுகாப்பதே நோக்கமென்றும் கூறிக்கொண்டு ஏனைய மதத்திற்கு எதிராக நீங்கள் வாய்க்கு வந்த மாதிரி பேசுவதற்கு முடியுமா என்று அவர்கள் வினவுகின்றனர்.

பௌத்த மதம் பொய் பேசுவதை தடுத்துள்ளது. இஸ்லாம் மார்க்கம் பொய் பேசுவதை பெரும் பாவமாக கருதுகின்றது. ஏனைய சமயங்களும் பொய்பேசுவதை விலக்கியே உள்ளன. ஆனால் பௌத்த மதத்தைக் காக்க வந்த நீங்கள் எப்படி சரளமாக பொய்யை பேசுகின்றீர்கள் என்றுதான் எல்லோரும் அங்கலாய்க்கின்றனர்.

உண்மையில் பௌத்த மதத்தில் நீங்கள் பற்றுதல் வைத்திருந்தால் புத்தபெருமானை நேசிப்பவராகவும் அவரது போதனைகளைப் பின்பற்றுபவராகவும் இருந்தால் ஏனைய இனத்தவர்களுக்கெதிராக நீங்கள் ஒரு போதும் செயற்படமாட்டீர்கள் என்று பௌத்த சகோதரர்கள் பலரும் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கின்றேன்.

அப்படியென்றால் உங்களைப்பற்றிய பௌத்த மக்களது மதிப்பீடு எத்தகையது என்பதை நான் கூறவேண்டிய தேவையில்லை.

உங்களது வித்தியாசமான கருத்துக்களால் மக்கள் உங்களை வித்தியாசமாகவே பார்க்கின்றனர்!

பௌத்த மதத்தைச் சேர்ந்த சின்னஞ் சிறுசுகள் கூட உங்களை நீங்கள் விரும்பாத பெயர் கூறி அழைப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கள சகோதரரின் வீட்டில் நான் பேசிக் கொண்டிருந்தபோது தொலைக்காட்சி செய்தியொன்று உங்களது ஏதோ ஒரு கருத்தை ஒளிபரப்ப ஆரம்பித்தது.

அதனை அவதானித்த இரண்டு குழந்தைகளில் ஒன்று ' அர.......' (அந்தா..........) என்று உங்களுக்கு ஒரு பட்டபெயர் சூட்டி கேளியாக சிரித்ததை பார்த்த நான் ' எஹம கியன்ட எபா'( அப்படி சொல்ல வேண்டாம்) என்று அவர்களிடம் கூறினேன்.

அப்போது என்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த சிங்கள சகோதரர் ' அவர் செய்கிற வேலையும் அப்படித்தான்' என்று கூறியதுடன் உங்களை சம்பந்தப்படுத்தி 'கிரேன் பாஸ் வழக்கு' தொட்டு பல்வேறு விடயங்களைக் கிண்டிக் கிளறினார். உங்களைப் போன்றவர்களால் புத்த பெருமானின் போதனைகள் சிதைக்கப்படுவதாகவும் நீங்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே நோக்கமென்று கூறி அதனை அழிப்பதாகவும் ஆவேசப்பட்டார்.

இலங்கையில் முதன்முதலாக தீக்குளித்து தனது இன்னுயிரை தியாகம் செய்த தேரரின் செயலையும் கடுமையாக விமர்சித்த அவர் அவரது தியாகத்தை சிலரின் பணத்திற்கு ஏற்பட்ட அநியாயமாகவும் விளக்கினார். எது எப்படியிருந்தபோதும் அவரது கருத்துக்களில் நான் முழுமையாக உடன்படவில்லை. அதற்குக் காரணம் வேறு ஓர் விடயமாகும்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்கள் மீது ஆவேசமாக கருத்துக் கூறுவதைப் போல உங்களுக்கெதிராக ஆவேசமாக கருத்துக் கூறும் சிங்களச் சகோதரர்கள் ஏராளமாக உள்ளதை என்னால் காணமுடிகிறது.

ஆனாலும் அவர்கள் அவேசமாகக் கூறும் கருத்துக்களில் வெறும் ஆவேசம் மட்டுமன்றி ஆழ்ந்த உண்மைகளும் உறைந்திருப்பதை உணரமுடிகிறது.

இந்த அரசாங்கத்தில் அதிகார பலத்திலிருக்கும் 'நீங்கள் கூறும்' ஓரிருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவருமே உங்களுக்கெதிரான கருத்திலேயே இருக்கின்றார்கள்.அரசாங்க அமைச்சர்களும் பொறுப்பு வாய்ந்த பௌத்த மதக்குருக்களும் நீங்கள் கட்டிக்காத்து நிற்கின்ற பொது பலசேனா அமைப்பை 'பொய்' சேனா அமைப்பாகவே பார்க்கின்றனர்! ஆனால், நான் உங்களையோ அல்லது உங்கள் அமைப்பையோ முழுமையாக அவ்வாறு பாhக்கவில்லை.

எனவே, உங்களதும் உங்களது பொது பலசேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சிங்கள சகோதரர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதனை நீங்கள் கொஞ்சமாவது கவத்தில் எடுப்பது உங்கள் அமைப்பின் நோக்கத்தை சீரமைப்பதற்கு உதவுமென நான் கருதுகின்றேன்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதே உங்கள் அமைப்பின் முக்கியமான நோக்கமாக இருப்பின் பௌத்தர்களைப் பொருத்தமட்டில் நீங்கள் எடுத்துக்காட்டும் அந்த நோக்கம் மிகப்புனிதமானது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். நீங்கள் இயக்கமாகச் செயற்படுவது ஒருபுரமிருக்க பௌத்தர்கள் ஒவ்வொருவருமே அந்த நோக்கத்தை தலைமேல் எடுத்துச் செயற்படுவது இன்றியமையாதாகும். இதேவேளை, அந்த உன்னத நோக்கத்தில் உடன்படாதவர்கள் உண்மையான பௌத்தர்களாக ஒருபோதும் இருக்கமுடியாது என்பது வெளிப்படையான விடயமாகும்.

இந்தவகையில் பொளத்த மதத்தைப் பாதுகாப்பதே பொதுபலசேனாவின் முக்கியமான பணி என்று நீங்கள் கூறுவதை முஸ்லிம்களுக்கு எதிரான உங்கள் பணியோடு ஒப்பிட்டு எவராவது ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இலங்கையில் இருக்கும் பௌத்தர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான பௌத்தர்களா? என்ற கேள்விக் குறியொன்று எழவே செய்யும்.

இவ்வேளையில்,பொது பலசேனாவையும் உங்களையும் ஒருபக்கம் வைத்துக் கொண்டு யார் உண்மையான பௌத்தர்கள்? என்ற ஒரு சிக்கலான வினாவிற்கு விடையைத் தேடும்போது பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் சிலரின் கூற்றுக்கள் அந்த வினாவிற்கு விடை காண உறுதுணை புரிவதோடு உங்களையும் பௌத்தத்தையும் மிகத் தெளிவாக வேரறுத்து விடுகின்றன. அத்தகைய கருத்துக்கள் சிலவற்றை உங்களது பார்வைக்காகத் தருகின்றேன்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் பொதுபலசேனாவும்....?

கொள்கைப் போராட்டத்தின் அடிப்படைவாதிகள்...

' கொள்கைவாத போராட்டத்தின் அடிப்படைவாதிகளே முஸ்லிம் மக்களது மனதை நோகடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.பௌத்த மதமானது இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஆதரிக்காது.(2013.01.11ஆம் திகதியன்று கண்டி லைன்பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தது.)

பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை...

'பொது பலசேனா அமைப்பானது பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை. அது தேவதத்தனின் வழிமுறையில் செயற்படுகிறது' (2013.01.31 ஆம் திகதியன்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமசமாஜ கட்சியின் செயலாளர் விக்ரமபாகு தெரிவித்தது)

தலிபான் நிகாய...

' முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொது பல சேனா அமைப்பை நான் 'தலிபான் நிகாயயாகவே பார்க்கின்றேன்.' (2013.02.14ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தது.)

அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்....

'நாடு முழுதும் மதவாதத்தை தூண்டிவரும் பொது பல சேனா,சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.' (2013.02.14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் தினேஷ; குணவர்த்தன தெரிவித்தது.)

கட்டுக் கதைகள்....

'தற்போது வெற்றி பெற்ற சிங்கள தேசிய வாதத்தின் வழிநடத்துனர்களுக்கு அதனை தொடராக நிலைபெறச் செய்யவும் அதனை முன்னெடுத்துச் செல்லவும் புதியதொரு எதிரியொன்று தேவையாகவுள்ளது. முஸ்லிம்களும் அவர்களது கலாசாரமும் சிங்கள தேசிய வாதத்தின் எதிர் அடையாளம் என்பதை நிறுவுவதற்கான கட்டுக் கதைகளை முன்னெடுப்பது அதன் விளைவாகவேயாகும்.' (சட்டத்தரணி ஷpரால் லக்திலக்க எழுதிய கட்டுரையில் தெரிவித்தது. இக்கட்டுரை மீள்பார்னை இணையத்தில் 2013.02.19ஆம் திகதியன்று பதிவேற்றப் பட்டிருந்தது.)

அநீதிக்கு இடமில்லை....

' நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கெதிராக செயற்பட்ட சில பிக்குகளே முஸ்லிம்களுக்கெதிரான சூழ்ச்சியின் பின்னால் உள்ளதனை உணர்கின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் இதன் பின்னால் உள்ளதனை நான் அறிவேன்' (2013.03.01ஆம் திகதியன்று பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போது அவர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்தது.)

மத அடிப்படைவாதிகள்...

' மத அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஏனைய மதத்தவர்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றனர். இத்தகையவர்கள் மத ஒழுக்கங்களையோ மத தலைவர்களின் கருத்துக்களையோ பின்பற்றுவதில்லை.' (2013.03.02 ஆம் திகதியன்று பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மத சமத்துவ மாநாட்டில் பேசும் போது கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்தது.)

பொது பலசேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத்தலைவர்கள் அல்லர்...

'பொது பல சேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மடியாது.' ( 1013.03.13 ஆம் திகதியன்று ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தது. )

பொது பலசேனா அமைப்பினர்...

'பொது பலசேனா அமைப்பினர் முழுமையாகவே பௌத்த மதத்திற்கு விரோதமாகத்தான் செயற்படுகின்றார்கள்.' ( சிரேஷ;ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் 'விடிவெள்ளி'யின் நேர்காணலொன்றில் தெரிவித்தது. 2013.04.04)

ஞானசார தேரர் அவர்களே,

இக்கருத்துக்கள் வழியாகப் பார்க்கின்ற போது உண்மையான பௌத்தர்கள் யார் என்பது நான் கூறி நீங்கள் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல.

எனவே,இதே நிலையில் நீங்கள் கூறுகின்ற கருத்தும் பௌத்தரின் கருத்தாகவோ அல்லது பௌத்த மதம் தழுவிய கருத்தாகவோ இருக்கும் என்று நான் ஏற்றுக் கொண்டால் கூட வேறு எவரும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரமாட்டார்கள்!

ஞானசார தேரர் அவர்களே,

நான் இவ்வாறு கூறும் போது 'எனது கருத்தை ஏற்றுக் கொள்ளாது விட்டால் என்பின்னால் பெருந்தொகையான மக்கள் இணைந்திருப்பார்களா?' என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம்.

ஒருவகையில் அது பொருத்தமான கேள்வியாகப்பட்டாலும் உங்களது பேச்சைக் கேட்க ஒன்றிணைந்தவர்களை -நீங்கள் ஏற்பாடு செய்த பேரணிகளில் கலந்து கொண்டவர்களை மொத்தமாக அப்படி நோக்குவது பொருத்தமாகப்படாது. நானும் எனது நண்பர்கள் பலரும்கூட உங்களது கூட்டங்களின்போது வெறும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றோம்.

ஞானசார தேரர் அவர்களே,

உங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனேகர் உங்கள் கருத்தில் உடன்படுவார்களா என்பது கூட எனக்கு சந்தேகம். அவர்களில் பெரும்பாலானோர் 'சும்மா' ஒரு பொழுது போக்குக்காக கலந்து கொள்வதாகவே நான் கருதுகின்றேன்.

ஒரு உதாரணத்திற்காக கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை உங்கள் கவனத்திற்குத் தருகின்றேன். நீங்கள் 2013 மார்ச் 17ஆம் திகதியன்று கண்டி நகரத்தில் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் உங்களது பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலின் போது முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு வழங்கும் உணவுகளில் மூன்று முறை எச்சிலை துப்பியதன் பின்பு வழங்குகின்றனர் என்றும் அவ்வாறு துப்பிய பின்புதான் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றும் நீங்கள் பலமாக கருத்துக்களை முன்வைத்திருந்தீர்கள். ஆனால் உங்கள் கருத்துக்களை கேட்க வந்த சிங்கள சகோதரர்கள் முஸ்லிம்களது உணவகங்களில் இருந்ததெல்லாவற்றையும் முந்திக் கொண்டு வாங்கி சாப்பிட்டதன் மூலம் உடனடியாகவே உங்கள் கருத்திற்கு விளக்கம் கொடுத்ததைக் காணமுடிந்தது!

ஞானசார தேரர் அவர்களே,

பதுளை வீல்ஸ்பாக் மைதானத்தில் 2013.06.15ஆம் திகதியன்று இடம்பெற்ற ஒன்று கூடலில் பொளத்தர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று முத்திரை குத்திய நீங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பனிடவே வருகை தந்ததாகவும் புதிய கதையைக் கூறியுள்ளீர்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும்; விழுந்து விழுந்து சிரித்தேன். அப்போது பழைய ஞாhகமொன்று எனக்கு வந்தது. இதற்கு முன்பு நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோது இலங்கை அரசாங்கத்தில் உள்ள ஒருவர் 'உங்களை அந்த கொழும்பு பக்கமாக உள்ள எங்கேயோ அனுப்ப வேண்டும் என்று சொன்னாரே... அந்த ஞாபகம்... அது உங்களுக்கு ஞாபகமோ என்னவோ தெரியாது!

நீங்கள் இலங்கையின் வரலாற்றை கட்டாயம் படிக்க வேண்டும். நான் இவ்வாறு கூறும்போது 'இல்லை நான் வரலாற்றைப் படித்திருக்கின்றேன்' என்று நீங்கள் கூறுவீர்களாயின் நான் ஒரு போதும் அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

நாங்களும் வந்தவர்கள்தான், நீங்களும் வந்தவர்கள்தான், கொஞ்சம் முந்திப் பிந்தி! நாங்கள் ஏன் வந்தோம்? எப்போது வந்தோம்? என்று தெளிவொன்று தேவையென்றால் பள்ளிக் கூடம் செல்லும்; ஒரு சின்னப் பிள்ளையை கேட்டாலே போதும் விளக்கம் கிடைக்கும்.

ஞானசார தேரர் அவர்களே,

சிறி ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை சிரேஷ;ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் 'விடிவெள்ளி'யின் நேர்காணல் ஒன்றில் வரலாற்றை மையப்படுத்தி சிறுபான்மையினரை ஓரங்கட்டும் நிலைமை சம்பந்தமாகக் கேட்கப்பட்டபோது அவர் தெரிவித்ததை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

'உண்மையில் இது மனிதாபிமானமற்ற தீவிரவாதக் கருத்தாகும். இது சிங்கள பௌத்தர்களின் கருத்தல்ல.எந்தவொரு சிங்களவரும் அப்படி சொல்ல மாட்டார். சிங்கள இனத்தில் யாராவது அப்படி சொன்னால் அது மிகப் பெரிய தவறு.

வரலாற்றை மையப்படுத்தி கதைப்பதென்றால் சிங்களவர்களாலும் இங்கு இருக்க முடியாது. 2600 வருடங்கள் பழைமை வாய்ந்த வரலாறுதான் அவர்களுக்குமுள்ளது. அதற்கு முன்னரும் இந்த நாட்டில் மக்கள் வாழ்ந்தற்கான மிகப் பழமைவாய்ந்த தொல்லியல் பதிவுகள் காணப்படுகின்றன. பல இனங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவ்வாறு வாழ்ந்தவர்கள் சிங்களவர்கள் என்பதற்கான எந்த பதிவுமில்லை. அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினர் என்று கூட அறியமுடியாமல் உள்ளது.

எனவே, அவ்வாறானதோர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமேயானால் சிங்கள பௌத்தர்களாகிய எமக்கும் இந்நாட்டில் வாழ முடியாது. எமக்கு முன்பு பல ஆதி குடிகள் வாழ்ந்துள்ளனர்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிராக ஏதாவது கருத்துக்களைக் கூறும் போது உங்களைப்பற்றி சரியாக அறிந்து வைத்துள்ள முஸ்லிம்கள் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத போதும் உங்கள் கருத்துக்களை ஜீரணிக்காத- ஜீரணிக்கவே முடியாத பௌத்த குருமார்கள் அல்லது பௌத்த சகோதரர்கள் கூறும் பதிலை நீங்கள் கரிசனையுடன் படித்தல் வேண்டும்.

நீங்கள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை குறித்து மோசமான கருத்துக்களைப்பரப்பி வந்த போது கலாநிதி வஜிர சிறி நாயக்க தேரர் கூறிய கருத்து உங்களது கருத்தின் அடிப்படையையே அழித்திருக்குமென்று நினைக்கின்றேன். கலாநிதி வஜிர சிறி நாயக்க தேரர் கூறிய அக்கருத்தின் சில வாசகங்களை உங்களுக்குத் தருகின்றேன்.

' முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்க மிக்கது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்ற பெண்களை பார்ப்பது ஹராம்,வட்டி எடுப்பது ஹராம். இவை நல்ல விடயங்கள். ஹராம் ஹலால் என்று பேசிப் பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்றவேண்டும்'.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை மனம் போன போக்கில் பேசுவதாக அந்தந்த விடயங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

முஸ்லிம்களது எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக நீங்கள் கருத்துத் தெரிவித்த போது பல பௌத்த சகோதரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு எதிராக சரியான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

கண்டி,உடுநுவர பிரதேசத்தில் 2013.02.05ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க முஸ்லிம்களின் சனத்தொகை அதிரிப்பு சம்பந்தமாக தெரிவித்த கருத்தொன்றை மாத்தரம் உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன். அக்கருத்து இதுதான்:

'முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை மேற் கொள்ளப்பட்டுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களது சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையைவிட அதிகரித்துள்ளதாக எங்கும் காணமுடியவில்லை.'

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிராக முன்பின் பார்க்காமல் கருத்துக் கூறுவதைப் கேட்கின்றபோது முஸ்லிம் சகோதரர்கள் மட்டுமல்ல ஏனைய இன சகோதரர்களும் சிரிப்பதைப் பார்த்திருக்கின்றேன்.

2013 மார்ச் 19ஆம் திகதியன்று தமிழகத்தில் சிங்கள பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் இயங்கும் இஸ்;லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றுக்கு சம்பந்தமுள்ளதாக நீங்கள் குற்றம் சுமத்தி இருந்தீர்கள். அவ்வாறு நீங்கள் குற்றம் சுமத்தும் போது இந்திய ஊடகங்கள் பிக்குவை தாக்கியது யாரென்பதை உலகத்திற்கே தெரிவித்துவிட்டன.

இத்தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்லர் அவர்கள் வேறு இனத்தவர்கள் என்பதை புகையிரத நிலையத்தில் பொருத்தியிருந்த இரகசிய கமரா காட்டிக் கொடுத்ததைத் தொடர்ந்து அத்தாக்குதலை நடத்தியவர்கள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதும் உங்கள் கருத்துக்கள் ஊடகங்களில் வழம்வந்து கொண்டிருந்தது.

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களுக்கெதிராக ஆதாரமற்ற கருத்துக்களை கற்பனை பண்ணிக் கூறுகின்றீர்களா? அல்லது முஸ்லிம்கள் சம்பந்தமாக நீங்கள் அறிந்தவற்றை மட்டும் வைத்து கூறுகின்றீர்களா? அல்லது உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக யாராவது இவ்வாறுதான் கூறவேண்டும் என்று கூறும் ஆலோசனைப்படி கூறுகின்றீர்களா? இவ்வினாவிற்கு திடமான பதிலைத் தேடிக் கொள்ளுவது உங்களுக்கு உதவியாக அமையும்.

' புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாத்தின் பாசறைகள், அரபு மத்ரஸாக்கள் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்கள்' என்று ஒரு பிரசித்தமான வரைவிலக்கணத்தை வரைந்துள்ளீர்கள்.இந்த வரைவிலக்கணத்தை வரைவித்தது யார்? இந்த வரைவிலக்கணத்தின் முதல் பகுதியை 2013.01.22ஆம் திகதியன்றும் இரண்டாம் பகுதியை 2013.06.05ஆம் திகதியன்றும் உலகறியச் செய்தீர்கள். இதில் கொஞ்சமாவது உண்மை உண்டா?! உங்கள் மனதில் கையை வைத்துக் கேளுங்கள்!

இவ்வாறு நீங்கள் வரைவிலக்கணம் செய்த போது ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் எனக்கு ஏற்படுகின்றது. நான் எந்த இறைவனை தொழுகின்றேனோ அந்த இறைவனை தொழுவதற்காக அமைக்கப்பட்ட பள்ளிவாசலைப் பற்றியாவது உங்களுக்கும் என்னோடு இந்நாட்டில் இணைந்து வாழும் ஏனைய சகோதரர்களுக்கும் சரியான புரிதலை உருக்கவேண்டிய முஸ்லிம்கள் மீதும் – அவர்களில் ஒருவனாகிய என்மீதும் சுமத்தபட்ட பொறுப்பை நான் சரியாகச் செய்ய வில்லை என்பதை நினைக்கும் போதுதான் எனக்கு கவலை ஏற்படுகின்றது.

அதேபோல் எந்த இறைவனை ஏன், எவ்வாறு தொழவேண்டும்? மனித வாழ்வின் இலட்சியம் என்ன? பூரணமான வாழ்கை வழிகாட்டல் எது? என்பவற்றை போதிக்கும் அரபு மத்ரஸாக்களைப் பற்றிய சரியான புரிதலை உங்களுக்கும் என்னோடு இந்நாட்டில் இணைந்து வாழும் ஏனைய சகோதரர்களுக்கும் உருவாக்கவேண்டிய முஸ்லிம்கள் மீதும் –அவர்களில் ஒருவனாகிய என்மீதும் சுமத்தபட்ட பொறுப்பை நான் சரியாகச் செய்ய வில்லை என்பதை நினைக்கும் போதுதான் எனக்கு மேலும் கவலை ஏற்படுகின்றது.

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களது பள்ளிவாசல்களைப் பற்றியும் அரபு மத்ரஸாக்கள் பற்றியும் அங்கு நடப்பவை பற்றியும் நீங்கள் சரியாக விளங்கிக் கொள்வதற்கு உங்களையும் என்னையும் படைத்த இறைவன் எனக்கு தந்துள்ள அத்தனை உரிமைகளையும் உங்களுக்கும் தந்துள்ளான்.

எனவே,பள்ளிவாசல், அரபுக்கல்லூரி முதலானவை பற்றி அறிந்து கொள்வதற்கு நீங்கள் விரும்புவீர்களாக இருந்தால் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் கூறும் எந்தவொரு பள்ளிவாசலுக்கும் அத்தோடு எந்தவொரு அரபு மத்ரஸாவுக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் அழைத்துச் சென்று அங்கு நடப்பவற்றை நுணுகி ஆராய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை எந்தவொரு நிபந்தனையும் இல்லாது வழங்குவதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்.

நீங்கள் பள்ளிவாசல்கள் அரபு மத்ரஸாக்கள் சம்பந்தமாக உண்மையைக் கண்டறிவதற்கு முயற்சி எடுக்கும்போது அம்முயற்சியை என்னையும் உங்களையும் படைத்த இறைவன் விரும்பிக் கொள்வானாக இருந்தால், என்னைவிட உயர்ந்த பேறுக்கு சொந்தக் காரராக மாறும் அதிர்ஷ;டம் கூட உங்களை வந்தடைலாம்!

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களிடம் நீங்கள் குறை கண்டால் அது பற்றி உரத்துப் பேசுங்கள். முஸ்லிம்கள் திருந்திக் கொள்வார்கள். ஆனால் உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வேதத்திலும் அவனைத் தொழும் பள்ளிவாசலிலும் அத்தொழுகையைக் கற்றுக் கொடுக்கும் அரபு மத்ரஸாக்களிலும் இல்லாததை இருப்பதாக இனியும் பேச முனையாதீர்கள்!

எனது இத்திறந்த மடலுக்கான பதிலை உங்களது மனப் புத்தகத்தில் எழுதி, அதன் பிரதியை திறந்த வழியிலோ அல்லது எனது மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்!

எந்த இறைவன் உங்களையும் என்னையும் எல்லோரையும் படைத்தானோ அந்த இறைவனை மீண்டும் பிரார்த்தித்து முடிக்கின்றேன்.

நன்றி.

இப்படிக்கு,

மூதூர் முறாசில்.

* பிறந்த நாளில் பிரித் ஓதல் ?!! ஹலாலான ஹராம் !!!!!!! உணரமறந்த உலமா ?!!!!!


பிறந்த நாளில் பிரித் ஓதல் ?!! ஹலாலான ஹராம் !!!!!!!
உணரமறந்த உலமா ?!!!!!


முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம்

உணரமறந்த உண்மைகள் அநீதமானதாக இருந்தாலும் இந்த அறிஞர்கள் முண்டியடித்து ஒத்தூதுவார்கள்.
நீண்ட ஆயுள் வேண்டி பிக்குகள் பிரித் ஓத ஜம்மியத்துல் உலமாதலைவர்
ரிஸ்வி முப்தி தலைமைதாங்கினார் !!!!தட்டிகேட்கவேண்டியவர்
தட்டிக்கொடுத்தார் ஹராம் ஹலால் அனுமதுயுடன் இனிதே நடந்தது
உண்மையை உணர மறந்த உலமாசபை தலைவர் முஸ்லிம் சமூகத்தை
தட்டி கேட்கும் தகுதியை இழந்து நிற்கும் கோலம் !!!!!
வரதட்சனை திருமணங்கள் ஆடம்பர நிகழ்ச்சிகள் ஆகுமாக்கப்படாத
கூட்டங்க்கல் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உலமாக்கள் தலைமை தாங்குவதால்
அவை ஹலால் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றன
ஜனாப் ரிஸ்வி முப்தி குழுவினர் கும்மாளத்துடன் செய்த நீதித் தவறிய செய்கையின் தவறுகளில் கட்டாயமாக பங்கேற்றுக் கொள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது.
தாம் செய்த தவறை உணர்ந்துக் கொள்ளும் அறிவில் ஜனாப் ரிஸ்வி முப்தியோ அல்லது அவரது அடிவருடி லெப்பைமார்களோ இல்லை.
இதன் பிறகாவது இலங்கை முஸ்லிம்கள் தமதிருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளில் சுயமாக முடிவெடுக்கும் நிலைமைக்கு தமது அறிவை உபயோகிக்க வேண்டுமென்று நாம் தயவுடன் வேண்டுகிறோம்.
அநியாயக்கார மதகுருமார்களுடன் ஒன்றாக அவர்களது அநியாயங்களுக்குத்
துணை நிற்பதும், சுயநல அரசியல் தலைமைகளுக்கு துணை நிற்பதும் நமது சமூகத்தின் எதிர்கால தன்னிருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துப் போகும்.
இன்று நாம் அறிந்தே அனுமதிக்கின்ற செய்கைகள்தான் நம்மை அறியாமலே நமது நாளைய நாளை தீர்மானிக்கப் போகிறது.
எங்களது அறியாமையை தெளிவு படுத்த முன்வராத ACJU அமைப்பினரின் செய்கையில் அவர்களது சுயநலம் பொதிந்திருக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதிக்கு தமது குழுவினர் கிஞ்சித்தும் தகுதி இல்லை என்ற விடயத்தை இப்படி பிரசித்தமாக வெளிப்படுத்திய துணிச்சலான செய்கைக்கு என்ன சொல்ல முடியும்?
அவர்களின் துணிச்சலான முரண்பட்ட அந்த செய்கைக்கு நமது வாழ்த்துக்கள்.

நான் பார்க்கும் உலகம்

Saturday, June 15, 2013

* தம்புள்ளை மஸ்ஜிதும் ஹில்மிகரீமும் !!!


தம்புள்ளை மஸ்ஜிதும் ஹில்மிகரீமும் !!!


மதிப்புக்குரிய நகரபிதா ஹில்மிகரீம் அவர்களே நான் மாத்தளை யை சேர்ந்தவன் நீங்கள் கூரு கிறீர்கள் 
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் அமைந்திருப்பதால் அதன் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்குண்டு. இந்த வகையில் ஜனாதிபதி மாத்தளை அரசாங்க அதிபர், மற்றும்நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி நல்லதோர் தீர்னவினை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இதற்கு பள்ளிவாசல் நிர்வாக சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று !!!
சற்று சிந்தித்துபாருங்கள் மதிப்புக்குரிய ஜானக தென்னகோன் ஜனாதிபதியோடு தர்க்கம் புரிகிறார் எங்கள் உரிமைக்காக
நீங்களோ போதுபெரமுனவில் வெத்திலை சின்னத்தில் போட்டியிட்டவர் சமூகம் தந்த பொன்னான வாக்குகளை பெற்று
மேயர் ஆனீர் அரசுக்கு விசுவாசமாக எங்கள் உரிமையை பறித்து கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சோனகனாக
இருந்துக்கொண்டு குழிவெட்டும் உம்மைவிட சிங்கள சமூகத்தை சேர்ந்த ஜானக தென்னகோன் எவ்வளவோ மேல் !!!!!!
அன்று பள்ளிவாசல் தாக்கப்பட்டவேளை நீங்கள் என்னநடவடிக்கை எடுத்தீர்கள் ?!!!
அடுத்தநாள் ஹிஸ்புல்லாவுடன் விஜயம் செய்து பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று அறிக்கை விட்டீர் !!!!!!!!
எவ்வளவு கபடத்தனம் !!!உங்களைபோன்ற சமூகத்தை காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு எப்படி பள்ளிவாசல் நிர்வாக சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று !!எதிர்பார்க்கிறீர் தயவுசெய்து இந்தவிடயத்தில் உங்கள் பெரிய தலையை நுழைத்து
உள்ளதையும் இல்லாமல் ஆக்கிவிடவேண்டாம் உங்களால் பள்ளிவாசல் பறிபோனால் மாத்தளை முஸ்லிம்
இளையோர் முதியோர் தாய்மார்கள் சகோதரிகள் எல்லோரும் வீதிக்குவந்து உமது செய்கைக்கு எதிராக போராடுவோம்
தோல பிடி ஆதரவை நீங்கள் இழக்கவேண்டி ஏற்படும்? !!

இம்ரான் நாசர் மாத்தளை

Thursday, June 13, 2013

* சிந்திப்போம்..! செயற்படுவோம்...!!


சிந்திப்போம்..! செயற்படுவோம்...!!

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், வன்முறைகள் என்பன இலங்கை நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்ந்தும் முஸ்லிம்கள் மன உழைச்சலுக்கும், மத நிந்தனைகளுக்கும் அவதூறுப் பிரச்சாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொதுபலசேனாவின் பொதுக் 
கூட்டங்களின் தமக்குப் பின்புலமாக இருப்பது யார் என்பதை மிகத் தெளிவாகவே அவர்கள் அறிவித்துவிட்டார்கள். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களும் அரசியல் யாப்பின் அடிப்படையில் மக்களை வழிநடத்த வேண்டியவர்களும் இனவாத, மதவாத சக்திகளுக்குப் பக்க துணையாக மாறிவிட்டார்கள். பயிரை மேய வேலிகளே தயாராகிவிட்டன.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வாய்களுக்குப் பூட்டும், கைகளுக்கு விலங்கும் இடப்பட்டுள்ளன. தேர்தல் களங்களில் சிங்கங்களாக கர்ஜித்தவர்கள் பராளுமன்றத்தில் அசிங்கங்களாக அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் மேடைகளில் சீறிப் பாயும் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டனர். இவர்களைப் பாராளுமன்ற ஆசனங்களில் அமர வைத்து அழகு பார்ப்பதற்காக இந்த சமூகத்தின் எத்தனையோ இளைஞர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

முஸ்லிம் ஆன்மீகத் தலைமை மீது இருந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக சிதைந்து வருகின்றது. சிதைக்கப்படுகின்றது. இஸ்லாமிய அமைப்புக்கள் அடுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்க முடியாத நிலையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் சிலர் புதிய தலைவர்களைத் தேடுகின்றனர். அப்படிச் சிலர் உருவாகி வருகின்றனர். சமூகத்தை வழிநாடாத்தக்கூடிய அளவுக்கு அவர்களிடம் போதிய அனுபவமோ, ஆற்றலோ, அறிவோ இருக்க வாய்ப்பு இல்லை. மக்கள் இந்தத் தலைமைகள் பின்னால் சென்றால் எதிர்காலம் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது.

சட்டம் தன் கடமையைச் செய்தால் மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஆனால், இதுவரை நடந்த எந்த துரோகச் செயலுக்கும் எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. யாரும் கண்துடைப்புக்காகக் கூட கைது செய்யப்படவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் சில போது பொறுமையின் எல்லையைத் தாண்டும் சிலர் தவறான முடிவை எடுக்கலாம். அப்படி தவறான முடிவை எடுத்தால் அவர்களின் முதல் இலக்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அடுத்த இலக்காக இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களின் தலைவர்களும் அமையலாம். ஏனெனில், வெறுப்புக் கொண்டவர்கள் முதலில் வெறுப்பை உள்ளுக்குள்தான் வெளிப்படுத்துவார்கள். தமிழ் இளைஞர்களால் தமிழ்த் தலைவர்கள் குறிவைத்து குதறப்பட்டது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகலாம். எனவே, இந்த மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தலைமைகள் மீது உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினாலும் எல்லாப் பிரச்சினைகளையும் சட்ட ஒழுங்குகளுக்கும் ஜனநாயக மரபுகளுக்கமையவுமே நாம் எதிர்கொள்ள வேண்டும். பொதுபலசேனாவின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு அது உள்ளாகி இருக்கும். இப்போது கூட ஒன்றும் கை நழுவிப் போய்விடவில்லை. அவர்களின் மத நிந்தனைகள்,
அவதூறுகள் என்பவற்றுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களை ஆயுதப் போராட்டம் ஒன்றின் பக்கம் திருப்புவதற்காகத்தான் இப்படி தொடர்ச்சியான நெருக்குதல் கொடுக்கப்படுகின்றதோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. அப்படியொன்று நடந்துவிட்டால் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கலாம். தேடுதலின் பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இலங்கைத் தீவில் பயங்கரவாதம் இருக்கின்றது என்று கூறிவிட்டால் வெளிநாடுகள் கூட இலங்கைக்கு ஒத்துழைக்கும். அமெரிக்கா போன்ற இலங்கையோடு முரண்பட்டுள்ள நாடுகள் கூட இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கலாம். எனவே, பொறுமையும் சட்ட நடவடிக்கையுமே இன்று எம்முன்னால் உள்ள ஒரேயொரு முறையாகும்.

இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து நல்ல பௌத்த தலைவர்களையும், பிற சமூக மக்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நகர்வுகள் மூலமாகவும் சர்வதேச சட்டங்களூடாகவும் கூட எமது பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் சாசனம் சகல மதங்களுக்கும் சமத்துவமான உரிமையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் தான் விரும்பும் கொள்கையையும், மதத்தையும் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது. ஒரு இலங்கைப் பிரஜை இலங்கையில் எந்த இடத்திலும் விற்கலாம்ளூ வாங்கலாம். இதற்குப் பூரண உரிமை பெற்றுள்ளான். ஒருவன் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரம்
பெற்றுள்ளான். இவை அத்தனைக்கும் எதிராக பொதுபலசேனா செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் பௌத்தம் தவிர்ந்த ஏனைய கலாசாரங்கள் இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு தென்னந்தோட்டம் இருந்தால் அதை தென்னந்தோட்டம் என்றுதான் அழைக்கின்றோம். அங்கே இருக்கும் ஏனைய பயிர்கள் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை என அறிவிலித்தனமாக வாதாடுகின்றனர்.

