Monday, June 10, 2013

* முஸ்லிம் தலைவர்கள் அமைதியாக இருந்தால் மாடு அறுக்கும் உரிமையும் பறிக்கப்படும்..!


முஸ்லிம் தலைவர்கள் அமைதியாக இருந்தால் மாடு அறுக்கும் உரிமையும் பறிக்கப்படும்..! 


பொருட்களின் மீது ஹலால் முத்திரை பதிக்கும் நடைமுறை பொதுபலசேன அமைப்பின் தலையீடு காரணமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது முஸ்லிம்கள் ஹலாலான பொருட்களை கொள்வனவு செய்வதில் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹலாலான உணவுகளை உண்ண வேண்டுமென்பது அவர்களின் அடைப்படை உரிமையாகும். அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆயினும்,அகில இலங்கை உலமா சபை ஹலால் சான்றிதழ் முத்திரை பதிக்கும் நடைமுறை இல்லாமல் விட்டாலும், எந்தப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதென்று நாங்கள் பள்ளிவாசல்கள் மூலமாக அறிவிப்போம் என்று உலமா சபை ஊடகங்களின் மூலமாக அறிவித்தது. முஸ்லிம்களும் ஹலால் பிரச்சினைக்கு ஓரளவிற்கு தீர்வு கிடைத்து விட்டதென்று நிம்மதிகண்டனர்.

ஆனால், ஹலால் பிரச்சினை ஏற்பட்டு சுமார் ஏழு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. எந்தப் பொருட்களுக்கு உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கியுள்ளது என்று பள்ளிவாசல்களின் ஊடாக அறிவிக்கவில்லை.

அரசயில்வாதிகளின் உறுதிமொழிகள் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. உலமா சபை வழங்கியுள்ள உறுதிமொழி நிறைவேற்றப்படாது போனால், முஸ்லிம்கள் ஹராமான உணவுகளை உண்ண வேண்டியேற்படலாம்.

ஹலால் பிரச்சினையால் முஸ்லிம்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சந்தேகம் ஏற்படும் பொருட்களின் கொள்வனவை தவிர்த்து வருகின்றார்கள். மேலும் தங்களதுஉணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பிரச்சினைகளை காண்கின்றார்கள்.

அதே வேளை, பல கம்பனிகளின் பொருட் கொள்வனவு முஸ்லிம் பகுதிகளில் மிகவும் குறைவடைந்துள்ளது. ஹலால் பிரச்சினைக்கு பிறகு முஸ்லிம்களினால் நடத்தப்படுகின்ற கம்பனிகளின் வருமானம் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்து இருப்பதகவும், முஸ்லிம் அல்லாதவர்களினால் நடத்தப்படுகின்ற கம்பனிகளின் வருமானம் 08 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அச்சு ஊடகமொன்றின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் பிரதேசங்களில் தங்களின் பொருட்களை விற்பனை செய்வதற்காக சில சிறிய கம்பனிகள் ஹலால் என்று அரபியில் அச்சிட்டு பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளது. இதனால், அப்பொருட்கள் ஹலாலான பொருட்கள் என்றுநம்பி முஸ்லிம்கள் கொள்வனவு செய்து வருகின்றார்கள். ஹலால் முத்திரை அச்சிட முடியாடிதென்று தீர்மானித்ததன் பின்னர் ஹலால் என்று அரபியில் அச்சிடுவது அக்கம்பனிகளின் உள் நோக்கத்தை காட்டுகின்றது.
இவ்வாறு சிறிய கம்பனிகள் பொருட்களுக்கு தமது விற்பனையை மட்டும் கருத்தில் எடுத்து தொழிற்படும் போது முஸ்லிம்களின் மதச் சதந்திரத்தின் மீது பாதகத்தை ஏற்படுத்தும். சில வேளை, ஹராமான பொருட்களையும் ஹலாலான பொருட்கள் என்று கருதி கொள்வனவு செய்து விடுவார்கள். ஆதலால், இதனை தடுத்து நிறுத்துவதற்கு உலமா சபை நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

இந்த பாதக நிலையில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அகில இலங்கை உலமாசபைக்கு இருக்கின்றது. அது தாம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அகில இலங்கைஉலமா சபை எந்தப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியுள்ளதென்றுபள்ளிவாசல்கள் மூலமாகஅறிவிக்கவேண்டும்.

முஸ்லிம்களின் மீதானகெடுபிடிகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனைநீக்குவதற்குஅரசியல் தலைவர்கள் முன்வருவதாகயில்லை. முஸ்லிம் தங்களின் உணவுத் தேவைக்குமாடுஅறுக்கும் சட்டரீதியானஅனுமதியையும் தடைசெய்வதற்கு இனவாதிகள் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இத்தகையசெயல்கள் குறித்துஅரசாங்கமோ, முஸ்லிம் தலைவர்களோகரிசனைகாட்டாது இருக்கின்றார்கள்.

ஹலால் பிரச்சினைஏற்பட்டபோது இது எங்கேநடக்கப் போகின்றதென்று முஸ்லிம் தலைவர்கள் இருந்ததனைப் போன்று மாடு அறுக்கும் அனுமதியிலும் இருந்தால் மாடு அறுக்கும் உரிமையும் முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும். நாட்டின் இன்றைய சூழலில் எதுவும் நடக்காது என்று இருக்கமுடியாது. முஸ்லிம் தலவர்கள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குதீர்வுகாண்பதற்குமுன்வருதல் வேண்டும்.

No comments:

Post a Comment