கோட்டாவின் பிடிலுக்கு ஆடும் முப்தி ரிஸ்வி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் வருகின்ற மாதம் "சமாதான மாநாடு" என்கின்ற பெயரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக உலமா சபை சார்பில் ரூபாய் 70 லட்சம் செலவிடப்படும் என்றும் தலைவர் ரிஸ்வி முப்தி தன்னிச்சையாக முடிவெடுத்து, அதனை கூட்டத்தில் அறிவித்தார்.
அப்பொழுதுஇ நாட்டில் இன்று முஸ்லிம்கள் இருக்கும் நிமையில் இவ்வளவு பணம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு எதற்காக என்கின்ற கேள்வி அநேகமான மெளலவிகளின் வாயில் உதித்துஇ பக்கத்தில் இருந்தவர்களிடம் ஒவ்வொருவரும் இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டனர்.
எதிர்பாராத இந்தக் கேள்விகளால் கடும் கோவமடைந்த தலைவர் ரிஸ்வி முப்தி, தனது கதிரையில் இருந்து எழும்பி நின்றுகொண்டு மௌலவி யுசுப் நஜிமுதீனை கடுமையாக சாடியதுடன், "நீ வாயை பொத்திக் கொண்டு உட்காருஇ உனக்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது?" என்றும் இன்னும் மோசமான வார்த்தைகளாலும் ஏசியுள்ளார், தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே "நீ வெளியே போ" என்று ரிஸ்வி முப்தி கூச்சல் போட்டுள்ளார்.
அப்பொழுது எழுந்த மௌலவி யூசுப் நஜிமுதீன் "அண்மையில் ராணுவ தளபதியை தெஹிவளை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து ரிஸ்வி முப்தி தலைமையில் சமாதானம் குறித்து உரையாற்ற வைக்கப்பட்டது, அவர் அழகாக பேசி விட்டு சென்றார்இ ஆனால் இராணுவத்தினரே கரிமலையுற்று பள்ளியை உடைத்திருக்கிறார்கள். இப்படியான நிலைமையில் 70 லட்சம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு தேவையா?
இதற்கு யார் அனுமதி கொடுத்தது, இப்படி பணத்தை செலவழிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதன் பொழுது மெளலவிகள் மத்தியில் இரண்டு குழுக்கள் உருவாகி, அடிதடி ஏற்பட்டுள்ளது. ரிஸ்வி முத்திக்கு சார்பான மெளலவி யூஸுப் நஜ்முதீனை தாக்க முயலஇ அவர் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்பட்ட கண்ணாடி கிளாஸ் ஒன்றால் அவரை தாக்கியுள்ளார், இதனைத் தொடர்ந்து அடிதடி இடம்பெற்றதுடன் சில கண்ணாடி கிளாஸ்களும் உடைந்து சிதறியுள்ளன.
முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாத நேரத்தில் உலமா சபைப் பணத்தில் 70 லட்சம் செலவைத்து ஆடம்பர சமாதான மாநாடு நடாத்த ரிஸ்வி முப்திக்கு என்ன தேவை என்பது பெரும்பாலான மெளலவிகளின் கேள்வி ஆகும்.
விஷயம் தெரிந்தவர்கள் மேலதிக விபரம் தர முன்வரவில்லை. இருந்த போதும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சில் மௌலவிள் எங்களோடு இவ் விபரங்களை பகிர்ந்து கொண்டனர் மேலதிக விபரங்கள் கிடைத்தல் அவை உடனடியாக வெளியிடப்படும்.
ரிஸ்வி முப்தி தலைமைப் பதவிக்கு வந்தது முதல் ஜமியத்துல் உலமா பிழையான பாதியில் செல்வதாகவும்இ முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து மோசமான நிலையில் துரோகிகள் சபையாக பார்க்கப் படுவதாகவும் மூத்த மெளலவி ஒருவர் தெரிவித்துக் கவலைப் பட்டார்.
உலமா சபை என்றாலே ஊழல் சபையாகவும்இ மோசடி சபையாகவும் மாறி விட்டதா என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. தலைவர் ரிஸ்வி முப்தி ஒருபுறம் புகுந்து விளையாடஇ தற்பொழுது உப தலைவர் புர்ஹான் மெளலவி 40 கோடி மோசடியில் ஈடுபட்டதையும் அனைவரும் அறிவர்
உலமா சபை "ஹலால் சான்றிதழ்" வியாபாரம் செய்த பொழுது கோடிக் கணக்கான ரூபாய்கள் கணக்குக் காட்டப்படமால் கை மாறிய ஊழல் விடயங்கள் ரகசியங்கள் இல்லை.
பாதுகாப்புச்செயலாரையும் பொது பல சேனாவையும திருப்த்திப்படுத்த முப்தி எடுக்கும் இந்த முயற்சி கேவலமான ஒரு ஈனச்செயலாகும். அழுத்கமையில் ஒரு நாள் இரவுடன் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு 70 ருபாய் செலவளித்து ஒரு சாப்பாட்டு பக்கட்டையாவது வழங்க முன்வறாத ஜம்மியதுல் உலமாவும் முப்தி றிஸ்வியும் 70 லட்ச்சம் செலவு செய்து இந்த வக்காளத்து வாங்க முற்படும் இந்த செயலை வண்மையாகக் கண்டிக்கிறோம்.
No comments:
Post a Comment