ஐயகோ…!! நெஞ்சு பொறுக்குதிலையே.. இந்த நிலை கெட்ட மாந்தரைப் பார்க்கையிலே…!
மட்டக்களப்புத் மாவட்ட முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி இம்மாவட்டத்திற்கான முஸ் லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மறைந்த மாபெரும் தலைவ ரின் வேண்டுகோளுக்கமைய ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி எனும் மூன்று முஸ் லிம் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நோன்பு நோற்றும், இராப் பகலாய்ப பிரச்சாரம் செய்தும் வென்றெடுத்த மக்கள் பிரதிநிதித்துவத்தை, அத்தலைவரின் முன்னாலும், மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்பாகவும் அழ்ழாஹ்வின் இல்லத்திலிருந்து பகிரங்கமாகச் செய்து கொண்ட சுழற்சி முறைப்பிரதிநித்துவ ஒப்பந்தத் (‘பைஅத்’)தை தனது சுயநல அரசியல் அதிகார இருப்புக் காகக் குப்பையில் வீசியெறிந்து பிராந்திய முஸ்லிம்களின் ஒற்றுமைப்பலத்தைச் சிதற டித்து பிரதேசவாதப் புற்றுநோயை இன்றளவும் வளர்த்து விட்டிருக்கும் அயோக்கியத்தனமான ஒரு அரசியல் வியாபாரியை இந்தக் காசுக்குக் கவிபாடித் துதிபாடும் கெவிஞர்கள் போற்றிப் புகழ்ந்து புத்தகம் வெளியிட, அதனை வாழ்த்திப்போற்றி தமது சுயமரியாதையையும் வரலாற்றில் இழக்கச் செய்யவா கவிக்கோவும், கவியரசும் இக்காத்தநகர் மண்ணுக்கு வருகை தரவுள்ளனர்?!
‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த’ வார்த்தை யின் யதார்த்தத்தை நம்காலத்தில் மெய்ப் பிக்கும் வகையில் அரசியலில் அரவணைத்து நாடாளுமன்றத்தைக் காட்டிக் கூடவே கூட்டிச் சென்ற நம்சமூகத்தின் மாதலைவரையே பிற சமூகங்கள் ஏளனமாய் நோக்கும் வகையில் நீதிமன்றப் படிக்கட்டுக்களில் ஏற்றி அலைக் கழித்த ஒரு கோடாரிக்காம்புக்கு துதி பாடவா இந்த இந்தியக் கவிக் குருக்கள் நம்நாடு வருகிறார்கள்?
மண்ணின் மைந்தனின் 50 ஆண்டு வாழ்க்கை யில், முப்பதாண்டுகள் மக்கள் பிரதிநிதியாகக் கொலுவீற்றிருக்கின்றார்.
அந்தவகையில் அவ ரது கட்சி மாறல்களையும், கொங்றீட் அரசியலையும், கொந்தராத்துப் பிழைப்பையும் மெச்சி பத்தாயிரம் ரூபாவுக்கு புகழ்ப்பாக்கள் படைத்திருக்கும் உள்ளுர் ‘பேலியகொடை’ நாற்றாறுகளும், வெளியீட்டு விழாவின்போது அவரை முகஸ்துதி செய்து இலட்சங்களை வாங்கிச் செல்லும் இலட்சியத்துடன் வருகை தரவுள்ள ‘தமிழகத்துக் கவிஞர் (கூவங்)க ளும்’ இதன்கீழ் நான் பட்டியலிட்டுள்ள அவ ரது அரசியல் அதிகார அமானிதத் துரோகங் களையும் பொறுமையுடன் படித்தறிந்து அவற் றையும் பாக்களிலும், உரைகளிலும் சேர்த் துக் கொண்டால் யதார்த்தமாயிருக்கும்.
1. இரண்டு வருடங்களுக்கான நாடாளுமன்ற சுழற்சிப் பிரதிநிதித்துவ ஒப்பந்தத்ததை அப்பட் டமாக மீறியது.
2. கட்சி மாறித் துரோகம் செய்ததுடன் தலை வருக்கும், கட்சிக்கும் எதிராக நீதி மன்றம் சென்றது.
3. தலைவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவ ரது அகால மரணச் செய்தி கிடைத்தவுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு நீலிக் கண்ணீரும், போலி அனுதாப அறிக்கைகளும் விட்டது.
4. மு.கா.வில் இருக்கும்போது, கிழக்கு மாகா ணத்திற்கான முஸ்லிம் முதலமைச்சரை என்ன விலை கொடுத்தும் பெற வேண்டும் எனவும், மு.கா.வை விட்டு வெளியேறிய பின் முஸ்லிம் முதலமைச்சரைப்பற்றி இப்போது பேசத் தேவையில்லை என்றும் ஊடகங்களில் அறிக்கை விட்டது.
5. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினைகள் எதுவும் இல்லையென ஆங்கில ஊடகங்களில் அறிக்கையிட்டது.
6. செலிங்கோ நிதி நிறுவ னத்தில் அவரது மனைவி றமீஸா சஹாப்தீன் மில்லி யன் கணக்கில் கடன் பெறு வதற்காக தனது அரசியல் அதிகாரத்தினைப் பயன் படுத்திப் பிணை வழங்கிய துடன் கடன் பெற்ற பின் மனைவியும், பிணை யாளியான அரையமைச்சரும் இன்று வரை அக்கடனைத் திருப்பிச் செலுத்தாமலிருப்பது.
7. சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள் ளான மூதூரைச் சேர்ந்த சகோதரி றிஸானாவின் குடும்பத்தாரிடம் கைய ளிக்குமாறு சவூதி அரே பிய தனவந்தர் வழங் கிய த்த பத்து இலட்சம் ரூபாவை இன்று வரையிலும் அக்குடும்பத்தாரிடமோ அல்லது சவூதி தனவந்தரிடமோ கையளிக்காது தானே துரோகத்தனமாக அமுக்கிக் கொண்டிருப்பது.
8. முதலாவது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தானே கிழக்கின் முதலாவது முஸ் லிம் முதலமைச்சர் என மாகாணம் முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் சமூகத் தின் வாக்குகளைப் பெற்ற பின் முதலமைச்சர் பதிவியை தனது சுயநலத்திற்காக மாற்றுச் சமூகத்திற்கு தாரைவார்த்து தொலைக்காட் சிகளிலும், இணையதளங்களிலும் அவரும், அவரால் நம் சமூகமும் ஜட்டியுடன் ஓடியது.
09. சுனாமி நிவாரணமாக சம்மேளனத்திற்கு கிடைத்த நிதியுதவியில் ஒரு தொகைப் பணத் தினை காணிகள் வாங்குவதற்காகக் கேட்டு வாங்கியதுடன், அக்காணிகளில் சிலவற்றை அவரது அரசியல் அடிவருடிகள் சொந்தமாக் கிக் கொண்டும், அக்காணிகளில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளில் பலதை அவரது அரசியல் ஆதரவாளர்களுக்கே முறைகேடாகப் பகிர்ந்து கொடுத்தும், இன்னமும் அத்தொகைக்கான முறையான கணக்கறிக்கையோ, அதுதொடர் பாக சம்மேளனத்தில் நடைபெற்ற விசாரணை அறிக்கையையோ வெளிவராதிருப்பது.
10. காங்கேயனோடை பள்ளிவாசலுக்குரிய கூவாக்காட்டுக் காணியை தனது அரசியல் பினாமிகளைக் கொண்டு மோசடியாக உறுதி எழுதி ஈரான் தூதருக்கு தாரை வார்த்தது.
11. தேர்தல் விஞ்ஞாப னத்தில் புகைப்படத்து டன் பிரச்சாரம் செய்த வீடற்ற ஏழைக்குடும்பத் திற்கு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்காமல் அப்பட்டமாகவே ஏமாற்றியது.
