Friday, January 2, 2015

* இனியாவது ஓற்றுமையாக செயல்படுவோம்



இனியாவது ஓற்றுமையாக செயல்படுவோம்
.
எத்தனை நாளைக்குத்தான் முஸ்லிம்களை புலிகள் கொன்றார்கள் என்று பேசிக்கிட்டே இருப்பிங்க கொன்றார்கள்தான் பின்னர் அதற்காக அனுபவித்துவிட்டார்கள் இல்லை உணர்ந்து இருப்பார்கள் அதற்க்காக அப்பாவி ஈழத்தமிழர்களை ராஜபக்ஷே கொத்தாக கொன்று குவித்ததுக்கு எல்லாம் ஆதரிக்க முடியாது.

சனியன் பழையது எல்லாம் அழியட்டும் இப்போவதாவது ஓற்றுமையாக அநீதிக்கு எதிராக ஓற்றுமையாக செயல்படுவோம்
முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் ஓன்றுசேர விடாமல் தடுப்பது முஸ்லிம்களிடையே உள்ள சில சிங்கள ஆதரவாளர்களும் அரசியல்வாதிகலும் தான் .

இன்று இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் மீண்டுமொரு நீண்டகால போருக்கு வழிவகுத்துவிடக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகிக் கொண்டு வருகின்றதை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

தமிழர் மற்றும் முஸ்லிம் இனங்களை அழித்து, நாட்டில் இரத்தம் சிந்தி கொலைக்களங்களாக மாற்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றன.

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருகின்றன.

பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக் களமாக இலங்கையை இனவாதிகள் மாற்றி உள்ளனர். முஸ்லிம்களின் பொருளா தாரத்தை முடக்கி அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம் களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.

தற்போது இஸ்லாத்திற்க எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சமுகமாக அவற்றிற்கு பதிலடி கொடுக்கக் கூடியதான உணர்வுள்ள திறமையான ஒரு புதிய சமுகம் கட்டியெழுப்பப்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம் சமுகம் விளித்தெழ வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையாகவுள்ளதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டிதொரு முக்கிய தருணமாகும்.

No comments:

Post a Comment