இரு இலட்சம் தென்னை மரங்கள் இருக்கின்றன. அதைத் தென்னந்தோட்டம் என்போம். அதற்கு அருகில் இருபதாயிரம் மாமரங்கள் இருக்கின்றன. அதை மாந்தோப்பு என்போம். அதைத் தொடர்ந்து பத்தாயிரம் வாழைமரங்கள் உள்ளன. அதை வாழைத்தோட்டம் என்றுதான் கூறுவோம். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் சாதாரண களைகளாக இல்லை. தனித்தனித் தோப்புக்களாக உள்ளனர் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.

ஏனைய சமய கலாசாரத்தையும், தனித்துவத்தையும் மறுக்கும் விதமாகத்தான் இந்த உலக மகா தத்துவத்தை உதிர்ந்து வருகின்றார்கள் இந்த மாமேதைகள்(?).

ஒரு இலட்சம் தென்னை மரங்களுக்கு மத்தியில் ஒரு மாமரம் நிற்கின்றது. இந்தத் தோட்டத்தை தென்னந் தோட்டம் என்று கூறுவோம். பிரச்சினையில்லை. ஆனால், தென்னந் தோட்டத்துக்கு மத்தியில் ஒரு மாமரம் தனியாக நிற்பதால் அதில் மாங்காய் காய்க்கக் கூடாது, தேங்காய்தான் காய்க்க வேண்டும் என்று எந்த மாங்காய் மடையனாவது கூறுவானா? மாங்காய் காய்த்தாலும் அது தேங்காயுடைய அமைப்பில்தான்
இருக்க வேண்டும் என்று கூறுவானா? தென்னந் தோட்டத்துக்கு மத்தியில் இருப்பதால் அந்த மாங்காயைப் பிழிந்தால் சாறு வரக் கூடாது பால்தான் வர வேண்டும் என்பானா? சிங்களவர்கள் அதிகமாக வாழும் நாட்டில் வாழும் முஸ்லிம்களும் தங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிங்கள, பௌத்த கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற வாதமும் இவ்வாறே முட்டாள்தனமாக அமைந்துள்ளது.

இது ஒரு கலாசாரத் திணிப்பு, கலாசாரத் தீவிரவாதமாகும்.

முஸ்லிம்கள் தாடி வளர்ப்பதையும், முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கூறுகின்றனர். இஸ்லாம் சொன்னதால் அவர்கள் இப்படிச் செய்கின்றார்கள். இது அடிப்படைவாதம் என்றால் பௌத்த துறவிகள் மொட்டை அடிக்கின்றனர், ஏன் அடிக்கின்றனர் என்றால் பௌத்தம் சொல்கின்றமையால் செய்கின்றார்கள். அதனால் மொட்டையடித்துக் கொள்வதை யாரும் தீவிரவாதமாகக் கருதுவதில்லை. அதே போல முஸ்லிம்கள் தாடி வைப்பதையும் தீவிரவாதமாகக் கருதுவது பொருத்தமாகாது.

முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவது இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றால் பௌத்த துறவிகள் அணியும் ஆடை பௌத்த அடிப்படைவாதமாகும். முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படையிலும் பௌத்தர்கள் பௌதத்தின் அடிப்படையிலும் வாழ்வதுதான் சரியானது. ஒன்றில் இரண்டும் அவரவர் சமயத்தையொட்டியது என இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதமும் பௌத்த அடிப்படைவாதமும் பிழையானது என்று கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அவரவர் மதத்தின் அடிப்படையில் வாழ்வதை நாம் அங்கீகரிக்கின்றோம். ஆனால், பொதுபலசேனா பௌத்தர்கள் பௌத்தத்தின் பக்கம் மீள வேண்டும் என்று பிரசாரம் செய்யும் அதே நேரம், ஏனைய சமயத்தவர்கள் தமது தனித்துவமான சமய அடையாளங்களை விட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பது முரண்பாடாகவும், சுயநலம் கொண்ட தீவிரவாதப் போக்காகவும்
திகழ்கின்றது.

இவ்வாறு அறிவுக்கும் நடைமுறை உலகுக்கும், நீதி நியாயத்திற்கும், மனித நேயத்திற்கும், இலங்கை அரசியல் யாப்புக்கும், பௌத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு வரும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளை அரசு தடுப்பதுதான் இந்த நாட்டுக்கு நன்மை பயக்கும். இவர்களது இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடராக வழக்குகள் தொடுக்கப்படுவது எதிர்கால
சந்ததிகளுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும் என்பது கவனத்திற் கொள்ளப்படத்தக்கது.

இல்லையென்றால் எல்லா அநியாயங்களையும் அரங்கேற்றிவிட்டு முஸ்லிம்கள்தான் பிரச்சினைக்குரியவர்கள் என்ற தவறான தகவலை வரலாற்றுப் பதிவாக மாற்றி எம்மை குற்றவாளிகளாகக் காட்டுவார்கள்.

சிந்திப்போம்!..... செயற்படுவோம்!,....

Wednesday, June 12, 2013

* ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?


ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? 


-
இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுகின்ற பிரபல பேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டமொன்று கடந்த ஒன்பதாம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்றது அக்கூட்டத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாகவே நோக்கப்படுகிறது.

அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண ஆதரவுடன் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகரில் அமையப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள இவ்வேளையில் கடந்த ஒன்பதாம் திகதியன்று கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தை மூடவேண்டுமென்றும் அவ்வாறு மூடப்படாவிட்டால் அதற்கெதிராக தமது அமைப்பின் சார்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

மதிப்பிற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களே!

பல தசாப்த காலமாக பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த நமது இலங்கைத் திருநாடு சுமார் மூன்று ஆண்டுகளாகவே ஒரு நிம்மதியான சூழலில் காணப்படுகின்றது.இவ்வேளையில் பௌத்த மதத்தை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்ட நீங்கள் பௌத்தமதம் அழிந்து கொண்டிருக்கும் எந்தவொரு வாசல்களையும் மூடுவதற்கு முயற்சிக்காமல் வெறுமனே முஸ்லிம்களின் அடிச்சுவடுகளை மாத்திரம் அளிக்க எத்தனிப்பத்தேன்?

உண்மையில் இந்நாட்டில் நீங்கள் கூறுவது போன்று பௌத்தர்களுக்கு மதரீதியான சிக்கல்கள் இருக்குமானால் அதனை ஜனநாயக ரீதியான முறையில் தீர்த்துகொள்வதை புறக்கணித்து பயங்கரவாத செயல்பாடுகள் மூலம் தீர்க்க முற்பட்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுவதில் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்தான் என்ன?

அன்று விடுதலைப்புலிகள் தங்களின் அற்ப சொற்ப இலாபங்களுக்காக தமிழர்களுக்குப் பிரச்சினை என்னும் போர்வையை போர்த்திக்கொண்டேதான் அப்பாவித்தமிழ் மக்களையும் சீரழித்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பல தசாப்தங்களுக்கு பின் தள்ளிவிட்டுச் சென்றார்கள்.

இன்று நீங்களும் பௌத்தர்களுக்குப் பிரச்சினை என்று கோஷமிட்டுக்கொண்டு பிரச்சினைக்குரிய வாயிலை விட்டு விட்டு வெறுமனே முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளை நசுக்க முற்பட்டால் உங்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?

இலங்கை நாட்டிற்கு மிகவும் விசுவாசம் மிக்க குடிமக்கள் தாங்கள்தான் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்றும் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள் இந்நாட்டின் தலைவர்கள் சர்வதேச விசாரணை மன்றங்களில் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்பட்டு நின்றபோது உங்களின் நாட்டின் மீதுள்ள விசுவாசமும் அக்கறையும் எங்கே சென்று ஒழிந்தது?

ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறுபட்ட மதங்களும் பலதரப்பட்ட கலாச்சாரங்களும் இருப்பது ஒரு சாதாரண விடயம்.அந்த வகையில் இலங்கை நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.அடுத்தவர்களின் உரிமைகள் உணர்வுகளை மதித்து நடப்பதே மனித இயல்பின் அடையாளம்.ஆனால் ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கே வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ள மதப்போதகர்களாகிய நீங்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசி அப்பாவி மக்களை தவறானமுறையில் வழிநடாத்துவது தாங்கள் சார்ந்த மதத்திற்கு உகந்த ஒரு விடயமா? உண்மையில் கௌதம் புத்தர் பெருமான் இதைத்தான் போதித்துவிட்டுச் சென்றாரா?

