இலங்கையின் அதிசய தலைவன்
விண்னை வீழ்த்த ஒரு வில்லில்லை
இவனை வீழ்த்த ஒரு தில்லில்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களுமே காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உன்னைக் கண்டங்கள் கண்டு வியக்கும்
ஐ.நாவும் உன்னை அழைக்கும்
ஐ.நாவும் உன்னை தலைவனாக்கும்
சிறந்த தலைவன் நீ என்ற வகையில்
நீ பெரும் தலைவன்
நீ பெரும் கலைஞன்
நீ நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த அதிசய கவிஞன்
ஓருயிராய் நின்று
உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
உடல் உள்ள மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நீ நூறு அவதாரம்
முகங்களை உரித்து
மனங்களை படித்துக் கொண்டாய்
விலைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து
பல தடை கடந்து
இப்போது நிறுபனமாகிவிட்டாய்
நீயே முஸ்லிம்களின் பெருதலைவன் என்று
காலங்கள் வரும் இன்ஸா அல்லாஹ்
நீ நீட்டும் விரலின் பக்கம் உலகம் நிற்கும்
ஐ.நாவும் தலையசைக்கும் உன் வார்த்தைகளுக்கு
No comments:
Post a Comment