Friday, January 2, 2015

* எதிர்வரும் தேர்தலும் முஸ்லிம்களும்


எதிர்வரும் தேர்தலும் முஸ்லிம்களும்

இலங்கை முஸ்லிம்கள் இப்போது ஒரு முக்கிய முடிவினை எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும்நிலை. ஒருபக்கம் முஸ்லிம் அரிசியல்வாதிகள் குழம்பிப்போய் முஸ்லிம்களை குழப்பும்நிலை, மறுபக்கம் முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிக்க கூடாது என குழப்பும் ஒருக்கூட்டம். இப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம்கள் தெளிவடையவேண்டும்.

முதலில் முஸ்லிம்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை விளங்கவேண்டும்.அல்லாஹ்வின் சட்டத்த்தை நிலைநாட்டும் முஸ்லிம் அரசுக்கு மாத்திரம் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் இப்போதயநிலை காபிரின் சட்டத்தை அமுல்படுத்த வாக்களிப்பதல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசியல் கும்பலை விரட்டி முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைக்கு பாதகம்விலைக்காத ஒரு அரசியல் நிலையை உருவாக்க வாக்களிப்பதாகும். இது எவ்வகைலும் இஸ்லாத்துக்கு முரதானதல்ல. முகம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை காபிர் ஆட்சி செய்த ஆபிசிணியாவுக்கு அனுப்பி பாதுகாவல் கொடுத்திருந்தால், முஸ்லிமுக்கு எதிர் இல்லாத ஒரு காபிருக்கு வாக்களித்த்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எந்த ஒரு தவறுமில்லை, இது இஸ்லாத்துக்கு முரணுமல்ல.

இரண்டாவது யாருக்குவாக்களிப்பது? கடந்த மூன்று வருடமாக பல பள்ளிகளை உடைத்து, முஸ்லிம் சொத்துக்களை எரித்து, கடைசியில் முஸ்லிம் உய்ரை பலியெடுத்த தீவிரவாதிகளை உருவாக்கியது ராஜபாக்‌ஷா கூட்டம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இந்நிலைய்ளும் ஏன் முஸ்லிம் அரசியல் வாதிகள் ராஜபாக்‌ஷாவின் வாக்கை நம்பி வாழ்கிறார்கள் என்பது இறைவன் மட்டும் அறிந்த ரகசியம். இவர்களுக்கு பல அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம், ஏன் , உயிர் அச்சுரத்தல் கூட இருக்கலாம். இல்லா விட்டால் அரசியல் லாபத்துக்க சமூகத்தியே கூட்டி கொடுக்கும் நயவன்சாகர்களாககூட இருக்கலாம்.

இவர்கள் யார் பக்கம் இருந்தாலும் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகள் எம்முடிவில் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக இருக்க வேண்டும்.

கடித்த நாயை மீண்டும் அரவணைப்பது இருமுறை ஒரு குழியில் விழுவதாகும்.ஒரு முஹ்மின் இருமுறை ஒரு குழியில் விழமாட்டான் என்பது நபி (ஸல்) வாக்கு. மைத்ரி வென்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருடன் நிஸ்சசயம் சேரத்தான் போஹிரார்கள். பள்ளி உடைப்பு முதல் முஸ்லிம்களை கொன்றதுவரை ஒன்றயும்முஸ்லிம்கள் மறக்க கூடாது.

கிடைதிக்குக்கும் இச்சந்தர்பபத்த்த்தை தவரவிடவும் கூடாது. ஒரு வகையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் தேர்தல் முடியும்வரை மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது நல்லது. அவர்கள் அவர்களுது காயை நகர்த்தட்டும், முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்து நமது காயை நகர்த்துவோம்.

மஹிந்த தோல்வியுற்றால் முஸ்லிம்களுக்கு நல்லது, வெற்றிபெற்றால் மஹிந்தவுடன் இருக்கும்முஸ்லிம் அரசியல் வாதிகள் பாராளமன்ற தேர்தலில் தமக்கு வாக்கு பெறுவதுக்காகவாவது மூஸ்லிம் உரிமைகளை பாதுகாக்க நினைப்பார்கள்.

பயத்தை ஒருபக்கம் வைத்து இதனை எல்லா முஸ்லிம்களும் அறிய share பண்ணுகள்.

No comments:

Post a Comment