Friday, January 2, 2015

*இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது !

              
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது !

முன்பு தமிழர்களின் முகத்தில், எப்படி மரண பீதியும் கலவரமும் இருந்ததோ , இன்று அதே நிலை இலங்கை முஸ்லிம்களில் காணப் படுகின்றது ! எல்லோரும் ஒரு வகையான கவலையில் ஆழ்ந்துள்ளனர், ஒரு தேசத்தின் தலைவரும் , அவரின் தம்பியும் இந்த இன வாதத்தின் கர்த்தாக்கள் என்பதை திட்டவட்டமாக அறிந்த தன்பின், இலங்கை முஸ்லிம்கள் மிகவும் அதிர்ச்சி
அடைந்துள்ளார்கள் ! 

பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜா பாக்ஷா , இந்த நாட்டின் அதிபருடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு செயல் திட்டம் ஒன்றை வரைந்து, அதனை நடை முறைப் படுத்துகின்றார் !

இலங்கை முஸ்லிம்கள் , வீதிகளில் நடமாட அஞ்சுகின்றனர் , வீடுகளில் இருக்க அஞ்சுகின்றனர் , தமது மத அடையாளம் களுடன் வாழ அஞ்சுகின்றனர் !

அரச மருத்துவ மனைகள் , அரச நிர்வாக தளம்கள், அனைத்திலும், முஸ்லிம்கள் , ஒருவகை வெறுப்புடன் பார்க்கப் படுகின்றனர் ! அவர்களது வர்தக நிறுவனம்கள் அடித்து நொறுக்கப் படுகின்றன , அவர்களது வாழ்வாதாரம் கள் சிதைக்கப் படுகின்றன !

அவர்களுக்கு எதிராக, சிங்கள மக்களை கிளர்ந்து எழச் செய்து , வன்முறைக்கு தூண்டும் , திட்ட மிட்ட ஊடக பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது ! சிங்கள புத்த விகாரைகள் அனைத்தும், இந்த கோத்தபாயாவின், இனவெறி பிக்குகளினால் அபகரிக்கப்பட்டு , அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறைக்களைத் தூண்டும் விஷம் ஊட்டப் படுகிறது !

அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கூறும் அனைத்து இட்டுக்கட்டப் பட்ட , மிகைப் படுத்தப் பட்ட, குற்றச் சாட்டுகளை , பாமரர்களின் , மற்றும், டச் போன் பாவிக்கும் 13 இல் இருந்து 16 19 23 வயது இழைஞ்சர்களிடம் புகுத்துகின்றார்கள்!

இந்தப் போக்கு , ருவன்டாவைப் போன்ற ஒரு பேர் அவலத்தை , இனப் படுகொலையை முஸ்லிம்கள் மீது இழைக்கும் என்பது மிகை அல்ல !

பொது பல சேனாவை தடை செயக் கோரிய, ஒரு முஸ்லிம் அமைச்சரை, விரல் நீட்டி அடிக்கும் பாணியில் மகிந்த ராஜபக்க்ஷா கதிரையை விட்டு ஆக்ரோஷமாக எழுந்து, தடை செய்ய மாட்டேன் என்று சப்தமாக பயமுறுத்திய நிகழ்வு, அவரில் எந்தளவுக்கு முஸ்லிம்கள் மீது ஒரு பொல்லாத வெறுப்பு பதிந்து உள்ளது என்பதைப் புரிய வைக்கிறது !

அவரின் கபிநட்டில் உள்ள , அவரை சூழ்ந்து அவரை ஊக்குவிக்கும், சிங்கள அமைச்சர்கள் பலர், சிங்கள இனவெறி பிடித்தவர்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்!

சிறுபான்மை முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், மகிந்த ராஜ பாக்சுவின் அடிமைகள் போல் மரண பயத்தில் காணப் படுகின்றனர் , இதுதான் இலங்கையின் இன்றைய யதார்த்தம் ஆகும்!

, அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் இதுதான் உண்மை நிலை !

எமது அன்பார்ந்த தமிழ் நெஞ்சம் களே ! எமது கேடுகெட்ட முஸ்லிம் தலைமைகள் , செய்திட்ட பெரும் தவறுகளுக்காக உங்களிடம் நாம் இன்று அழுது மன்னிப்புக் கோருகிறோம் ,!

உங்கள் உடல் உடமை காயப் பட்ட போது , நீங்கள் நோவினால் துடித்த வலி எமக்கு அன்று புரிய வில்லை , ஆனால் இன்று நீங்கள் அனுபவித்த அதே கொடிய துயரை நாம் காணும் போதுதான், உங்கள் வழியின் கொடுமை எவ்வளவு மோசமானது என்பதைப் புரிந்து கொண்டோம் !

எப்படியானாலும் தமிழர்களே ! நீங்கள் எங்கள் சகோதரர்கள் இல்லையா ! எங்கள் அழுகையை ,மரண ஓலத்தை ஐநா மன்றத்திடம் ஏத்திவையுங்கள்! நாம் அனாதைகள் !எங்கள் மீது இரக்கப் படுங்கள் !

இந்த நாட்டில், நாம், இனிமேலும் நிம்மதியாக வாழமுடியும் என்று நாம் நம்பவில்லை !சிங்கள , இன வாதம் எங்க்கின்ற கொடிய விசர் நோய் எமது தேசத்தில், மிக ஆழமாக பதிந்து விட்டது , இந்த நாட்டை கூறு போடாமல், இதனை எம்மால் ஒரு போதும் குணமாக்க முடியாது.

No comments:

Post a Comment