முஸ்லிம்கள் தங்களின் மதக்கிரியைகளுக்காக தாங்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே அதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர்.முஸ்லிம்களின் எந்தவொரு வணக்க முறைகளும் யாதொரு சமூகத்திற்கோ தனிமதர்களுக்கோ எந்தவொரு வகையிலும் இடையூறு விளவிக்காதவையாகும்.இஸ்லாமிய வணக்கமுறைகளில் இசை கிடையாது, கூத்து கும்மாளங்கள் கிடையாது, ஊர்வலங்கள் கிடையாது இதய நோயாளர்களுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற பட்டாசு, வாண வேடிக்கைகளை காணமுடியாது.இன்னும் சொல்லப்போனால் பெருநாள் தினங்களில் கூட அந்நிய மதத்தினரோடு அழகான முறையில் உறவாடுகின்ற உன்னத சமூகமே முஸ்லிம் சமூகம்.

அவ்வாறிருக்க இந்நாட்டில் இளைஞர்களை வழி கெடுக்கின்ற எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.அதுவும் நீங்கள் எதனை புனித பூமி என்றும் புனித பிரதேசம் என்றும் அடையாள படுத்துகிறீர்களோ அப்பிரதேசங்களிலேயே சாராய விற்பனை நிலையங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள் என்னும் பெயர்களில் இயங்குகின்ற உல்லாச விபச்சார விடுதிகள், பலசூதாட்ட, களியாட்ட விடுதிகள் இன்னும் இது போன்ற சமூகங்களை, குடும்பங்களை குட்டிச்சுவராக்குகின்ற எத்தனையோ விடயங்கள் அரங்கேறுகின்றன.

இப்போது கூட சுமார் முப்பத்தியைந்து கோடி ரூபா செலவில் கொழும்பு சம்போடி விகாரைக்கு அருகில் மிகவும் நவீன முறையிலான சூதாட்ட விடுதியொன்று அமையப்பெறவுள்ளது.இக் கசினோ விடுதியினால் விகிதாசார அடிப்படையில் அதிகளவில் சூறையாடப்படுவது சிங்கள மக்களின் வாழ்வாதாரமும் கலாச்சாரமுமே. சிங்கள மக்களை பாதுகாப்போம் என்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்போம் என்றும் சந்து பொந்துகளிலெல்லாம் கொக்கரித்துத் திரிகின்ற நீங்கள் இக் கசினோ விடுதி விடயத்தில் ஆப்பிளுத்த குரங்குகள் போல் அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன?

பௌத்தத்தின் புனித பூமியான இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதற்கு எதிராக தீக்குளிப்புவரை சென்ற நீங்கள் (அது ஒரு நாடகம் என்பது வேறு விடயம்) கசினோ என்னும் பெயரில் இப்புனித பூமியில் நாளை நடக்கவிருக்கும் சூதாட்டத்திற்கு எதிராகவும் காம களியாட்டத்திற்கு எதிராகவும் எடுக்கவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைதான் என்ன?

* அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் முஸ்லிம் சமூகம் ?


அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் முஸ்லிம் சமூகம் ?
. 1500 மில்லியன் ரூபா செலவில்மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்?!!!


கமிஷன் அடிப்பதற்கு இஸ்லாத்தின் பெயரில் பணம் வசூல் ?!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் !!!!!!!

உலமாக்குரிய பல்கலைக் கழகத்தினை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமாம்?!!

அரபுநாட்டுஅரசால் வழங்கப்பட்ட சுனாமி வீடுகள் இன்றும் பாழடைந்து உள்ளது ?!!!
ஏன் அதை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை ?!!!
ஜாதிகஹெல உரிமையின் தலையீடு ?!!!!
இன்று து. 1500 மில்லியன் ரூபா செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் ?!!!!!
இதோ அத்த ஞான சங்கு ஊதுகிறான் !!!!!!!!
ரமழான் மாதம் வழங்கப்பட்டு பேரீத்த பழத்துக்கு நடக்கும் கதிதான் இதற்கும் ?!!!!

காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!

முஸ்லிம் சமூகத்தின் பெயர்சொல்லி சூட்சுமமாக கொள்ளையிடப்படும்
அரபுநாட்டு பணம் ?!!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் பங்குதாரிகள் ராஜபக்ச சகோதரர்கள் !!!!!!
ஆக முன்னர் கூறியது போன்று உலமாக்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், ஆலிம்களும் தமது மேற்கல்வியைத் தொடர வழி யுண்டு என்பதே, இந்த வசதி தற்போதும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உலமா என்ற பெயரைப் பாவித்ததன் பயனாக பொது பல சேனைவை உசுப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும் ஏதோ கனவுலகில் இருந்திருப்பார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களைப் பெற்று மக்களை நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

அதனால்தான் குர்ஆன், 49:6 – முஃமீன்களே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி யைக்கொண்டு வந்தால், அப்பொழுது தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள், என்கின்றது.
இதோ அந்த செய்தி

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!


பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழகத்தை காத்தான் குடியில் நிறுவப் போவதாக அறிக்கை விட்டார் . இந்த வருடம் இலங்கையில் முதல் முதலாக உலமாக்களுக்கான பல்கலை கழகத்தை ஆரம்பிக்க போவதாக அதேபோன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . பொது பல சேனா எதிர்த்தவுடன் உண்மையை சொல்லிவிட்டார் . அது பொதுவான சாதாரண பல்கலை கழகம் அதில் எல்லா இனவர்களும் இனைய முடியும் என்று சொல்கிறார்கள் எல்லாம் காத்தான்குடி மக்களுக்கு மத்தாப்பு காட்டும் வேலைதான் என்பது அவரின் அறிக்கைகளே தெளிவாக காட்டிக் குடுக்கிறது .

ஆமாம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழக கதையை மக்கள் வழமை போன்று மறந்து விட்டார்கள்

உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!

நான் பார்க்கும் உலகம்

* காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!


காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!

முஸ்லிம் சமூகத்தின் பெயர்சொல்லி சூட்சுமமாக கொள்ளையிடப்படும் 
அரபுநாட்டு பணம் ?!!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் பங்குதாரிகள் ராஜபக்ச சகோதரர்கள் !!!!!!
ஆக முன்னர் கூறியது போன்று உலமாக்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், ஆலிம்களும் தமது மேற்கல்வியைத் தொடர வழி யுண்டு என்பதே, இந்த வசதி தற்போதும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உலமா என்ற பெயரைப் பாவித்ததன் பயனாக பொது பல சேனைவை உசுப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும் ஏதோ கனவுலகில் இருந்திருப்பார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களைப் பெற்று மக்களை நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

அதனால்தான் குர்ஆன், 49:6 – முஃமீன்களே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி யைக்கொண்டு வந்தால், அப்பொழுது தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள், என்கின்றது.
இதோ அந்த செய்தி

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!

* காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!


காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!


பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழகத்தை காத்தான் குடியில் நிறுவப் போவதாக அறிக்கை விட்டார் . இந்த வருடம் இலங்கையில் முதல் முதலாக உலமாக்களுக்கான பல்கலை கழகத்தை ஆரம்பிக்க போவதாக அதேபோன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . பொது பல சேனா எதிர்த்தவுடன் உண்மையை சொல்லிவிட்டார் . அது பொதுவான சாதாரண பல்கலை கழகம் அதில் எல்லா இனவர்களும் இனைய முடியும் என்று சொல்கிறார்கள் எல்லாம் காத்தான்குடி மக்களுக்கு மத்தாப்பு காட்டும் வேலைதான் என்பது அவரின் அறிக்கைகளே தெளிவாக காட்டிக் குடுக்கிறது .

ஆமாம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழக கதையை மக்கள் வழமை போன்று மறந்து விட்டார்கள்

* ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!

ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!


எங்கள் அன்பு சகோதரி ரிசானாவை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் அவருக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்துக்கும் என்ன தொடர்பு மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக
நினைக்கிறீர்களா ,?!!!!!!!
இல்லை முஸ்லிம் சமூகமே ரிசானா நபீக்கின் இரத்தத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கை இந்த உலமாக்களின் 
பல்கலைக்கழகம் !!எப்படி என்று கேட்கிறீர்களா ?
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் இவர்யார்
என்று தெரிகிறதா ?!!இவர் ரிசானாவின் துயரில் பங்குகொள்ள வந்தவர் !!!!
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து சவூதி பிரஜையினால் கையளிக்கப்பட்டது.!!!!ஹிஸ்புல்லாவின் வலையில் மாட்டிய திமிங்கிலம் !!!!
இவர் ரிசானாவின் வீட்டு முற்றத்தையும் மிதிக்க அனுமதுக்கப்படவில்லை சிதிலமடைந்த பள்ளிவாசல்களுக்கு
அழைத்துசெல்லப்பட்டார் அடிக்கல் நாட்டினார் !!!
அதேநேரம் மஹிந்த சிந்தனை தீவிரமாக வேலைசெய்ய இராணுவம் வீடுகட்டியது ?!!
பிச்சைக்காரர்களை விடகேவலமாக ஏழை முஸ்லிம்களின்
துயரம் ஹிஸ்புல்லாவினால் ஒப்பாரிப்பாட உலமாக்களை காட்டி வியாபாரம் பேசப்பட்டது !!
இதனால் ரிசானாக்கள் இலாபம் அடையப்போவதில்லை என்பது இந்தமூதேவிக்கு தெரியும் !
1500 மில்லியன் ரூபா திட்டத்தில் கமிஷன் அடிப்பதற்கு இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம் சமூகத்தை விலைபேசி
ரிசானாவின் இரத்தத்தில் உடன்படிக்கை போட்டதை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது நான் பார்க்கும் உலகத்தின் கடமை !!சொல்லுவது எங்கள் கடமை தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு !!

* உலமாக்களின் பல்கலைக்கழகம் !! ஓரம் கட்டப்பட்ட ஜம்மியத்துல் உலமா ?!!!!!


உலமாக்களின் பல்கலைக்கழகம் !!
ஓரம் கட்டப்பட்ட ஜம்மியத்துல் உலமா ?!!!!!
ஜம்மியத்துல் உலமாக்களும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரியும் ?!!!!!

நபிமார்களின் வாரிசுகள் எப்படி இதற்குள் சிக்கினார்கள் என்று பார்க்கிறீர்களா ?!!!!
இதைக்கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் உலமாக்களின் பல்கலைக்கழகம் என்றப்பெயரில் 
பகல்கொள்ளைக்கு அத்திவாரம் இட்டநேரம் ஜம்மியத்துல் உலமாவின் வாயை மூடதிட்டம் போடப்பட்டதா ?!!
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட்
வருகையின் பின் ஹலால் ஹராம் பிரச்சினை அரங்கேற்றப்பட்டது அதில் சிக்கி துவண்டுபோன
ஜம்மியத்துல் உலமாக்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்து ஒதுங்கிக்கொண்டார்கள் ?!!!!!அதன் பின் அவர்கள்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் அன்றுமுதல் இன்றுவரைவாய்திறக்கவேயில்லை !! அவர்களுக்கான பல்கலைக்கழகம் விடயத்திலும் அவர்களை மெளனியாக்கியது எது ?!!!
இந்த மர்மமுடிச்சை அவர்களால் மட்டுமே அவிழ்க்க முடியும் !!
நாங்கள் எதிர்பார்ப்பது உலமாக்களின் பல்கலைக்கழகம் விடயத்தில் அவர்கள் அறிக்கைவிடுவார்களா ?!!!
இந்தப்பல்களைக்கலகத்தில் பெண் உலமா க்கள் இஸ்லாஹியா கல்லேலியா மதரசாக்களில் ஓதியவர்கள்
அனுமதிக்கப்படுவார்களா ?!!!
உலமாக்கள கல்விக்கற்கும் கல்லூரியில் மாற்று மத சகோதர சகோதரிகளும் அனுமதிக்கப்படுவார்கள் !!
அப்படியாயின் உலமாக்களின் தனித்துவம் ?!!!
இந்தப்பல்களை கழகத்தில் பள்ளிவாசல் கட்டப்படுமா ?!!!!
இந்தக்கேல்விகளுக்கெல்லாம் உலமாக்கள் பதில் கேட்டாவது கூருவார்கலா ?!!!!

Tuesday, June 11, 2013

* முன்னெடுக்கப்படும் இரகசிக இன்வாத மோதல்கள் - இலங்கை அரசியல்


முன்னெடுக்கப்படும் இரகசிக இன்வாத மோதல்கள் - இலங்கை அரசியல்


நம் நாட்டில் பாரிய இனமோதலை உண்டுபண்ணுவதற்கான மிகத் திட்டமிட்ட வடிவில், உயர்மட்ட உதவியுடன் பாரிய நிகழ்ச்சிநிரல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



நம் சமூகத்திற்கு எங்கோ ஒரு ஆபத்து நிகழ்ந்த பிறகு, அது செய்தியாக வெளியாகிய பிறகு நமது தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டிகொடுக்க காத்திருப்பது போன்ற ஒரு அனுகுமுறையும் நம்மிடத்தில் அனுபமாகிவிட்டது.

மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று முதல் மூன்று வருடங்களையும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாடுபட்டது போல், அடுத்துவர இருக்கும் புதிய ஜனாதிபதி இந்த இனவாத பொதுபலசேனா மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தீர்த்துகட்டவேண்டிய தேவை ஏற்படும். அது செகு தூரத்தில் இல்லை.

President Mahinda Rajapaksha spend his first 3 years to save the country from terrorism,
the next, upcoming president also need to spend his first 3 years to save the country from BBS and other extremist group.

இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் இருக்கின்றன:

1. நமது சமூகத்திற்கு எதிராக நடாத்தப்படும் அநீதங்களுக்காக நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல்களை மேற்கொள்ளல்,

2. நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கான முழு முன்னெடுப்புக்களையும் திட்டமிட்டு செயற்படுத்துவது.

இந்த இரண்டு திட்டங்கள் மாத்திரமே நமக்கு பயனுள்ளதாக அமையும்.

அல்லாஹ் அறிந்தவன்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.


Monday, June 10, 2013

* ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு !!!!!


ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு !!!!!

மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம் 
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !
ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி 
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை
அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்
உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு இந்தப்பிரச்சினைக்கு
உயர்மட்ட ஒன்றுக் கூடலில் ஏற்றுமதிக்கு இலவச ஹலால் முத்திரை கொடுப்பதாகவும்
உள்நாட்டில் ஹலால் முத்திரை தடை என்று ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை
ஏற்படுத்திக்கொண்டீர்கல் அதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்க்கிக்கொண்டீர்கல் !!!!!!
ஹலால் பொருட்கள் பற்றிய அறிவிப்புகளை பள்ளிவாயல் மூலமாக அறிவிப்பதாக கூரப்பட்டபோதும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை !!!!!
ஏற்றுமதிக்குமாத்திரம் ஹலால்முத்திரை ?!!!!
பொதுபலசேன அமைப்பானது எல்லா உணவிலும் முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படாத ஹராமான கலவைகளை சேர்க்குமாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது!!!!.
உலமாக்களே மஸ்ஜித்கள் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது
உங்கள் மீது நேரடி தாக்குதல் நடாத்தப்படும்போது நாம் உங்களுக்கு
ஆதரவாக இருந்தோம் எங்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நகர்வுகள்
முடுக்கிவிடப்பட நீங்கள் எங்குசென்று முடங்கிநீர்கள் !!!!
மாட்டுக்காக தீக்குளித்து இந்திர ரத்னா பிக்கு இறந்துவிட்டார்
எரிந்த உடலை மீண்டும் எரிக்கும்போது அந்த தீ முஸ் லிம்சமூகம்மீது
பரவ வாய்ப்புகள் உண்டு எங்கே கூட்டு துஆ எங்கே குனூத் !!!!
எங்கே உங்கள் அறிவுரைகள் !!அன்று உங்கள் மீது கண்வைத்தநேரம்
அறிக்கைக்குமேல் அறிக்கை இன்று ?!!
அன்று நோன்பிருந்து கூட்டுதுஆ !! இன்று ?!!!
அன்று விசேட குனூத் !!இன்று ?!!
ஜெய்லானி பள்ளிவாசல் அச்சுறுத்தல் ?!!உங்கள் சத்தத்தை காணோம் !!
இதுபோன்ற இனவாத செயல்கள் நடைபெரும்போது
ஜம்மியத்துல் உலமாவின் விசேட அறிவித்தல்கள் வெளியாகும் !!
மாலைவேளைகளில் வெளியில் சுற்ற வேண்டாம் குறிப்பாக பெண்கலை வீட்டுக்காகி
இருக்கும்படி இம்முறை கண்டும் காணாததை போல் இருந்துவிட்டீர்கள் !
எங்கள் பிரச்சினை முடிந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ் !! என்று ஒதுங்கி விட்டீர்களா ?!!
உங்களை நம்பிய முஸ்லிம் சமூகம் திக்கற்று ?!!


நான் பார்க்கும் உலகம்

* சூடு பிடிக்கும் பசுவதை


சூடு பிடிக்கும் பசுவதை


இறைச்சிக் கடை விவகாரம் சூடு பிடிக்கிறது, உண்மையில் அகிம்சாவாதத்தை போதிக்கும் பௌத்த தர்மம் மாடுகளை மாத்திரமன்றி உயிரினங்கள் எதனையும் கொள்வதனை விரும்ப வில்லை, ஆனால் மாமிசம் உண்ணுவதை கண்டிப்பாக தடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, முயல்,மான் என எதனையும் மிருக வதையை எதிர்ப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.

பசுவதையை குறிப்பாக இந்து மதத்தினர் விரும்புவதில்லை ஏனெனில் பசுவிற்கு ஒரு புனிதமான இடத்தை வழங்கி உழவர் திருநாளில் சித்திரை புத்தாண்டில் அதற்கான விஷேடமான ஆசார தர்மங்களை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்களும் மாமிசங்களை உண்ணுகிறார்கள், சிங்கள பௌத்தர்களில் "கொள்வது தான் கூடாது " விற்பனைக்கு தயாராக இருந்தால் உற்கொள்ளலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் சிங்கள விவசாயிகள் பாலிற்காக மாத்திரமன்றி இறைச்சியிற்காகவும் ஆடு மாடுகளை வளர்க்கிறார்கள், அவர்களது பொருளாதாரம் அதில் தங்கியுமிருக்கிறது. பொதுவாக ஆடு அல்லது மாடு வயது சென்று இயற்கையாக இறந்து போவது மிக மிக அரிது.