12. பிரதேச மட்டத்திலான எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமான பொய்களைத் தேர்தல் காலங்களில் அவிழ்த்து மக்களைச் சூடாக்கி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தேர்தல் முடிந்த பினனர்; ஓடி ஒழிந்து மௌனமாவது.
13. நாடாளுமன்றத்தில் தூங்கி வழிந்தது.
14. இவரை நம்பிய அரசியல் கட்சிகளுக்கு சமயம் பார்த்து கழுத்தறுப்புச் செய்தது.
15. ஊடகவியலாளர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் தனது குண்டர்களை ஏவித் தாக்குதல் களை மேற்கொண்டது.
16. அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் காத்தான்குடி மத்திய கல்லூ ரியைச் சேர்த்துக் கொள்ளாது ஒதுக்கித்தள்ள முயற்சித்தது.
17. ‘உம்முல் குறா’ அறபுப் பல்கலைக் கழ கம் அமைப்பதற்காக படு பொய்களையெல் லாம் கூறி சம்மேளனத்தையும், மத்திய கல் லூரி நிர்வாகத்தையும் பிழையாக வழி நடாத்த முற்பட்டதுடன், அன்வர் வித்தியால யத்தையும் அபகரிக்க முற்பட்டது.
18. மக்கள் ஆணையில் கிடைத்த சாராயக் கோட்டாவை மாற்றுச் சமூகத்திற்கு விற்று மதுக்கடை திறக்க வழிகோலியது.
19. தகுதியான மார்க்க உலமா காதி நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையிலும், தனது கூவாக்காட்டுக் காணிக் கொள்ளை யினை மூடி மறைத்திட ஹிழுறு அதிபரை காதியாக நியமித்தது.
20. சுனாமி நன்கொடையாக றிஸ்வி நகரில் தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப் பட்ட அரசாங்கப் பாடசாலையை கபளீகரம் செய்து வைத்துக் கொண்டு அப்பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பகிரங்கமாகவே பறித்தது.
21. வெளிநாடுகளில் வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்களையெல்லாம் இஸ்லாமிய நூதன சாலையில் வைப்பதற்காக காத்தான்குடி பிர தேச செயலகம் மூலமாக நல்ல விலைக்கு விற்றுப் பணமாக்கிக் கொண்டது.
22. காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் நிர்மாணிக்கப்பட்ட மேம் பாலத்தை அரசியல் காழ்ப்புணர்வால் முற்று முழுதாக உடைத்தழித்தது.
23. தம்புள்ள பள்ளிவாசலை பௌத்த பேரின வாதிகள் பகிரங்கமாகத் தாக்கியபோது, அப் பள்ளிவாசலின் ஒரு தகரத்துக்குக்கும் சேதம் ஏற்படவில்லையென முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து அறிக்கையிட்டது
24. மஹியங்கனைப் பள்ளிவாசல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி பாதுகாப்பு அமைச்சருக்கு அவசரமாகக் கடிதம் எழுதிய இந்த அரசியல் வியாபாரி, இன்று அப்பள்ளிவாசல் கட்டிடத்தை ஒரு கோடி பத்து இலட்சம் ரூபாவுக்கு சுளையாக விற்று விட்டு வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அவரது ‘சீனி’ யர் ஆதரவாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செத்த பாம்பாகிக் கிடப்பது.
இவ்வாறெல்லாம் இன்மின்னும் எத்த னையோ வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத, இலங்கை முஸ்லிம் சமூகத் தின் அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல்வாதியுமே செய்திராத பல வகையான சாதனைகளை எல்லாம் நமது மண்ணின் மைந்தன்தான் தன் முப்பதாண்டு அரசியல் வரலாற்றில் முத்துக்களாகப் பதித்துள்ளார்.
No comments:
Post a Comment