Friday, January 2, 2015

* ஹராத்துல பொறந்த ஹராங்குட்டிகல் !


ஹராத்துல பொறந்த ஹராங்குட்டிகல் !

ஒரே முஸ்லிம் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கொள்கைகள், அரசியல் பிடிப்புகள் வித்தியாசம் கொண்டனவாக முரண்பாடுகளுடனேயே காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறான முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏதோ வகையில் விரும்பாவிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதே கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களையே விரும்புகிறார்கள். தங்களது கட்சி பிளவுபட்டாலும் சரி அவர்கள் மஹிந்த ராஜபக்க்ஷ விடயத்தில் உறுதியாகவே உள்ளனர்.

இதற்கு உதாரணமாக காத்தான்குடியில் இன்று (19) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

ஆனால், அதே கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இது போன்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிலையும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தப்பித் தவறி அறிவித்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதே கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவையே ஆதரிப்போம் எனக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு அங்கு கூட்டத்தை ஒழுங்கு செய்யவும் தயாராகத்தான் உள்ளனர் அல்லவா?

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெரும்பாலும் இந்த நிலை அன்றும் இன்றும் காணப்படுகிறது. மட்டக்களப்பு மாந்திரீகம் வேலை செய்கிறதோ தெரியாது.

No comments:

Post a Comment