உயிரினங்களை கொள்ளக் கூடாது என்பவர்கள் தர்க்க ரீதியாக பன்றியைக் கொள்தல், மீன்பிடிக் கைத்தொழில், இறைச்சி கோழி வளர்ப்பு என்பவற்றையும் எதிர்க்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை...

என்றாலும் இறைச்சிக்கடை நடாத்தும் நம்மவர் பல்வேறு இலக்குகளுக்காக மிருகவதை கோஷங்களுடன் வெளிக் கிளம்பும் சக்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்..!

அனுமதிப் பத்திரங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் நவீன சந்தைப் படுத்தல் முறைகளை கையாளல் வேண்டும், அடுத்தவர் மனதை பாதிக்கும் காட்சிப் படுத்தல் முறைகளை கைவிடல் வேண்டும்.

முஸ்லிம்களது இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக கசாப்புக் கடைகள் வந்து விடுமாயின் வாழ்விடங்கள் கள நிலவரங்களை கவனத்திற் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் கசாப்புக் கடைகளை தற்காலிகமாகவேனும் மூடி விடுவது குறித்து கலந்தாலோசனைகள் செய்து முடிவுகளுக்கு வரலாம்.

அடுத்த சமூகங்கள் தமது மத விழுமியங்களை முன்னிறுத்தி நாடு முழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடி விட முடிவெடுப்பின், முஸ்லிம்களும் இறைச்சிக் கடைகளை மூடி விட முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

என்றாலும் தற்பொழுது சூடு பிடித்து வரும் இறைச்சிக் கடை அரசியல் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.

* மாடும்:இறைச்சியும்:நாமும்:சில உண்மைகளும்


மாடும்:இறைச்சியும்:நாமும்:சில உண்மைகளும்


இலங்கையில் இன்று பிராணிகள் உயிர்வதை அல்லது அதனை விட மாடு அறுத்தல் சம்பந்தமான பிரச்சினையும், கதைகளுமே இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

அதிலும் மாடு அறுப்பு சம்பந்தமாக ஒரு விடயம் வரும்போது..இதனை முஸ்லிம்களுடன் முழுமையாக தொடர்புபடுத்தி பேசுவது அந்நிய மக்களிடம் இருக்கும் ஒரு வழமையான விடயமாகும்.

நாம் எப்போதும் மாட்டின் பயன்களையும், மாடு மட்டும்தான் உயிரா? என்றும் அந்நிய மதத்தில் சாப்பிட அனுமதி இருக்கிறதா ? இல்லையா என்றுமே வாதங்களை சமூகத்தில் வைக்கின்றோம்.

ஆனால் உண்மையில் பார்க்கும்போது இந்த மாட்டு இறைச்சி வியாபாரத்தில் முஸ்லிம்களுக்கு இவ்வளவு விமர்சனங்கள் இருக்கும்போது. இது கட்டாயம் செய்யவேண்டிய வியாபாரம் ஒன்றுதானா என்று நோக்கவேண்டும்

சில புள்ளிவிபரங்களை வைத்து நாம் இந்த வியாபாரத்தினை நோக்குவோம்.

இறைச்சிக்கடைகள் பொதுவாக "டெண்டர்" அடிப்படையிலே உரிமையாளர்கள் வருடா வருடம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்

ஒருவருட Tender ஒரு கடைக்கு குறைந்தது இருபது லட்சம் முதல் (2,000,000) கூடியது நாற்பது லட்சம் வரை போகக்கூடியது (இது கண்டி நகரை அடிப்படையாக்கொண்டது)...

இந்த தொகையை விட கூடிய தொகையினை செலுத்தும் கடைகள்கூட இலங்கையில் வேறு சில பாகங்களில் காணப்படுகிறது. சாதாரண கிராமப்புறங்களில் கூட குறைந்தது ஐந்து லட்சத்திற்கு வாங்கப்படுகிறது.

எப்படியிருப்பினும சராசரியாக இலங்கையில் ஒரு கடைக்கு ரூபா இருபது லட்ச வருட "டெண்டர்" பணம் ஒரு கடையினால் அரசிற்கு செலவளிக்கபடுகிறது.

இப்போது இந்த தொகையினை இலங்கையில் உள்ள கடைகளின் தொகையுடன் பெருக்கிப்பாருங்கள்.இப்பொது புரியும் இந்த வியாபாரத்தில் எவ்வளவு மில்லியன் அரசிற்கு செல்கிறது என்பதினை. blush

அடுத்து

ஒரு மாட்டின் விலை 15,000/= - 40,000/= வரை செல்கின்றது… நாட்டில் 95% மேலாக மாடு கொள்வனவு செய்வது அந்நிய சமூகத்திடம் இருந்துதான்.

ஒரு நாளைக்கு வெட்டப்படும் மாடுகளின் எண்ணிக்கையை சராசரி விலையுடன் பெருக்கி பார்த்தால் புரியும், ஒரு நாளைக்கு முஸ்லிம் கடைகளால் செலவழிக்கும் தொகையும் அதேவேலை அந்நிய மக்கள் சம்பாரிக்கும் தொகையும். surprise

மேலும்

காவல் துறையினருக்கு (சிறிய,பெரிய அதிகாரிகள்) கொடுக்கும் சந்தோஷம் (ஹராம் என்றாலும்) அண்ணளவாக ஆண்டுக்கு பல இலட்சம் ரூபாக்கள்.

சிலவேளைகளில் சட்டத்துக்குபுறம்பான விடயங்களால் அகப்பட்டு கரைத்து போன முஸ்லிம்களின் Lorry, Trucks போன்ற வாகனங்களின் பெறுமதிகள் அல்லது அதற்கான செலவுகள் வருடம் தோறும் பல இலட்சங்களை தாண்டும்.

இது தவிர இன்னும் ஏனைய பல செலவுகள்.

கூறவரும் விடயம் என்ன என்றால்...

வருடத்துக்கு அரச வருமானம் பல கோடிகள்.... மாடு விற்பதால் கிடைக்கும் வருமானம் அந்நிய சமூகத்தவர்களுக்கு

முஸ்லிம்களின் பணம் அநியாயத்துக்காக வீணாகிறது.AkuranaToday.com

எமது ஊரில்/சமூகத்தில்/இலங்கையில் இறைச்சி கடை செய்பவர்களோ அல்லது அதனை சார்த்து இருப்பவர்களோ நூற்றுக்கு 0.05% உம் இல்லை.

மேலே உள்ள மொத்த செலவுகளை ஒரு இறைச்சிக்கடை நபர் செய்யும்போது அவருக்கு 1Kg இறைச்சியை 450/= மேல் தான் விற்க வேண்டும்.

இதனால் இறைச்சி வாங்கும் மக்கள் ,அநியாயமாக அதிக விலை வாங்குகின்றார்கலோ என தோன்றுகிறது..

ஆகுமான இறைச்சி மனிதனுக்கு தேவைதான். விஞ்ஞான ரீதியாகவும் மனிதனுக்கு இறைச்சியின் பயன்கள் மிக அதிகம்.

ஆனால் முஸ்லிம் சமுதாயம் இவ்வளவு செலவுகள் ,கஷ்டங்கள் மத்தியில் செய்யும் வியாபாரத்தில், முஸ்லிம்களை விட அடுத்த சமுதாயமே (அரசும்) அதிகம் நன்மை அடைகிறது.அவர்கள் நன்மை அடையவது முஸ்லிம்களுக்கு பிரச்சினை அல்ல ..ஆனால் மாடு அறுப்பது சம்பந்தமான விடயம் ஒன்று பேசப்படும்போது முஸ்லிம்கள் மட்டுமே மாடு அறுப்பதுபோலும், முஸ்லிம்கள் மட்டுமே மாட்டு இறைய்ச்சி உண்பவர்கள் போலும் மற்றைய சமூகம் பேசுவது எவ்வித நியாயமும் இல்லை .angry

இறைச்சி கடை செய்பவர்களே...யோசியுங்கள்.... புதிதாக கடை எடுப்பதை தவிருங்கள்..

மக்களே.. இறைச்சி வாங்குவதை தவிருங்கள் / குறையுங்கள்.

நமது பணத்தை செலவழித்து.. நாம் ஏன் அவமானபட வேண்டும்.

* இக்கட்டுரை ஒரு தனி நபரையோ/நிறுவனத்தையோ தாக்கி எழுதப்பட்டது அல்ல.enlightened

இதில் குறை /நிரை இருப்பின் கீழே Comment பகுதியில் பதியவும்.

கட்டுரையை முழுமையாக வாசித்தபின், உங்களுக்கு இந்த விடயம் மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என நினைத்தால், கீழே உள்ள "SHARE"ஐ அழுத்துவதன் மூலம் Facebook/Twitter இல் பகிருங்கள்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி மிக சீக்கிரத்தில் பதியப்படும்