Thursday, June 6, 2013

* இலங்கை அரசியலில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்பு



இலங்கை அரசியலில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்பு



இன்றைய இலங்கை அரசியலில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்புக் குறித்து எமது பார்வைகளை நீட்ட வேண்டும்......

மஹிந்தச் சிந்தனையில் சிறுபான்மை மக்களின் உரிமை மற்றும் சுதந்திரங்களை தட்டிப்பரிப்பதும் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பது இப்போது நிரூபனமாகிவிட்டது.

அதனை நடைமுறைப்படுத்தும் விதத்தில் இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை ஒன்றொன்றாக குறைத்து அவர்களை நாடோடிகளாக்கும் வேளை திட்டத்தில் பிக்குகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில்,

நாங்கள் கல்விமான்கள்,
நாங்கள் சமூக சேவைச் சிங்கங்கள்,
நாங்கள் எல்லாம் ......
நாங்கள் தான் அது இது என்று பேச்சிலும் எழுத்திலும் உதறித்தள்ளும் இயக்கங்களும் இயக்கங்களை கட்டிக்காக்க முனையும் காவலாளிகளும் எங்கே போனார்கள்...?

ஹலால் ஹராமாகி.....

இன்னும் நிறைய மாற்றங்களை நிகழ்த்த அரசாங்க BBS போன்ற கைக்கூலி காவி பிக்குகளைக்கொண்டு பல பாரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்…….

எதிர்முனையில் யாரும் இல்லாத போது கொக்கரிக்கும் இயக்கங்கள் ஏன் எதிரிகளை கண்டால் ஓடி மறைவது….?
எதிரிகளுக்கு முன்னால் நெஞ்சை நீட்டுகிறவர்களை ஏன் விமர்சிக்கிறீர்கள்……?
இலங்கை முஸ்லிம்களுக்காக அறபு நாடுகள் குரல்கொடுக்க முன்வரமாட்டார்கள்.
இலங்கை முஸ்லிம்களுக்காக மேற்கத்தைய நாடுகள் குரல்கொடுக்க முன்வரமாட்டார்கள்.
தற்போது பதவியில் இருக்கும் அரச தரப்பு மந்திரிமார்கள் கூட முன்வரமாட்டர்கள்,

எங்களுடைய துஆ மற்றும் ஒன்றிணைந்த கோக்ஷமே ஜெய்க்கப்போகிறது இன்க்ஷா அல்லாஹ்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment