Friday, January 2, 2015

* ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஒரு உருக்கமான மடல்


ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஒரு உருக்கமான மடல் 

மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம் சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !

ஹலாலை ஆரம்பித்தவர்களே இன்று முடித்து வைத்திருக்கிறார்கள்.இந்த முடிவில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை வைக்க வேண்டும் என பிரார்த்திப்போம். அதே வேளை இது சம்பந்தமாக உலமா சபையிடம் சில கேள்விகள்...

1. உலமா சபை பல அழுத்தங்களை எதிர்நோக்கியது என்று இன்று நீங்கள் கூறியதன் அர்த்தம் என்ன?அப்படிஎன்றால், நாட்டு நலனுக்காக அன்றி அழுத்தம் காரணமாகத்தான் விட்டுக்கொடுத்தீர்களா?

2. அமைச்சரவை குழு அமைக்கப்பட்டிருக்கும்போது, அதற்கு முந்திக்கொண்டு ஏன் உங்கள் முடிவை அறிவித்தீர்கள்?

3. உலமா சபை என்பது ஒரு முதிர்ச்சியடைந்த கட்டமைப்பு. ஆனால் இது உங்கள் மூன்றாவது பத்திரிகையாளர் மாநாடும் மூன்றாவது முடிவும். முதலில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால், அடுத்து அரசாங்கத்திடம் ஹலால், மூன்றாவது இன்று ஹலாலே இல்லை. இது உலமா சபையின் முதிர்ச்சியை கேள்விக்குறியாக்கவில்லையா?

4. ஹலாலை விட்டுக்கொடுத்தால், இன்னும் பல விடயங்களை இழக்க நேரிடும் என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்போது நீங்களே இப்படி சொல்வது முன்னுக்குப்பின் முரண் இல்லையா?

5. உலமா சபை என்பது மக்களுக்காக. எந்த சந்தர்ப்பத்திலாவது நீங்கள் பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கினீர்களா?ஒரு சந்தர்ப்பம் சொல்லுங்கள்.

6. இப்போது இலவசமாக சான்றிதழ் வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். அப்படிஎன்றால் ஏன் இவ்வளவு காலமும் பணம் வாங்கினீர்கள் என்று அதே பொது பல சேனா கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

7. இலங்கை மக்களுக்காக உருவாக்கப்பட்ட உலமா சபை அவர்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மக்களுக்காகவும், அரசாங்கத்தின் நலனுக்காகவும் ஹலால் சான்றிதழ் வழங்குவது எந்தளவில் நியாயம்? அவ்வாறென்றால் உங்கள் பணி, பிறை பார்ப்பது மட்டும்தானா?

8. எதிர்காலத்தில் ஹிஜாபை விடச்சொன்னால், "ஒரு ஊருக்கு ஒரு பள்ளிவாசல் போதும்" என்றால், "முஸ்லிம் பாடசாலை என்று ஒன்று தேவை இல்லை" என்றால் "நாட்டின் ஒற்றுமைக்காக" என்ற பெயரில் அதையும் விட்டுக்கொடுக்க நீங்கள் தயாரா?

9. இஸ்லாத்தின் ஒரு அடிப்படை கேள்வி : நாட்டின் நலனுக்காக என்ற பெயரில், மார்க்கத்தின் அடிப்படையான விடயமொன்றை விட்டுக்கொடுக்கலாமா?

10. எதை செய்தாலும் ஹுதைபியா உடன்படிக்கையை பற்றியே பேசுகிறோம்.அப்படிஎன்றால் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றில் எவ்வளவோ யுத்தம், அணியாயத்துக்கேதிரான போராட்டம் நடந்தது, அதை ஏன் நாம் மறந்துவிட்டோம்?

இந்தக்கேள்விகளுக்கு முஸ்லிம் சமூகத்திடமும் அல்லாஹ்விடமும் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment