இந்த சகோதரி அலுத்கமை கலவரத்தின் போது இனவாதக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுக்கு இழக்கானவர்.
இவர் பாராளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெரும என்பவரால் கொண்டுசெல்லப்பட்டு நாகொட வைத்தியசாைலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது வலது கண்பார்வையை இழந்துள்ளார்.இவரது 9 மாதக் குழந்தையும் கல்வீச்சுக்கு இலக்காகி மூலையில் ஏட்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளது. எனினும் தாய் இன்னமும் வைத்தியசாலையிலேயே இருக்கிறார்.
இங்கு மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், குறித்த இந்தச் சகோதரிக்கு மூன்று குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 09, இரண்டாவது பிள்ளையின் வயது 04, மூன்றாவது குழந்தையின் வயது 09 மாதங்கள் ஆகின்றன. தற்போது இக்குழந்தைகள் யாரும் தனது தாயை நெருங்குவது கூட இல்லை. ஏனெனில் அத்தாயின் முகம் அந்த அளவுக்கு விகாரமடைங்துள்ளது. அந்த 09மாதக் குழந்தை தனது தாயை அடையாளம் கண்டுகொள்ள முடியாத காரணத்தால் தனது தாயை மாத்திரம் தவிர்த்து ஏனைய அனைவரிடமும் செல்கின்றது. அத்தாயின் குரலையும் அடையாளம் காண முடியதுள்ளது ஏனனில், அவரால் இன்னும் வாய் திறந்து ஒழுங்காகப் பேச முடியதுள்ளது.
எனவே, இந்தத் தாய் தற்போது உடல் ரீதியகவும், உள ரீதியாகவும் கடுமையகப் பாதிக்கப்பட்டுள்ளார்.அத்து
No comments:
Post a Comment