Friday, January 2, 2015

* கதிரையைக் காப்பாற்ற மக்களை ஏமாற்றும் ஹக்கீம்…


கதிரையைக் காப்பாற்ற மக்களை ஏமாற்றும் ஹக்கீம்…


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கா அல்லது பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்தின் பின்னரே முடிவு செய்யவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசயில் உயர்பீட மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைமையகமான கொழும்பு தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோது பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்ட குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து நடத்திய பேச்சின்போது முஸ்லிம்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அரசு தரப்பில் உறுதி வழங்கப்பட்டது. குறிப்பாக, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களில் நீடித்து வரும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் அலுவலகம் அமைப்பது என்பன போன்ற விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இந்த வாக்குறுதிகள் தொடர்பில் அரசு எடுக்கும் உருப்படியான நடவடிக்கைகள் என்ன என்பதை அவதானித்து தேர்தல் ஆதரவு தொடர்பில் இறுதி முடிவெடுப்போமென தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.பைஸால் காசிம் போன்றோர் மக்கள் விருப்புக்கும் அரசு மீது கொண்டுள்ள வெறுப்புக்கும் ஏற்ப அரசை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவே வேண்டுமெனவும் வாதிட்டடுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தலைவர் ஹக்கீம் போன்ற சிலரின் கருத்துப்படி அரசின் வாக்குறுதிகளின் பலாபலனை ஒரு வார காலம் அவதானிப்பதெனவும் அதன் பின்னர் இறுதி முடிவு எடுப்பதெனவும் மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக இவ்வாறு காலம் கடத்தி வருவது தொடர்பில் முஸ்லிம் மக்கள் பெரும் கொதிப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment